வால்பிடிக்கும் வாலாட்டிகள்...!

கொழும்பில் பெரும்புள்ளிகளுக்கு வால்பிடித்துத்திரியும் சில வாலாட்டிகள் தமது வால்புத்தியை ஏழை மக்களிடம் காட்டத்தொடங்கியிருக்கிறார்கள்।
கொழும்பில் ஏழைமக்களின் பிள்ளைகளுக்கு இத்தாலி வீசா எடுத்துத்தருவதாகக் கூறி இருவர் ஏமாற்று நடவடிக்கையில் ஈடுபட்டுவருவதாக பாதிக்கப்பட்ட குடும்பஸ்தர் கூறினார்। கொட்டாஞ்சேனை, வெள்ளவத்தைப் பகுதிகளில் இந்த வாலாட்டிகள் தமது ஏமாற்று வித்தைகளில் ஈடுபட்டுவருவதாகவும் தகவல் கிடைத்தது।
சிவகாமி என்பவர் வெள்ளவத்தையில் வசிக்கும் வயதான அம்மா। யுத்தத்தில் அனைத்தையுமே இழந்து வருமானமில்லாமல் வாடகை வீட்டில் தங்கியிருக்கும் இவர் தனது பேரனை வெளிநாட்டுக்கு அனுப்ப பெரும் பாடுபட்டுள்ளார்।
அவரது பேரன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு பெரும்புள்ளியொருவரின் உதவியால் விடுவிக்கப்பட்டுள்ளார்। அச்சந்தர்ப்பத்தில் அந்தப்பெரும்புள்ளியின் நெருங்கிய நபர் எனச்சொல்லிக்கொண்டவர் அந்த இளைஞரை வெளிநாட்டுக்கு அனுப்புவதாக வாக்குறுதி கொடுத்து பணம் வாங்கியுள்ளார்। இவர்களுடைய சந்திப்பு கொட்டாஞ்சேனைப் பகுதியிலுள்ள பிரபல உணவகத்தில் இடம்பெற்றுள்ளது।
ஒருமாத காலப்பகுதியில் ஐந்து இலட்சம் பணம்பெற்றுக்கொண்ட அந்த நபரை இப்போது தொடர்புகொள்ள முடிவதில்லை என கவலையுடன் கூறுகிறார் அந்த அம்மா।
யார் எப்படியென்றாலும் பரவாயில்லை தன்பிழைப்புக்கு பணம்கிடைத்தால் போதும் என இயங்கும் இவ்வாறான பூனை வேஷம்போட்ட நரிகளிடமிருந்து சம்பந்தப்பட்டவர்கள் தம்மை காப்பாற்றிக்கொள்ள வேண்டும்.

27 comments:

said...

என்ன ஒருவாரமாக பதிவினைக் காணவில்லை?

கொட்டாஞ்சேனையில் எங்கு சந்திப்பு இடம்பெறுகிறது என்பதை சொல்ல முடியுமா நிர்ஷன்?

said...

வாங்க பவா. கொஞ்சம் வேலை அதான்.
ஏன் இந்தக் கொலை வெறி. அதற்கான பதிலை உங்கட மின்னஞ்சலுக்கு அனுப்புகிறேன்.
வருகைக்கு நன்றி.

unmai thamizhan said...

பலே பலே...
நல்ல நல்ல்ல்ல நல்ல்ல்ல பதிவு...

said...

//unmai thamizhan said...
பலே பலே...
நல்ல நல்ல்ல்ல நல்ல்ல்ல பதிவு...
//

வருகைக்கு நன்றி தமிழன்.

said...

நம் மக்களா இப்படி செய்கிறார்கள்?

said...

//ஜோதிபாரதி said...
நம் மக்களா இப்படி செய்கிறார்கள்?
//

வேறுயார் ஜோதிபாரதி? யுத்த அவலத்தை தாங்கமுடியாமல் தவித்துக்கொண்டிருக்கும் தமிழர்களிடம் இரத்தத்தாகத்தை தணிக்கும் நோக்குடன் அலையும் அரசியல் ஒட்டுண்ணிகள் இவர்கள்.

Anonymous said...

யாராலும் இந்த சமுதாயத்தை திருத்த முடியாது. அதுவும் தமிழர்களை. முடிந்தால் முயற்சியுங்கள். நாங்களும் இதேபோல் வெறியுடன் ஒருகாலத்தில் திரிந்தவர்கள்தான்.

said...

//Anonymous said...
யாராலும் இந்த சமுதாயத்தை திருத்த முடியாது. அதுவும் தமிழர்களை. முடிந்தால் முயற்சியுங்கள். நாங்களும் இதேபோல் வெறியுடன் ஒருகாலத்தில் திரிந்தவர்கள்தான்.
//

முடிந்தவரை போராடுவோம் அனானியாரே. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

SRIKUGAN said...

