சிவராத்திரியும் சிவத்துரோகமும்...! (மனித முகத்துடன் நாய்களின் அட்டகாசம்)

சிவனுக்கே உரிய தனித்துவமான விரதம்தான் சிவராத்திரி। மாதம்,பட்சம்,நித்தியம்,யோகம் என சிவராத்திரி அனுட்டிக்கப்பட்டாலும் மகா சிவராத்திரிக்கு தனி மதிப்புண்டு। மாயையாகிய உலகம் மகாசக்தியாகிய இறைவனிடத்தில் ஒடுங்கும் மகாபிரணய காலம் மகா சிவராத்திரியில் தான் வருகிறது। அதனால் இதன் தனித்துவம் மேலும் வலுவடைகிறது।
இவ்வாறிருக்க இலங்கையின் தலைநகரமாகிய கொழும்பில் சிவராத்திரி விரதம் சிறப்பாக அனுட்டிக்கப்பட்டது। ஆனாலும் வழமை போலவே இளசுகளின் லீலைகளும் மூலை முடுக்கெங்கும் அரங்கேறின। கடந்த ஆண்டு சிவராத்திரியின்போது கொழும்பில் இடம்பெற்ற காம வெறியாட்டங்கள் பற்றி மெட்ரோ நியூஸ் பத்தரிகையில் தகுந்த ஆதாரங்களுடன் எழுதியிருந்தேன்। அதற்காக வாசகர்களின் சூடான கருத்துப்பறிமாற்றங்களும் இடம்பெற்றன। அதேவேளையில் வெலியமுனை குருசாமி தினகரன் பத்திரிகையில் சில விடயங்களை தெளிவாகவே குறிப்பிட்டிருந்தததுடன் தினக்குரல் பத்திரிகையும் இந்தக் கீழ்த்தரம் குறித்து செய்தி வெளியிட்டிருந்தது।
என்னதான் ஊசியேற்றினாலும் உலக்கை நிலை மாறாததுபோல இந்தத்தடவையும் காம மழையில் நனைந்து காதல் நெருப்பில் குளிர்காய்ந்த நாயகர்களின் நிலையும் மாறவில்லை।
ஒருபுறம் பூசைநடைபெற மறுபுறம் பசை போல் ஒட்டிக்கொண்டிருந்தார்கள் காதலர்கள்। கொழும்பில் பிரசித்தி பெற்ற ஆலயங்களுக்கு அருகில் லீலைகள் அரங்கேறின। இலவச காட்சியாக கண்டுகளித்தனர் பலர்।
விவேகானந்தா மேட்டில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கார் ஒன்றுக்குள் இரண்டு காதல் ஜோடிகள் சில்மிஷங்களில் ஈடுபட்டிருந்த போது வேறு இளைஞர்கள் தொந்தரவு செய்தனர்। கோபத்தில் காருக்குள் இந்த இளைஞன் ஒருவன் ஓடிவந்தான்। மேலாடை கூட இல்லாமல்!!! ( என்ன கொடுமை சார் இது?)
அதுமட்டுமல்ல இரவுக்காட்சி திரையரங்குகள் நிறைந்திருந்தன।
நல்ல வேளை முகத்துவார கடற்கரைக்கு பொலீசார் யாரையும் அனுமதிக்கவில்லை। இல்லையென்றால் கடலே சகிக்காமல் பொங்கியிருக்கும்॥
ஆள் நடமாட்டம் என்றுகூட பார்க்காமல் காதலியின் இடையை நசுக்கிப்பிடிப்பதும் காலநேரத்தை நோக்காமல் அவளும் அவனது உடலை வருடிவிடுவதுமாக தொடர்ந்த பல கதைகள் விடியும் வரையில் ஓயவில்லை। இதுபற்றி நிறைய எழுதலாம்। ஆனால் வலைக்கலாசாரத்தை மீறி வெறித்தனமாக எழுதக்கூடாது என்பதால் தவிர்க்கிறேன்। இந்த அனுபவங்கள் பலவற்றை நேரில் கண்டு சளித்துப்போன சமூக நலன்விரும்பியொருவரது தகவல்களை அடுத்த பதிவில் தருகிறேன்।( அவருடன் தொடர்புகொள்ள சற்றுத்தாமதமாகிறது)
சிவராத்திரியில் சிவத்துரோகம் செய்யும் இவர்களை அவனும் பார்த்துக்கொண்டுதானே இருந்திருப்பான்? நாய்தானே நடுவீதியில் செய்யும் என ஒருவர் அப்போது கூறியது இப்போது நினைவுக்கு வருகிறது।சரி,இந்த விஷமிகளின் சமூகத்துரோகத்துக்கு முடிவு கிட்டாதா? என்ன செய்யலாம் என்று பதிலுக்காக உங்களிடம் விடுகிறேன்।

38 comments:

Anonymous said...

