இந்தியத்தாய் உதைத்துத்தள்ளிய மலையகக் குழந்தைகள்!!!

நண்பர் சேவியரினால் எழுதப்பட்ட ஈழக்கவிஞருடனான சந்திப்பு http://xavi.wordpress.com/2008/09/01/malliyappu_santhi/ என்ற பதிவும் அதில் மல்லியப்பூ சந்தி திலகரின் http://www.malliyappusanthi.com/ பின்னூட்டமும் தான் இந்த ஆக்கத்துக்கு வித்திட்டன।
திலகருடன் கதைத்தபோது அவர்கூறிய யதார்த்தத்துக்குள் மூழ்கிப்போன சில விடயங்கள் எமது இருப்பிற்கான கேள்வியை என்னுள் எழுப்பியது।

இலங்கையிலுள்ள மலையக மக்கள் பற்றிய இந்தியாவின் ஈடுபாடு மிகவும் குறைந்து வருவதை அவதானிக்க முடிகிறது। இலங்கையை முழுமையாக அவதானித்து வருவதாக கூறும் இந்தியத்தலைவர்கள் மலையக மக்கள் குறித்தும் அவர்களது அன்றாட பிரச்சினைகள் குறித்தும் பாராமுகமாக செயற்படுவது ஏன் என்ற கேள்வி இப்போது மக்களிடையே எழத் தொடங்கியுள்ளது।
மலையக மக்கள் எந்தளவுக்கு வாழ்க்கைச்சுமையை அனுபவிக்கிறார்கள் என்பதனை விட அவர்களின் வருகை வரலாற்றை மீள்நினைவூட்டுவது அவசியம் என நினைக்கிறேன்.

மலையக மக்கள்
மலையத்தொழிலாளர்கள் என்போர் யார்? என்ற கேள்விக்கு எத்தனை பேருக்கு பதில் தெரியும்। இந்திய வமிசாவளியினர், இந்தியத் தமிழர்கள் என ஆரம்பத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட குறிப்பிட்டதொரு தொழிலாளர் சமுதாயம் மலைநாட்டார் என்றும் நாடற்றோர் என்றும் பின்னிலை படுத்தி பல புல்லுறுவிகளால் விமர்சிக்கப்பட்டு மலையகத் தமிழர்கள் என தற்போது அடையாளப்படுத்தும் இந்த மக்களின் கசப்பான வரலாற்றை தமிழர்களே மறந்துவிட்டார்கள்।

இலங்கையில் ஆங்கிலேயர் ஆட்சி நடத்திக்கொண்டிருந்தபோது 1844ஆம் ஆண்டு மத்தியமலைப் பகுதியில் தேயிலைத் தோட்டப்பயிர்ச்செய்கைக்கென இந்தியாவிலிருந்து 14பேர் (கம்பளை என்ற இடத்துக்கு )அழைத்துவரப்பட்டனர்। இதுவே இந்தியாவிலிருந்து தொழிலாளர் என்ற ரீதியில் உத்தியோகபூர்வமாக இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட முதல் தமிழர்களாவர்।

இருப்பினும் அதற்கு முன்னரும் இந்தியத் தொழிலார்கள் மலையகப் பகுதிகளில் தோட்ட வேலைகள் செய்ததாக வரலாறு கூறுகிறது। கோப்பி பயிர்களுக்கு ஏற்பட்ட நோய் காரணமாக தேயிலை பயிரிடப்பட்டது।
தேயிலைப் பயிர்ச்செய்கைக்காக ஏராளமான தொழிலாளர்கள் இலங்கைக்கு அழைத்துவரப்பட்டனர்। 1827ஆம் ஆண்டு 10,000 ஆக இருந்த தொழிலாளர் தொகை 1877ஆம் ஆண்டு 1,45,000 ஆக அதிகரித்தது.
1933ஆம் ஆண்டுவரை பல இலட்சக்கணக்கான மக்கள் இங்கு வந்து சேர்ந்தனர்। இவ்வாண்டின் பின்னர் இந்திய அரசு இலங்கைக்குத் தொழிலாளர் அனுப்பப்படுவதைத் தடைசெய்தது.

ஒரு சோக வரலாறு
தென்னிந்தியாவிலிருந்து கால்நடையாக இராமேஸ்வரம் வந்த மக்கள் கடல்மார்க்கமாக தலைமன்னாரை வந்தடைந்து அங்கிருந்து கால்நடையாகவே மலையகப் பகுதிகளுக்கு அழைத்து வரப்பட்டனர்। போதியளவு உணவு, சுகாதாரம், தங்குமிட வசதிகள் இன்றி பல மாதகாலமாக கால்நடையாக வந்ததால் ஆயிரக்கணக்கான தொழிலாளார்களும் குழந்தைகளும் உயிரிழந்ததாகவும் அப்போதைய கதைகள் உண்டு.

வாக்குரிமை
1931ஆம் ஆண்டு 1,00,000 மலையக மக்கள் வாக்குரிமை பெற்றிருந்தனர்। மு ।நடேசு ஐயர் எனப்படும் மலையக மக்களின் முதற் தொழிற்சங்கத் தலைவர் அத் தேர்தலிலே தெரிவு செய்யப்பட்டார்।
புதுக்கோட்டை அரசமரபினர் வழிவந்த அமரர் செளமியமூர்த்தி தொண்டமான் மக்களின் நலனுக்காக ஆரம்பத்திலிருந்தே குரல்கொடுத்து வந்தார்। அவரோடு இணைந்து முஹம்மது அஸீஸ் என்ற தொழிற்சங்கத் தலைவரும் பலவகையிலும் போராட்டத்துக்குக் கைகொடுத்து தலைமைதந்தார்।

நாடற்றவர்களாயினர்
1948இல் இலங்கையிலிருந்து பிரித்தானியர் வெளியேறியதும், பல தமிழ்ப் பிரதிநிதிகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் கொண்டுவரப்பட்ட இலங்கை பிரஜாவுரிமை சட்டத்துக்கு அமைவாக தங்களது குடியுரிமையை நிரூபிக்க முடியாமல் போனமையால் இவர்களில் மிகப்பெரும்பாலோர் இலங்கை அரசாங்கதால் நாடற்றவர் நிலைக்குத் தள்ளப்பட்டனர்।

இலங்கை சுதந்திரம் அடைவதற்கு முன்னர் அனைத்து மக்களும் பிரித்தானியர்கள் எனக் கொள்ளப்பட்ட போதிலும் சுதந்திரத்தின் பின்னர் இந்த மக்களுக்கு தாம் இலங்கையர்கள் என்பதை நிரூபிக்கவேண்டிய நிர்ப்பந்த நிலை ஏற்பட்டது। அதாவது தமது தந்தைவழியில் அல்லது தாய்வழியில் இலங்கை பிரஜை என்பதை ஆதாரப்படுத்தவேண்டியிருந்தது। போதியளவு கல்வித்தகைமை இல்லாததால் பிறப்புச்சான்றிதழ் உட்பட ஏனைய அத்தியாவசிய ஆவணங்களை பெறத்தவறிய அப்பாவி மக்கள் இலங்கையிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்று கோரப்பட்டனர்। இவர்களில் பலர் சிங்களப் பெயர் கொண்டிருந்தமையால் தப்பித்தனர்। எனினும் அதிகமானோர் தாமாக மீண்டும் இந்தியாவுக்கு சென்றனர்.
சிறிமா சாஸ்திரி ஒப்பந்தம்
அடுத்து வந்த காலங்களில் இலங்கை அரசு இந்திய அரசுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளின் மூலம் ஏற்பட்ட ஒப்பந்தங்களின் அடிப்படையில் பெருமளவு மலையகத் தமிழரை இந்தியாவுக்குத் திருப்பியனுப்ப இலங்கை அரசு முயற்சித்தது। இவ்வாறான ஒப்பந்தங்களில் ஒன்றான சிறிமா சாஸ்திரி ஒப்பந்தத்தின் மூலம் மேற்படி தமிழர்களில் அரைப் பகுதியினருக்கு இலங்கைப் குடியரிமை வழங்குவதெனவும், ஏனையோரை இந்தியா ஏற்றுக்கொள்வதெனவும் முடிவானது, பல காரணங்களால் இது திட்டமிட்டபடி நடைபெறாது போனது। மேலும் 1983 இல் இலங்கையில் ஏற்பட்ட பாதுகாப்பற்ற சூழ்நிலைக்காரணமாகவும் பலர் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்தனர்। பெரும்பாலானோர் இலங்கை மலையகப் பகுதிகளிலேயே தங்கிவிட்டனர்।

