வன்னி மக்களுக்கு உதவுகிறார் அம்மாபகவான்

யுத்தம் எனும் கொடூர அரக்கனிடமும் கடத்தல் என்ற பிசாசிடமும் ஆகக்குறைந்தது தமது குடும்பத்தில் ஒருவரையேனும் இழந்துவிட்ட நம் மக்களின் துயரை அம்மாபகவான் முற்றாக நீக்கப்போகிறார்.

இதுபற்றி அவரது சீடர்களுக்கு கனவில் காட்சியளித்து கூறியிருக்கிறார்.

இந்த செய்தியுடன் கொழும்பிலிருந்து வன்னி,திருகோணமலை ஆகிய பகுதிகளுக்குச் செல்ல கொழும்புச் சீடர்கள் தயாராகிவிட்டார்கள். அதற்கான கூட்டம் அண்மையில் நடைபெற்றிருப்பது எனக்கு நேற்று தான் தெரியவந்தது.

நம்ம பாஷையில கதய சொல்றேன் -

அம்மா பகவான் சீடர்கள்னு சொல்லிக்கிட்டு இங்க பலபேர் சுத்துறாங்க. தீட்சை கொடுக்கிறதா சொல்லி பள்ளிப் பசங்களையும் வீணாக்கிய நெறய பேரோட கள்ளத்தனம் வெளிய கசிய தொடங்கிருக்கு.

இப்படி சீன் நடந்துக்கிட்டு இருக்கிற நேரம்,

கொழும்புல உள்ள தனவந்தரோட கனவுல (அவர் அம்மா பகவானின் சீடராம்) அம்மாபகவான் வந்திருக்காரு. அதுவும் காலையில 4 மணிக்காம்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு சமயம் பார்த்து உதவ இருப்பதாவும் தன்ன ஆழமா மனசுல நினைச்சு வழிபடுறவங்கள சீக்கிரம் சொந்த இடத்துக்கு அனுப்பி பணக்கார வாழ்க்கை வாழவைப்பதாவும் அம்மாபகவான் சொல்லியிருக்காரு.
அதுமட்டுமா, அந்த தனவந்தரோட தலைமையில சீடர் குழுவ நியமிச்சு தான் சொன்ன செய்திய மக்கள் காதுக்கு எட்டச் செய்யனும் னு வேற சொல்லியிருக்காரு.

மறுநாள் காலையில எழுந்ததும் தன்னோட சகவாசி(யர்)களுக்கு விசயத்த சொன்ன உடன எல்லாரும் ஆனந்தக் கண்ணீர் வடிச்சாங்களாம். பகவானோட உத்தரவு னு சொல்லித்தான் கூட்டம் நடந்திருக்கு.

காலம் போற போக்கப் பாருங்க….

சரி,
இதுவரைக்கும் வராத அம்மாபகவான் இப்போ எப்படி வந்தாரு?
பசி பட்டினியோட வாடும்போது இவர் எங்கே போனாரு?

ஆகட்டும்.
பிந்திக்கிடைச்ச செய்தியின் படி,
பாதிக்கப்பட்டவங்கள பார்க்கப்போற உறவினர்களோட சேர்ந்து இந்த சீடர்கள் போய் குருவின் உத்தரவை செயலில் காட்டப்போறாங்களாம்।

(இதுக்குப் பொருத்தமான பாட்டு ஒன்னு நினைவுக்கு வருது)

மிச்சம் சொச்சம் காதுக்கு எட்டியவுடன் சொல்றேன்.

30 comments:

Anonymous said...

இவனயெல்லாம் சாமினு கும்பிடுபோடும் நம்ம சனங்க என்னிக்குமே திருந்த மாட்டானுங்க.

said...

நிர்ஷன் சிரிப்புச் சிரிப்பா வருது.ஊர்ல எங்க வீட்லயும் இந்த நம்ப்பிக்கை இருக்கு.என்னென்னமோ எல்லாம் செய்றாங்க.அம்மா சாமி என்றி செலவு செய்து இந்தியாவுக்கும் போய் வந்தாங்க.இவர்களைப் போல இருக்கும் வரை இந்த ஆசாமிகளின் அட்டகாசம் இப்பிடித்தான் இருக்கும்.