இவ்வாறானவர்கள் கட்டாயம் தண்டிக்கப்படவேண்டும். பலர் தமது கையடக்கத் தொலைபேசியின் கமராவில் பெண்களை படமெடுத்ததாகவும் எனக்குத் தெரிந்தவர்கள் சொன்னார்கள். கலிகாலம் என்பது இதுதானோ இறைவா?
(நீங்கள் மெட்ரோவில் எழுதிய ஆக்கத்தையும் இணைத்திருக்கலாமே?)

said...

வருகைக்கு நன்றி அனானி. நீங்கள் சொல்வதும் உண்மைதான்.
அந்தக்கட்டுரை இப்போது என்னிடம் இல்லை. மெட்ரோ ஆசிரிய பீடத்தாரிடம் சொல்லியிருக்கிறேன். கிடைத்தால் நிச்சயமாக இணைக்கிறேன்.

Anonymous said...

Collapse comments

Anonymous said...
இவ்வாறானவர்கள் கட்டாயம் தண்டிக்கப்படவேண்டும். பலர் தமது கையடக்கத் தொலைபேசியின் கமராவில் பெண்களை படமெடுத்ததாகவும் எனக்குத் தெரிந்தவர்கள் சொன்னார்கள். கலிகாலம் என்பது இதுதானோ இறைவா?
(நீங்கள் மெட்ரோவில் எழுதிய ஆக்கத்தையும் இணைத்திருக்கலாமே?)

தீவான்.

said...

நன்றி தீவான். இருமுறை பின்னூட்டமிட்டிருக்கிறீர்கள்??

said...

நல்லா சொல்லியிருக்கீங்க.

நல்ல நாளிலேயே நாளிப்பால் என்பது போலத்தான் இங்கே நடமாட்டம்.

பகல் நேரங்களில் குடையுடன் இருக்கும் ஜோடிகளை முகத்துவாரத்தில் கண்டிருக்கிறீர்கள்.

கையில் குடையுடன் அலைபவர்களைப் பார்த்து அந்தக் குடையாலேயே 4 சாத்தலாமா என்று தோன்றும்.

விடுங்கள். காதல் கோட்டை திரைப்படத்தில் கூறியிருப்பது இதுகள்
"நாய்க்காதல்"தான் செய்கின்றன.

said...

//
புதுகைத் தென்றல் said...
நல்லா சொல்லியிருக்கீங்க.

நல்ல நாளிலேயே நாளிப்பால் என்பது போலத்தான் இங்கே நடமாட்டம்.

பகல் நேரங்களில் குடையுடன் இருக்கும் ஜோடிகளை முகத்துவாரத்தில் கண்டிருக்கிறீர்கள்.

கையில் குடையுடன் அலைபவர்களைப் பார்த்து அந்தக் குடையாலேயே 4 சாத்தலாமா என்று தோன்றும்.

விடுங்கள். காதல் கோட்டை திரைப்படத்தில் கூறியிருப்பது இதுகள்
"நாய்க்காதல்"தான் செய்கின்றன
//

சந்தேகமேயில்ல. இது நாய்க்காதல் தான்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தென்றல்

said...

நலமா நிர்ஷன்? ஆக்கபூர்வமான கட்டுரை. காதல் என்ற பெயரில் அநியாயம் செய்யும் காலவிரயர்கள் இதைக் கவனிப்பார்களா? கவனித்தாலும் அதன்படி நடப்பார்களா? அடுத்த சிவராத்திரியும் இப்படித்தான் இருக்குமோ தெரியவில்லை.

said...

எல்லாம் சிவமயம்.

said...

//Bava said...
நலமா நிர்ஷன்? ஆக்கபூர்வமான கட்டுரை. காதல் என்ற பெயரில் அநியாயம் செய்யும் காலவிரயர்கள் இதைக் கவனிப்பார்களா? கவனித்தாலும் அதன்படி நடப்பார்களா? அடுத்த சிவராத்திரியும் இப்படித்தான் இருக்குமோ தெரியவில்லை.
//

சந்தேகமே இல்லை. அடுத்த சிவராத்திரி இதை விட மோசமாக இருக்கலாம்.
நன்றி பவா.

said...

//யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
எல்லாம் சிவமயம்
//
எல்லாம் அவன் செயல்

said...

இவர்களை நினைத்தால் சிரிப்புத்தான் வருகிறது :))

said...

