Friday, April 4, 2008

விஷம் கறக்கும் பசுக்களுக்கு ஒரு வேண்டுகோள்!!!

எனது வலைத்தளம் அரசியல் இலாபம் கருதியோ சுயலாபம் கருதியோ செய்யப்படும் ஒன்றல்ல। யாராவது தவறாக புரிந்துகொண்டிருந்தால் தயவு செய்து என்னிடம் கேளுங்கள்। அதைவிடுத்து எனக்கு எதிரான கேவலப் பிரசாரங்களில் ஈடுபடவேண்டாம் எனத் தாழ்மையுடன் வேண்டுகிறேன்।
இது ஒரு வலைப்பதிவே தவிர இலங்கையில் பதிவுசெய்யப்பட்ட ஓர் ஊடகமல்ல। நான் சுதந்திரமாக எனது கருத்துக்களை வெளியிடுகிறேன்।யார் மனதையும் புண்படுத்தவேண்டும் என்பது என்னுடைய நோக்கமல்ல।
என்னுடைய பதிவுகளில் தமிழர்களின் நலனைத்தவிர்த்து சுயலாபத்துடன் செயற்பட்டிருக்கிறேனா என்பதை என்மீது குற்றம் சுமத்தும் அரசியல்வாதிகள்,நபர்கள் சொல்லட்டும்। என்னிடம் நன்றாக கதைத்துப் பழகி வலைத்தளத்தைப் பற்றி பெருமையாகச் சொல்லும் சிலர் வெளியில் கேவலமாகப் பேசுவது உண்மையில் கவலையாக இருக்கிறது। பெரும்பாலான பதிவர்களின் பதிவுகள் சுயலாபம் கொண்டவையல்ல। என்னுடையதும் அவ்வாறே। பத்திரிகைத்துறையில் சில உண்மைகளை வெளிக்காட்டப் போய் எனக்கு ஏற்பட்ட பிரச்சினைகளால் உடைந்துபோய் முச்சடைத்து தமிழை சுவாசிக்க முடியாது குற்றுயிராக இருப்பதாக பேசுகிறீர்கள்।
ஆம்! ஊடகம் என்னும் என்னுடைய இலட்சியத்துறையில் சாதிக்கத்துடித்தபோது சிலர் சிரித்துக்கொண்டே என்னைக் கத்தரித்தார்கள்। நெருப்பால் சுடப்பட்ட புழுவாய் துடித்து அதனையே அந்த வேதனையையே ஆணிவேராய்க் கொண்டு எழுந்து நடந்தபோது உண்மையை வெளிக்காட்டுவதாய் பிரச்சினை। தமிழர்களே குழுக்களாய் பிரிந்திருந்து எனக்கு அபாய சமிக்ஞை எழுப்பிக்கொண்டிருந்தார்கள்। எனக்காகவல்ல என்சார்ந்தவர்களுக்காகத்தான் ஊடகத்துறையிலிந்து விலகுகிறேன் என்பது அவ்வாறானவர்களுக்கு புரிந்திருக்கும்।
ஆனால் அரசியல்சேவை என்ற பெயரில் சமுதாய இரத்தத்தை உறிஞ்சிக் குடித்து பசுத்தோல் போர்த்தி விஷம் கறக்கும் சிலரின் சுயலாப வெறிக்கு நான் பலியாக மாட்டேன்। நீங்கள் எந்த இடத்தில் யாருக்கு என்ன துரோகம் செய்தீர்கள் என்பதை ஆதாரத்துடன் வெளிப்படுத்தவும் பின்னிற்க மாட்டேன்। உங்களை நியாயப்படுத்துவதற்காக பக்கசார்பின்றி இயங்கும் ஊடகவியலாளர்களை அசிங்கப்படுத்தாதீர்கள்।
அரசியல்வாதிகளின் பின்னால் வால்பிடித்துத் திரியும் சில ஊடகவியலாளர்களும் இருக்கிறார்கள்।
அவர்கள் எனக்கிட்ட பின்னூட்டங்கள் இவை:

Anonymous said...
யேண்டா டுபாகூருங்களா... அவ அவன் நாட்டில வாழ்வா சாவான்னு தவிச்சுக்கிட்டிருக்கிறான்... உங்களுக்கு ஒவ்வொருத்தன்ட கோவணத்துக்குள்ளையும் நோண்டணும்னு அரிப்பா இருக்கு இல்ல...? முதல்ல உங்கடய அவுத்துப் பாருங்கடா எத்தன பீத்தல் இருக்குன்னு தெரியும்...


