"மல்லிகை" யில் மலர்ந்தது எனது வலைப்பூ !"மல்லிகை" இதழ்பற்றி அறியாத தமிழ்விரும்பிகள் இருக்க முடியாது। உலகத் தமிழரிடத்தில் பிரசித்தி பெற்ற இதழ் இது। கடந்த 45 வருடங்களுக்கு அதிகமாக தமிழ், இலக்கியப் பணியாற்றிவரும் மாதாந்த சிற்றிதழில், இந்த வெளியீட்டில் (மே மாதம் - ३४८ ஆவது இதழ்) எனது "புதிய மலையகம்" வலைத்தளத்தில் வெளியான செய்தி "மின்வெளிதனிலே" பகுதியில் பிரசுரமாகியுள்ளது।

உண்மையில் எனது அளவில்லா குதூகலத்தை சொல்ல வார்த்தைகள் வரவில்லை। அந்தளவுக்கு என்னையறியாமல் ஆனந்தப்படுகிறேன்। தமிழ் இலக்கிய உலகில் மல்லிகைக்குத் தனியிடம் உண்டு। இலக்கியம், தமிழ்,பண்பாடு,கலாசாரம்,கருத்தாக்கம்,புதியன பற்றி பலவற்றையும் சுவைபட தந்து மனதில் மல்லிகையாய் மலர்ந்து மணம்பரப்பும் இதழ் மல்லிகை। டொமினிக் ஜீவா அவர்களின் மாபெரும் தமிழ்ப்பணி இது।

இவரது அங்கீகாரத்துடன் பிரசுரமான எனது வலைத்தள தகவலால் நான் பெருமை கொள்வதுடன் பழைமை நற்பெயர் கொண்ட எழுத்தாளர் மேமன் கவி எழுதிய ஆக்கம் என்னை மேலும் மெய்சிலிர்க்க வைத்தது। மல்லிகைக்கு எனது மனமார்ந்த நன்றிகள்।

எழுத்துத்துறையில் சாதிக்க பல்வேறு தடைகளைப் போட்டு உண்மைகளைச் சொல்லவிட முடியாதளவுக்கு பிரச்சினைகளை ஏற்படுத்தி எனது இலட்சிய ஊடகத்துறையிலிருந்து என்னை சிலர் தூக்கியெறிய முற்பட்டனர்। ஏதானாலும் பரவாயில்லை எப்படியாவது உண்மையை உலகறியச் செய்ய வேண்டும் என வலைத்தளத்தில் எழுதத் தொடங்கினேன்। அதற்கும் எதிர்ப்புகள் ஏராளம்। ஆனால் அவை எல்லாவற்றையும் பொடியாக்குமளவுக்கு இராஜசந்தோஷத்தை வாசனையுடன் தந்தது மல்லிகை। நன்றிகள்।

உடனடியாக இது பற்றி எனக்கு அறியத்தந்த "ஆரவாரம்" தாசன் அண்ணாவுக்கும் நன்றிகள் உரித்தாகட்டும்।

21 comments:

said...

நிர்ஷா,நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் எனது இனிய நண்பா :)

said...

வாழ்த்துக்கள் நிர்ஷன்:)

said...

//எம்.ரிஷான் ஷெரீப் said...
நிர்ஷா,நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் எனது இனிய நண்பா :)
//

நன்றி ரிஷான்.

said...

//காண்டீபன் said...
வாழ்த்துக்கள் நிர்ஷன்:)
//
நன்றி காண்டீபன்

said...

வாழ்த்துக்கள் நிர்ஷன்

said...

எங்கயோ... போயிட்டீங்க நிஷான்,

வாழ்த்துக்கள்.

said...

சின்னக்குட்டி, புதுகை இருவருக்கும் நன்றிகள்.

said...

வாழ்த்துக்கள் நிர்ஷன்

தொடர்ந்து பயணியுங்கள்...
வாழ்த்துக்கள்...

said...

// தமிழன்... said...
வாழ்த்துக்கள் நிர்ஷன்

தொடர்ந்து பயணியுங்கள்...
வாழ்த்துக்கள்...
//

நன்றி தமிழன்.

Anonymous said...

வாழ்த்துக்கள் நிர்ஷன்,
உங்கள் ஊருக்கும் பெருமை சேர்த்திருக்கிறீர்கள். இந்த நற்செய்தியை எனது நண்பர்களிடத்திலும் பகிர்ந்துகொண்டேன். கொழும்புக்கு வந்தால் சந்திக்கிறேன்.

-அமலன்

said...

//Anonymous said...
வாழ்த்துக்கள் நிர்ஷன்,
உங்கள் ஊருக்கும் பெருமை சேர்த்திருக்கிறீர்கள். இந்த நற்செய்தியை எனது நண்பர்களிடத்திலும் பகிர்ந்துகொண்டேன். கொழும்புக்கு வந்தால் சந்திக்கிறேன்.

-அமலன்
//

நன்றி அமலன். வாருங்கள் சந்திப்போம். எனக்கும் அட்டனில் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.

said...

வாழ்த்துக்கள்.
நானும் பெருமையடைகிறேன் !

said...

//snnithiyaanu said...
வாழ்த்துக்கள்.
நானும் பெருமையடைகிறேன் !
//

நன்றிகள் பல!

Anonymous said...

வாழ்த்துக்கள் நிர்ஷன்.
முடியுமானால் என்னைக் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம். ரொம்பச் சிரமப்பட்டு தமிழில் எழுத்து தேடி கொமன்ட் போடுகிறேன்.

இரத்தினபுரியில் சதுர்த்தி திருவிழா மிகப்பிரமாண்டமாக நடைபெற்றபோது நீங்கள் கிரியைகள் பற்றிய விளக்கங்களுடன் அறிவிப்பு செய்துகொண்டிருந்தீர்கள். அந்தச் சந்தர்ப்பத்தில் சந்தித்தோம்.

நினைவிருக்கிறதா?

said...

மனம் நிறைந்த வாழ்த்துக்கள் நிர்ஷன்..

said...

//Anonymous said...
வாழ்த்துக்கள் நிர்ஷன்.
முடியுமானால் என்னைக் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம். ரொம்பச் சிரமப்பட்டு தமிழில் எழுத்து தேடி கொமன்ட் போடுகிறேன்.

இரத்தினபுரியில் சதுர்த்தி திருவிழா மிகப்பிரமாண்டமாக நடைபெற்றபோது நீங்கள் கிரியைகள் பற்றிய விளக்கங்களுடன் அறிவிப்பு செய்துகொண்டிருந்தீர்கள். அந்தச் சந்தர்ப்பத்தில் சந்தித்தோம்.

நினைவிருக்கிறதா?
//

நினைவில்லை அனானியாரே. தயவு செய்து பெயரைச் சொல்லுங்கள்.

said...

//King... said...
மனம் நிறைந்த வாழ்த்துக்கள் நிர்ஷன்..
/

நன்றி கிங்.

said...

கலக்குங்க!!

தரமான படைப்புகளை தர என் அன்பான வாழ்த்துக்கள்.

said...

//கிரி said...
கலக்குங்க!!

தரமான படைப்புகளை தர என் அன்பான வாழ்த்துக்கள்.
//
நன்றி கிரி.

said...

வாழ்த்துக்கள்

said...

//மாயா said...
வாழ்த்துக்கள்
//
நன்றி மாயா.