நிர்ஷன்
சென்ற வருடத்தில் சிவராத்திரி லீலைகள் பற்றிய சகல கட்டுரைகளும் வாசித்தேன். இந்த இடத்தில் இன்னும் சில விடயங்களைக் குறிப்பிடவேண்டும். இந்த லீலைகள் பல வடகொழும்புப் பிரதேச கோயில்களிலேயே நடந்தேறியவை. குறிப்பாக பல வருடங்களாக நான் பம்பலப்பிட்டிப் பிள்ளையார் கோவிலுக்கு சிவராத்திரி நேரங்களில் சென்றிருக்கின்றேன் அங்கே இப்படியான காட்சிகள் காணவில்லை. அதே நேரம் கொச்சிக்கடை சிவன் கோவில், முகத்துவாரம் கோவில்களில் பல வேற்றுமதத்தினரைக் கண்டுள்ளேன். குறிப்பாக தமிழ்பேசும் அந்த வேற்றுமதத்தவர்களுக்கு இந்துக்கோவில்களில் என்ன வேலை? நிச்சயமாக நான் இந்துக்கள் தப்புச் செய்யவில்லை எனக்கூறவில்லை ஆனால் பெரும்பானமையானவர்கள் வேற்றுமதத்தவர்களும் பெரும்பானமை மொழி பேசுபவர்களுமே ஆகும். சிலரை அவர்களில் மதக் குறியீடுகளுடன் கண்டிருக்கின்றேன்.

said...

//தமிழ்பேசும் அந்த வேற்றுமதத்தவர்களுக்கு இந்துக்கோவில்களில் என்ன வேலை? //

முதலில் இதற்கான முடிவு கட்டவேண்டும்.

இது குறித்து ஒன்றும் உங்களின் பதிவில் குறிப்பிடாததற்கு காரணம் என்ன?

said...

//வந்தியத்தேவன் said...
நிர்ஷன்
சென்ற வருடத்தில் சிவராத்திரி லீலைகள் பற்றிய சகல கட்டுரைகளும் வாசித்தேன். இந்த இடத்தில் இன்னும் சில விடயங்களைக் குறிப்பிடவேண்டும். இந்த லீலைகள் பல வடகொழும்புப் பிரதேச கோயில்களிலேயே நடந்தேறியவை.
//

வாருங்கள் வந்தியத்தேவன். உங்கள் ஆர்வம் குறித்து நானும் பெருமை கொள்கிறேன். சிவராத்திரி என்றதும் அதற்கென திட்டமிடும் கூட்டம் வடகொழும்புப்பகுதியில் இருப்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். அதைவிட மலையகத்திலிருந்து தொழிலுக்காக வரும் பலர் இந்தக்கீழ்த்தர செயலில் ஈடுபடுகின்றனர். ஆமர்வீதி,பழைய சோனகத்தெரு மூலை முடுக்குகளில் இவர்கள் சல்லாபம் புரிந்துகொண்டிருந்தனர். ஏன் இப்பகுதியில் அதிகம் என எனக்கு விளங்கவில்லை. வேற்று மதத்தினர் ஆலயங்களில் தவறாக நடப்பதற்கு எம்மவர்களும் காரணம் வந்தி. இந்து இளைஞர்களே அவர்களை அழைத்து வருகின்றனர்.

said...

//Arun said...
//தமிழ்பேசும் அந்த வேற்றுமதத்தவர்களுக்கு இந்துக்கோவில்களில் என்ன வேலை? //

முதலில் இதற்கான முடிவு கட்டவேண்டும்.

இது குறித்து ஒன்றும் உங்களின் பதிவில் குறிப்பிடாததற்கு காரணம் என்ன?
//

அருண்,இதுபற்றி கடந்த வருடம் நான் எழுதியிருந்தேன். ஆனால் இந்த வருடம் நான் அவ்வாறானவர்களை காணவில்லை(குறிப்பாக கவனிக்காதது எனது தவறோ தெரியவில்லை அருண்). ஆனால் இவர்களின் அட்டகாசம் குறித்து மற்றையவரிடம்( பதிவில் குறிப்பிட்டுள்ளவரிடம்) நிறைய தகவல்கள் இருப்பதாக அறிகிறேன். அவர் தரும்விடத்து பதிவிடுகிறேன்.
வேற்று மதத்தவர்கள் கோயில்களில் செய்யும் அநியாயங்களை பலரும் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறார்கள்.மற்றுமொரு விடயம் தெரியுமா? கொச்சிக்கடை ஆலயத்தின் வெளிப்பிரகாரத்தில் அதிகமாக பாபுல்,பீடா சாப்பிட்டுத் துப்பிய காட்சிகள் தான் அதிகமாக பலரது கண்களுக்குத் தென்பட்டனவாம்.

வருகைக்கு நன்றி அருண். தொடர்பில் இருங்கள்.

said...

VANKKAM,NEE INTHA SAMUGATHUKKU SEIYUM SEVAI MAKATHANADU NANBA.NAN UNATHU VAKUPUTHUTOLAN ENDRU SOLVATHIL PERUMAI ADIGIREN.UNADU SEVAI TODARA EN MANMARNDA VALTHUKKAL.
NAMATHU SAMUGAM EPOLUTHU THIRUNTHA POGIRATHU.ITHUDAN ETHANI SIVARATHIRI PATRI PATHIRIGAYILUMSARI MATRAYA UDAGANGALILUM SOLIYAGIVITATHU,AVAI SARIYANA MURAYIL EMADU SAMUDAYATHAI SENDRU ADAYAVILLAYA? ALADU AVAI ANITHUM SEVIDANKADIL UTHIYA SANGA? ENDRU TERIYAVILLI.
MELUM,ITHUPONDRA VATRI THADUKKA PILLIGALIN PETROR KONCHANM MELATHIGA KAVANATHI SELUTHALAM.
NAAN,SIVARATHIRI ANDRU KANDA NIRAYAPER ILAMPARAYATHINARAGATHAN TERINTHARGAL.ATHAVATHU 90%MANOR PADASALIPILLIGAL POLTHAN TERINTHARGAL.NAN ENTHAORUVARAYUM KURIPITU KOORAVILLA.IRUNTHUM PETRORGAL THANGAL PILLIGALI KAVANAMAGA PARTHUKOLVADU AVRGALIN KADAMI ALLAVA?,PETRORGALE ITHU UNGALIN KAVANATHITKU.