Anonymous said...
தம்பிஅதிகமாத்தான் பேசுறியள்।அடங்கலன்னா அடக்கிடுவோம்.


அனானி said...
//வாழ்வா சாவானு தவிச்சிட்ருக்கும்போது இதுவும் தேவைதானா தானய்யா நானும் கேட்கிறன்।//இப்பிடியெல்லாம் எல்லாரும் யோசிக்க ஆரம்பிச்சுட்டா மனித குல விருத்தி என்னாகிறது? வாழ்வோ சாவோ காதலும் கூடலும் அவசியம்ப்பா...கூடிக் குலவுறதுன்றது மனுஷ சுபாவம்... சைவருக்கும் சரி மற்றவையளுக்கும் சரி... ஆக, சிவராத்திரி தினத்துல புனிதமா இருக்கோணும் என்றதெல்லாம் சிவனத் தொழுறவங்களுக்கு மட்டும் தான்... நீங்க மட்டும் பெரிய உத்தமமோ? சிவராத்திரி முழிக்கப்போய்ட்டு சிவசிந்தனை இல்லாம அவசிந்தனையில தான் இருந்திருக்கிறீங்க... சிவராத்திரி அன்னிக்கு கோயிலில என்ன நடந்திச்சுன்னு ஒரு பதிவு போடத் தோணிச்சா? சும்ம போலீஸ் வேல பாத்துக்கிட்டு... டுபாகூருங்களா... மற்றது, தாந்திரீகத்தில எல்லாம் சிவனும் காளியும் உடலுறவு கொள்ளுற திருப்படங்கள வணங்குறாங்க தெரியுமா? காதலும் கடவுளும் ஒண்ணுப்பா... காதல் ஜோடிகள இப்படி காயுறதுதான் சிவத்துரோகம்... பரமசிவன்ல இருந்து அவர் பையன் முருகன் வரைக்கும் இந்த விசயத்துல கில்லாடிங்க தானே?


Anonymous said...
பேசாத வார்த்தை யாரையும் துன்புறுத்துவதில்லைதொடர்மௌனமும் எதுவித பயனையும் தரப்போவதில்லைகடமையை செய்வோம்உரிமையை பெற்றுக்கொள்வோம்தடையை தகர்த்தெறிவோம்-அதுமற்றவரின் தலையாய்இருந்தாலும்பரவாயில்லை!--------இது உங்களுடைய கவிதை। யதார்த்தத்துக்கு ஒத்துவராது என நினைக்கிறேன். எவ்வளவுதான் முயற்சி செய்யுங்கள். என்னதான் சொல்லுங்கள். சமுதாயத்தை திருத்த முடியாது. கடைசியில் நாடற்றவர்களாக வெளிநாட்டில் வசிக்க வேண்டிவரும்.நீர் பலதும் பேசுகிறீர்.விழலுக்கிறைத்ததாக கவலைப்படுவீர்.


எனது பதிவுகளில் எவையேனும் அரசியல்சாயம்பூசப்பட்டவை என எண்ணினால் சொல்லுங்கள்। மற்றும் இவ்வாறான பின்னூட்டங்கள் தருவதன் மூலமோ அல்லது கல்வியியலாளர்களின் சந்திப்பின்போதோ என்னைப்பற்றி தவறாக பேசி ஒன்றையும் சாதிக்க முடியாது என்பதை உணருங்கள்। என்னை முழுமையாக கவிழ்ப்பதற்கு மலையத்தைச் சேர்ந்த சிலரும் படாதபாடாய் உழைத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும்। சம்பந்தப்பட்டவர்களுக்கு நான் எழுதியுள்ளவை அனைத்தும் புரியும் என நினைக்கிறேன்।

17 comments:

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

நிர்ஷன்,

தங்கள் வலைப்பக்கத்திற்கு மறுமொழி மட்டுறுத்தல் செய்ய வேண்டுகிறேன்.

