கோயிலுக்குள் மாடு வெட்டப்பட்டது... சிலைகளில் இரத்தம்!!!

இலங்கை மட்டக்களப்பு ஆரையம்பதியில் இனவெறிகொண்ட விஷமிகள் சிலர் ஆரையம்பதி நரசிம்மர் ஆலயத்தில் மாடு வெட்டி இரத்தத்தை கடவுள் சிலைகளில் ஊற்றியிருக்கின்றனர்। மாட்டின் உடல் பாகங்கள் கோயிலுக்குள் அங்காங்கே வீசப்பட்டுள்ளன।

ஆரையம்பதி செல்வநகர் பள்ளிவாசலுக்கருகில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் முஸ்லிம்கள் மூவர் துப்பாக்கிப் பிரயோகத்துக்கு உள்ளாகியுள்ளனர்। யார் இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்பதை அறியாத சிலர் இதுவரை மூடி மறைத்து வந்த தமது இனவெறியை இவ்வாறு காட்டியுள்ளனர்। கும்பாபிஷேகத்துக்கு தயாராக இருந்த ஆலயத்தில் இவ்வாறு இடம்பெற்றுள்ளது। தமிழ் மக்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நேற்று ஹர்த்தால் இடம்பெற்ற போதிலும் இதுவரை சம்பந்தப்பட்டவர்கள் இனங்காணப்படவில்லை।

இதற்கு முஸ்லிம் அரசியல்வாதியொருவர் துணைபோனதாயும் நம்பத்தகுந்த தகவல் தெரிவித்தது। உண்மை தெரிந்தும் தமிழ் ஊடகங்கள் இதனை வெளிப்படையாக குறிப்பிடாதது வருத்தம் தருகிறது। தனது மதத்தை நேசிக்கும் எந்த மதத்தினனும் இதனை ஏற்றுக்கொள்ள மாட்டான்।
யுத்தத்தால் உரிமைகள் ஒருபுறம் சிதைக்கப்பட மறுபக்கம் மனதாலும் தமிழர்கள் புண்படுத்தப்படுகின்றனர்। யார் தீர்வினைத் தரப்போகிறார்கள்? வழமைபோல இந்துகலாசார அமைச்சும் இந்து நிறுவனங்களும் மெளம் சாதிக்கப் போகின்றனவா?

16 comments:

said...

நிர்ஷன்,
இன்றைய இலங்கையில் எந்த சமயத்தினரது ஆலயத்திற்குள்ளும் ஒரு மனிதன் கொலை செய்யப்படும் போது கைகட்டி வாய் மூடி நிற்கிறார்கள் பலர். அவர்களா கோயிலுக்குள் மாடு வெட்டப்பட்டதை கேள்வி கேட்கவோ அல்லது அதற்கான மாற்றீடு நடவடிக்கையையோ எடுக்கப் போகிறார்கள்????

நிர்ஷன், இன்று பலருக்கு தன்னுயிர் போல் பிறனையும் நேசி என்பதை செயற்படுத்த கற்றுக்கொடுக்க வேண்டும். நீங்கள் நினைக்கிறீர்களா அப்படி கற்றுக்கொடுத்தால் இவை நிறுத்தப்படும் என்று?????

இனி என்றுமே இவை கேள்விக்குறி தான்.

ஆனால் நிர்ஷன் இவற்றுக்கெல்லாம் ஒரே ஒரு உண்மை இருக்கு ---
"The mills of God grind slow but sure"

said...

*துணிவான கருத்துக்கள்
ஈவு இரக்கமற்ற,மிலேச்சத்தனமான சிலரின் செயல் இது. ஒரு மதத்தை இழிவுபடுத்த முயல்பவன் தனது மதத்தை தாழ்த்திக்கொள்கிறான்.

said...

//
Nitharshini said...
நிர்ஷன்,
இன்றைய இலங்கையில் எந்த சமயத்தினரது ஆலயத்திற்குள்ளும் ஒரு மனிதன் கொலை செய்யப்படும் போது கைகட்டி வாய் மூடி நிற்கிறார்கள் பலர். அவர்களா கோயிலுக்குள் மாடு வெட்டப்பட்டதை கேள்வி கேட்கவோ அல்லது அதற்கான மாற்றீடு நடவடிக்கையையோ எடுக்கப் போகிறார்கள்????

இனி என்றுமே இவை கேள்விக்குறி தான்.

ஆனால் நிர்ஷன் இவற்றுக்கெல்லாம் ஒரே ஒரு உண்மை இருக்கு ---
"The mills of God grind slow but sure"
//

உண்மைதான் நிதர்ஷினி. நல்லதொரு கேள்வி கேட்டிருக்கிறீர்கள். மெளனிகளுக்கு நீங்கள் கொடுத்துள்ள வார்த்தை அடி வாய்திறக்கவைக்கும்.

said...

//Bava said...

ஈவு இரக்கமற்ற,மிலேச்சத்தனமான சிலரின் செயல் இது. ஒரு மதத்தை இழிவுபடுத்த முயல்பவன் தனது மதத்தை தாழ்த்திக்கொள்கிறான்.
//

சரியாகச் சொன்னீர்கள் பவா. வருகைக்கு நன்றி

Anonymous said...

மட்டக்களப்பு.... மலையகமா?

said...

நமக்கு மிகுந்த வேதனையை அளிக்கக்கூடிய செயலாக இருக்கிறது.
யார் இதை செய்திருந்தாலும் தண்டிக்கப்படவேண்டும்.
குருதிப்புனல் படத்தில் கமலஹாசன் சொல்லும் ஒரு வசனம் ஞாபகத்துக்கு வருகிறது. அதை இங்கே எழுத விரும்பவில்லை.(மற்றவர்களை புண் படுத்தக் கூடாது என்பதில் நாம் உறுதியாக இருக்கிறோம்) படம் இருந்தால் போட்டுப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

அன்புடன்,
ஜோதிபாரதி.

said...