மட்டக்களப்புப் பகுதியில் வான்முகிலில் அம்மன் தெரிந்ததாகவும் ஒரு செய்தி பார்த்தேன்.சரி அது அம்மனாகவே இருந்தால் எங்கள் நாட்டில் தெய்வங்கள் இன்னும் வாழ்வதாக அர்த்தம்.அப்போ அந்தத் தெய்வங்கள் எல்லாம் பொறுமையாக இத்தனை அட்டூழியங்களையும் ரசிச்சபடி இருக்கா என்ன !பிறகு அதுகளுக்கு ஏன் கடவுள் என்று பெயர் ?அப்போ சிங்களவனோடு கூடிகட்டி அடிக்குதோ தமிழனைத் தெய்வமும்.சீ....!

said...

போர் நடந்துகொண்டிருந்தபோது மக்களை உடனடியாக அழிவிலிருந்து காப்பாற்றி அதிசயம் செய்துகாட்டும்படியும், அதற்கான பிரார்த்தனைகளைச் செய்யும்படியும் இந்த அம்மா பகவான் அசிங்கத்தை நம்புபவர்களிடம் சவால் விடுத்தேன்.

அம்மா பகவான அரசியல் விசயத்தில் எல்லாம் தலையிட மாட்டாராம் என்று பதில் சொன்னார்கள்.

இந்த அம்மாபகவான் சோடியைப்பிடிச்சு நடு ரோட்டில் நிப்பாட்டி எல்லா ஏமாற்றுக்களையும் அம்பலப்படுத்தி ஆட்களிடம் பச்சைமட்டை அடி வாங்கிக்கொடுக்கணும்.

அப்பத்தான் எம் மக்களுக்கு நல்ல காலம் பிறக்கும்.

said...

கருத்துக்கு நன்றி அனானியாரே.

said...

ஹேமா,
அம்மாபகவான் ஒருபக்கம் கோடிக்கணக்கில் பணம் சேர்த்து சந்தோஷமாக இருக்கிறார். அவர் பெயரை வைத்து ஒரு கள்ளக்கூட்டமே மக்கள் வாழ்க்கையில் விளையாடுகிறது.

தன்னை வழிபடச்சொல்லி கேவலமான கொள்கையை பரப்பும் அம்மாபகவானுக்கு இது காலங் கடந்த ஞானமோ தெரியவில்லை.

இதுவும் நம்ம விதிதான் ஹேமா.

நன்றிங்கோ.

said...

இந்த உதவும் குணம் எல்லாம் அம்மா பகவான் வந்துதான் சொல்லவேணும் போல..என்ன கொடுமை இது..

said...

மயூரன்,
அம்மாபகவான் விடயம் உங்கள் வலைத்தளத்தில் நல்லவாதமாக உருவெடுத்திருந்தது. இங்கு நடக்கும் அக்கிரமங்களை நான் பின்னூட்டத்தில் சுட்டிக்காட்டியிருந்தேன்.

சுயஅறிவு இல்லாத கூட்டமொன்று அசிங்கம் நிறைந்த குழியில் தண்ணீர் குடிக்க ஓடிக்கொண்டிருக்கிறது. அதுவும் சும்மா இல்லை. இன்னும் பலரை இழுத்துக்கொண்டு.

இந்தக் கூட்டத்தை என்ன செய்யலாம் என நீங்கள் நினைக்கிறீர்கள்?


மனித உருவில் வாழ்ந்துகொண்டிருப்பவரை வேறு இடத்தில் எவ்வாறு ஆவாகனப்படுத்த முடியும் என்பதை யாராவது விளக்கமாக கூறுவார்களானால் நல்லது.

நன்றி மயூ.

said...

//Senthu VJ said...

இந்த உதவும் குணம் எல்லாம் அம்மா பகவான் வந்துதான் சொல்லவேணும் போல..என்ன கொடுமை இது..//

அந்தளவுக்கு யோசிப்பதற்கு அறிவிருந்தால் ஏன் நமக்கு இந்த நிலை????

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் நண்பரே.

said...