said...

VANKKAM,NEE INTHA SAMUGATHUKKU SEIYUM SEVAI MAKATHANADU NANBA.NAN UNATHU VAKUPUTHUTOLAN ENDRU SOLVATHIL PERUMAI ADIGIREN.UNADU SEVAI TODARA EN MANMARNDA VALTHUKKAL.
NAMATHU SAMUGAM EPOLUTHU THIRUNTHA POGIRATHU.ITHUDAN ETHANI SIVARATHIRI PATRI PATHIRIGAYILUMSARI MATRAYA UDAGANGALILUM SOLIYAGIVITATHU,AVAI SARIYANA MURAYIL EMADU SAMUDAYATHAI SENDRU ADAYAVILLAYA? ALADU AVAI ANITHUM SEVIDANKADIL UTHIYA SANGA? ENDRU TERIYAVILLI.
MELUM,ITHUPONDRA VATRI THADUKKA PILLIGALIN PETROR KONCHANM MELATHIGA KAVANATHI SELUTHALAM.
NAAN,SIVARATHIRI ANDRU KANDA NIRAYAPER ILAMPARAYATHINARAGATHAN TERINTHARGAL.ATHAVATHU 90%MANOR PADASALIPILLIGAL POLTHAN TERINTHARGAL.NAN ENTHAORUVARAYUM KURIPITU KOORAVILLA.IRUNTHUM PETRORGAL THANGAL PILLIGALI KAVANAMAGA PARTHUKOLVADU AVRGALIN KADAMI ALLAVA?,PETRORGALE ITHU UNGALIN KAVANATHITKU.

said...

//SUDHAGAR said...
.....................
NAAN,SIVARATHIRI ANDRU KANDA NIRAYAPER ILAMPARAYATHINARAGATHAN TERINTHARGAL.ATHAVATHU 90%MANOR PADASALIPILLIGAL POLTHAN TERINTHARGAL.NAN ENTHAORUVARAYUM KURIPITU KOORAVILLA.IRUNTHUM PETRORGAL THANGAL PILLIGALI KAVANAMAGA PARTHUKOLVADU AVRGALIN KADAMI ALLAVA?,PETRORGALE ITHU UNGALIN KAVANATHITKU.
//
வருக சுதாகர். இதைவிட சந்தோஷம் ஏது? எத்தனையோ சந்தர்ப்பங்களில் தோள்கொடுத்த உன்னை வலைத்தளத்தில் சந்திப்பதில் குதூகலம்கொள்கிறேன்.
உண்மையில் நீ குறிப்பிட்டது போல பெற்றோர்கள் தான் கவனம் எடுக்க வேண்டும். பிள்ளைகள் எங்கு செல்கிறார்கள் எனக்கூடத்தெரியாமல் இறை சிந்தனையில் இலயித்திருக்கிறார்கள் என்பதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. பார்ப்போம் சுதாகர் இனியாவது திருந்துவார்களா என்று.(விரைவில் சந்திப்போம்)

said...