வணக்கம். நான் யாழ்ப்பாணத்திலிருக்கிறேன். எனது நண்பர் ஒருவரும் இப்படி ஏமாற்றமடைந்து தற்போது தனியார் நிறுவனமொன்றில் விநியோகப்பிரிவில் தொழில்புரிகின்றார். நமக்கு நெருக்கமானவர்கள் தான் இவ்வாறானவர்களை அறிமுகப்படுத்துகிறார்கள். எந்தப்பத்திரிகையும் இவ்வாறான தகவல்களை பொதுமக்களுக்கு வழங்குவதில்லை. எனது நண்பரை இந்த வலைத்தளத்தினூடாக அறிமுகப்படுத்த முயற்சிக்கிறேன். இங்கு தொலைபேசி பாவனை பிரச்சினைகள் இருப்பதால் அவருடன் தொடர்புகொள்ள முடியாமல் இருக்கிறது.

said...

//SRIKUGAN said...

வணக்கம் குகன். எனது பதிவு ஓரளவேனும் வெற்றியடைந்துள்ளது என நினைக்கிறேன். குறிப்பாக வடக்கு கிழக்கு மக்கள் இவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள். நீங்கள் அறிந்தவர்களிடம் தகவல்களைப் பரிமாறுங்கள். அங்கு தொலைபேசிப்பிரச்சினை பற்றி நான் நன்கறிவேன்.எனது நண்பர்கள் படும் சிரமம் எனக்குத் தெரியும். உங்களுடைய நண்பரை தொடர்புகொள்ளச்சொல்லுங்கள். வருகைக்கு நன்றி குகன்.

said...

என்ன வந்தியத்தேவா?
ஒவ்வொரு முறையும் உன் வீரம் ஒவ்வொரு விதத்தில் வருகிறதே....

பலருக்கு தெரிவிக்கப்படாத உண்மையை வெளிக்கொணர்ந்திருக்கிறாய்.

இலங்கையில் எங்கையுமே தன் பிள்ளையை வைத்திருக்க முடியாது என்றெண்ணி பல பெற்றோர் அவர்களை எப்படியாவது ஒரு பாதுகாப்பான இடத்துக்கு அனுப்ப முற்படுகின்றனர். ஆனால் அதை அறிந்த பலர் தங்கள் குழியிலும் அவர்களை விழ வைக்கின்றனர். பொறுத்திருந்து பார்ப்போம் யார் இம்மக்களை தூக்கி விடுவர் என்று.

நிர்ஷன் நல்ல தலைப்பு.

said...

//Nitharshini said...

ஆமாம் நிது. பிறருடைய பலவீனத்தை சாதகமாகப் பயன்படுத்தி உடைந்த சுவற்றில் ஒருபிடி கிடைத்தாலும் போதும் என்ற கபட எண்ணத்துடன் வறுமையுடன் விளையாடும் இவர்களை மக்கள் தான் புரிந்துகொள்ள வேண்டும்.

//தலைப்புக்கு கொஞ்சம் யோசித்தேன். பெரிதாக வீரம் ஒன்றும் இல்லை. சமுதாயத்துக்காக கிறுக்கியது. அவ்வளவுதான். //

Anonymous said...

பேசாத வார்த்தை யாரையும் துன்புறுத்துவதில்லை
தொடர்மௌனமும் எதுவித பயனையும் தரப்போவதில்லை
கடமையை செய்வோம்
உரிமையை பெற்றுக்கொள்வோம்
தடையை தகர்த்தெறிவோம்-அது
மற்றவரின் தலையாய்இருந்தாலும்
பரவாயில்லை!

--------
இது உங்களுடைய கவிதை. யதார்த்தத்துக்கு ஒத்துவராது என நினைக்கிறேன். எவ்வளவுதான் முயற்சி செய்யுங்கள். என்னதான் சொல்லுங்கள். சமுதாயத்தை திருத்த முடியாது. கடைசியில் நாடற்றவர்களாக வெளிநாட்டில் வசிக்க வேண்டிவரும்.நீர் பலதும் பேசுகிறீர்.விழலுக்கிறைத்ததாக கவலைப்படுவீர்.

said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அனானியாரே.

Anonymous said...

கோபத்துடன் பதிலளிப்பீர் என நினைத்தேன். பரவாயில்லை.

said...