ஆஹா நிர்ஷன் அம்மாவுடன் விளையாடாதீர்கள். ஹிஹிஹி. மயூரனின் "அம்மா பகவான அரசியல் விசயத்தில் எல்லாம் தலையிட மாட்டாராம் என்று பதில் சொன்னார்கள்." வாசித்துச் சிரித்துவிட்டேன். அப்போ என்ன மண்ணாங்கட்டிக்கு அவர் சாமியாம்.

உந்த அம்மாபகவானை நேரில் பார்க்க 10000 இந்திய ரூபாய்கள் கொடுக்கவேண்டுமாம். நல்ல காசு சம்பாதிக்கத் தொடங்கிவிட்டார்கள்.

said...

எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே!!
நடக்கட்டும்; நடக்கட்டும்

said...

நல்ல பதிவு.
இந்த அம்மா பகவான்களின் தொல்லை தாங்க முடியல, எல்லாமே ஒரு விளம்பர பிரியம்தான். அம்மாபகவானை நேரில் பார்க்க செலவு செய்யும் நபர்கள் அந்த பணத்தை ஏழைமக்களுக்கு கொடுத்து உதவலாம் தானே?

said...

கடவுள் இருக்கிறாரோ இல்லையோ
தம் துன்பங்களை தீர்க்க எவரோ இருக்கின்றார் என்ற மக்களின் நம்பிக்கையை சுரண்டி வாழும் இந்த மாதிரியான அயோக்கியர்களுக்கு மு. மயூரன் சொன்ன அதே தண்டனைகளை வழி மொழிகிறேன்

said...

மக்களிடம் இருக்கிற கடவுள்
நம்பிக்கையைத் தங்களுக்குச்
சாதகமாக்கிற இப்படியான போலி
ஆசாமிகளை மொட்டை அடித்து
கரும்புள்ளி செம்புள்ளி குத்தி
கழுதையில் ஏற்றி விளக்கு
மாறால் அடித்துத்துரத்த
வேண்டும்.

said...

// வந்தியத்தேவன் said...

ஆஹா நிர்ஷன் அம்மாவுடன் விளையாடாதீர்கள். ஹிஹிஹி. மயூரனின் "அம்மா பகவான அரசியல் விசயத்தில் எல்லாம் தலையிட மாட்டாராம் என்று பதில் சொன்னார்கள்." வாசித்துச் சிரித்துவிட்டேன். அப்போ என்ன மண்ணாங்கட்டிக்கு அவர் சாமியாம்.

உந்த அம்மாபகவானை நேரில் பார்க்க 10000 இந்திய ரூபாய்கள் கொடுக்கவேண்டுமாம். நல்ல காசு சம்பாதிக்கத் தொடங்கிவிட்டார்கள்.//

பணம் தான் தற்போதைய தேவை என்பதை அவர்கள் நன்றாக உணர்ந்திருக்கிறார்கள். அவர்களுடைய பரம்பரைக்கே பணம் சேர்த்தாகிவிட்டது.

நன்றிங்கோ வந்தி.

said...

// யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே!!
நடக்கட்டும்; நடக்கட்டும்/

எனக்கு இந்தப்பாடல் தான் நினைவுக்கு வந்தது யோகன்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு எழுத்தில் சந்திக்கிறோம்.

நன்றி.

said...

//வேந்தன் said...

நல்ல பதிவு.
இந்த அம்மா பகவான்களின் தொல்லை தாங்க முடியல, எல்லாமே ஒரு விளம்பர பிரியம்தான். அம்மாபகவானை நேரில் பார்க்க செலவு செய்யும் நபர்கள் அந்த பணத்தை ஏழைமக்களுக்கு கொடுத்து உதவலாம் தானே?//

அதை உணர்ந்தால் என்ன செய்ய முடியாது வேந்தன். தமிழர்கள் தலையில் நன்றாக ...... அரைக்கலாம் என்பதை தெரிந்துவைத்திருக்கிறார்கள்.

நன்றி நண்பரே.

said...

// தர்ஷன் said...

கடவுள் இருக்கிறாரோ இல்லையோ
தம் துன்பங்களை தீர்க்க எவரோ இருக்கின்றார் என்ற மக்களின் நம்பிக்கையை சுரண்டி வாழும் இந்த மாதிரியான அயோக்கியர்களுக்கு மு. மயூரன் சொன்ன அதே தண்டனைகளை வழி மொழிகிறேன்//

அப்படிப்போடுங்க.