//அதைவிட மலையகத்திலிருந்து தொழிலுக்காக வரும் பலர் இந்தக்கீழ்த்தர செயலில் ஈடுபடுகின்றனர். ஆமர்வீதி,பழைய சோனகத்தெரு மூலை முடுக்குகளில் இவர்கள் சல்லாபம் புரிந்துகொண்டிருந்தனர். ஏன் இப்பகுதியில் அதிகம் என எனக்கு விளங்கவில்லை. வேற்று மதத்தினர் ஆலயங்களில் தவறாக நடப்பதற்கு எம்மவர்களும் காரணம் வந்தி. இந்து இளைஞர்களே அவர்களை அழைத்து வருகின்றனர்//
நிச்சயமாக நிர்ஷன் இவர்களை அழைத்துவருவது இந்து நண்பர்களே என்பது உண்மைதான். இவர்களைப் பொறுத்தவரை சிவராத்திரி என்பது எந்தவித பிரச்சனையும் இன்றி உல்லாசமாக உலாவரும் இரவாகவே கணிக்கப்படுகின்றது. இதற்கான முக்கியகாரணம் சிவராத்திரி நாளில் மதுபான நிலையங்கள் மூடுவதில்லை. போயாவுக்கு மூடும் மதுபான நிலையங்களை சிவராத்திரிபோன்ற புனித நாட்களில் மூட இந்து அமைப்புகள் முயன்றாலும் இதுவரை முடியவில்லை.
அடுத்தது மலையக இளைஞர்கள் பற்றிய உங்கள் கணிப்பு எனக்கு விளங்கவில்லை. காரணம் கோவில்களில் மிகவும் பக்தியாகக் காணப்படும் மலையக இளைஞர்கள் பலரைக் கண்டிருக்கின்றேன். குறிப்பாக கொழும்பு செட்டியார்தெரு நகைக்கடைகளில் வேலைபார்க்கும் இளைஞர்கள் பலர் சாதாரண நாட்களிலேயே மிகவும் சாதாரணமாக விபூதி, பொட்டு குங்குமம் என உலவுவார்கள். இதனை நான் பெரிய விடயமாக குறிப்பிடக்காரணம். தமிழனின் அடையாளத்துடன் திரிவது என்பது தற்போதைய நாட்களில் சாதாரண விடயம் அல்ல. ஆகவே அவர்களில் சிலர் செய்யும் தகாத வேலைகளால் ஒட்டுமொத்த சமூகத்துக்கே இழிவாகும்.

சென்றவருடம் கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருவிழாக்காலங்களில் சில பெண்களின் ஆடைகள், நடவடிக்கைகள் பற்றி மெட்ரோ நியூஸ் பத்திரிகையில் ஒரு கட்டுரை வந்தது.ஆகவே இந்த அட்டகாசங்கள் இன மத பேதம் இன்றி நடைபெறுகின்றது.

said...

வந்தி, உண்மைதான். மலையகத்திலிருந்து தொழிலுக்காக வந்த அனைவரும் இப்படி இல்லை. குறிப்பிட்ட சில கூட்டம் இருக்கிறது. மலையக மக்கள் அதிக பக்தியுடையவர்கள். ஆனால் பல இளையுர்களும் யுவதிகளும் சிவராத்திரி தினத்தில் என்ன ஏனைய நாட்களில் கூட மேற்குறிப்பிட்ட இடங்களில் சல்லாபத்தில் ஈடுபடுவதைக் காணலாம்.
மதுபான நிலையங்களை சிவராத்திரி தினத்தில் மூடுமாறு மேலக இந்து இளைஞர் சமூகத்தினர் கோரியிருந்தனர். மேல்மாகாணசபை உறுப்பினர் ந.குமரகுருபரன் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்திருந்தார். எனினும் யாரும் செவிசாய்த்ததாகவோ இந்து நிறுவனங்கள் இதற்கு சாதகமாகவோ கருத்து தெரிவிக்கவில்லை.
நீங்கள் குறிப்பிட்டது போல அந்தோனியார் ஆலய திருவிழா அட்டகாசங்களை நான் மெட்ரோவில் பிரசுரித்த போது எழுந்த பிரச்சினைகள் ஆசிரிய பீட ரவி அண்ணாவுக்கு தெரியும். குட்டைப் பாவாடையுடன் உலா வந்த பெண்களின் சில உறுப்புகளுக்கு ஆண்கள் கூட்டம் மென்கூர்மை வெளிச்சம் அடித்து ஆனந்தப்பட்டதும் உண்டு. இதைவிட எத்தனையோ விடயங்களை குறிப்பிட்டுக்காட்ட வேண்டும். ஆனால் இதுதான் கலாசாரம் மாறிவரும் உலகத்துக்கு ஏற்ப நம்மையும் மாற்றிக்கொள்ள வேண்டும் என பலர் வாதாடுகின்றனர் வந்தி. என்னதான் செய்வது? கடைசியில் தம்மை இழந்து தன்மானத்தையும் தனித்துவத்தையும் இழந்து நிற்கும்போதுதான் சிலர் இதனை உணர்கிறார்கள். உதாரணத்துக்கு ஒன்றை சொல்கிறேன். அன்று(அந்தோனியார் திருவிழாவில்) மேல்மாடியில் சில பெண்கள் கவர்ச்சித்தாரகைகள் என தம்மை ஆடைகளால் வெளிச்சமிட்டுக்காட்டினார்கள். ஆனால் ஒருவாரத்தில் அந்தப் பெண்கள் பலரது கையடக்கத் தொலைபேசிகளில் உலாவந்தார்கள். மாடிக்குக் கீழே இருந்த இளைஞர்கள் அவர்களின் ........ பகுதிகளை வீடியோ படம் எடுத்து தமக்கிடையில் பகிர்ந்து ஆனந்தப்பட்டார்கள். அதில் யுவதிகளின் முகங்களும் தெளிவாக இருந்தன. இதை யார் அறிவார்கள்? என்ன சொல்கிறீர்கள் வந்தி?

Amalan -Hatton said...

