கொழும்பு வெள்ளவத்தை தமிழ்ச்சங்கத்துக்கு கடந்த சனிக்கிழமையன்று போயிருந்தேன்। வாசிகசாலைக்கு அருகில் இரண்டு பெரியவர்கள் ( பார்ப்பதற்கு அப்படித்தான் தெரிந்தது) வலைத்தளங்கள் பற்றி உரையாடிக்கொண்டிருந்தார்கள்। தவறென்று தெரிந்தும் காதுகொடுத்தேன்।
இளைஞர்கள் தமிழ்ச்சங்க நிகழ்ச்சிகளுக்கு பெரும்பாலும் வருவதில்லை என்ற வாதத்தின் தொடர்ச்சியாக இப்படி பேசப்பட்டது.
ஒருவர் : இப்போ புதுசா வலைப்பதிவர் என்று ஒரு கூட்டம் அலையுது। என்ன வேலை செய்றியள் என்று கேட்டால் நான் புளொக் செய்றன் என்று பதில் சொல்லுதுகள்
மற்றவர்: சண்டே தினக்குரல் பார்க்கிறியளே॥ புதுசா வலைப்பதிவராம் என்று அரைப்பக்கத்தை வீணடிக்கினம்। சாமிய கண்டா( தினக்குரல் அதிபர்) கேட்கவேணும்। அவனவன் சுயநலத்துக்காக புளொக் என்று வச்சுக்கொள்றான்। அதை தம்பட்டம் அடிக்கிறதுக்கு மற்றொரு கூட்டம்॥
ஒருவர்: எல்லாம் பைத்தியங்கள்... வேலையில்லாம நெட் நெட் என்று கஃபே ல உட்கார்ந்திட்டு நெட்ல கொப்பி பண்ணி புது விஷயம்னு போடுதுகள்... முருகானந்தன் ட கொஞ்சம் பார்க்கலாம்...
இதுவரை தான் என்னால் கேட்க முடிந்தது. இதற்கு மேல் கேட்டால் நான் பதில் சொல்ல வேண்டிவரும் என்பதால் அங்கிருந்து வந்துவிட்டேன். இருந்தாலும் இவர்களுடைய உரையாடல் எனக்குள் இனம்புரியாத கவலையை பிரசவித்தது. வெள்ளை உடையில் தன்னைத் தூய்மையானவர்கள் எனக் காட்டிக்கொள்ளும் இவர்களா இப்படிப் பேசுகிறார்கள் என்றும் எண்ணத் தோன்றியது.
இலங்கை பதிவர்கள் பலர் எத்தனை சிரமத்துக்கு மத்தியில் பதிவிடுகிறார்கள் என்பது யாருக்கு புரியப் போகிறது? ( தமிழ்ச்சங்க நிகழ்ச்சிக்கு அடுத்த முறை சென்றால் அந்தப் பெரியவர்கள் யாரென்பதை அறிந்து பெயருடன் தர முயற்சிக்கிறேன்).
மற்றும் பதிவர்களை அறிமுகப்படுத்துவதில் ஒரு பத்திரிகை முந்திக்கொள்ள அதனை ஏற்றுக்கொள்ள மனமில்லாத மற்றை பத்திரிகை ஊடகவியலாளர் ஒருவர் தனிப்பட்ட ஒருவரை அறிமுகப்படுத்துவது ஊடகதர்மத்தை மீறும் செயல் என்று விளக்கம் கூறுகிறார்। இப்படியெல்லாம் நடக்கிறது பாருங்கள்...
என்னதான் இருந்தாலும் வலைப்பதிவர்கள் நாம் இணைந்து ஆரோக்கியமான மாற்றத்தை உண்டுபண்ணுவோம் என்பது மட்டும் உண்மை।
14 comments:
ஹா ஹா ஹா ...இது ஒன்றும் புதிய விடயமல்ல நிர்ஷன். இலங்கையிலே திரைப்படம், இசை, போன்ற கலைகள் வளர்ச்சி அடையாமல் போனதுக்கும் இவைதான் காரணம்.
வயசுபோன காலத்தில் மருந்துகளும் வியாதிக்களும்தான் அவர்களுக்கு பயனுள்ளவை என்பது எங்களுக்கும் தெரியும்தானே. மவுஸ் பிடிக்கதெரிந்தாலும் கொஞ்சம் தலைமுறை இடைவெளி இருக்கத்தானே செய்யும். இவையெல்லாம் கணக்கிலேடுத்தா ஒன்றுமே செய்ய இயலாது.
இதை வாசித்துவிட்டு உங்கள் இதற்கு முந்திய பதிவின் முதல் பந்தியையும் வாசிக்கவேணும் .......மிகவும் பொருத்தமாக இருக்கிறது
//
Paheerathan said...