விரைவில் சந்திப்போம். நன்றி.

said...

// Thevesh said...

மக்களிடம் இருக்கிற கடவுள்
நம்பிக்கையைத் தங்களுக்குச்
சாதகமாக்கிற இப்படியான போலி
ஆசாமிகளை மொட்டை அடித்து
கரும்புள்ளி செம்புள்ளி குத்தி
கழுதையில் ஏற்றி விளக்கு
மாறால் அடித்துத்துரத்த
வேண்டும்.//

போகிற போக்கைப் பார்த்தால் அந்த நாள் வெகுதொலைவில் இல்லை எனத் தோன்றுகிறது.

நன்றி.

said...

அப்படியே இந்தப் பக்கமும் வாருங்கள்...
இவர்களின் கொடுமை தாங்க முடியவில்லை...
http://tamilgopi.blogspot.com/2009/09/blog-post_25.html

said...

அதனால் மக்களுக்கு எதாவது நல்லது நடக்குதா என்று பாருங்க. அப்படி நடந்தால் சந்தோஷம். இல்லை என்றால் சாடுங்கள்.

said...

??

said...

dashan.....

neeengalum oru amaibagagavanin seedarunu kelvipatooom....

ithil utpusal ethuvum ilaye...? LoL

said...

பணக்காரர் கனவுல மட்டும்தான் இந்த இன்ஸ்டண்ட் வருவார், அவர்களுக்கு மட்டுமே அருள் புரிவார்.

said...

// கனககோபி said...

அப்படியே இந்தப் பக்கமும் வாருங்கள்...
இவர்களின் கொடுமை தாங்க முடியவில்லை...
http://tamilgopi.blogspot.com/2009/09/blog-post_25.html//

பதில் தந்திருக்கிறேன்.

நன்றி கோபி.

said...

// செந்தழல் ரவி said...

அதனால் மக்களுக்கு எதாவது நல்லது நடக்குதா என்று பாருங்க. அப்படி நடந்தால் சந்தோஷம். இல்லை என்றால் சாடுங்கள்.//

நலமா? நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்திக்கிறோம்.

மக்கள் சுரண்டப்படுகிறார்கள் அவ்வளவுதான். பொறுத்திருந்து பார்க்கலாம்.

நன்றி

said...

// தமிழன்-கறுப்பி... said...

??/

வருகைக்கு நன்றி.

said...

// coolsham20 said...

dashan.....

neeengalum oru amaibagagavanin seedarunu kelvipatooom....

ithil utpusal ethuvum ilaye...? LoL//

ஆஹா... ஏன் இந்த கொல வெறி?

said...

// யோ வாய்ஸ் (யோகா) said...

பணக்காரர் கனவுல மட்டும்தான் இந்த இன்ஸ்டண்ட் வருவார், அவர்களுக்கு மட்டுமே அருள் புரிவார்.//

அவர் பணக்கார கடவுளாச்சே யோ.

வருகைக்கு நன்றி.

said...

மதத்தின் பெயரால் மக்களை ஏமாற்றிப் பிழைப்பு நடத்துவோரின் கபட நாடகங்களை வெளிக்கொண்டு வரவேண்டும் அதில் பதிவர்களின் பங்கும் அவசியம்...

said...

cool!very creative!AV,無碼,a片免費看,自拍貼圖,伊莉,微風論壇,成人聊天室,成人電影,成人文學,成人貼圖區,成人網站,一葉情貼圖片區,色情漫畫,言情小說,情色論壇,臺灣情色網,色情影片,色情,成人影城,080視訊聊天室,a片,A漫,h漫,麗的色遊戲,同志色教館,AV女優,SEX,咆哮小老鼠,85cc免費影片,正妹牆,ut聊天室,豆豆聊天室,聊天室,情色小說,aio,成人,微風成人,做愛,成人貼圖,18成人,嘟嘟成人網,aio交友愛情館,情色文學,色情小說,色情網站,情色,A片下載,嘟嘟情人色網,成人影片,成人圖片,成人文章,成人小說,成人漫畫,視訊聊天室,性愛,成人圖片區,性愛自拍,美女寫真,自拍