நீங்கள் மலையக இளைஞராக இருந்துகொண்டு மலையக இளைஞர்களைப் பற்றிக் குறை கூறுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது நிர்ஷன். அத்துடன் வேற்றுமதம் என்று வந்தியத்தேவன் இங்கு எந்த மதத்தவரை குறிப்பிடுகிறார்?

said...

//Amalan -Hatton said...
நீங்கள் மலையக இளைஞராக இருந்துகொண்டு மலையக இளைஞர்களைப் பற்றிக் குறை கூறுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது நிர்ஷன். அத்துடன் வேற்றுமதம் என்று வந்தியத்தேவன் இங்கு எந்த மதத்தவரை குறிப்பிடுகிறார்?
//

தவறென்றால் சுட்டிக்காட்டத்தானே வேண்டும். இன்னொரு விடயம் அமலன்,ஊவா மாகாணமும் மத்திய மாகாணமுமே மலையகப்பகுதிகளாகும். இரத்தினபுரி சபரகமுவ மாகாணத்தில் உள்ளது. இது மலையப்பகுதி எனக் கொள்ளப்படாவிட்டாலும் தற்போது அவ்வாறு கொள்ளப்படுகிறது. அதற்காக நீங்கள் குறிப்பிட்டது தவறெனச் சொல்லவில்லை. தகவலுக்காகச் சொன்னேன். மற்றும் வந்தி நண்பர் குறிப்பிட்டது முஸ்லிம் இளைஞர்களை!( உங்களுடைய மின்னஞ்சல் முகவரிக்கு மின்மடல் அனுப்பியபோதும் பதில் இல்லையே அமலன்???? )

said...

மிகவும் வருத்தப்பட வேண்டிய விடயம்.(நம் தமிழர்களா?)

வெளியில் கொண்டுவந்ததற்கு நன்றி!

இதேபோல் மலேசிய தமிழ் மக்கள்/உலகத் தமிழ் மக்களின் மங்காப் புகழ் பெற்ற பத்து கேவ் முருகன் குகைக் கோவிலில்(உலகத்திலேயே தைப்பூசம் சிறப்பாகக் கொண்டாடப்படும் கோவில்களில் முன்னணியில் உள்ளக் கோவில் இது)
கோவிலைச்சுற்றி ஆபாசமாகவும், காதலன்-காதலி பற்றிய வாசகங்களையும் (தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில்)அங்கு சென்றிருந்தபோது பார்க்க நேரிட்டது.
மிகவும் வேதனைப்பட்டேன்.

என்ன செய்வது இவர்களை...?

அன்புடன்,
ஜோதிபாரதி.

said...

//மிகவும் வருத்தப்பட வேண்டிய விடயம்.(நம் தமிழர்களா?)

வெளியில் கொண்டுவந்ததற்கு நன்றி!

இதேபோல் மலேசிய தமிழ் மக்கள்/உலகத் தமிழ் மக்களின் மங்காப் புகழ் பெற்ற பத்து கேவ் முருகன் குகைக் கோவிலில்(உலகத்திலேயே தைப்பூசம் சிறப்பாகக் கொண்டாடப்படும் கோவில்களில் முன்னணியில் உள்ளக் கோவில் இது)
கோவிலைச்சுற்றி ஆபாசமாகவும், காதலன்-காதலி பற்றிய வாசகங்களையும் (தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில்)அங்கு சென்றிருந்தபோது பார்க்க நேரிட்டது.
மிகவும் வேதனைப்பட்டேன்.

என்ன செய்வது இவர்களை...?
//

என்னதான் செய்வது ஜோதிபாரதி? அவர்களாகத்தான் திருந்த வேண்டும். நீங்கள் குறிப்பிட்டுள்ளதும் கவலைக்குரிய விடயம் தான்

said...

இலங்கையில இருக்கிறதுகள் எல்லாம் பிரக்ஞை இல்லாததுகள் என்பதை அடிக்கடி நிருபிக்குதுகள்...

said...

// King... said...
இலங்கையில இருக்கிறதுகள் எல்லாம் பிரக்ஞை இல்லாததுகள் என்பதை அடிக்கடி நிருபிக்குதுகள்...
//

என்ன கிங் ஒரே அடியாய் அடிச்சிட்டீங்க? இந்த நிலையை மாற்ற முடியாதென நினைக்கிறேன். வருத்தப்படுவதைத் தவிற வேறு வழியில்லை போல...

Anonymous said...

யேண்டா டுபாகூருங்களா... அவ அவன் நாட்டில வாழ்வா சாவான்னு தவிச்சுக்கிட்டிருக்கிறான்... உங்களுக்கு ஒவ்வொருத்தன்ட கோவணத்துக்குள்ளையும் நோண்டணும்னு அரிப்பா இருக்கு இல்ல...? முதல்ல உங்கடய அவுத்துப் பாருங்கடா எத்தன பீத்தல் இருக்குன்னு தெரியும்...

said...