அன்புடன்,
ஜோதிபாரதி.

Unknown said...

தமிழ் நண்டு கதை தெரியுமா உங்களுக்கு!! அது போலத்தான் சிலர்.. ஏன் பயப்படவேண்டும்?

இறக்குவானை நிர்ஷன் said...

// ஜோதிபாரதி said...
நிர்ஷன்,

தங்கள் வலைப்பக்கத்திற்கு மறுமொழி மட்டுறுத்தல் செய்ய வேண்டுகிறேன்.

அன்புடன்,
ஜோதிபாரதி.
//

கருத்து சுதந்திரத்துக்காகத்தான் பாரதி அப்படியே விட்டேன்.
சரி செய்திட்டால் போச்சு!!

இறக்குவானை நிர்ஷன் said...

// Bava said...
தமிழ் நண்டு கதை தெரியுமா உங்களுக்கு!! அது போலத்தான் சிலர்.. ஏன் பயப்படவேண்டும்?
//

கண்ணாடிக் குவளையிலிருந்து ஒரு நண்டுகள் இரண்டு வெளியேற முற்பட்டு ஒன்று ஏறும்போது மற்றொன்று இழுத்துவிடும் கதை என நினைக்கிறேன். சின்ன வயசில் படிச்ச ஞாபகம். உங்கள் பின்னூட்டத்தைப் பார்த்து பழையதை நினைத்துச் சிரித்தேன்.

நன்றிகள் பவா.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

மனிதம் பேணப்படுகிற இடத்தில் தான் கருத்து சுதந்திரம் தேவைப்படும். அது இல்லாத இடத்தில் தேவையில்லை என்று நினைக்கிறேன். இது போல் தான் தன்னை தூற்றிய எதிர்க்கட்சி பதாகைக்கு பேரறிஞர் அண்ணா வெளிச்சம் போடச்சொன்னார் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். அது நமக்குத் தேவையில்லை என்று நினைக்கிறேன்.

அன்புடன்,
ஜோதிபாரதி.

இறக்குவானை நிர்ஷன் said...

நீங்கள் சொல்வதை ஏற்றுக்கொள்கிறேன் ஜோதிபாரதி.
எதற்காக அழுகிறாய்?உன்னை நினைத்து அழுகிறாயா? நீ உனக்கானவன் அல்ல.நீ அவர்களுக்கானவன். ஆதலால் அவர்களை நினைத்து வேதனைப்படு. சமுதாயம் எனும் அன்புசார்ந்த சந்தோஷத்தை கட்டியணைப்பதாயின் சோகங்களை தவிர்க்க முடியாது என விவேகானந்தர் சொன்னதையும் ஞாபகப்படுத்திக்கொண்டேன்.

நன்றி ஜோதிபாரதி. உங்களைப் போல தைரியமூட்டி வளத்துக்கு வித்திடுபவர்கள் இருக்கும்போது எதற்குப் பயம்?

Unknown said...

Enna Nn, unnudaiya intha B'day athiradiya thodangiyiruku.

Intha Anonymous ellarum Kuli Thonduhiravarhal. Ivarhal evvalavu kalathuku than Kuli thonda pohirarhal? Kulithonduhira Oruvan Kulikulleye viluhira kalam varum. Nameless fellows.

Nn, Naan unakku sollvathu ondre ondru than....." Nee engu sendralum Nallavatraiye sei. Appothu Nee seitha nanmaigal unake thirumbi varum."

இறக்குவானை நிர்ஷன் said...

//Nitharshini said...
Enna Nn, unnudaiya intha B'day athiradiya thodangiyiruku.

Intha Anonymous ellarum Kuli Thonduhiravarhal. Ivarhal evvalavu kalathuku than Kuli thonda pohirarhal? Kulithonduhira Oruvan Kulikulleye viluhira kalam varum. Nameless fellows.

