கந்தா…கண் திறந்து பார்..!

யுத்தத்தின் கோரப்பிடியிலிருந்து விலகி கொஞ்சம் கொஞ்சமாக வழமைக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறது யாழ். குடாநாட்டுச் சூழல். எங்கு பார்த்தாலும் தென்னிலங்கை சுற்றுலா வாசிகள் இயற்கை அழகை ரசித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தக் காட்சி மெய்சிலிர்க்க வைக்கின்றது எம்மை.

நாட்டைவிட்டு வெறொரு தனித் தீவுக்கு வந்துவிட்டதான ஆச்சரியம் அனைவரது கண்களிலும் நிறைந்திருக்கிறது.

குடாநாட்டின் தற்போதைய நிலவரத்தை வெளியுலகுக்கு எடுத்துக் காட்டுவதற்காக நாம் அங்கு சென்றிருந்தோம்...

'உயர் பாதுகாப்பு வலயம்' என்ற தடைவட்டம் நீக்கப்பட்டு மக்கள் பாவனைக்காக திறந்துவிடப்பட்ட மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயம்....உள்ளே சென்ற போது ஓர் ஆச்சரியம்....!.

ஈழத்தில் மிகவும் தொன்மையான ஆலயங்களில் மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயிலும் ஒன்றாகும். அங்கு எம்மை வரவேற்ற ஆலயத்தின் பெயர்ப்பலகையை எமது கமராவுக்குள் அடக்கிக் கொண்டோம்.


தமிழ்க் கடவுளாம் கந்தன் ஆலயத்தில் தமிழில் வரவேற்க ஒரு சொல் கூட அங்கிருக்கவில்லை.... வெறும் சிங்கள - ஆங்கில மொழிகளில் பெயர்ப்பலகை..... ஏமாற்றத்தின் விளிம்பில் நாம்.....!

தமிழ்மொழி இருட்டடிப்பு

தமிழர்கள் வாழும் பகுதியில், இந்துத் தெய்வத்தின் ஆலயத்தில் இப்படியொரு பெயர்ப்பலகை அவசியம் தானா என எண்ணத் தோன்றியது.

உண்மையில் இது இனவாதத்தை தூண்டுவதற்காகவோ இனவாதம் பேசுவதற்காகவோ எழுதப்படும் விடயமல்ல. மனதில் எழுந்த ஆதங்கத்தின் வெளிப்பாடு...

ஏனைய மொழிகள் பயன்படுத்தப்படுவதில் தவறில்லை. ஆனால்.....தமிழர்களுக்கே உரிய இடத்தில், தமிழ்மொழி மறு(றை)க்கப்பட்டதேன் என்பது தான் எமது கேள்வி.

இத்தனை நாள் இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்தபோதுதான் இந்த 'மறைப்பு' அரங்கேற்றப்பட்டிருக்கிறது.

ஓர் இனத்தை அழிப்பதற்குப் புதிதாக ஆயுதம் வாங்க வேண்டியதில்லை. அந்த இனம் பயன்படுத்தும் மொழியை அழித்தாலே போதும் என்பார்கள். மொழி இல்லையெனின் தமிழ், தமிழர்கள் என்ற அடையாளத்துக்கே இடமிருக்காது.

இவ்வாறான திட்டமிடப்பட்ட செயற்பாடுகளைத் தடுப்பதற்கு உரியவர்கள் நிச்சயம் நடவடிக்கை எடுக்கத்தான் வேண்டும். இது அவசியமானது...அவசரமானது.

அது சரி... இந்த ஆலயத்துக்கு இதுவரை தமிழ் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவருமே செல்லவில்லையா...? அவர்களின் கண்களுக்கு இந்தப் பெயர்ப் பலகை புலப்படவில்லையா...? ஒருவேளை கண்டும் காணாமல்.......

ஆலய வரலாறு


அது போகட்டும்...மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தைப் பற்றி அறிந்திராதவர்களுக்கு அது பற்றிய தகவலையும் சுருக்கமாக தருகிறோம்.

யாழ் - காங்கேசன்துறை வீதியில் சுமார் 9மைல் தொலைவில் உள்ளது மாவிட்டபுரம்.

சோழநாட்டு இளவரசி மாருதபுரவீகவள்ளிக்கு குதிரை முகம் இருந்துள்ளது. எங்கு தேடியும் அதனை மாற்றுவதற்கு மருந்து கிடைக்கவில்லை. மாவிட்டபுரத்துக்கு வந்து புனிதத் தீர்த்தத்தில் நீராடிய பின்னர் முருகன் அருளால் அவள் குதிரை முகம் நீங்கி அழகு பெற்றதாக வரலாறு கூறுகிறது.

மாவிட்டபுரம் ஆலயத்தில் எழுந்தருளியிருக்கும் முருகப்பெருமானை நூற்றாண்டு காலமாக பக்தியுடன் மக்கள் வழிபட்டு வருகின்றனர்.