//Anonymous said...
யேண்டா டுபாகூருங்களா... அவ அவன் நாட்டில வாழ்வா சாவான்னு தவிச்சுக்கிட்டிருக்கிறான்... உங்களுக்கு ஒவ்வொருத்தன்ட கோவணத்துக்குள்ளையும் நோண்டணும்னு அரிப்பா இருக்கு இல்ல...? முதல்ல உங்கடய அவுத்துப் பாருங்கடா எத்தன பீத்தல் இருக்குன்னு தெரியும்...
//

வாழ்வா சாவானு தவிச்சிட்ருக்கும்போது இதுவும் தேவைதானா தானய்யா நானும் கேட்கிறன். நாலு கெட்ட வார்த்தை பேசிட்டா நீங்க சொல்றது உண்மையாகிடாது. பெயரை சொல்ல முடியாத துணிவுள்ளவங்களெல்லாம் பேச வெளிக்கிட்டா இப்படித்தானோ?
வருகைக்கு நன்றி

Anonymous said...

தம்பி
அதிகமாத்தான் பேசுறியள்.அடங்கலன்னா அடக்கிடுவோம்.

அனானி said...

//வாழ்வா சாவானு தவிச்சிட்ருக்கும்போது இதுவும் தேவைதானா தானய்யா நானும் கேட்கிறன்.//
இப்பிடியெல்லாம் எல்லாரும் யோசிக்க ஆரம்பிச்சுட்டா மனித குல விருத்தி என்னாகிறது? வாழ்வோ சாவோ காதலும் கூடலும் அவசியம்ப்பா...கூடிக் குலவுறதுன்றது மனுஷ சுபாவம்... சைவருக்கும் சரி மற்றவையளுக்கும் சரி... ஆக, சிவராத்திரி தினத்துல புனிதமா இருக்கோணும் என்றதெல்லாம் சிவனத் தொழுறவங்களுக்கு மட்டும் தான்... நீங்க மட்டும் பெரிய உத்தமமோ? சிவராத்திரி முழிக்கப்போய்ட்டு சிவசிந்தனை இல்லாம அவசிந்தனையில தான் இருந்திருக்கிறீங்க... சிவராத்திரி அன்னிக்கு கோயிலில என்ன நடந்திச்சுன்னு ஒரு பதிவு போடத் தோணிச்சா? சும்ம போலீஸ் வேல பாத்துக்கிட்டு... டுபாகூருங்களா... மற்றது, தாந்திரீகத்தில எல்லாம் சிவனும் காளியும் உடலுறவு கொள்ளுற திருப்படங்கள வணங்குறாங்க தெரியுமா? காதலும் கடவுளும் ஒண்ணுப்பா... காதல் ஜோடிகள இப்படி காயுறதுதான் சிவத்துரோகம்... பரமசிவன்ல இருந்து அவர் பையன் முருகன் வரைக்கும் இந்த விசயத்துல கில்லாடிங்க தானே?

said...

மதிப்புக்குரிய அனானிக்கு
வருகையை மதிக்கிறேன். யாருக்கும் பிரிவினை பார்க்காமல் கருத்துச்சுதந்திரம் இருக்க வேண்டும் என்பதற்காக எனது அனுமதியின்றி பின்னூட்டம் இட வசதி செய்திருந்தேன். அதை தவறாக பயன்படுத்துவதுதான் உங்களுடைய குறிக்கோள் என்றால் தாராளமாக செய்யுங்கள். உங்களுடைய கருத்து ஏற்புடையதல்ல என்பதால் பெயரைக்குறிப்பிடாமல் பின்னூட்டம் தந்திருக்கிறீர்கள். ஆனால் நீங்கள் எங்கிருந்து பின்னூட்டம் இட்டீர்கள் என்பதை ஐபி விலாசத்தைக் கொண்டு கண்டுபிடித்துவிட்டேன். உங்களை எனக்கு நன்றாக தெரியும்.

//நீங்க மட்டும் பெரிய உத்தமமோ? சிவராத்திரி முழிக்கப்போய்ட்டு சிவசிந்தனை இல்லாம அவசிந்தனையில தான் இருந்திருக்கிறீங்க... //

இதனை உங்களால் நிரூபிக்க முடியுமா? சிவப்பெருவிரதத்தில் தன்னிலை மறந்து காமத்தில் மூழ்கியிருக்குமளவுக்கு அயோக்கியனல்ல நான். அதனை உங்களுக்கு தெளிவுபடுத்த வேண்டிய அவசியமும் எனக்கில்லை.

மற்றும் கடவுளும் காதலும் ஒன்று எனக்கூறியிருக்கிறீர்கள். உண்மைதான். ஆனால் நியதிக்கு மாறாக மற்றவரை இழிவுபடுத்தி தன் மதத்தை கேவலப்படுத்தி தன்சமுதாயம் பெற்றோர் தன்சார்ந்தவர்கள் அனைவரையும் கீழ்நிலைப்படுத்தி செய்வதுதான் உத்தமமான காதலா? நீங்கள் வகுத்த அகராதியில் இதுதான் காதல் போல?