தொடர்குடியிருப்பும் வாழ்வும்
அக்காலத்தில் தொழிலாளர்களுக்கென அமைத்துக்கொடுக்கப்பட்ட தொடர்குடியிருப்புகளில் (லயன்கள் என அழைக்கப்படுகிறது) தங்கியிருந்த மக்கள் சுமார் 160ஆண்டுகள் கழிந்த நிலையிலும் அதே லயன் குடியிருப்புகளில் தான் வாழ்ந்து வருகின்றனர்। இவர்களின் நலன்கள் தொடர்பாக பல இந்திய தலைவர்கள் அக்கறை எடுத்துக்கொண்ட போதிலும் அவை நிரந்தரமான தீர்வினைத்தரவில்லை எனலாம்।

ஈழப்போராட்டமும் மலையகத் தமிர்களும்
அத்துடன் ஈழப்போராட்டம் ஆரம்பித்தபின்னர் அது பூதாகரமாக வெடித்ததைத் தொடர்ந்து இந்த அப்பாவி மக்களின் பட்டினிப் போராட்டம் வெளிக்கொண்டுவரப்பாடமலே போனது। வடக்குக் கிழக்குப் பிரச்சினைக்கு மலையக மக்கள் அந்தக்காலம் முதல் ஆதரவை வெளிப்படுத்தி வந்தனர். ஆரம்பகாலத்தில் தந்தை செல்வா மலையக மக்கள் மீது அக்கறை கொண்டு அவர்களின் துன்ப துயரங்களை வெளியுலகுக்கு வெளிக்காட்டவும் செய்ததுடன் வாக்குரிமை நீக்கும் முயற்சிக்கு எதிராக கடுமையாகப் போராடிக் குரல்கொடுத்தார்।
1989ஆம் ஆண்டு இ।இரத்தினசபாபதி பாராளுமன்றி்ல் ஆற்றிய உரையொன்றில்,
"இச்சந்தர்ப்பத்தில் மலையகம் சார்ந்த எமது பிரதிநிதித்துவம் பற்றி சில விடயங்களை அழுத்தமாகச் சொல்ல வேண்டியிருக்கிறது.இதற்காக சில ஆண்டுகள் பின்னோக்கிப் பார்க்க விழைகின்றேன்.
இலங்கை பிரிட்டிஷாரிடம் இருந்து விடுபட்டபோது மலையக மக்களின் வாக்குரிமையும் பிரஜா உரிமையும் பறிக்கப்பட்ட ஆண்டான 1948-ஆம் ஆண்டையே ஆரம்பமாகக் கொண்டு இதை நோக்க வேண்டியுள்ளது.
நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் பங்கினை ஈட்டிக் கொடுத்த இம்மக்கள் இந்திய விஸ்தரிப்புவாதிகளாகக் கொச்சைப்படுத்தப்பட்டனர்.
இவர்கள் இங்கிருப்பது சிங்கள இனத்துக்கே ஆபத்தானதென இனவெறி கிளப்பி விடப்பட்டது. இவர்களை வெளியேற்றுவதற்காக 1964-இல் சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தமும் கைச்சாத்தாகியது.
இதுவே இனவாதத்தின் முதலாவது அடையாளமாகவும், இலங்கை வாழ் தமிழ்த் தேசிய இனத்தின் தொழிலாளர் வர்க்கத்திற்கு எதிரான அச்சுறுத்தலாகவும் விளங்கியிருக்கிறது" எனக் குறிப்பிட்டு நீண்ட உரையாற்றினார்। இது தவிற யாழ்த்தலைவர்கள் பலரும் மலையக மக்களுக்காக போராடினர்।

மக்களின் எதிர்பார்ப்பு
என்னதான் இருந்தாலும் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட தமிழர்கள் இந்தியாவையே தமது தாய்நாடு என இன்னும் கொள்கின்றனர்। அன்று முதல் இன்று வரை இந்தத் தொழிலாளர்களின் நலன்காக்க எத்தனையோ தொழிற்சங்கங்கள் அரசியல்கட்சிகள் இருந்துவருகின்ற போதிலும் இன்னும் அவர்களின் தேவைகள் முழுமையாக பூர்த்திசெய்யப்படவில்லை।
இப்போது ஏறத்தாள 10இலட்சத்துக்கும் அதிகமான மலையக தமிழ் மக்கள் இலங்கையில் வாழ்கின்றனர்। மூன்றாவது தலைமுறையிலும் தோட்டத் தொழிலாளர்களாகவே இருக்கின்றனர்।

தமது கோரிக்கைக்காக நித்தமும் போராடி பட்டினியுடனும் போதியளவு வசதிகள் இன்றியும் வாழ்ந்துகொண்டிருக்கும் இவர்களை அந்நியப்படுத்தி பலரும் "தோட்டகாட்டான்" என அழைப்பது வேதனைக்குரியது। பலவீனங்களையும் இயலாமைகளையும் அப்பாவித்தனத்தையும் சாதகமாகப் பயன்படுத்தி குறிப்பிட்டதொரு வர்க்கத்தினை கீழ்நிலையில் உதாசீனப்படுத்தி உதறித்தள்ளுவதை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்। ஆனால் நிகழ் சமுதாயத்தில் இவ்வாறானதொரு நிலை இருப்பதை இந்தியா உட்பட சர்வதேசக் கல்விச்சமூகம் உணரவேண்டும்। தமது குழந்தைகளை தாமே அந்நியப்படுத்தி உதைக்கும் வரலாற்றுக் கறையை இந்தியா ஏற்படுத்திவிடக்கூடாது।

44 comments:

said...

உண்மையான கருத்துக்களை அருமையாக எழுதியிருக்கிறீர்கள் நிர்ஷன்...!

said...

//இலங்கையிலுள்ள மலையக மக்கள் பற்றிய இந்தியாவின் ஈடுபாடு மிகவும் குறைந்து வருவதை அவதானிக்க முடிகிறது। இலங்கையை முழுமையாக அவதானித்து வருவதாக கூறும் இந்தியத்தலைவர்கள் மலையக மக்கள் குறித்தும் அவர்களது அன்றாட பிரச்சினைகள் குறித்தும் பாராமுகமாக செயற்படுவது ஏன் என்ற கேள்வி இப்போது மக்களிடையே எழத் தொடங்கியுள்ளது।//

வேதனையான உண்மை! தமிழக ஊடகங்களின் பாராமுகமும் ஒரு காரணம். அரசியவதிகளால் என்ன நன்மை மக்களுக்கு என்பதைவிட, மக்களால் அரசியல் அவர்களுக்கு என்ன நன்மை என்றுதான் பார்க்கிறார்கள்.

நல்ல பதிவு நிர்ஷன்!

said...

//பலவீனங்களையும் இயலாமைகளையும் அப்பாவித்தனத்தையும் சாதகமாகப் பயன்படுத்தி குறிப்பிட்டதொரு வர்க்கத்தினை கீழ்நிலையில் உதாசீனப்படுத்தி உதறித்தள்ளுவதை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்। //

அரசியலுக்காக பயன்படுத்தப்படும் இலங்கைப் பிரச்சினையை முழுமையான மனதுடன் பயன்படுத்த வேண்டும். இந்தியத் தமிழ்த்தலைவர்களும் உலகத் தமிழ்த் தலைவர்கள் என தங்களைக் கூறிக்கொள்பவர்களும் இவ்விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

நல்லதொரு பதிவு நிர்ஷன்

said...

இந்த இளம் வயதில் தங்களைப் போன்ற சமூகத்தின் மீதான அக்கறையும், அபாரமான அரசியல் அறிவும் கொண்டவர்களை பார்ப்பது அரிது. பலவிதமான தகவல்கள் பற்றி ஆழமான அதேநேரம் தெளிவான பார்வையை தங்களின் கட்டுரைகள் கொண்டுள்ளன. எனது பாராட்டுதல்கள், வளரட்டும் உங்கள் பணி.

-கலையரசன்

said...

