பிரார்த்தனையும் வேண்டுதலும்..!

எல்லாரும் இறைவனிடம் பிரார்த்திக்கிறோம்। நான் நல்லாயிருக்கனும், வீட்டார் நல்லாயிருக்கனும், பக்கத்துவீடு, முன்வீடு எல்லாம் சந்தோஷத்துல நிறையனும், கல்வி வேணும், காசு வேணும் என (இன்னும் ஏகப்பட்ட) பிரார்த்திக்கிறோம்।
ஏதோ கடைசியா வாயில் வந்தா எல்லாரும் நல்லாயிருக்கனும் என்று பிரார்த்திப்போம்। இதுவரை எனது பிரார்த்தனைகள் எல்லாம் அப்படித்தான் இருந்துவந்தன।
ஆனால் எமது நாடு, எமது மக்கள், எமது மொழி இதைவைத்து அரசியல் அரங்கில் முளைவிட்டுக் காய்க்க எண்ணும் கலைஞர்கள் ( இங்கு கலைஞர்கள் எனக் குறிப்பிட்டது நடிப்பில் தேர்ந்தவர்கள் என்பதால்) , தீவிரமாக பின்பற்றப்பட்டுவரும் கொலைக்கலாசாரம், யாராலும் தண்டிக்கப்டாத வெறியர்களின் அடாவடித்தனம், கொன்றுகுவிக்கப்படும் பிணங்கள் என இத்தனையும் பார்த்து எனது பிரார்த்தனையை மாற்றிக்கொண்டேன்।
எல்லாருக்கும் எல்லாம் கிடைக்கவேண்டும் என்பதிலிருந்து விலகி இப்போது குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்றே பிரார்த்திக்கிறேன்।
சமூகத்துரோகிகள்,மொழித்துரோகிகள்,தேசத்துரோகிகள் யாராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட்டால் மற்றவர்களுக்கு வாழ்வு கிடைக்குமல்லவா?
எனது கோரிக்கைகளை இறைவன் ஏற்றுக்கொள்வாரா என்பதுதான் சந்தேகம்॥!
*****************************************
இலங்கைத் தமிழர்களுக்கான இந்திய உறவுகளின் எழுச்சி, உணர்வுகளைத் தீண்டி இழுத்து பயமின்றி நிமிர்ந்து நிற்கச் செய்கிறது। இருப்பினும் குறிப்பிட்ட சிலர் இந்த விடயத்தில் தெளிவில்லாததால் பதிவிடல் என்ற பெயரில் ஏதேதோ எழுதி வருகிறார்கள்।
இலங்கைப்பிரச்சினை பற்றி எழுதினாலும் பின்னூட்டம் தந்தாலும் புலி ஆதரவாளர்கள் என்றும் நாம் வடிப்பது முதலைக்கண்ணீர் என்றும் கூறி மனம் நோகச்செய்கிறார்கள்। இவர்களுக்கு நான் சொல்லிக்கொள்ள விரும்புவது ஒன்று மட்டும்தான்। (எனது வேண்டுதலாகவும் எடுத்துக்கொள்ளலாம்).
தமிழ் மக்கள் வடிக்கும் கண்ணீரை தயவுசெய்து உங்கள் எழுத்துக்களால் கொச்சைப்படுத்தாதீர்கள்।

( யுத்தத்தினால் மட்டுமல்ல। யுத்தம் சாராத எத்தனையோ இழிநிலைப் பிரச்சினைகளுக்கு தமிழர்கள் முகங்கொடுத்து வருகின்றமை வெளிவராத உண்மைகளாக மறைந்து காய்ந்து போகின்றன।
சரியாக இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னர் தமிழர்களை கொன்றொழிக்க வேண்டும் என்ற தீவிரம் அதிதீவிரமாக தலைதூக்கத்தொடங்கியது। இதே காலகட்டத்தில் அப்போது நூற்றுக்கணக்கான தமிழ்ப் பெண்களின் மார்புகள் இனவெறிக்காடையர்களால் அறுக்கப்பட்டு கொலைசெய்யப்பட்டார்கள்। இது தொடர்ந்தும் இடம்பெற்றது। இவ்வாறான கசப்பான கறைபடிந்த வரலாறு உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்? கணவரைக் கண்முன் கொல்லுவோம் என அச்சுறுத்தி மனைவியை பலவந்தமாக பாலியல் குற்றத்துக்கு உட்படுத்தியது உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்? )

*****************************************
நான் முதல் சொன்ன விடயத்துக்கும் பின்சொன்ன விடயத்துக்கும் ஏதோ ஒருவகையில் தொடர்பு உள்ளதாக நினைத்தாலும் தவறில்லை।

10 comments:

Anonymous said...

குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்றே பிரார்த்திக்கிறேன்।

kadavul thandippara??

said...

வருகைக்கு நன்றி அனானி.

கடவுள் தண்டிக்கக்கூடும்.

said...

எல்லாரும் நல்வாழ்வு வாழவேண்டும் என்றே வேண்டிக்கொள்ளுங்கள்.

பிறர்தம் செயல்களால் உங்கள் வேண்டுதலை மாற்றிக்கொள்ள வேண்டா.

தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன

எல்லாச் செயல்களுக்கும் விளைவுகள் உண்டு. செயலைச் செய்தவர்களே விளைவை உண்டாக்கிக்கொள்கிறார்கள். நல்ல விளைவுக்கும் தீய விளைவுக்கும் அவர்களே பொறுப்பு ஆவர்.

said...

// அ. நம்பி said...
எல்லாரும் நல்வாழ்வு வாழவேண்டும் என்றே வேண்டிக்கொள்ளுங்கள்.

பிறர்தம் செயல்களால் உங்கள் வேண்டுதலை மாற்றிக்கொள்ள வேண்டா.

தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன

எல்லாச் செயல்களுக்கும் விளைவுகள் உண்டு. செயலைச் செய்தவர்களே விளைவை உண்டாக்கிக்கொள்கிறார்கள். நல்ல விளைவுக்கும் தீய விளைவுக்கும் அவர்களே பொறுப்பு ஆவர்.
//

நன்றி அம்பி.
உங்கள் மேலான கருத்தினை நான் பெரிதும் மதிக்கிறேன்.

said...

NIRSHAN,

ITHU THANI MANITHANIN VENDUTHAN ALLA.
ORU INATHTHIN KURAL
ORU SANTHATHIYN ALUGAI

KOLAI SEIYAPPATTAVARGAL PUTHAIKKAPPADAVILLAI
VITHAIKKAPPATTULLARGAL.

NICHCHAYAM IRAIVAN NAMAKKU BATHILALYPPAN.

BALU.

BALU

said...

நான் முதல் சொன்ன விடயத்துக்கும் பின்சொன்ன விடயத்துக்கும் ஏதோ ஒருவகையில் தொடர்பு உள்ளதாக நினைத்தாலும் தவறில்லை।

purigiradu thola. neengal eludiya sila vidayangal kavalai alikindrana.

said...

நன்மையே நடக்க பிரார்த்திப்போமாக.

- சாந்தி -

said...

//k said...
NIRSHAN,

ITHU THANI MANITHANIN VENDUTHAN ALLA.
ORU INATHTHIN KURAL
ORU SANTHATHIYN ALUGAI

KOLAI SEIYAPPATTAVARGAL PUTHAIKKAPPADAVILLAI
VITHAIKKAPPATTULLARGAL.

NICHCHAYAM IRAIVAN NAMAKKU BATHILALYPPAN.

BALU
//

இறைவனின் பதிலுக்காகத்தான் காத்திருக்கிறோம் பாலு.

அடிக்கடி நீங்கள் தரும் காத்திரமான பின்னூட்டத்துக்கும் ஊக்கத்துக்கும் நன்றிகள்.

said...

//சாந்தி said...
நன்மையே நடக்க பிரார்த்திப்போமாக.

- சாந்தி -
//

நன்றி சாந்தி.
உங்கள் வலைப்பதிவில் நிறைய தகவல்கள் பரிமாறியுள்ளீர்கள். வருகிறேன்.

said...

//Bava said...
நான் முதல் சொன்ன விடயத்துக்கும் பின்சொன்ன விடயத்துக்கும் ஏதோ ஒருவகையில் தொடர்பு உள்ளதாக நினைத்தாலும் தவறில்லை।

purigiradu thola. neengal eludiya sila vidayangal kavalai alikindrana.
//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பவா.