Monday, November 12, 2007

வெளிச்சம் தராத தீபங்கள்

இலங்கையின் மலையகப்பகுதிகளில் இம்முறை தீபாவளி வெறும் மெளனச் சடங்காகவே ஆகியிருந்தது। நாளுக்கு நாள் அதிகரித்துச்செல்லும் பொருட்களின் விலை மற்றும் பொருளாதாரச்சுமைகளில் தீபாவளியும் தேவையில்லை ஒன்றும் தேவையில்லை என்பது போலத்தான் மக்கள் சந்தோசங்களைத் தொலைத்து வெளிப்படுத்த முடியாத ஆதங்கங்களுடன் தீபாவளி நாளை நகர்த்தினர்।

தேங்காய் ஒன்றும் அரிசி ஒரு கிலோவும் தேங்காயெண்ணெய் அரை லீற்றரும் வாங்கினால் தொழிலாளர்களில் ஒருநாள் சம்பளம் தீர்ந்துவிடுகிறது। இந்நிலையில் எப்படி தீபாவளியைக் கொண்டாடுவது? கொடுமை அரக்கனை கொன்றொழித்த நாளான தீபாவளியில் கொடியவர்கள் தான் இன்பம் அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள்। கடவுள் நின்று கொல்லும் என்பதும் பொய்யாகவே தெரிகிறது என்கிறார்கள் மலையகத் தொழிலாளர்கள்।

காலம் பதில்சொல்லுமா?

5 comments:

றெனிநிமல் said...

நிதர்சன உண்மைகள். என்று தான் இந்த மலையக மக்களின் வாழ்க்கை சகஜநிலைக்கு திரும்புமோ? இது யாருக்கும் தெரியாத புதிர்!

காலங்கள் என்றைக்கு பதில் கூறியது?
ஏட்டிலே புதைந்து போய் விடும் பல் உண்மைகள்.

இளைய தலைமுறையினர் தான் சரியான முறையில் வழிநடாத்த வேண்டும்.

ஆனால்......

அவர்களோ அந்தோ பரிதாபம்! சிற்றின்பத்தினைத்தேடி ஓடுகின்றார்.

இடைதரகர்களும் அரசியல் ஒட்ணுண்ணிகளும் அட்டை போல் இரத்தத்தினை உறிஞ்சுகின்றார்கள்.

இறக்குவானை நிர்ஷன் said...

வருகைக்கு நன்றி றெனி. தொடர்ந்தும் தொடர்பில் இருங்கள்.

Anonymous said...

to rani
nitharsana unmaigal anru elloru sollgirargal. ithu allorum sollum anuthaabam.intha anuthabam kalam kalamaga allorum sollvathu than.yarum theervuthittathai sollvathillai.eniyavathu sinthiunga

இறக்குவானை நிர்ஷன் said...

தீர்வுகளுக்காகத்தான் போராடுகிறோம் கவி. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

தமிழர் நிலைக்கு ஒரு விடிவு வராமல் இருப்பது, கவலை அளிக்கிறது.

அன்புடன்,
ஜோதிபாரதி