//எம்.ரிஷான் ஷெரீப் said...
உண்மையான கருத்துக்களை அருமையாக எழுதியிருக்கிறீர்கள் நிர்ஷன்...!
//

நன்றி ரிஷான்.

said...

//ஜோதிபாரதி said...
//இலங்கையிலுள்ள மலையக மக்கள் பற்றிய இந்தியாவின் ஈடுபாடு மிகவும் குறைந்து வருவதை அவதானிக்க முடிகிறது। இலங்கையை முழுமையாக அவதானித்து வருவதாக கூறும் இந்தியத்தலைவர்கள் மலையக மக்கள் குறித்தும் அவர்களது அன்றாட பிரச்சினைகள் குறித்தும் பாராமுகமாக செயற்படுவது ஏன் என்ற கேள்வி இப்போது மக்களிடையே எழத் தொடங்கியுள்ளது।//

வேதனையான உண்மை! தமிழக ஊடகங்களின் பாராமுகமும் ஒரு காரணம். அரசியவதிகளால் என்ன நன்மை மக்களுக்கு என்பதைவிட, மக்களால் அரசியல் அவர்களுக்கு என்ன நன்மை என்றுதான் பார்க்கிறார்கள்.

நல்ல பதிவு நிர்ஷன்!
//
சரியாகச் சொன்னீர்கள் ஜோதிபாரதி. மலையக மக்கள் தொடர்பான சரியான தெளிவின்மையும் இதற்குக் காரணம்.
வருகைக்கும் மேலான கருத்துக்கும் நன்றிகள்.

said...

//Bava said...
//பலவீனங்களையும் இயலாமைகளையும் அப்பாவித்தனத்தையும் சாதகமாகப் பயன்படுத்தி குறிப்பிட்டதொரு வர்க்கத்தினை கீழ்நிலையில் உதாசீனப்படுத்தி உதறித்தள்ளுவதை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்। //

அரசியலுக்காக பயன்படுத்தப்படும் இலங்கைப் பிரச்சினையை முழுமையான மனதுடன் பயன்படுத்த வேண்டும். இந்தியத் தமிழ்த்தலைவர்களும் உலகத் தமிழ்த் தலைவர்கள் என தங்களைக் கூறிக்கொள்பவர்களும் இவ்விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

நல்லதொரு பதிவு நிர்ஷன்
//

உங்கள் கருத்து சம்பந்தப்பட்டவர்களை சென்றடையுமாயின் நல்லது பவா. தொடர்ச்சியான பின்னூட்டம் தருகிறீர்கள். நன்றி

said...

//கலையரசன் said...
இந்த இளம் வயதில் தங்களைப் போன்ற சமூகத்தின் மீதான அக்கறையும், அபாரமான அரசியல் அறிவும் கொண்டவர்களை பார்ப்பது அரிது. பலவிதமான தகவல்கள் பற்றி ஆழமான அதேநேரம் தெளிவான பார்வையை தங்களின் கட்டுரைகள் கொண்டுள்ளன. எனது பாராட்டுதல்கள், வளரட்டும் உங்கள் பணி.

-கலையரசன்
//
நன்றி கலையரசன். உங்களுடைய முதல்விஜயம் என நினைக்கிறேன். பணிவோடு வரவேற்கிறேன்.

உங்களுடைய வலைத்தளத்தைப் பார்த்தேன். நிறைய விடயங்கள் படிப்பதற்கு இருக்கின்றன. பேனையுடனும் தாளுடனும் ஆறுதலாக அமர்ந்திருந்து வாசித்து குறிப்பெடுக்க வேண்டும் என எண்ணியிருக்கிறேன்.

அன்பு நன்றிகள்.

said...

மீண்டும் உங்களுடைய பதிவுதான் நிர்ஷன் வலைப்பக்கத்துக்கு வரச்செய்தது. கடைசியாக சாதிப்பிரச்சினை தொடர்பான உங்களுடைய கட்டுரைக்கு பதிலிட்டேன் என நினைக்கிறேன்.

உண்மையைக் கூறுவதானால் தரமான ஏன் மிகத்தரமான ஆக்கமொன்றை எழுதியிருக்கிறீர்கள். இந்தியத்தலைவர்களுக்கான இந்த வேண்டுகோள் எமது இந்திய வலைநண்பர்களூடாக வெளிக்கொண்டுவரவேண்டும் என்பதே எனது விருப்பம்.

//ஒரு சோக வரலாறு
தென்னிந்தியாவிலிருந்து கால்நடையாக இராமேஸ்வரம் வந்த மக்கள் கடல்மார்க்கமாக தலைமன்னாரை வந்தடைந்து அங்கிருந்து கால்நடையாகவே மலையகப் பகுதிகளுக்கு அழைத்து வரப்பட்டனர்। போதியளவு உணவு, சுகாதாரம், தங்குமிட வசதிகள் இன்றி பல மாதகாலமாக கால்நடையாக வந்ததால் ஆயிரக்கணக்கான தொழிலாளார்களும் குழந்தைகளும் உயிரிழந்ததாகவும் அப்போதைய கதைகள் உண்டு.
//

உண்மையில் கண்ணீரை வரவழைக்கும் விடயம். இவ்வளவு விடயங்களை எங்கிருந்து பெற்றுக்கொண்டீர்கள்?

மற்றது பவாவின் பதிலில் பிழையொன்று இருக்கிறது. யாருக்கும் பயப்படாதவன் என்பதால் மறைக்காமல் சொல்லிவிட்டேன்.

தாக்குங்க நிர்ஷன்!!!

மாசிலா said...

பல வரலாற்று உண்மைகளை கொண்ட அருமையான பதிவு.

இன்றைய காலத்து அடாவடி அரசியல், பதவி மற்றும் அதிகார மோகம் இவைகளுக்கு எதிரில் நீங்கள் முன் வைத்திருக்கும் இப்பிரச்சினைகளை யாரும் சீண்டப்போவது கிடையாது. சம்பந்தப்பட்ட இனத்தினரும் குலத்தினரும்தான் இதற்கான முயற்சிகளை எடுத்து நல்வழி தேடவேண்டும்.

பல சிக்கல்கள் கொண்ட பெரும் குழப்பங்கள் நிறைந்த இது ஒரு சாதாரண பிரச்சினை அல்ல.

ஒரு சமூகத்தின் பிரச்சினை.

மனதை பிழிந்தெடுக்கும் இந்நிகழ்வுகளுக்கு எப்போதுதான் விடிவு காலம் பிறக்குமோ?

இதற்கு நாம் என்ன செய்ய போகிறோம்?

??? ...

:-(

said...

//பல வரலாற்று உண்மைகளை கொண்ட அருமையான பதிவு.

இன்றைய காலத்து அடாவடி அரசியல், பதவி மற்றும் அதிகார மோகம் இவைகளுக்கு எதிரில் நீங்கள் முன் வைத்திருக்கும் இப்பிரச்சினைகளை யாரும் சீண்டப்போவது கிடையாது. சம்பந்தப்பட்ட இனத்தினரும் குலத்தினரும்தான் இதற்கான முயற்சிகளை எடுத்து நல்வழி தேடவேண்டும்.

பல சிக்கல்கள் கொண்ட பெரும் குழப்பங்கள் நிறைந்த இது ஒரு சாதாரண பிரச்சினை அல்ல.

ஒரு சமூகத்தின் பிரச்சினை.

மனதை பிழிந்தெடுக்கும் இந்நிகழ்வுகளுக்கு எப்போதுதான் விடிவு காலம் பிறக்குமோ?

இதற்கு நாம் என்ன செய்ய போகிறோம்?

??? ...

:-(//

வருகைக்கும் மேன்மையான கருத்துக்கும் நன்றிகள் மாசிலா.
எமது தலைவர்களின் கைகளில் தான் மக்களின் எதிர்காலம் தங்கியிருக்கிறது. மக்களுடன் விழிப்படையவேண்டும். உழைக்கவேண்டும்.போராடவேண்டும். எழுச்சிபெற வேண்டும்.அப்போதுதான்
யாரையும் எதிர்பார்க்காமல் எமக்கானதை நாம் உருவாக்கலாம்.

said...

அருமை நண்பரே.. இதை நான் உங்கள் பெயரில் பத்திரிகையில் பிரசுரிக்கலாமா ?

xavier.dasaian at gmail.com

said...