தவித்த முயல் அடிப்பது; இன்று நேற்றல்ல எப்போதிருந்தே நடக்கிறது. உள்ளூர் வேலையில் இருந்து
வெளிநாட்டுப் பயணம் வரை.
சொன்னால் நம்பமாட்டீர்கள். இன்று லண்டனில் பெரிய இந்து மத புரவலராகப் பவனிவரும் கொழும்புத்
தமிழர்.வீரகேசரியில் மாதம் ஒரு படமாவது அவர் பங்குபற்றும் நிகழ்வுகள் பளிச்சிடும்.
1986 ல் ;எனக்குத் தெரிந்தவர்களிடம்; 85 ஆயிரம் ரூபாவை லண்டனனுப்புவதாக ஏப்பம் விட்டவர்.
இன்னும் எத்தனை ஏப்பமோ?????
இப்போ கூட அவர் உப முகவர்கள் கொழுப்பில் இயங்கி ஏப்பம் விடுவதாக அறிகிறேன்.
இதை நம் பத்திரிகைகள் எதுவும் கண்டு கொள்ளாது.
தற்போது வீரகேசரியில் லண்டன் கல்லூரியில் கல்வி கற்கும் விசா என விளம்பரம் செய்து ஒரு கூட்டம்
சுமார் 30 ஆயிரம் வரை ஏப்பம் விடுகிறது.
ஏமாந்தவர்கள் வெளியே சொல்லாததால் ;இந்த வியாபாரம் அமர்க்களமாக நடக்கிறது.

said...

//என்ன வந்தியத்தேவா?
ஒவ்வொரு முறையும் உன் வீரம் ஒவ்வொரு விதத்தில் வருகிறதே...//.

வந்தியத்தேவனும் நீங்களா? ஒரே நேரத்தில் எப்படி இரண்டு வலைகளைவைத்துச் சமாளிக்கிறீர்கள்?

said...

//யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
தவித்த முயல் அடிப்பது; இன்று நேற்றல்ல எப்போதிருந்தே நடக்கிறது. உள்ளூர் வேலையில் இருந்து
வெளிநாட்டுப் பயணம் வரை.
சொன்னால் நம்பமாட்டீர்கள். இன்று லண்டனில் பெரிய இந்து மத புரவலராகப் பவனிவரும் கொழும்புத்
தமிழர்.........
//

உங்கள் வருகையால் பெருமிதம் கொள்கிறேன் யோகன்.
துணிச்சலாக கருத்துக்களை வெளியிட்டமைக்கு நன்றிகள். நீங்கள் குறிப்பிடும் நபர், நான் நினைக்கும் நபர் ஒருவரா என எனக்குத் தெரியாது. தகவல் தாருங்கள். பெயருடன் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவோம். எப்படியாயினும் விடயத்தை வெளிக்கொண்டுவர முயற்சிக்கிறேன்.பார்க்கச்சிறியதென்றாலும் அட்டை சுத்த சைவமல்ல என்பதைப் போல சிலர் முகமூடி போட்டுக்கொண்டு தமது கபடத்தனத்தை காட்டி வருகின்றனர். வெட்டவெளியில் சுட்டுத்தள்ள வேண்டியவர்கள் இவர்கள்தான்.
1986 முதல் இப்படியென்றால் ஏன் மக்கள் இன்னும் ஏமாறுகிறார்கள்?

said...

//
வித்யா said...
//என்ன வந்தியத்தேவா?
ஒவ்வொரு முறையும் உன் வீரம் ஒவ்வொரு விதத்தில் வருகிறதே...//.

வந்தியத்தேவனும் நீங்களா? ஒரே நேரத்தில் எப்படி இரண்டு வலைகளைவைத்துச் சமாளிக்கிறீர்கள்?
//

வாருங்கள் வித்யா.நலம்தானே?
வலைத்தளம் செய்யும் வந்தியத்தேவன் நானில்லை. என்னுடைய நண்பர்.
அன்புத்தோழி நிது என்னை இப்படி அழைப்பதுதான் வழக்கம்.

தொடர்பில் இருங்கள் வித்யா.

said...

Anonymous said...
கோபத்துடன் பதிலளிப்பீர் என நினைத்தேன். பரவாயில்லை.
//

எனக்கு கோபம் வரவில்லை அனானி ஐயா.

said...

'எரிகிற வீட்டில் பிடுங்கியவரை லாபம்'பழமொழியை நினைவு படுத்துகின்றன உங்கள் வரிகள் நிர்ஷன்.
அத்தனையும் உண்மை.எனக்குத்தெரிந்த நண்பனொருவர் இப்படித்தான் ஒரு பெண்ணால் ஏமாற்றப்பட்டார்.
அவர் கஷ்டப்பட்டு உழைத்த பணம்,பாஸ்போர்ட் அத்தனையும் இழந்து வீதியில் நின்றார்.
நண்பருக்கும் அப்பெண்ணுக்குமிடையிலான இறுதி உரையாடலை நண்பர் பெண் அறியாமல் ஒலிப்பதிவு செய்திருந்தார்.
அதை வைத்து நண்பர் அப்பெண் மீது வழக்குத் தொடர்ந்தார்.
இன்னும் கடந்த 4 வருடங்களாக வழக்கு நடந்துவருகிறது.நண்பருக்கு இன்னும் பணம் கிடைக்கவில்லை.அப்பெண்ணோ கொழும்பில் இன்றும் ஆட்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதாகச் சொல்லி ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்.

said...

