"தமிழனாய் பிறந்துவிட்டோமய்யா"

கொழும்பு கொட்டாஞ்சேனையில் கடந்த சனிக்கிழமை மாலை இடம்பெற்ற சம்பவம் இது। ஆலயத்துக்கு சென்று திரும்பிக்கொண்டிருக்கையில் ஜிந்துப்பிட்டி சந்திக்கருகில் ஐந்து பொலிஸாரும் இரண்டு இராணுவத்தினரும் இணைந்து வயதான அம்மாவை அதட்டி விசாரித்துக்கொண்டிருந்தனர்।

எனது நடையின் வேகத்தைக் குறைத்து என்ன நடக்கிறது எனப் பார்த்த போது எத்தனை பிள்ளைகள் புலிகள் இயக்கத்தில் இருக்கின்றனர் என சிங்களத்தில் அவர்கள் கேட்க பாஷை தெரியாத அம்மா அழாத குறையாக தடுமாறினார்।

அவரிடமிருந்த பையை வாங்கிய அவர்கள் அதிலிருந்த துணிகளை எல்லாம் எடுத்துக் கீழே போட்டு துருவி ஆராய்ந்தனர்। சற்று நேரத்தில் அவர்கள் அங்கிருந்து சென்றவுடன் அந்த அம்மாவிடம் சென்று நடந்ததை விசாரித்தேன்।

கொட்டும் மழையில் அதிகமாய் நனைந்துவிட்ட துணிகளை எடுத்து பையில் திணித்தவாறு பதில் சொன்னார்॥ "தமிழனாய் பிறந்துவிட்டோமய்யா"

தான் தங்கியிருந்த லொட்ஜை தேடமுடியாததால் தான் இத்தனை சிரமம்।
கொலை செய்யும் குற்றத்துக்கு சமனாக வார்த்தைகளால் காயப்படுத்தும் படையினர் சிலரின் நடவடிக்கையை யாரும் கண்டுகொள்ளாதது ஏன்? அரசாங்கத்தில் அங்கம் வகித்து தமிழ்விரோதத்துக்கு துணைபோகும் தமிழ் அமைச்சர்கள் சிலர் வாய்திறந்து பதில் சொல்வார்களா?

9 comments:

Amalan said...

nirshan,
nalama? enna idu thamil arasiyalvadigala thappa solladinga. avanga makkalukkaga maru pakkam maarubavargal..
(sorry.. thamil font illa)

நண்பன் said...

"தமிழனாய் பிறந்துவிட்டோமய்யா"

said...

ஹற்றன் அமலனா? எங்கே போயிருந்தீர்கள் இவ்வளவு காலமும்?
தமிழ் அரசியல்வாதிகளை கிண்டலடிக்காதீங்க அமலன்.

said...

வருகைக்கு நன்றி நண்பன்.

அப்பாவித் தமிழன் said...

தமிழ் அமைச்சர்கள் எல்லாம் தங்கள் குடும்பத்தைப்பார்க்கவே நேரம் இருக்கு இதிலெல்லாம் அவர்களுக்கு எங்கே நேரம், அதிலும் சந்திரசேகரன், தொண்டமான் எல்லாம் மனிதர்களே அல்ல, ஈனப்பிறவிகள், எளிய நாய்கள் என்றால் இவர்கள் தான். இன்னொரு தமிழ் அமைச்சர் இருக்கிறார் அவரைப் பற்றிக் கதைத்தால் வீணை வாசித்துவிடுவார்கள். ஆனந்த சங்கரிக்கு நாம் எல்லாம் தமிழர்கள் அல்ல.

said...

நிர்ஷன்,
எங்கள் தமிழ் அமைச்சர்களுக்கு தேர்தலின்போது தான் "தமிழனைத்" தெரியும். அதுவும் சில அமைச்சர்கள் அப்போது தான் தமிழில் கதைப்பார்கள். அவர்களைப்போய் வாய் திறந்து பதில் சொல்வார்களா எனக் கேட்டிருக்கிறீர்களே......

நிர்ஷன்,கடைசியில் நீங்கள் சரி அந்த அம்மாவுக்கு லொட்ஜை தேட உதவி செய்தீர்களா?

said...

// Nitharshini said...
நிர்ஷன்,
எங்கள் தமிழ் அமைச்சர்களுக்கு தேர்தலின்போது தான் "தமிழனைத்" தெரியும். அதுவும் சில அமைச்சர்கள் அப்போது தான் தமிழில் கதைப்பார்கள். அவர்களைப்போய் வாய் திறந்து பதில் சொல்வார்களா எனக் கேட்டிருக்கிறீர்களே......

நிர்ஷன்,கடைசியில் நீங்கள் சரி அந்த அம்மாவுக்கு லொட்ஜை தேட உதவி செய்தீர்களா?
//

உண்மைதான் நிது. சாதரணமாக அவசரகாலச் சட்டத்தைப் பற்றியே வாய்திறவாதவர்கள் எப்படி இதைப்பற்றியெல்லாம் கதைக்கப்போகிறார்கள். ஆனால் வரலாற்றுத்தவறுக்கான காலத்தின் ஏட்டில் இவர்கள் பெயர் நிச்சயமாக செதுக்கப்பட்டிருக்கும்.

ஆமாம் நிது. கதிரேசன் வீதியிலுள்ள லொட்ஜ். பாதை காட்டிவிட்டேன்.

said...

what if that woman was a bra bomber?

said...

//வெத்து வேட்டு said...
what if that woman was a bra bomber?
//
வருக வெத்து வேட்டு. எனக்குத் தெரிந்தவரையில் ஓர் அப்பாவித்தனமும் சோகத்தவிப்பும் அவரது முகத்தில் தெரிந்தது. இப்படியாயிருக்க வாய்ப்புக்கள் குறைவு.