Friday, December 7, 2007

இன்னுமா சுயபுத்தி இல்லாமலிருக்கிறது?


பொம்மைகளைப் போல தலையாட்டி மக்களை ஏமாற்றிவரும் மலையக அரசியல்வாதிகள் சிலரின் கபட நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக மலையக இளைஞர் யுவதிகள் அரசியல்வாதிகளுக்கு வால்பிடிக்கும் வெட்கங்கெட்ட வேலையைச்செய்துவருவது எந்தவிதத்தில் நியாயம் என்று தெரியவில்லை।


அண்மையில் இலங்கை அரசாங்கத்தினால் புலிப்பயங்கரவாதிகளை தேடுதல் என்ற கருப்பொருளில் அப்பாவி தமிழ்மக்களை வகைதொகையின்றி கைது செய்து ஆட்டு மந்தைகளைப் போல பஸ் வண்டிகளில் ஏற்றி அழைத்துச்சென்றனர்। குறிப்பாக பெண்கள் தாம் உடுத்தியிருந்த உடையுடன் பலரதும் காமப்பார்வைக்கு உள்ளாகி அடிபட்ட நாய்களைப்போல இராணுவ பஸ்ஸில் உட்கார்ந்திருந்ததை நான் பார்த்தேன்।


இந்நிலையில் குறிப்பிட்ட ஒரு தொகுதியினர் நேற்று வியாழக்கிமை விடுவிக்கப்பட்டனர்। விடுவிக்க்பபட்ட மலையகப் பெண்ணொருவர் இலங்கை தொலைக்காட்சியொன்றுக்கு இப்படி தகவல் தந்தார்।


'உண்மய சொன்னா எங்களுக்கு அங்க (பூசா சிறை) ஒரு பிரச்சினையும் இருக்கல। நல்லா கவனிச்சிக்கிட்டாங்க। ஒரு கேள்வியும் கேட்கல। நாங்க எல்லாரும் சந்தோஷமா இருந்தோம்। அதனால ஒரு பயமும் இருக்கல' என்றார்।


என்னைப்பொருத்தவரையில் இந்தப் பெண் உயிருள்ள ஜடம்। இவ்வாறு இனத்துவேச விஷமிகளுக்கு சாதகமாக கதைக்கும் இவர்களைப் போன்றவர்கள் ஏன் விடுவிக்கப்படவேண்டும்। சிறைவாசம் தான் சுதந்திரமே। அரசியல்வாதிகள் எவ்வளவுதான் மக்கள் தலையில் மிளகாய் அரைத்தாலும் அந்த மிளகாயை எடுத்து தன் கண்ணில் தானே பூசிக்கொள்ளும் அறிவிலிகளும் இருக்கிறார்கள்।


இவர் இப்படிக்கூறுகிறார் என்றால் இந்தக் கேவலத்தை இன்னும் அனுபவிக்க ஆவலாய் இருக்கிறார் என்றே அர்த்தம்। பட்டபின்னுமா புத்தி பேதலிக்கிறது?

13 comments:

Anonymous said...

போட்டு தாக்கு! போட்டுத் தாக்கு! சக்கப்போடு ஒன்னு போட்டுத்தாக்கு!

இறக்குவானை நிர்ஷன் said...

வருகைக்கு நன்றி அம்மு! நீங்க தான் போட்டுத்தாக்கி இருக்கீங்க போல...

M.Rishan Shareef said...

'உண்மய சொன்னா எங்களுக்கு அங்க (பூசா சிறை) ஒரு பிரச்சினையும் இருக்கல। நல்லா கவனிச்சிக்கிட்டாங்க। ஒரு கேள்வியும் கேட்கல। நாங்க எல்லாரும் சந்தோஷமா இருந்தோம்। அதனால ஒரு பயமும் இருக்கல' என்றார்।

இந்த ஒரு பதில் மூலம் வதைப்பட்டுக்கொண்டிருக்கும் அத்தனை தமிழ் பேசும் மக்களையும் வெகு சாதாரணமாக ஆக்கிவிட்டார் அந்த யுவதி.தன் மேல் எந்தத் தவறும் இல்லை.வீணாகக் கைது செய்தார்களெனில் அது மனித உரிமை மீறல் அல்லவா?இது கூடத் தெரியவில்லையா அந்த யுவதிக்கு? ஊடகங்களிடம் பேசும் போது தனக்கிழைக்கப்பட்ட அநீதியை எடுத்துச் சொல்லாமல் ஏதோ விருந்தினர் வீட்டுக்குப் போய் தங்கிவிட்டு வந்தது போல் பேசியதென்பது எனக்கு மிகவும் ஆச்சரியத்தை அளிக்கிறது.இப்படியான பதில்கள் எதிர்காலத்தில் இவ்வாறான கைதுகளை அதிகரிக்கவே செய்யுமன்றி குறைக்காது.