//எம்.ரிஷான் ஷெரீப் said...
'எரிகிற வீட்டில் பிடுங்கியவரை லாபம்'பழமொழியை நினைவு படுத்துகின்றன உங்கள் வரிகள் நிர்ஷன்.
அத்தனையும் உண்மை.எனக்குத்தெரிந்த நண்பனொருவர் இப்படித்தான் ஒரு பெண்ணால் ஏமாற்றப்பட்டார்.
//
வருகைக்கு நன்றி ரிஷான். சிலரது பெயரையும் குறிப்பிட்டு அடாவடித்தனங்களை அம்பலப்படுத்தினால் தான் அடங்குவார்கள் போல.

said...

துணிச்சலாக வெளியே கூறும் உங்களைப் போன்றசிலர் கூட மூன்றாம் நபர் என்று குறிப்பிட்டு கூறும் நீங்கள் இவ்வாறு பேசுவது வேடிக்கையானது. இப்படி நீங்கள் பெயர் குறிப்பிடாமல் போடும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நீங்கள் அவர்களுக்கு சார்பானவர்கள் என்றே எண்ணத் தோன்றுகிறது. சமுதாயத்துக்காக இன்னல்களை வெளிக்கொண்டுவரும் நீங்கள் ,அவர்களின் முழுப்பெயர் தகவல்களை வெளியிட வேண்டும். அதுவே அவர்களுக்கு மிகப் பெரிய செய்தியாக அமையும்.

said...

வணக்கம் நிர்ஷன்
நலமா

உங்களையும் வெள்ளை வான் பிடித்து விட்டதோ என நினைத்தேன் உங்களை பற்றி நான் நன்பர் சொல்ல கேட்டிருக்கிறேன்.
பத்திரிகையில் இருக்கும் போது நல்லாத்தனே இருந்தீர்கள் எப்படி சுயநலவாதியாக மாறினீகள்?
ஒரு செய்தியை வலைத்தளத்தில வெளியிடும் போது பக்கச்சார்பாக வெளியிடுவது உங்கள் சுயநலத்தை காட்டுகிறது
நீங்கள் ஒருசிலருக்கு நன்றாகவே தாளம் போடுகிறீர்கள். அதிலும் பெண்கள் என்றால் சொல்லத் தேவையில்லை. இனியாவது சிந்தித்து நேர்மையாக செய்திகளை பிரசுரியுங்கள். (உங்களைப் பற்றி நான் அனைத்தும் அறிவேன்)

said...

//
k.d said...

வணக்கம் நான் நலம்.
ஆக்கபூர்வமான விமர்சனங்களை மட்டும் நான் வரவேற்கிறேன். எந்தவிதத்தில் நான் நேர்மையான செய்திகளை வெளியிடவில்லை என உங்களால் கூற முடியுமா? பெண்களுக்கு சார்பாக எப்போது நடந்துகொண்டேன் எனக் கூற முடியுமா? வார்த்தைகள் இருக்கிறதென்று எல்லா சந்தர்ப்பங்களிலும் உபயோகிக்க முடியாது. பின்னூட்டம்( கொமன்ட்ஸ்) களுக்கு கூட என்னுடைய அனுமதியின்றி பிரசுரமாகுவதற்குதான் வழிசெய்திருக்கிறேன். ஏனென்றால் கருத்துச்சுதந்திரம் வேண்டும் என்பதற்காக. உதாரணத்துடன் கதையுங்கள். இணையக் கலாசாராம் பாதிக்காதவாறு நானும் பதில்தரக்காத்திருக்கிறேன். ஏனென்றால் நான் யாருக்கும் காரணமின்றி பயம்கொள்வதில்லை.

said...

//1986 முதல் இப்படியென்றால் ஏன் மக்கள் இன்னும் ஏமாறுகிறார்கள்?//

நிர்ஷன் இதனைத்தான் இப்படிச் சொல்வார்கள் - ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்களும் இருப்பார்கள்.

said...

//
ஆ.கோகுலன் said...
//1986 முதல் இப்படியென்றால் ஏன் மக்கள் இன்னும் ஏமாறுகிறார்கள்?//

நிர்ஷன் இதனைத்தான் இப்படிச் சொல்வார்கள் - ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்களும் இருப்பார்கள்.
//

உண்மைதான் கோகுலன். வருகைக்கு நன்றி.