Tuesday, September 29, 2009

நான் படித்துக்கொண்டிருக்கிறேன்..!


நான் படித்துக்கொண்டிருக்கிறேன்…

ஊருக்கே ஒன்றென
ஒப்பாரி வைக்கும்
ரேடியோ

கையில் சிகரட்டோடும்
கசிப்பு போத்தலோடும்
வாசலில் அப்பா

எதிர்த்துப்பேச நாவில்லாமல்
வெற்றிலை தின்று
இடைவிடாமல்
காறித்துப்பும் அம்மா

பகல்முழுதும் கூத்தடித்து
பாதிப்போதையோடு
கதவைத் தட்டும் அண்ணா

உதவி ஒத்தாசையென்றுகூறி
ஓரமாய் ஒளிந்திருந்து
மாரை வெறித்துப்பார்க்கும் மாமா

இத்தனைக்கும் மத்தியில்…

நான் படித்துக்கொண்டிருக்கிறேன்…

மடியில் உட்காரச்சொல்லி
மல்லுக்கட்டும்
வாத்தியாரின் பாடங்களை!

-இராமானுஜம் நிர்ஷன்

21 comments:

Niranjan - K said...

nice lines niru.

valiyai sollum kavithai.

innum eludungo.

சினேகிதி said...

நல்லா இருக்கு கவிதை...படிப்புக்கு இப்படியான சிக்கல்கள் எப்பவும் இருக்கும்..

மாமா என்றால் யாரு? அம்மாவின் சகோதரரா?

மாதேவி said...

சிறுமியின் துயரத்தை சொல்லும் கருத்துள்ள கவிதை.

எத்தனையோ சிறுவர்களின் படிப்பு இவ்வாறான துயரங்களுடன்தான் தொடர்கிறது என்பது வேதனைக்குரியதே.

வேந்தன் said...

ம்ம்ம்....
எப்போதான் மாறும் இந்த கொடுமைகள்!

Admin said...

இன்று பல இடங்களில் நடக்கும் கொடுமைகள்தான் இது....

கவிதை அருமை.... வாழ்த்துக்கள்...

இறக்குவானை நிர்ஷன் said...

// Niranjan - K said...

nice lines niru.

valiyai sollum kavithai.

innum eludungo//

நன்றி நிரஞ்சன்

இறக்குவானை நிர்ஷன் said...

// சினேகிதி said...

நல்லா இருக்கு கவிதை...படிப்புக்கு இப்படியான சிக்கல்கள் எப்பவும் இருக்கும்..

மாமா என்றால் யாரு? அம்மாவின் சகோதரரா?//

அநேகமான சிறுவர்கள் படும் கஷ்டம் இது சினேகிதி.
வருகைக்கு நன்றி.

ஆமாம்.

இறக்குவானை நிர்ஷன் said...

// மாதேவி said...

சிறுமியின் துயரத்தை சொல்லும் கருத்துள்ள கவிதை.

எத்தனையோ சிறுவர்களின் படிப்பு இவ்வாறான துயரங்களுடன்தான் தொடர்கிறது என்பது வேதனைக்குரியதே.//

நம் விதி இது. மாற்றுவதற்கு நாமாக தானே முன்வரவேண்டும்.

நன்றிகள் பல உங்களுக்கு.

இறக்குவானை நிர்ஷன் said...

// வேந்தன் said...

ம்ம்ம்....
எப்போதான் மாறும் இந்த கொடுமைகள்!/

நன்றி வேந்தன்.
இப்போதைக்கு மாறும் என நான் நினைக்கவில்லை.

இறக்குவானை நிர்ஷன் said...

// சந்ரு said...

இன்று பல இடங்களில் நடக்கும் கொடுமைகள்தான் இது....

கவிதை அருமை.... வாழ்த்துக்கள்...//
நன்றி சந்ரு.

Unknown said...

//Blogger இறக்குவானை நிர்ஷன் said...

// வேந்தன் said...

