நல்லதொரு அடி!!!!!


இலங்கையின் சப்ரகமுவ மற்றும் வடமத்திய மகாணங்களுக்கான மாகாணசபை தேர்தல் பாரிய பிரச்சினைகள் எதுவுமின்றி நடந்துமுடிந்தது. ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அதிகபட்ச ஆசனங்களைப் பெற்று வெற்றிபெற்றது.

தமிழர்களுக்கு தங்களை விட்டால் யாருமில்லை என்ற தோரணையில் தேர்தலில் போட்டியிட்ட மலையக தமிழ் அரசியல் கட்சிகளுக்கு தமிழ்பேசும் மக்கள் தகுந்த பதிலடி கொடுத்துள்ளனர். இவர்களால் எந்தவொரு ஆசனத்தையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை.

சம்பளப் போராட்டத்தின்போது துரோகம் இழைத்த தலைவர்களுக்கு இப்போது இரத்தினபுரி மக்கள் தகுந்த பாடம் கற்பித்துள்ளனர். அறுபதாயிரத்துக்கும் அதிகமான தமிழ்வாக்காளர்களில் இரத்தினபுரியில் பிரதான மலையக தமிழ்க் கட்சி பெற்றுக்கொண்டது வெறும் 5135வாக்குகளே.

மக்களை ஏமாற்றும் தமிழ்த்தலைவர்களுக்கு இரத்தினபுரி மக்கள் பாடம் கற்பிக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை என தேர்தல் தொடர்பான கடந்த பதிவில் குறிப்பிட்டிருந்தேன்.

சேவை செய்யாமல் தேர்தல்காலத்தில் மட்டும் எட்டிப்பார்க்கும் நம்ம தலைவர்களுக்கு இதைவிட வேறு எப்படி கவனிக்க முடியும்?

6 comments:

said...

வணக்கம் நிர்ஷன் இதனைப் பற்றி எழுத இருந்தேன் ஆனாலும் சில காரணங்களுக்காக எழுதவில்லை. இந்த அடியில் இருந்து இவர்கள் மீளுவது கடினம் தான்.இதொகவும் மமமுவும் வரட்டுக் கெளரவங்களை விட்டுவிட்டு ஐதேகவுடன் கூட்டுச் சேர்ந்திருந்தால் ஒரு சில ஆசனங்கள் கிடைத்திருக்கும். அல்ல‌து ஆளும் க‌ட்சியுட‌ன் ஆவ‌து சேர்ன்துபோட்டியிட்டிருக்க‌லாம். இத‌னைப்ப‌ற்றி நிறைய‌ எழுத‌லாம் ஆனால் முடியாது புரியும் என‌ நினைக்கின்றேன்.

said...

வருக வந்தி.
கருத்துக்கு நன்றி.
நீங்கள் சொல்வது புரிகிறது. அதனால் தான் நானும் சுருக்கமாக எழுதியிருக்கிறேன்.
தேர்தல் காலத்தில், அமைச்சரை நோக்கி கேள்வி கேட்ட தொழிலாளியை சிறையில் அடைக்க உத்தரவிட்ட அமைச்சருக்கும். அதிகம் பேசினால் வெள்ளைவானில் தூக்குவோம் என மிரட்டிய பிரதி அமைச்சருக்கும் அப்பகுதி மக்கள் கொடுத்த பிரதியடி தான் இது.

மான்வேசம் போட்டாலும் தப்பித்தவறி குரைத்தாலும் நாய்முகம் தெரிந்துவிடும் என பழமொழி உண்டு வந்தி.

said...

மலையக தமிழர் கட்சிகளுக்குப் "பல முகங்கள்" இருப்பதை பாட்டாளி மக்கள் நன்கு புரிந்து இத் தேர்தலில் செயற்பட்டது முன்னேற்றகரமல்லவா?

said...

//களத்துமேடு said...
மலையக தமிழர் கட்சிகளுக்குப் "பல முகங்கள்" இருப்பதை பாட்டாளி மக்கள் நன்கு புரிந்து இத் தேர்தலில் செயற்பட்டது முன்னேற்றகரமல்லவா?
//

நிச்சயமாக.
"வச்சமில்ல ஆப்பு" என தொழிலாளர்கள் கூறுவதைக் கேட்கும்போது இது தெரிகிறது.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி களத்துமேடு.

said...

//சேவை செய்யாமல் தேர்தல்காலத்தில் மட்டும் எட்டிப்பார்க்கும் நம்ம தலைவர்களுக்கு இதைவிட வேறு எப்படி கவனிக்க முடியும்? //

சரியாகச் சொன்னீர்கள் நிர்ஷன் :)

said...

//எம்.ரிஷான் ஷெரீப் said...
//சேவை செய்யாமல் தேர்தல்காலத்தில் மட்டும் எட்டிப்பார்க்கும் நம்ம தலைவர்களுக்கு இதைவிட வேறு எப்படி கவனிக்க முடியும்? //

சரியாகச் சொன்னீர்கள் நிர்ஷன் :)
//

கருத்துக்கு நன்றி நண்பரே