நண்பர் மயூரன் சொன்னது நினைவுக்கு வருகிறது
'திட்டோ பராட்டோ நாம் கவனிக்கப்படுகிறோம் நிர்ஷன்' என்பது.

வருகைக்கு நன்றி அனானி.

said...

//Anonymous said...
தம்பி
அதிகமாத்தான் பேசுறியள்.அடங்கலன்னா அடக்கிடுவோம்.
//
வாருங்கள் மற்றுமொரு அனானி. என்னை அடக்குவதால் நீங்களும் சமுதாயமும் சந்தோஷப்படுவீர்கள் என்றால் தாராளமாக செய்யுங்கள்.

said...

புத்தர் வந்தார், யேசு வந்தார் எல்லாரும் வந்தார்கள் ஆனால் உலகம் மாறவில்லை. நாய் வாலை நிமித்த முடியாது. உன்னைத் திருத்திக் கொள் உலகம் தானாகவே திருந்திக் கொள்ளும் என்றுதான் சுவாமி விவேகானந்தர் சொன்னார் அதுதான் எனது கருத்தும் கூட. நாங்கள் இவ்வுலகத்தை மாற்ற இயலாது யோகர் சுவாமிகள் கூறுவது போல "எப்பவோ முடிந்த காரியம்". சிவராத்திரி மாத்திரம் அல்ல எந்தவொரு மதமும் விதிவிலக்கு அல்ல. பல மாதங்கள் முன்னர் கிறீஸ்தவர்களின் கூடுசுத்தும் விழாவில் கூட கலந்து கொண்ட பெண்களின் ஒளிப்படங்களைக் காணக்கிடைத்தது. மற்றவர்கள் செய்கிறார்கள் என்று நாம் தரக்குறைவான செயல்களில் ஈடுபடக்கூடாது என்பதுதான் என்னுடைய தாழ்மையான கருத்து.

said...

//Umapathy (உமாபதி) said...
புத்தர் வந்தார், யேசு வந்தார் எல்லாரும் வந்தார்கள் ஆனால் உலகம் மாறவில்லை. நாய் வாலை நிமித்த முடியாது.
//
வருக உமாபதி. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள். நீங்கள் சொல்வதும் உண்மைதான்.

Anonymous said...

[url=http://firgonbares.net/][img]http://firgonbares.net/img-add/euro2.jpg[/img][/url]
[b]adobe film editing software, [url=http://firgonbares.net/]6 software price[/url]
[url=http://firgonbares.net/][/url] buying cheap software academic software xp
macromedia flash 4 software [url=http://firgonbares.net/]childrens educational software[/url] educational discount on software
[url=http://firgonbares.net/]microsoft office home and student 2007 student discount[/url] office 2007 enterprise serial
[url=http://firgonbares.net/]10 Advanced Mac[/url] advocate office software
linux software store [url=http://firgonbares.net/]ms office 2007 enterprise[/b]

Anonymous said...

[url=http://murudobaros.net/][img]http://murudobaros.net/img-add/euro2.jpg[/img][/url]
[b]sale management software, [url=http://murudobaros.net/]Express 4 Mac WinZip[/url]
[url=http://murudobaros.net/]adobe acrobat 9 pro activation error[/url] academic licensed software download windows vista
you sell used software [url=http://murudobaros.net/]software price comparison[/url] autocad piping flow diagram isometric sample
[url=http://murudobaros.net/]microsoft office 2003 student[/url] free download nero burner
[url=http://murudobaros.net/]oem software downloads[/url] discount for software
buy software downloads [url=http://murudobaros.net/]uta software store[/b]

Anonymous said...

[url=http://bariossetos.net/][img]http://vonmertoes.net/img-add/euro2.jpg[/img][/url]
[b]buy photoshop and, [url=http://vonmertoes.net/]buy cheap software com[/url]
[url=http://vonmertoes.net/][/url] professional software discount microsoft software company
nero 9 disappear [url=http://vonmertoes.net/]shop 7 software[/url] bitdefender vs kaspersky
[url=http://vonmertoes.net/]sales and service software[/url] how to clear photos in acdsee
[url=http://hopresovees.net/]free kaspersky[/url] nero 7 serial
cheapest recording software [url=http://hopresovees.net/]kaspersky coupon[/b]

Anonymous said...

[url=http://hopresovees.net/][img]http://bariossetos.net/img-add/euro2.jpg[/img][/url]
[b]latest educational software, [url=http://hopresovees.net/]software reseller directory[/url]
[url=http://bariossetos.net/][/url] educational software for kids adobe photoshop cs4 upgrade canadian price
download free acdsee [url=http://bariossetos.net/]adobe software for sale[/url] buy microstation software
[url=http://hopresovees.net/]academic price software[/url] acdsee 7 key
[url=http://bariossetos.net/]adobe acrobat 9 pro extended serial key[/url] nero 9 nzb
windows xp downloads [url=http://vonmertoes.net/]Mac OS v10[/b]