Nn, Naan unakku sollvathu ondre ondru than....." Nee engu sendralum Nallavatraiye sei. Appothu Nee seitha nanmaigal unake thirumbi varum."
//

வருக நிது.நட்புடன் கருத்து பகிர்ந்தமைக்கு நன்றிகள்.

Paheerathan said...

சும்மா விட்டுத்தள்ளுங்கள் நிர்ஷன். ஏதோ மக்களுக்கு உண்மை தெரிந்துவிடும் என்று அஞ்சுகிறார்கள். இவர்களுக்கெல்லாம் பதிவு போட்டு நேரத்தை வீணாக்காதீர்கள் . ஹா ஹா ஹா .

இறக்குவானை நிர்ஷன் said...

//Paheerathan said...
சும்மா விட்டுத்தள்ளுங்கள் நிர்ஷன். ஏதோ மக்களுக்கு உண்மை தெரிந்துவிடும் என்று அஞ்சுகிறார்கள். இவர்களுக்கெல்லாம் பதிவு போட்டு நேரத்தை வீணாக்காதீர்கள் . ஹா ஹா ஹா
//

ஆமாம் பகீரதன். ஆனால் நான் அமைதியாக இருந்தால் அவர்களுக்கு அடங்கிப் போய்விட்டதாக நினைக்கிறார்கள். அதுதான் எழுதினேன்.

மாயா said...

" நிலவைப்பார்த்து நாய்குலைத்த கதைமாதிரியெல்லோ கிடக்கு"
நண்பரே அனைத்தையும் விட்டுத்தள்ளுங்கள் :))

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

இந்த சிவன் காளி கூத்து எழுதிய பெருமானிடம் ஒரு கேள்வி கேட்க வேண்டும் போல இருக்கு;
ஆனால் நீங்கள் பிரசுரிக்க மாட்டீர்கள். தமிழ்மணமும் ஒத்துக் கொள்ளாது.
இதுகள் காலைத்தூக்கிச் சலம் விடுபவர்கள் ;திருந்தார்.

இறக்குவானை நிர்ஷன் said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மாயா. நானும் அதை மறக்க முயற்சிக்கிறேன்.

வாருங்கள் யோகன் அண்ணா. சரி என்னவென்றுதான் சொல்லுங்களேன்.

Unknown said...

வணக்கம் நிர்சன்,
வளரவிடாதவர்களைப் பற்றி நாங்கள் நினைத்துக்கொண்டிருந்தால் எம்மால் வளர முடியாது. உங்களுக்குள் உள்ள திறமைகளைப் பற்றி சமுதாயம் அறியும். குறிப்பாக நீங்கள்செய்யும் அறநெறிப்பாடசாலைத் தொண்டுகள் உங்களுக்கு எப்போதும் நன்மை பயக்கும். அதனால் கவலை வேண்டாம்.

வந்தியத்தேவன் said...

அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா என கவுண்டர் ஸ்டைலில் சொல்லிவீட்டு அப்படியே போகவேண்டியதுதான்

priyanthi said...

Hi Nirshan,
"hearty wishes for your effort"
also leave these comments and forget.i know you are strong,nothing will happen to your career by these useless comments.

"PUDAM POTTA MANITHANAI BOOMIYIL PRAGASIKKA THIDAM VENDUM MANATHUKKU"
Etkanave manathitkul thidam adigam.
athatku innum uram serthu munnera vaalthugiren.

Loving Friend
Priyanthi

இறக்குவானை நிர்ஷன் said...

// priyanthi said...
Hi Nirshan,
"hearty wishes for your effort"
also leave these comments and forget.i know you are strong,nothing will happen to your career by these useless comments.

"PUDAM POTTA MANITHANAI BOOMIYIL PRAGASIKKA THIDAM VENDUM MANATHUKKU"
Etkanave manathitkul thidam adigam.
athatku innum uram serthu munnera vaalthugiren.

Loving Friend
Priyanthi
//

வாருங்கள் பிரியந்தி. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்.