//சேவியர் said...
அருமை நண்பரே.. இதை நான் உங்கள் பெயரில் பத்திரிகையில் பிரசுரிக்கலாமா ?

xavier.dasaian at gmail.com
//
தாராளமாக.
மேலதிக தகவல்கள் வேண்டுமானாலும் நான் தருகிறேன்.
மின்மடலில் தங்களுடன் தொடர்புகொள்கிறேன்.

நன்றி

Anonymous said...

//ஈழப்போராட்டம் ஆரம்பித்தபின்னர் அது பூதாகரமாக வெடித்ததைத் தொடர்ந்து இந்த அப்பாவி மக்களின் பட்டினிப் போராட்டம் வெளிக்கொண்டுவரப்பாடமலே போனது। வடக்குக் கிழக்குப் பிரச்சினைக்கு மலையக மக்கள் அந்தக்காலம் முதல் ஆதரவை வெளிப்படுத்தி வந்தனர்//

தன்னோட குழந்தைகள் தான் துடிக்கின்றன என்பது இந்தியத் தாய்க்கு தெரியாது நிர்ஷன். ஒரு பட்டினிப் போராட்டமே யுத்தத்தால் மறக்கப்பட்டுவிட்டது பாருங்கள். உங்களுடைய ஆக்கத்தால் எனக்குத் தெரியாத பல விடயங்களை அறிந்துகொண்டேன்.

வடக்கு கிழக்குத் தமிழர்களின் பிரச்சினை வேறு மலையக மக்களின் பிரச்சினை வேறு என்பதை இந்தியா புரிந்துகொள்ள வேண்டும். யுத்தத்துக்காக வழங்கும் செலவில் ஒரு வீதம் மலையக அப்பாவி மக்களுக்கு வழங்கியிருந்தால் கூட இந்நேரம் முழு மலையக சமுதாயத்தினரும் முன்னேற்றம் கண்டிருப்பார்கள். ஆகக்குறைந்தது கல்வியிலாவது. என்ன சொல்றீங்க நிர்ஷன்???????????????????ஃஃ

-ஓர் ஊடகவியலாளன்
இலங்கை தமிழ்ப்பத்திரிகையொன்றில்.
பெயர் குறிப்பிடாமைக்கு மன்னிக்கவும்

said...

சிறு ஓடைகளின் சந்திப்புத்தான பெரும் ஆறுகளாக ஓடத்தொடங்கி சமுத்திரத்தில் கலந்து பின்னர் ஆவியாக்கற் செயற்பாட்nடினால் மழையாக பெய்யும்போது ப10மி விளைகிறது.

எனக்கும் நண்பர் சேவியருக்குமான சந்திப்பு இன்று மலையக ஆற்றினை வலைத்தளத்தினு}டாக ஓடவைத்திருக்கிறது. நிர்ஷன் ஆற்றங்கரையில் பார்வையாளராக அன்றி ஆற்றில் பயணிப்பவராக செயற்படுகிறீர்கள். வாழ்த்துக்கள். உங்களைப்போன்ற உள்ளங்களை நினைக்கையில் பெருமையாக இருக்கிறது நண்பரே. பதிவுகள் பலவற்றுடன் தொடர்வேன்…..

மழையாக மாறி எமது மக்கள் செழிக்க பெய்யும் வரை தொடருவோம் ஆற்றுப்பயணங்களை.

பல வருடங்களுக்கு முன்பு படித்த ‘அமுதோன்’ எழுதிய ஹைக்கூ கவிதைகள் இரண்டினை சந்தர்ப்பம் கருதி பதிவு செய்கிறேன்.

(1)
உற்றுப்பாருங்கள் தெரியும்
ஆற்று மணல்கள் எழுதும்
ஆழகிய கவிதைகள்

(2) இந்தக்காட்டில்
எந்த மூங்கில்
புல்லாங்குழல்;

‘மல்லியப்பு சந்தி’ திலகர் -
‘புதுக்காடு’ எனது அடுத்த கவிதைத் தொகுப்பின் பெயர்…… நான் பிறந்த ஊரின் பெயர்……. அவ்வளவுதான்….

Nn, Fantastic.
u hv done a very nice Job.I have learned more from this topic.

From: Nithu

said...

உங்கள் பதிவில் பிரச்சினையில் ஆழம் தெரிகின்றது.

இப்பிரச்சினைகளை மக்கள் விளங்கிக்கொள்வதற்கான போதிய விழிப்புணர்வு ஏற்படாததே முக்கிய காரணிகளில் ஒன்றாகப் பார்க்கலாம்.

மலையக தமிழ் அமைச்சர்களே இதற்கு முழுப் பொருப்பேற்க வேண்டும். தாம் வாக்கு அருவடை செய்யும் இவ்வப்பாவி மக்களை திட்டமிட்டே ஏமாற்றிவரும் மோசடியாளர்களாகவே மலையக அரசியலாளர்களைப் பார்க்கிறேன்.

இலங்கை வரலாற்றில் எக்கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தம் கட்சியை ஆட்சியில் அமர்த்தும் மாபெரும் கைங்கரியத்தை மட்டும் மலைய அரசியல் தலமைகள் கொண்டுள்ளது என்பது மாபெரும் உண்மை.

என்னைப் பொருத்தமட்டில் மலையக மக்கள் மீது எனக்குள்ள மதிப்பும் பற்றும் போன்று மலையக அரசியலாளர்கள் மீது துளியேனும் இல்லை.

இலங்கை அரசின் அடிவருடிகளில் ஒரு பகுதியினாகவே நான் இவர்களைப் பார்க்கின்றேன்.

அடையாள அட்டைகளிலும் இந்தியத் தமிழர் எனும் வேறுப்பாட்டைக் காண்பிப்பதற்கு X குறி இடுவதாக அறிந்தேன். அந்நடைமுறை தற்போதும் உள்ளதா?

உங்கள் பதிவு பாதிக்கப்பட்ட மக்களுக்கான விழுப்புணர்வாக அமையட்டும் நிர்சன்.

"விடியலுக்கு முதல்படி விழிப்புணர்வு."

நன்றி

Anonymous said...

இந்தியா இந்தியாவில் வாழும் தமிழ்நாட்டுத் தமிழர்களையே கணக்கில் எடுப்பதாகத் தெரியவில்லை. இதில் இந்திய வழி தமிழர்களைப் பற்றியா சிந்திக்கப் போகிறது?

தமிழர்களுக்கென ஒரு நாடிருந்தால் அது தமிழர்களுக்காக ஒலிக்கும்.

ஆனால் இந்தியாவில் தமிழ் நாடோ பெயரளவில் மட்டுமே "நாடு" எனும் அடைமொழியை வைத்துக்கொண்டு, இந்தியா எனும் ஆளுகைக்குள் உற்பட்டு நிற்கிறது. அதன் குரலுக்கு இந்தியா எந்தளவில் செவிமடுக்கும் என்பதே கேள்விக்குரியது

முதலில் இந்தியத் தமிழர் எனும் சொல்லின் "இந்தியா" எனும் அடைமொழியை அகற்றுங்கள். இந்தியத் தாய் எனும் பதம் தமிழர்களுக்குப் பொருத்தமானது அல்ல.

இந்தியாவில் உள்ளவர்களே பஞ்சத்தில் செத்தால் என்ன? சுனாமியில் செத்தால் என்ன? இந்திய கடலில் இலங்கை இராணுவம் சுட்டு எவன் செத்தாலென்ன? கிழக்காசிய பிராந்தியத்தில் தமது வல்லரசு ஆதிக்கத்தை நிலை நிறுத்துவது மட்டுமே அதன் பிரதானக் குறி.

நீங்கள் போய் "இந்தியத்தாய் உதைத்துத் தள்ளிய மலையகக் குழைந்தகள்" பற்றி பேசுகிறீர்கள்????

said...

//புதுக்காடு said...

திலகர்,
வாருங்கள். தங்கள் வருகையை நான் எதிர்பார்த்திருந்தேன்.
உங்களுடைய புதுக்காடு கவிதைத்தொகுப்பும் பூத்து நறுமணம்பரப்பி மனம்நிரப்பும் என்ற நம்பிக்கை எம்மவரிடையே உண்டு.

