Friday, September 14, 2007

தலைவர்களிடம் வேண்டுகோள்

அத்தியாவசிய பொருட்கள் உட்பட அனைத்துப்பொருட்களின் விலைகளும் தொடர்ச்சியாக அதிகரித்து வருவதால் மலையக மக்கள் பெரும் பொருளாதாரச்சுமைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். வாழ்க்கைச்செலவு அதிகரித்த போதிலும் சம்பளத்தில் மாற்றமில்லாமல் இருக்கிறது.
முதலாளிமார் சம்மேளனத்துடன் நமது தலைவர்கள் செய்துகொண்ட ஒப்பந்தம் இச்சந்தர்ப்பத்தில் எந்த வகையில் மலையக மக்களுக்கு நன்மை பயக்கிறது என்பதை தலைவர்கள் மக்களுக்கு வெளிப்டுத்த வேண்டும்.
தொடர்மௌனம் காக்கும் மலையக மக்களை ஆசை காட்டி அடிவருடிகளாக்கிக்கொள்வதும் அவர்களுடைய பலவீனத்தை பயன்படுத்திக்கொள்வதுமாகவே இதுகாலமும் இருந்துவந்துள்ளது. எனினும் இவ்வாறான பிரச்சினைகளில் இனியும் விட்டுக்கொடுப்புடன் தம்நிலை அறியா பாமரர்களாக இருந்துவிடமுடியாது.
மலையக மக்கள் கடவுள் பக்திகொண்டவர்கள். எந்தப்பிரச்சினை வந்தாலும் தமது இஷ்ட,குல தெய்வங்களை மனதார பிரார்த்திக்கிறார்கள்.
அவர்களின் ஒட்டுமொத்த பிரார்த்தனையும் ஈடேறும் நாள் வரவேண்டும். அதற்காக உழைக்கவேண்டிய பொறுப்பு மலையக இளைஞர்களுக்கு உண்டு.
அதேவேளை மலையக தலைவர்கள் இனியாவது ஒரே குடையின் கீழ் இணைந்து சமுதாய முன்னேற்றத்துக்கு பாடபடவேண்டும் என்பதே மக்களது எதிர்பார்ப்பு.

2 comments:

Anonymous said...

இறக்குவானை நிர்ஷனுக்கு வணக்கம்.

தங்களுடைய ஊர் எங்கே இருக்கிறது? புதிய இணையப்பக்கத்தைப் பார்த்தேன். மலையகத் தலைவர்களுக்கு மக்கள் மீது அக்கறை இப்பதாக தெரியவில்லை. அப்படி உண்மையான அக்கறை இருந்தால் எப்போதோ மலையகம் மறுமலர்ச்சி கண்டிருக்கும். இளைஞர்கள் ஒன்று சேர்ந்துதான் இவ்வாறான செயற்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.
மீண்டும் சந்திப்போம்.
-சீலன்

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

//அதேவேளை மலையக தலைவர்கள் இனியாவது ஒரே குடையின் கீழ் இணைந்து சமுதாய முன்னேற்றத்துக்கு பாடபடவேண்டும் என்பதே மக்களது எதிர்பார்ப்பு.//

உடனே நடக்கவேண்டியது.