ம்ம்ம்....
எப்போதான் மாறும் இந்த கொடுமைகள்!/

நன்றி வேந்தன்.
இப்போதைக்கு மாறும் என நான் நினைக்கவில்லை. //

இல்லை சகோதரா...
உங்களைப் போல் கொஞசப் பேர் இருந்து துணிவாகச் செயற்பட்டால் போதும்.
எனக்கு உங்களைப் போல் மலையகம் சார்ந்த எழுத்தாளர்கள் இப்போது பிரியமானவர்களாகிவிட்டார்கள்.
உங்கள் பகுதி அரசியல்வாதிகள் வெளிப்படையாகவே ஏமாற்றகிறார்கள் எனும் போது மனதிற்குள் ஆற்றா முடியா கோபம் வரும்.
குறிப்பாக அண்மையில் சம்பளப் பிரச்சினையில் நடந்ததை எண்ணி கவலையடைந்தேன்.
(மற்றைய பகுதி அரசியல்வாதிகள் உள்ளுக்குள் ஏமாற்றுவார்கள். )

தொடருங்கள் உங்கள் பணியை...

உங்களைப் போன்ற நல்ல இளைஞர்கள் தான் மலையக அரசியலுக்குத் தேவை.
அரசியலில் ஈடுபடாவிட்டாலும் அரசியலை எதிர்க்கவாவது தேவை...

அருமையான யதார்த்த கவிதை...

இறக்குவானை நிர்ஷன் said...

நன்றி கோபி.

வெளிப்படையாக சில விடயங்களை எழுதப்போய் தான் ஊடகத்தை தவிர்த்திருக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டேன்.

மலையக மக்கள் குறிப்பிட்டதொரு வாழ்க்கை வட்டத்தில் வாழ்ந்துவருகிறார்கள். அதனால் பல விடயங்கள் அவர்களுக்கு தெரியாமல் இருக்கிறது. அவர்களை அந்த நிலையிலேயே தக்க வைக்கத் தான் அரசியல்வாதிகளும் விரும்புகிறார்கள். இதுதான் நிலை.
உங்கள் ஆதரவோடு தொடர்ந்து போராடுவோம்.

சிறுவர்களை கொழும்புக்கு அழைத்துவந்து பாலியல் வன்முறைக்கு ஈடுபடுத்துவதும் சிறுநீரகங்களை சூரையாடுவதும் இன்னும் தொடர்கிறது. மேடையில் அரசியல்பேசும் எந்த நாயாவது எதிர்த்துக் கேட்கிறதா பாருங்கள்.

எல்லாம் பணம் செய்யும் வேலை கோபி.

கவிக்கிழவன் said...

கருத்துள்ள கவிதை

சுதா said...

எக்கச்சக்கமான ஆசிரியர்கள் இந்த வேலைய தான் செய்றானுங்க.
இவனுங்கள நடு ரோட்டில் வச்சு அடிக்கனும்.

இறக்குவானை நிர்ஷன் said...

// கவிக்கிழவன் said...

கருத்துள்ள கவிதை//

நன்றி கவிக்கிழவன்.

இறக்குவானை நிர்ஷன் said...

// சுதா said...

எக்கச்சக்கமான ஆசிரியர்கள் இந்த வேலைய தான் செய்றானுங்க.
இவனுங்கள நடு ரோட்டில் வச்சு அடிக்கனும்.//

வருகைக்கு நன்றி
செயற்படுத்துங்கள்

அ. நம்பி said...

சமுதாய விழிப்புணர்வு மட்டுமே குழந்தைகளின் நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் வளமாக்க வல்லது.

உள்ள நிலைமையைத் தெளிவாகச் சொல்லியுள்ளீர்கள்.

தொடர்ந்து எழுதுங்கள்.

Anonymous said...

அத்தனை பேரையும் வெட்டணும்..

இறக்குவானை நிர்ஷன் said...

// அ. நம்பி said...

சமுதாய விழிப்புணர்வு மட்டுமே குழந்தைகளின் நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் வளமாக்க வல்லது.

உள்ள நிலைமையைத் தெளிவாகச் சொல்லியுள்ளீர்கள்.

தொடர்ந்து எழுதுங்கள்.//

நன்றி நம்பி.
உங்கள் ஆதரவோடு தொடர்கிறேன்.

இறக்குவானை நிர்ஷன் said...

// ♥ தூயா ♥ Thooya ♥ said...

அத்தனை பேரையும் வெட்டணும்..//

நிச்சயமா து}யா.
பாவம் இந்தப் பிள்ளைகள். பிரச்சினைகளை சொல்லக்கூட யாருமில்லையே?

நன்றி

Shan Nalliah / GANDHIYIST said...

Organise Self.Help Groups to Help EACH OTHER/Discuss/Improve/Act ON education,economy,culture,safety etc. WE SHD START TAMIL SPEAKING PEOPLES PARTY TO UNITE & DEVELOPE ALL IN SL!