வெத்து வேட்டு said...

did you think from her point of view?
what pains she may have had to go through to come out the detention center? or what threatening she still faces if she doesn't say the above statement...
do you think anyone with right mind would say this?
i don't find any difference between her statement and anyone from Vanni saying they are living happilly under ltte...

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

நிர்ஷன்!
அந்தப் பெண் பாவம் வெறும் கருவி!!
அவர் உண்மை சொன்னால் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை.
அவர் சொல்லியதை அப்படியே எதிர் மறையில் பார்ப்பதே விவேகம்.
இந்தப் பிள்ளையை எதாவது வெளிநாடு அனுப்பிவிட்டு உண்மையைக் கேளுங்கள்.
இவர்கள் மத்தளம் போல் இரண்டுபக்கமும் இடி வாங்குபவர்கள்.

மங்களூர் சிவா said...

//
யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
நிர்ஷன்!
அந்தப் பெண் பாவம் வெறும் கருவி!!
அவர் உண்மை சொன்னால் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை.
அவர் சொல்லியதை அப்படியே எதிர் மறையில் பார்ப்பதே விவேகம்.
இந்தப் பிள்ளையை எதாவது வெளிநாடு அனுப்பிவிட்டு உண்மையைக் கேளுங்கள்.
இவர்கள் மத்தளம் போல் இரண்டுபக்கமும் இடி வாங்குபவர்கள்.

//

இறக்குவானை நிர்ஷன் said...

எம்.ரிஷான் ஷெரீப் said...
// ஏதோ விருந்தினர் வீட்டுக்குப் போய் தங்கிவிட்டு வந்தது போல் //

நன்றாக சொன்னீர்கள் ரிஷான். சம்பந்தப்பட்டவர்களுக்கு விளங்கினால் சரி.

இறக்குவானை நிர்ஷன் said...

வெத்து வேட்டு said...

// did you think from her point of view? //
ya.i can understand what do you mean.but we cant live like this. tamils should aware & make their selves free.

இறக்குவானை நிர்ஷன் said...

//யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
நிர்ஷன்!
அந்தப் பெண் பாவம் வெறும் கருவி!!//

யோகன் அந்த யுவதி பேசியதில் நீங்கள் சொல்வதைப் போல நான் ஒன்றும் காணவில்லை. அரசியல்வாதிகள் சொல்லிக்கொடுத்துதான் இவ்வாறு நடந்தது என்று நன்றாக தெரியும். அப்படியாயின் இவர்கள் இன்னும் ஏன் அந்த அரசியல்வாதிகளின் பித்தலாட்டங்களுக்கும் சமூகத்துரோகங்களுக்கும் துணைபோகிறார்கள்.

இறக்குவானை நிர்ஷன் said...

சிவா, அரசியல்வாதிகள் தான் மாறும் ஆட்சிகளுடன் மாறி மாறி தம்மை குரங்குக் கூட்டம் என மற்றைய கட்சிகளிடம் காட்டுபவர்கள் என்றால் மக்களுமா இப்படி?
வருகைக்கு நன்றி தலைவா!

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

அந்த பெண் அவ்வாறு டிவி பேட்டி கொடுக்கவில்லை என்றால், சிலரது துன்புறுத்தலுக்கு ஆளாகக்கூடும் என்று நினைக்கிறேன்.

அன்புடன் ஜோதிபாரதி

Anonymous said...

ஏமாறுபவன் இருக்கும்மட்டும் ஏமாற்றுபவன் இருக்கத்தான் செய்வான்..

இறக்குவானை நிர்ஷன் said...

வாங்க கவி.நீங்கள் சொல்றது உண்மைதான்.... மக்களுக்கு புரியனுமே?