அழகான கவிதையினூடாக விளக்கம் தந்திருக்கிறீர்கள். உண்மையில் நானும் ஒரு பயணி தான். மலையக மக்கள் படும் துயரங்களை நேரில் கண்டு ஆதங்கம் கொண்டு அதற்காக முடிந்தளவு பாடுபட்டுக்கொண்டிருக்கிறேன். உங்களுடனனாக கைகோர்ப்பு ஒரு புதிய திருப்பத்தை என்னுள் ஏற்படுத்தியிருக்கிறது.
நன்றி.

said...

//Nitharshini said...
Nn, Fantastic.
u hv done a very nice Job.I have learned more from this topic.

From: Nithu
//

நன்றி நிது.
அடிக்கடி நீங்கள் தரும் ஊக்கம் என்னை மேலும் எழுதத்தூண்டுகிறது.

said...

//HK Arun said...
உங்கள் பதிவில் பிரச்சினையில் ஆழம் தெரிகின்றது.

இப்பிரச்சினைகளை மக்கள் விளங்கிக்கொள்வதற்கான போதிய விழிப்புணர்வு ஏற்படாததே முக்கிய காரணிகளில் ஒன்றாகப் பார்க்கலாம்.

மலையக தமிழ் அமைச்சர்களே இதற்கு முழுப் பொருப்பேற்க வேண்டும். தாம் வாக்கு அருவடை செய்யும் இவ்வப்பாவி மக்களை திட்டமிட்டே ஏமாற்றிவரும் மோசடியாளர்களாகவே மலையக அரசியலாளர்களைப் பார்க்கிறேன்.

இலங்கை வரலாற்றில் எக்கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தம் கட்சியை ஆட்சியில் அமர்த்தும் மாபெரும் கைங்கரியத்தை மட்டும் மலைய அரசியல் தலமைகள் கொண்டுள்ளது என்பது மாபெரும் உண்மை.

என்னைப் பொருத்தமட்டில் மலையக மக்கள் மீது எனக்குள்ள மதிப்பும் பற்றும் போன்று மலையக அரசியலாளர்கள் மீது துளியேனும் இல்லை.

இலங்கை அரசின் அடிவருடிகளில் ஒரு பகுதியினாகவே நான் இவர்களைப் பார்க்கின்றேன்.

அடையாள அட்டைகளிலும் இந்தியத் தமிழர் எனும் வேறுப்பாட்டைக் காண்பிப்பதற்கு X குறி இடுவதாக அறிந்தேன். அந்நடைமுறை தற்போதும் உள்ளதா?

உங்கள் பதிவு பாதிக்கப்பட்ட மக்களுக்கான விழுப்புணர்வாக அமையட்டும் நிர்சன்.

"விடியலுக்கு முதல்படி விழிப்புணர்வு."

நன்றி
//

வாருங்கள் தம்பி,
இதுதான் நீங்கள் எனக்குத் தரும் முதலாவது பின்னூட்டம்.

உண்மையில் உங்களைப் போன்ற இளைஞர்கள் மலையக மக்கள் மீது கொண்டுள்ள அக்கறை கூட தலைவர்களுக்கு இல்லை என்றே கூறலாம்.

இறுதியில் நீங்கள் கூறியுள்ள வசனம் என்னை மெய்சிலிர்க்க வைத்தது.
உங்கள் சேவை தொடரட்டும். ஊடகத்துறையினூடாக சாதியுங்கள். அந்தச் சாதனைகள் சகாப்தம் படைக்கட்டும்.

said...

//Anonymous said...
இந்தியா இந்தியாவில் வாழும் தமிழ்நாட்டுத் தமிழர்களையே கணக்கில் எடுப்பதாகத் தெரியவில்லை. இதில் இந்திய வழி தமிழர்களைப் பற்றியா சிந்திக்கப் போகிறது?

தமிழர்களுக்கென ஒரு நாடிருந்தால் அது தமிழர்களுக்காக ஒலிக்கும்.

ஆனால் இந்தியாவில் தமிழ் நாடோ பெயரளவில் மட்டுமே "நாடு" எனும் அடைமொழியை வைத்துக்கொண்டு, இந்தியா எனும் ஆளுகைக்குள் உற்பட்டு நிற்கிறது. அதன் குரலுக்கு இந்தியா எந்தளவில் செவிமடுக்கும் என்பதே கேள்விக்குரியது

முதலில் இந்தியத் தமிழர் எனும் சொல்லின் "இந்தியா" எனும் அடைமொழியை அகற்றுங்கள். இந்தியத் தாய் எனும் பதம் தமிழர்களுக்குப் பொருத்தமானது அல்ல.

இந்தியாவில் உள்ளவர்களே பஞ்சத்தில் செத்தால் என்ன? சுனாமியில் செத்தால் என்ன? இந்திய கடலில் இலங்கை இராணுவம் சுட்டு எவன் செத்தாலென்ன? கிழக்காசிய பிராந்தியத்தில் தமது வல்லரசு ஆதிக்கத்தை நிலை நிறுத்துவது மட்டுமே அதன் பிரதானக் குறி.

நீங்கள் போய் "இந்தியத்தாய் உதைத்துத் தள்ளிய மலையகக் குழைந்தகள்" பற்றி பேசுகிறீர்கள்????
//

வருகைக்கு நன்றி அனானி.
உங்களது கருத்தும் சரிதான். எனது வாதம் என்னவென்றால் இலங்கையின் உள்விவகாரங்களில் இந்தியா எடுக்கும் அக்கறை கூட இந்த மக்கள் தொடர்பில் இல்லை என்பதேயாகும்.

said...

//யாருக்கும் பயப்படாதவன் said...

மற்றது பவாவின் பதிலில் பிழையொன்று இருக்கிறது. யாருக்கும் பயப்படாதவன் என்பதால் மறைக்காமல் சொல்லிவிட்டேன்.
//

ஆமாம். அவர் சொல்லவந்த கருத்தை சரியாக எழுதாததால் பிழைத்திருக்கிறார் என நினைக்கிறேன். ஆனால் அவரின் உண்மையான கருத்து வேறு.

பவா பதில் சொல்வார் என நினைக்கிறேன்.

மற்றும் உங்களுடைய வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பயப்படாதவரே.

Anonymous said...

அருணின் பதிவுக்கு நிர்ஷனின் மறுமொழி இன்னுமொரு கோணத்தைத் தந்தது
நமது வலை பதிவு நண்பர்களில் பலபேரின் பதிற்குறி எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. மலையக மக்கள் விடயத்தில் இத்தனை அக்கறையுடன் இளையவர்கள் இருக்கிறார்களா? என எனக்குள் ஆச்சரியப்பட்டேன். அவற்றுள் சிலரின் பதிற்குறிகளோடு தொடர்புடையதாக எனது புதிய கோணம் ஒன்றை முன்வைக்கலாமென எண்ணுகிறேன்.
‘தலைவர்கள் சிந்திப்பது இல்லை’ என்பது பதிவு நண்பர்களினதும் பிற சமூக அக்கறையாளர்களினதும் விமர்சனம் அல்லது வேண்டுகோள். இந்த விமர்சனம் நீண்டகாலமாக (வருடக்கணக்கில்) உலாவுவதால் சற்று மாறுதலாக யோசிக்க தலைப்பட்டால் என்ன?
‘சிந்திப்பவர்கள் ஏன் தலைவர்களாவதில்லை’?
இத்தலைப்பின் கீழும் கருத்துக்களை பதிவோம். அப்போது புதிய தலைமைகளுக்கான தேவை? அவை வருவதன் சிக்கல்கள் ? வரவேண்டியதன் தேவை உணரப்படலாம்……
திலகர்

Anonymous said...

//இந்தியா உட்பட சர்வதேசக் கல்விச்சமூகம் உணரவேண்டும்। தமது குழந்தைகளை தாமே அந்நியப்படுத்தி உதைக்கும் வரலாற்றுக் கறையை இந்தியா ஏற்படுத்திவிடக்கூடாது।//

அதாவது உங்களின் வேண்டுக்கோள் இந்தியாவை நோக்கி இருக்கிறது.