வடக்கு எல்லையில் காங்கேசன் துறையையும் தெற்கு எல்லையில் தெல்லிப்பழையையும் கொண்டுள்ளதால் இவ்வூருக்கு சிறப்பு அதிகம்.

முருக பக்தரான மறைந்த கிருபானந்த வாரியார் இலங்கை வந்தபோதெல்லாம் ஒருமுறைகூட மாவிட்டபுரத்துக் கந்தனை தரிசிக்காமல் சென்றதில்லை என அவரே சொல்லியிருக்கின்றார். மாவிட்டபுரம் கந்தனின் அருளாட்சிக்கு இவரைவிட சான்றுபகர்பவர் வேறு எவராக இருக்க முடியும்?

-என். அஞ்சனா

7 comments:

said...

நல்ல பதிவு

said...

மாவிட்டபுரம் மாத்திரமல்ல கீரிமலைச் சிவனுடைய ஆலயமும் உயர் பாதுகாப்பு வலயத்தினுள் இருந்த காலம் தொடக்கம் படையினருடைய அல்லது பாதுகாப்பு அலுவலகத்தோடு ஆலய ஆதீன கர்த்தர்கள் நெருங்கிய தொடர்புகளைப் பேணியமையாலும் - ஆலயச் சூழல் முழுவதும் இராணுவம் இருப்பதன் காரணமாகவும் தமிழ் எழுதப்படாமல் இருக்கிறது.

அண்மையில் சிவராத்திரியின் போது நான் நல்லூரான்.கொம் இணைத்திருந்த youtubeஇல் பதிவுசெய்த கீரிமலைச் சிவன் கோவில் சம்பந்தமான Video பார்த்தேன். அதில் ஆலயத்தினுள் ஆண்கள் அனைவருமே மேல்சட்டை இல்லாமல் இருந்தார்கள். படையினர் கொழும்பு மற்றும் புலம்பெயர் தேசங்களில் ஆண்கள் இருப்பதுபோல் நடந்து கொள்கிறார்கள். நல்லூருக்குள் கொடுக்கும் மரியாதையை இங்கு ஏன் கொடுக்க மறுக்கிறார்கள் என்பதுதான் எனது ஆதங்கம்.

இந்து கலாசார அலுவல்கள் திணைக்களம் - இது சம்பந்தமாக ஏதாவது நடவடிக்கை எடுக்கலாம்தானே! கொஞ்சம் அவர்களுக்கு இந்த விடயத்தை சுட்டிக்காட்டுவது நல்லது!நாங்கள் சொல்லி களைத்துவிட்டோம். இனி வேறுயாராவது செய்யவேண்டும்.

said...

ஒன்றை மறந்துவிட்டேன்!

சிங்களத்தில் எழுதியிருப்பதையும் தமிழில் போட்டிருக்கலாம்தானே!

நாமக்கல் சிபிக்கு இந்தி தெரிந்திருக்கலாம்! ஆனால் கண்டிப்பாக சிங்களம் அவருக்குத் தெரிந்திருக்க முடியாது. அவருக்கு மட்டுமல்ல ஏனையோருக்கும். அதாவது அதன் அர்த்தத்தைப் போட்டால்தான் கதிர்காமத்திலிப்பவரை அவர்கள் அழைக்கும் முறை உலகுக்குத் தெரியும். முருகன் போரை முடித்தபிறகு கதிர்காமத்தில் வந்து அமர்ந்ததை அவர்கள் மாற்றி கதிர்காமத்திலிருந்து சில வேளை மாவிட்டபுரத்துக்கு வந்திருப்பார் என்ற புதுக் கதையையும் உருவாக்க யோசிக்கலாம். ஏனென்றால் இப்போ பலருக்கு தமிழ்க் கடவுளாக முருகன் இல்லை என்ற உண்மையும் தெரியவேண்டுமே!

சரி நான் விசயத்துக்கு வருகிறேன்

புராண கதறகம மகா தேவாலய - மாவிட்டபுரம். இதுதான் சிங்களத்தில் எழுதப்பட்டுள்ளது.

ஆங்கிலம் எல்லோருக்கும் தெரியும் தானே!

said...

கவலையான விடயம்

said...

www.tamilarkalblogs.com தமது இணையதளத்தினை அனைவருக்கும் அறிமுகப்படுத்தும் விதமாகவும் வலைப்பதிவாளர்களை ஊக்குவிக்கும் முகமாகவும் போட்டியொன்று நடாத்த திட்டமிட்டு உள்ளது. போட்டியில் வெற்றிபெறும் 10 பதிவர்களுக்கு 25 GB's of Space மற்றும் 1 Domain Name இலவசமாக வழங்கப்படும். மேலதிக விபரங்களுக்கு http://www.tamilarkalblogs.com/page.php?page=announcement இந்த இணைப்பினை பார்க்கவும்.

said...

வணக்கம்
நண்பர்களே

உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.
உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்

http://www.thalaivan.com

Hello

you can register in our website http://www.thalaivan.com and post your articles

install our voting button and get more visitors

Visit our website for more information http://www.thalaivan.com

said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in