நன்றி பகீரதன். நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. ஆனால் வயதானவர்கள் பலரிடம் இளைஞர்களை வழிப்படுத்தும் நோக்கம் இருப்தை நான் நிறையவே பார்த்திருக்கிறேன்.
வருகைக்கு நன்றி.
என்ன நிர்ஷன். நீண்ட நாளா பதிவொன்றையும் காணல?
யார் என்ன சொன்னாலும் என்ன? இலங்கை பதிவர்கள் தான் பத்திரிகையிலும் இடம்பிடித்துவிட்டார்களே?
//Bava said...
என்ன நிர்ஷன். நீண்ட நாளா பதிவொன்றையும் காணல?
யார் என்ன சொன்னாலும் என்ன? இலங்கை பதிவர்கள் தான் பத்திரிகையிலும் இடம்பிடித்துவிட்டார்களே?
//
வேலை அதிகம் பவா. அதான்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. பதிவர்கள் இன்னும் சாதிப்பார்கள்.
சிறிலங்காவிலிருந்து பதிவிடும் நண்பர்கள் பற்றி யாரும் எதுவும் கூறட்டும். நமக்கேன் என இருக்கலாம் தானே. எந்த விடயத்தைதான் எம்மவர்கள் செய்யவிட்டார்கள். வடக்கு கிழக்கு பிரச்சினையை எடுத்தால் கூட தமிழன்தானே காட்டிக்கொடுத்து துரோகம் செய்துகொண்டிருக்கிறான். இவ்வாறானவர்களால் எங்களது இலட்சியங்கள் பின்னடைவு ஏற்படுமே தவிர இலட்சியங்களை அடைய முடியாமல் போகாது.
ஏன் சில இந்திய பதிவர்கள் கூட இலங்கைப் பதிவர்களை புலிவேஷதாரிகள் என சுட்டிக்காட்டியதை நீங்கள் கவனித்ததில்லையா? மாயா,மயூரன்,மயூரன்,பகீ,கானாபிரபா,தாசன்,இறக்குவானை நிர்ஷன் ஆகியோர் எத்தனை தரமான விடயங்களை பதிவிட்டுக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய பதிவுகளிலுள்ள எந்த விடயமும் அவர்கள் தந்ததைப் போல ஊடகங்களில் வெளிவரவில்லையே?
-குக. நந்தகுமாரன்
யாழ்ப்பாணம்
கட்டாரிலிருந்து...
// இது ஒன்றும் புதிய விடயமல்ல நிர்ஷன். இலங்கையிலே திரைப்படம், இசை, போன்ற கலைகள் வளர்ச்சி அடையாமல் போனதுக்கும் இவைதான் காரணம்.//
வலைப்பதிவர் சந்திப்பு வைக்கப்போய் நடந்ததெல்லாம் தெரியும்தானே :9
//மாயா said...
வலைப்பதிவர் சந்திப்பு வைக்கப்போய் நடந்ததெல்லாம் தெரியும்தானே :9
//
ஆமாம் மாயா. அவர்களுடைய வார்த்தைகளைக் கேட்டதும் நாம் துவண்டுவிடவில்லையே. என்ன சொல்கிறீர்கள்? நாம் நிச்சயமாக சந்திப்போம்...
(ஒருமுறை அடிபட்டதே போதும் என நினைக்கிறீர்கள் போல?)
நிர்ஷான்
திட்டோ பாராட்டோ நாம் கவனிக்கப்படுகின்றோம் என்று டொமினிஜக் ஜீவா சொன்னது போல், நமது படைப்பை மேம்படுத்துவதில் கவனமெடுப்பதோடு இப்படியான வீண் குற்றச்சாட்டை ஒதுக்கி விடலாம்.
பதிவை வாசித்துக் கருத்துக் கொடுப்பவர்களைக் கவனிக்கலாம். அது தான் நமக்குத் தேவை.
//
கானா பிரபா said...

ஆமாம். நிச்சயமாக... பதிவை எழுதும்போதே நான் யோசித்தேன்.. நாங்கள் எந்தளவுக்கு கவனிக்கப்படுகிறோம் என்று...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பிரபா.

விடுங்கள் நிதர்ஷன்
போற்றுவார் போற்றட்டும் தூற்றுவார் தூற்றட்டும்
முருகானந்தனைப் புகழ்வதிலிருந்தே அவர்களது விமர்சனம் எல்லாம் சுயதேவை சார்ந்தது என்று தெரிகிறது
நாம் நமது பணியை நன்றாய்ச் செய்வோம்
இந்தச் சலசலப்புக்கெல்லாம் அஞ்சக் கூடாது
அன்புடன் தபோதரன் சுவீடன்
//
தபோதரன் said...

உண்மைதான் அண்ணா. பொறுத்திருந்து பார்ப்போம். வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் பல.
இவர்களின் பிற்போக்குவாத கருத்துக்கள் எம்மை ஒன்றும் செய்துவிடாது....
எம்மிடையே ஒற்றுமை இருக்கிறது.... நாம் தொடர்ந்து கலக்குவோம்....
Post a Comment