இங்கே ஒன்றைப் பார்க்கவேண்டும் 300ஆண்டுகளுக்கு முன் இந்தியாவிலிருந்து மன்னிக்கவும் தமிழ் நாட்டிலிருந்து கூலித்தொழிலாளர்களாக பீஜி தீவு, தென் ஆப்பிரிக்கா, பர்மா, மலேசியா, இலங்கைப் போன்ற நாடுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

ஆனால் அந்தந்த நாடுகளில் கூலித்தொழிலாளர் எனும் பெயர் மறைந்து சுதந்திர மக்களாக வாழ்ந்துக்கொண்டிருக்கும் போது. இலங்கையில் மட்டும் மலையகத் தமிழர்களின் நிலை ஏன் இந்நிலைக்கு தள்ளப்பட்டது என்பதை முதலில் மலையக மக்களே சிந்திக்க வேண்டும்.

இச் சிந்தனை என்று மலையக மக்களிடம் உருவாகின்றதோ அன்று அம்மக்கள் விழிப்படைவார்கள்.

ஆனால் தாம் எந்தளவிற்கு பின் தள்ளப்பட்டவர்களாக இருக்கிறோம் என்பதையே அறியாத ஒரு மக்கள் சமூகமாகவே இருப்பது தான் வேதனையானது.

அம்மக்களை அதே நிலையில் வைத்திருப்பதே நல்லது எனத்தான் மலையக மந்திரிகளும் விரும்புகின்றனர் என்பது வெளிப்படையாக சிந்தித்தால் புரியும்.

உண்மையில் நீங்கள் உங்கள் கோரிக்கைகளை கேட்க வேண்டிய இடம் இந்தியா அல்ல.

நீங்கள் இலங்கை குடிமக்கள். இலங்கையில் வாக்களிக்கிறீர்கள். குறிப்பாக உங்கள் பிரச்சினைகளை மலையக தமிழ் ஆறுமுகம் தொண்டமான் அவனிடம் கேளுங்கள்.

மலையக மக்களை விடவும் குறைந்த சனத்தொகையுடைய முஸ்லீம் மக்களுக்கு அவர்களது அரசியலாளர்கள் ஆற்றியுள்ள கடமைகளைப் பாருங்கள்.

அவர்களையும் விட அதிக வாக்குகள் வித்தியாசத்திலும் அரசியல் பலத்திலும் இருக்கும் மலையக அரசியலாளர்கள் ஏன் செய்யவில்லை?

ஏன் மலையகத் தமிழர்களை மலையக அரசியலாளர்களே கண்டுக்கொள்வதில்லை?

ஏன்? ஏன்?? சிந்தியுங்கள்!!

இவர்களை ஆட்டு மந்தைகளாக வைத்துக்கொள்வதில் தான் மலையக அரசியலாளர்களின் வாக்கு அருவடையை வெற்றிகரமாக செய்யமுடியும். எனவே தொடர்ந்தும் இம்மக்களை மந்தைகளாகவே வைத்துக்கொள்ள முற்படுவது மலையக அரசியலாளர்களே.

இதனையே இலங்கை சோசலிச குடியுரிமை அரசும் விரும்புகிறது. இது ஒரு திட்டமிட்ட இனவொழிப்புச் சதி என்பதை தெரிந்தே மலையக அரசியலாளர்கள் இலங்கை அரசுக்கு கால் பிடிக்கிறது.

தமிழ்நாட்டு திரைப்படங்களில் காட்டப்படும் அரசியாலாளர்கள் போல் மிகவும் கேவலாமான அரசியாலாளர்களாகவே மலையக அரசியலாளர்கள் இருக்கிறார்கள்.

இலங்கை வரலாற்றில் ஆளும் கட்சியும் எதிர் கட்சியும் மாறி மாறியே வந்துள்ளது. ஆனால் எந்தக்கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அந்தக் கட்சியில் பதவி வகுத்துக் கொள்ளும் மலையக அரசியாளர் சாதித்தது என்ன?

மக்களை ஏமாற்றி இலங்கை அரசுக்கு ஒத்து ஊதி தமிழ்நாட்டில் பொருள் சேர்த்தது மட்டும் தான். தொண்டமானின் சொத்துக்கள் இந்தியாவில் இருப்பது என்பது எல்லோருக்கும் தெரியாதா?

தொண்டமான் அரச குடும்பத்தை சேர்ந்தவர் என்றுள்ளீர்கள். எந்த அரச குடும்பம்? பாண்டியன்? சேரன்? சோழன்? அறிந்துக்கொள்ள ஆசையாக உள்ளது.

விக்கிப்பீடியாவில் பார்த்து எழுதீனீர்களானால் அத்தகவலை உறுதிப்படுத்தவும்.

said...

//Anonymous said...
அருணின் பதிவுக்கு நிர்ஷனின் மறுமொழி இன்னுமொரு கோணத்தைத் தந்தது
நமது வலை பதிவு நண்பர்களில் பலபேரின் பதிற்குறி எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. மலையக மக்கள் விடயத்தில் இத்தனை அக்கறையுடன் இளையவர்கள் இருக்கிறார்களா? என எனக்குள் ஆச்சரியப்பட்டேன். அவற்றுள் சிலரின் பதிற்குறிகளோடு தொடர்புடையதாக எனது புதிய கோணம் ஒன்றை முன்வைக்கலாமென எண்ணுகிறேன்.
‘தலைவர்கள் சிந்திப்பது இல்லை’ என்பது பதிவு நண்பர்களினதும் பிற சமூக அக்கறையாளர்களினதும் விமர்சனம் அல்லது வேண்டுகோள். இந்த விமர்சனம் நீண்டகாலமாக (வருடக்கணக்கில்) உலாவுவதால் சற்று மாறுதலாக யோசிக்க தலைப்பட்டால் என்ன?
‘சிந்திப்பவர்கள் ஏன் தலைவர்களாவதில்லை’?
இத்தலைப்பின் கீழும் கருத்துக்களை பதிவோம். அப்போது புதிய தலைமைகளுக்கான தேவை? அவை வருவதன் சிக்கல்கள் ? வரவேண்டியதன் தேவை உணரப்படலாம்……
திலகர்
//

அருண் இளைமை துடிப்புள்ளவர். சமூகத்தின் மீதான அவரது அக்கறை என்னை பலதடவைகள் வியப்படையவைத்திருக்கின்றன.

மற்றும் நீங்கள் குறிப்பிட்டுள்ள விடயம் குறித்தான தேவை எழுந்துள்ளது என நினைக்கிறேன். நல்லதொரு மாற்றுச்சிந்தனையை முன்வைத்திருக்கிறீர்கள் திலகர்.

சமுதாயம் இதைத்தான் எதிர்பார்க்கிறது. ஆனால் இளைஞர்களின் முன்வருகை தான் குறைவாக இருக்கிறது என நினைக்கிறேன்.

நன்றி திலகர்.

said...

அனானிக்கு வணக்கம்,
பெயரைக் குறிப்பிட்டிருந்தால் உங்கள் கருத்து வலுவானதாக இருந்திருக்கும் நானும்சந்தோஷப்பட்டிருப்பேன்.

பெயர் கூற மறுப்பதால் உங்கள் கருத்தில் உண்மைத்தன்மை இல்லை என்றே என்னால் கொள்ள முடிகிறது.

இருப்பினும் தங்கள் வருகையை மதித்து பதிலளிக்கிறேன்.

மக்கள் சிந்திப்பதில்லை என்ற தங்களுடைய கருத்தினை நான் ஏற்றுக்கொள்கிறேன். மக்களை ஒரு வட்டத்துக்குள் வைத்திருக்க முனையும் தலைவர்களும் இதற்குக் காரணம். ஒரு சமுதாயம் துளிர்விட ஆரம்பிக்கும்போதெல்லாம் கிள்ளியெறிய முற்படுபவர்கள் பற்றி நான் கூறித் தெளிய வேண்டியதில்லை.

மேலும்,
எந்தவொரு தகவலையும் நான் உறுதிப்படுத்தாமல் எழுதுவதில்லை.
மூத்த எழுத்தாளர் கவிஞர் மறைந்த காளமேகத்தின் "மலையக வரலாறு", ஏ.லோறன்ஸ் இன் "மலையகம் எமது தாயகம்", பேராசிரியர் சோ. சந்திரசேகரத்தின் மலையகக் கட்டுரைகளின் தொகுப்பு ஆகியவற்றை வாசித்து குறிப்பெடுத்து எழுதிய தகவல்கள் இவை.

