நட்சத்திர நாளில் சந்தோசமான செய்தி!

யாழ்தேவியின் நட்சத்திரப் பதிவராக தெரிவு செய்த அதன் நிர்வாகத்தினருக்கு நன்றிகள். இந்த நட்சத்திர நாளில் சந்தோசமான செய்தியொன்றை உங்களோடு பகிர்கிறேன். உங்களுடைய ஆக்கபூர்வமான கருத்துக்களை பின்னூட்டத்தினூடாக பகிர்ந்துகொள்ளுங்கள்.
................................................................................

பதிவுலக நண்பர்களுக்கு அன்பு வணக்கங்கள்,
வேகமாக இயங்கிக்கொண்டிருக்கும் உலகில் தகவல்களை உடனுக்குடன் வழங்குவதில் இணையத்தளங்கள், வலைத்தளங்கள் பிரதான பங்குவகிக்கின்றன. எழுத்துத் துறையில் சரியான களம் கிடைக்காத காத்திரமான நல்ல படைப்பாளிகள் இன்று தமது படைப்புகளை வலைத்தளங்களினூடாக வெளியிட்டு வருவது மகிழ்ச்சிக்குரியது.

அவ்வாறான எழுத்தாளர்களையும் வளரும் எழுத்தாளர்களையும் ஊக்குவிக்கும் முகமாக பதிவர்களின் ஆக்கங்களை வீரகேசரி இணையத்தளத்தில் பிரசுரிக்க அதன் ஆசிரியபீடம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக வெளிநாடுகளில், உள்நாட்டில் (கிடைக்கப்பெறாத) கலைத்துறை தொடர்பான தகவல்கள், நிகழ்வு விமர்சனங்கள், கட்டுரை ஆக்கங்கள், சினிமா விமர்சனங்கள், சுய படைப்புகள் என குறிப்பிட்ட சில வரையறைகளுக்குள் ஆக்கங்களை நீங்கள் எழுதக்கூடியதாக இருக்கும்.

உலகெங்கிலும் பரந்துவாழும் தமிழ்மக்களை இணையத்தினூடாக இணைப்பதற்கு இதன்மூலம் சந்தர்ப்பம் கிடைப்பதுடன்,ஆக்கங்கள் அனைத்தும் வரைமுறையன்றி அனைவரையும் சென்றடையக்கூடிய வாய்ப்பும் ஏற்படுவதுடன் சர்வதேச விருதுகளை பெற்றுக்கொள்ளவும் வாய்ப்பாக அமையும்.

தமிழுலகோடு கடந்த 79 வருடங்களாக இணைந்திருக்கும் வீரகேசரி, தனது இணையத்தளத்தினூடாக செம்மைத் தகவல்களை வழங்குவதற்காக புதிய திட்டமிடல்களை நடைமுறைப்படுத்தவுள்ளது.

அதன் ஓரங்கமாகவே இந்த முயற்சியும் மேற்கொள்ளப்படுகிறது.

உங்கள் அனைவரினதும் பதில்களும் விமர்சனங்களையும் எதிர்பார்க்கிறோம்.

அன்புடன்
ஆசிரியபீடம்
வீரகேசரி இணையம்
கொழும்பு
இலங்கை.

13 comments:

said...

திரும்பவுமா...
ஹா ஹா...
சும்மா சொன்னேன்...

நல்ல விடயம் தானே....
ஆசிரியர் பீடத்தின் முயற்சிக்கு வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்...

யாழ்தேவி நட்சத்திரப் பதிவரானமைக்கு எனது வாழ்த்துக்கள் அண்ணா....

said...

அப்படியோ.....நல்ல விடயம்தான் ஆனால் யாழ்ப்பாணத்திற்கு வீரகேசரி வருகுதோ தெரியல நான் வாசிச்சு வருசக்கணக்கு..

said...

நன்றி கோபி.
உங்களைப் போன்ற இளைஞர்களின் பங்களிப்பு அவசியம். தமிழுக்காக தமிழ்வளர்க்க ஒன்றிணைவோம்.

உங்களுடைய நகைப்பூட்டும் பதிவுகளை ஆர்வத்தோடு வரவேற்கிறேன்.
விரைவில் அறியத்தருகிறேன்.

said...

பாலவாசகன்,
கருத்துக்கு நன்றி. வீரகேசரி சற்றுத் தாமதமாகியே வருகிறது. ஏ9 வீதியைப் பற்றி உங்களுக்கு சொல்லவும் வேண்டுமா?

நேரம் கிடைக்கும்போது தொடர்புகொள்ளுங்கள். இணைந்து செயலாற்றுவோம்.

said...

நட்சத்திரத்திற்கு வாழ்த்துகள். வீரகேசரியின் முயற்சியை வரவேற்கிறேன்.

said...

தொடர்ச்சியா எழுதுங்கோ நிர்ஷன்.

said...

தொடர்ச்சியா எழுதுங்கோ நிர்ஷன்.

said...

யாழ்தேவி நட்சத்திர பதிவர் ஆனமைக்கு வாழ்த்துக்கள்
நல்ல சேதி வேறு சொல்லியிருக்கீர்கள் இந்த வாரம் பதிவை போட்டுத் தாக்குங்கள்

said...

முதலில் நட்சத்திர வாழ்த்துக்கள்.. :)
உங்கள் புதிய செம்மையான முயற்சிகளுக்கும்..

said...

நட்சத்திர வாழ்த்துக்கள் சகோதரா. உங்கள் முயற்சி திருவினையாக்கட்டும்

said...

நட்சத்திர பதிவருக்கு வாழ்த்துக்கள்,

பழம் பெரும் பத்திரிகையாக வீரகேசரிக்கும் எங்களது வணக்கங்கள், உங்களது முயற்சி சிறப்படைய வாழ்த்துக்கள்.

said...

யாழ்தேவி நட்சத்திரப் பதிவருக்கும் மற்றும் வீரகேசரியின் நன்முயற்சிக்கும் வாழ்த்துக்கள்.

said...

நட்சத்திரப் பதிவராக தேர்ந்தெடுக்கப் பட்டமைக்கு வாழ்த்துக்கள்