மலையக மக்கள் குறித்து இன்னும் பல சோகவிடயங்கள் இருக்கின்றன. ஆனால் வலைத்தளத்தில் மிக அதிகமாக எழுத முடியாததால் நான் அவற்றை தவிர்த்துவிட்டேன்.
இன்னும் எழுதக் காத்திருக்கிறேன்.

//செளமியமூர்த்தி தொண்டமானின் தந்தையார் கறுப்பையா தொண்டமான் புதுக்கோட்டை அரசகுலத்தைச் சேர்ந்தவர், தேவர் சமூகத்தைச் சேர்ந்த கறுப்பையா தொண்டமான் குடும்பத்தின் செல்வமெல்லாமிழந்து வறுமையில் வாடிய போது இலங்கைக்கு தேயிலைத் தோட்டத்துக் கங்காணியாகச் சென்றார். அவருடைய கடுமையான உழைப்பினாலும், வியாபாரம் நுணுக்கத்தாலும் வளமான வாவென்டன் ( Wavendon estate) என்ற தேயிலைத் தோட்டத்தின் உரிமையாளரானார்.
//

என்று வரலாறு சொல்கிறது. அரசகுடும்பம் எனும்போது தனியே சேர சோழ பாண்டியர் மட்டுமில்லை. சிற்றரசர் குடும்பங்களையும் குறிக்கலாம் என்பதை நினைவுபடுத்துகிறேன்.

வருகைக்கும் கருத்துரைக்கும் பணிவுடன் நன்றிகூறுகிறேன்.

said...

கட்டுரை நன்றாக இருக்கிறது நிர்ஷன்.

மேலும் பல தகவல்கள் உள்ளதாக கூறியிருக்கிறீர்கள். அதனையும் எதிர்பார்க்கிறேன்.

அன்புடன்
அனு.

Anonymous said...

நிர்ஷன், குறிப்பிட்டுள்ள நு}ல் பட்டியலில் காளமேகம் என்பது எஸ்.எம். கார்மேகம் என வந்திருக்கவேண்டும். தவிரவும், எஸ்.எம். கார்மேகம் அவர்களது புத்தகத்தில் மலையகம் பற்றிக்குறிப்பிட்டிருக்கலாம். ஆனால் ‘மலையக வரலாறு’ எனும் புத்தகத்தினை அவர் எழுதவில்லை என நினைக்கிறேன்.
எண்பதுகளில் வெளிவந்த ‘மோகன்ராஜ்’ எனும் பெயரில் பி.ஏ.காதர் அவர்கள் எழுதிய ‘இருபதாம் நு}ற்றாண்டின் நவீன அடிமைகள்’ எஸ்.நடேசன் ஆங்கிலத்தில் எழுதிய பெருந்தொட்ட தொழிலாளர் சமூகம் பற்றிய நு}ல்,
(History of upcountry Tamil people in Sri Lanka)
பேராசிரியர் சோ.சந்திரசேகரன் எழுதிய இலங்கை இந்திய வரலாறு, ஆகிய நு}ல்களே மலையக மக்கள் பற்றிய சற்று ஆழமான ஆய்வு நு}ல்களாகும். சாரல் நாடனின் ‘தேசபக்தன் கோ.நடேசய்யர்’, ‘மலையக தமிழர்’ஆகிய நு}ல்களும் மலையக மக்கள் பற்றிய குறிப்புகளைத் தருகின்றது. மலையக மக்கள் பற்றிய காத்திரமான ஆய்வு நு}ல் ஒன்றின் தேவை இருக்கிறது என நினைக்கிறேன். அதற்கான முயற்சிகளில் நண்பர்கள் சிலர் அறங்கியிருப்பதாகவும் அறிகிறோம்.வரவேற்போம் வாழ்த்துக்கள்.

எனது அறிவுக்கு எட்டியவற்றை பதிவு செய்திருக்கிறேன் நிர்ஷன், தவிர இதைவிடவும் தகவல்கள் இருப்பின் பதிவு செய்து விடுங்கள்.
-திலகர்

said...

//செளமியமூர்த்தி தொண்டமானின் தந்தையார் கறுப்பையா தொண்டமான் புதுக்கோட்டை அரசகுலத்தைச் சேர்ந்தவர்//

அப்படியான பெயரில் புதுக்கோட்டை பகுதியில் அரச குலத்தைச் சேர்ந்தவர்கள் பற்றி நாங்கள் இங்கு கேள்விப்பட்டதில்லை. அதபத்தி கொஞ்சம் விபரமா சொல்லுங்க.

//தேவர் சமூகத்தைச் சேர்ந்த கறுப்பையா தொண்டமான் குடும்பத்தின் செல்வமெல்லாமிழந்து வறுமையில் வாடிய போது இலங்கைக்கு தேயிலைத் தோட்டத்துக் கங்காணியாகச் சென்றார்.//

கங்காணி என்றால் என்ன? பெரிய சம்பளமா?

//கடுமையான உழைப்பினாலும், வியாபாரம் நுணுக்கத்தாலும் வளமான வாவென்டன் ( Wavendon estate) என்ற தேயிலைத் தோட்டத்தின் உரிமையாளரானார்.//

இதுமாதிரி நிறையப் பேர் இந்தியாவிலயும் இருக்கிறானுங்க. நாளு காசு கண்டுப்புட்டா அரச பரம்பரையின்னும் சொல்லுவாக, ஜெமீன் பரம்பரையின்னு சொல்லுவாக. இத மோடப்பசங்களும் நம்பிருவாய்ங்க.தேடிப் பார்த்த ஒன்னும் ஆதாரம் இருக்காது.

எல்லாம் மக்களை கொல்லையடிச்ச காசுத்தான் பாருங்க.

மலையகம் சொல்லீறீக அங்கே தமிழ்நாட்டு தொண்டாமான் இருந்தாய்ங்க சொல்லுறீக. அப்படீயீன்னா தொண்டமான் கல்லமான் தானுக.

நம்பாதீக.

said...

//மலையக மக்கள் படும் துயரங்களை நேரில் கண்டு ஆதங்கம் கொண்டு அதற்காக முடிந்தளவு பாடுபட்டுக்கொண்டிருக்கிறேன்//

இன்னா பாடு படுறீக? ஆனா நாளு வரி எழுதிப்புட்டா பாடுபடுறேணுன்னு அர்த்தம் இல்லீக. அதுவும் மோசடி தானுங்க.

செயலுல்ல காட்டணுமுங்க.

said...

வாருங்கள் திலகர்.
எனது பின்னூட்டத்தில் பிழை இருக்கிறது. திருத்தித் தகவல் தந்தமைக்கு நன்றி. கார்மேகத்தின் நூல்கள் சிலவும் அவர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பும் என்னிடம் இருக்கின்றன. பார்த்து விபரத்துடன் பதிவிடுகிறேன்.

அன்பு நன்றிகள் உங்களுக்கு.

said...

வணக்கம் காசிபாரதி,
வெளிப்படையான கேள்விகளுக்கு நன்றிகள்.

நீங்கள் கருத்துரைத்த பின்னர் தொண்டமான் குறித்தான முழுத் தகவல்களையும் நண்பர்களின் உதவியுடன் திரட்ட முயற்சி செய்துள்ளேன். ஆதாரங்கள் கிடைப்பின் அவற்றின் உண்மை நிலை பற்றி பதிவிடுகிறேன்.

கங்காணி என்பவர் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான தொழிலாளர் குழுவினை பரிபாலிப்பவர். அவரின் தலைமையில் தான் வேலைகள் இடம்பெறும்.
அந்தக்காலத்தில் கங்காணி என்பவருக்கு அதிகளவு மதிப்பு இருந்தது.அவரே தோட்டத் தலைவராகவும் இருந்தார். இப்போதும் கங்காணிக்கு மதிப்பு இருக்கிறது. கல்வி நிலையில் பட்டப்படிப்பு முதிர்ச்சி இல்லாவிட்டாலும் அனுபவ அறிவால் சாதிக்கக்கூடியவர்கள் தான் இந்த கங்காணிமார்கள்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

said...

காசிபாரதி,
உண்மையில் நான் பெரிதாக ஒன்றும் சேவை செய்யவில்லை. மலையக மக்கள் தொடர்பான (பத்திரிகைகளில் வெளிவராத) எனது கட்டுரைகளை மட்டுமே நீங்களும் வாசித்திருக்கிறீர்கள்.

முடிந்தளவு பாடுபடுகிறேன் என்ற பதம் நான் நிறைய சேவை செய்திருக்கிறேன் என்று தவறான அர்த்தமூட்டலை தந்திருந்தால் அடியேன் அவை பணிகிறேன்.

said...

//snnithiyaanu said...
கட்டுரை நன்றாக இருக்கிறது நிர்ஷன்.

மேலும் பல தகவல்கள் உள்ளதாக கூறியிருக்கிறீர்கள். அதனையும் எதிர்பார்க்கிறேன்.

அன்புடன்
அனு.
//

வருகைக்கும் ஊக்கத்துக்கும் நன்றி அனு.
என்னோடு பல நண்பர்கள் கைகோர்த்திருக்கிறார்கள். நிச்சயமாக தகவல் எழுதுகிறேன்.

எல்லாவற்றுக்கும் திலகருக்குத்தான் நன்றி கூற வேண்டும்.

said...

//கல்வி நிலையில் பட்டப்படிப்பு முதிர்ச்சி இல்லாவிட்டாலும் அனுபவ அறிவால் சாதிக்கக்கூடியவர்கள் தான் இந்த கங்காணிமார்கள்.//

இது மாதிரி நிறைய பேரு இந்துருப்பாய்ங்க இல்ல, அவுக என்னா சாதிச்சிருக்காக.

அவர்க சாதிக்கிறத இருந்தா ஏனுக இந்தியாவ உதவிக்கு அழைக்கிறீக?

உண்மையச் சொன்னா மலையக மனுசக நம்ம தமிழ்நாட்டு மனுசகன்னு உங்கள் பதிவப் பார்த்து தானுக அறிஞ்சிக்கிட்டேனுக.

தொண்டமான் வரலாறு எல்லாம் தேவையில்லீக. அந்த மக்களின் நிலமைகள உலகுக்கு அறியப்படுத்துக. அதையும் மற்றவர்க புத்தகத்துப் பார்த்து எழுதுவதும் பிரயோசனம் இல்லீக. அது அவுக கருத்துக.

நீங்க உங்கள் கருத்துகள் அனுபவிச்சு அந்த மக்களோடு பேசி உண்மையா எழுதுக. அது தானுக உலகத்துக்கு உண்மைய உணர்த்துமுக.

//உறுதிப்படுத்தாமல் எழுதுவதில்லை.
மூத்த எழுத்தாளர் கவிஞர் மறைந்த காளமேகத்தின் "மலையக வரலாறு", ஏ.லோறன்ஸ் இன் "மலையகம் எமது தாயகம்", பேராசிரியர் சோ. சந்திரசேகரத்தின் மலையகக் கட்டுரைகளின் தொகுப்பு ஆகியவற்றை வாசித்து குறிப்பெடுத்து எழுதிய தகவல்கள் இவை.//

இது அவுக எழுதுனுதுகல பாத்துப்புட்டு நீங்க எழுதுவது உறுதியான தகவலா இருக்காதுக. அனுபவத்தி ஊடாக நேரடியாக உணர்ந்து எழுதுக.

said...

பேப்பருல எழுதுரதா சொல்லுறீக. எழுதி இந்தியா பேப்பருக்க்கும் அனுப்புறது. நாமெல்லாம் பாப்போமுல்ல.

திண்ணை http://www.thinnai.com/ இணையத்தளத்தில எழுதி போடுக. தமிழ்நாட்டு தமிழன் நிறையப்பேரு பார்ப்பாக.

said...

நிர்ஷன் வெறும் ஊடகத்துறை சார்ந்தவரல்லாமல் ஆசிரியப் பணியிலும் ஈடுபட்டுள்ளார். அறியாதவர்கள் சேவைகள் செய்யவில்லை என்று கூறலாம். ஆனால் எம்மைப்போன்ற அவருடன் நெருங்கிப் பழகுபவர்களுக்கு தெரியும்.

நிர்ஷன் சிறந்த மேடைப் பேச்சாளரும்கூட நடிப்புத் திறமையும் கொண்டவர்.

என்ன நிர்ஷன் இதையெல்லாம் சொல்லிட்டேன்னு கோபமா?
தயவு செய்து இதனை வெளியிடவும்.

said...

நன்றி காசிபாரதி.

அனுவின் கருத்துக்களால் நான் சுயதம்பட்டம் அடித்துக்கொள்வது போல இருப்பதாக காசிபாரதி தனது பின்னூட்டத்தில் குறிப்பிட்டிருக்கிறார். தயவு செய்து ஆரோக்கியமான விடயங்கள் பற்றி மட்டும்பேசுவோம்.

Anonymous said...

ண்பர் காசிபாரதி நிறைய பெசியிருந்தாலும் ஒன்றை உண்மையாக சொல்லியிருக்கிறார் நிர்ஷன்.
'''உண்மையச் சொன்னா மலையக மனுசக நம்ம தமிழ்நாட்டு மனுசகன்னு உங்கள் பதிவப் பார்த்து தானுக அறிஞ்சிக்கிட்டேனுக''''

இதிலிருந்து உங்கள் முயற்சி பலனளித்pருப்பதாக உணர்கிறேன். ஒரு சமூகம் சக சமூகம் தன்னைப்ப பற்றி அறிந்திருக்க வேண்டும் அக்கறைகொள்ள வேண்டும் என எண்ணுவது யதார்த்தமே. அந்த வகையில் உங்களின் வேண்டுகோள்கள் நியாயமானவையே நிர்ஷன். எல்லாவற்றையும் அனுபவித்து எழுதவேண்டுமெனில் நிர்ஷன் நீங்கள் இரு நு}ற்றாண்டுகளாக வாழவேண்டும்.அப்போது தான் நமது மக்கள் இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்;டது, திருப்பியனுப்பட்டது, இப்போது வாழ்வதாக அழிந்துகொண்டிருப்பது என எல்லாவற்றையும் அனுபவித்து எழுத முடியும். படித்தவைகளையும் படிக்காதவைகளையும் படிக்கப்பண்ணுகிறீர்கள் நிர்ஷன். வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பணி. மலையேறுவதுப்பற்றி யோசிக்காதீர்கள், படியேறுவதைப்பற்றி யோசியுங்கள். ஒருநாள் மலையில் நிற்போம்.

காசிபாரதிக்காக மீண்டும் ‘அமுதோனின்’ ஹைக்கூ ஒன்று

‘உற்றுப்பாருங்கள் தெரியும்
ஆற்றுமணல்கள் எழுதும்
அழகிய கவிதைகள்’

திலகர்

said...

திலகரின் பதிலுக்காகத்தான் காத்திருந்தேன். அன்பான பின்னூட்டத்துக்கு நன்றி திலகர். நான் பல பெயர்களைக் கொண்டு என் சுயதம்பட்டத்துக்காக பின்னூட்டம் இடுவதாக காசிபாரதி குற்றம்சுமத்தியிருந்தார். அத்துடன் வலைக்கலாசாரத்துக்கு ஒத்துவராத வகையிலான வார்த்தைப் பிரயோகங்களையும் பயன்படுத்தியிருந்தார் அதனால் அவரது பின்னூட்டங்களை மட்டுறுத்தினேன்.
கருத்துச்சுதந்திரம் இருக்க வேண்டும் என்பதற்காக அனைவரினதும் பின்னூட்டங்களை நான் ஏற்றுக்கொண்டேன். ஆனால் மோதவேண்டும் என்று கருத்துரைத்தலையும் எமது மக்களை கீழாக எண்ணுதலாலும் அவற்றை தவிர்க்க வேண்டி ஏற்பட்டது.

அடிமட்டத்திலிருந்து அடிபட்டுத்தான் வந்திருக்கிறோம். அடிமேல் அடித்தாலும் அசையாமல் நடப்போம்.

நன்றிகள் திலகர்.
காசி பாரதிக்கும் நன்றி.

Anonymous said...

http://podian.blogspot.com/2008/10/blog-post_25.html

read it and comment on it. there is no one to unveil the truth about malayagam.

said...

//Anonymous said...
http://podian.blogspot.com/2008/10/blog-post_25.html

read it and comment on it. there is no one to unveil the truth about malayagam.
//
நன்றி.
நிறைவானதொரு பின்னூட்டம் தரமுடியவில்லை. சில கருத்துக்கள் வேதனைதருகின்றன.