// Anonymous said...
மட்டக்களப்பு.... மலையகமா?
//

இல்லை கிழக்குமாகாணம் தான். நீங்கள் பெயரைக் குறிப்பிடாமல் கேட்கும் கேள்வி விளங்குகிறது. புதிய மலையகம் என பெயரிட்டிருந்தாலும் சமூக விரோதங்கள் நடைபெறும் போது சுட்டிக்காட்டத்தானே வேண்டும்.

said...

//ஜோதிபாரதி said...
நமக்கு மிகுந்த வேதனையை அளிக்கக்கூடிய செயலாக இருக்கிறது.
யார் இதை செய்திருந்தாலும் தண்டிக்கப்படவேண்டும்.
குருதிப்புனல் படத்தில் கமலஹாசன் சொல்லும் ஒரு வசனம் ஞாபகத்துக்கு வருகிறது. அதை இங்கே எழுத விரும்பவில்லை.(மற்றவர்களை புண் படுத்தக் கூடாது என்பதில் நாம் உறுதியாக இருக்கிறோம்) படம் இருந்தால் போட்டுப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

அன்புடன்,
ஜோதிபாரதி.
//

என்ன செய்வது ஜோதிபாரதி? சில அக்கிரமங்களைத்தடுக்க சம்பந்தப்பட்டவர்களே உணரவேண்டும். அந்த வசனத்தை சொல்லுங்களேன்.

said...

very good blog congratulations
regard from Catalonia Spain
thank you

said...

இது ஒரு மதத்தினரின் மனதைப் புண்படுத்துவதற்காகச் செய்யப்பட்டிருக்கும் காரியம். எனவே கண்டிக்கத் தகுந்தது என்று கொள்ளலாம்.

அதே நேரத்தில், கோயில் சிலையின் மீது இரத்தம் பட்டதால் அதன் புனிதம் கெட்டுவிட்டது என்று நீங்கள் நம்பவைக்கப் பட்டிருக்கிறீர்கள் என்பது இன்னொரு உண்மை. ஆடு, மாடு, கோழி என்று காவு கொடுக்கும் வழக்கம், இறைச்சியை இறைவனுக்குப் படைக்கும் வழக்கம் என்பது ஒரு பழங்குடி முறை. இன்றும் நிலவுகிறது, எங்கே என்றால், மேல்சாதீயம் இன்னும் புகாத கோயில்களில். (இவ்விடத்தில் பிராணிவதையை எதிர்த்த ஒரு சமூகமும் அக்காலத்தில் இருந்திருக்கும் என்பதையும் நான் ஏற்றுக் கொள்கிறேன்). ஆக, இரத்தம், கிடா வெட்டுதல், மாடு தின்றல் என்பவை காட்டுமிராண்டித்தனமான, அசுத்தமான ஒன்றாக உங்கள் மீது திணிக்கப்பட்டிருக்கிறது என்று நான் சொல்லலாமா?
இன்றைய நிலையில் மனித இரத்தம் சிந்துவது முதலில் நிற்கவேண்டும்!

said...

Té la mà Maria - Reus said...
very good blog congratulations
//

thanks a lot...

said...

//
சுந்தரவடிவேல் said...
இது ஒரு மதத்தினரின் மனதைப் புண்படுத்துவதற்காகச் செய்யப்பட்டிருக்கும் காரியம். எனவே கண்டிக்கத் தகுந்தது என்று கொள்ளலாம்.

அதே நேரத்தில், கோயில் சிலையின் மீது இரத்தம் பட்டதால் அதன் புனிதம் கெட்டுவிட்டது என்று நீங்கள் நம்பவைக்கப் பட்டிருக்கிறீர்கள் என்பது இன்னொரு உண்மை.
....................

இன்றைய நிலையில் மனித இரத்தம் சிந்துவது முதலில் நிற்கவேண்டும்!
//

வருகைக்கு நன்றி சுந்தரவடிவேல். எந்தவகையிலும் உயிர்க்கொலையை இந்துமதம் ஏற்றுக்கொள்ளவில்லை. கிராமிய வழிபாட்டு முறை ஆகமம் சாராத முறை என்பதால் அதுவே இந்துசமயத்தின் கோட்பாடு என எடுத்தல் தவறு. மற்றும் பசுவை தெய்வமாக போற்றும் இந்துக் கோயிலுக்குள் நடந்த துர்விடயம் நீங்கள் சொன்னது போல கண்டிக்கத்தக்கதே.

இன்றைய நிலையில் மனித இரத்தம் சிந்துவது முதலில் நிற்கவேண்டும்! என நீங்கள் சொன்னதை முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன். நன்றி.

said...

நிர்ஷன்!
இனக்கலவரத்தையோ; மதக்கலவரத்தையோ தூண்ட சிலர் திட்டமிட்டு இந்த இழிசெயலைச் செய்துள்ளார்கள்.
ஆனால் இதற்கு இடம் தராது இந்துப் பெருமக்கள் அமைதி காப்பார்கள் என நம்புகிறேன்.

said...

//யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
நிர்ஷன்!
இனக்கலவரத்தையோ; மதக்கலவரத்தையோ தூண்ட சிலர் திட்டமிட்டு இந்த இழிசெயலைச் செய்துள்ளார்கள்.
ஆனால் இதற்கு இடம் தராது இந்துப் பெருமக்கள் அமைதி காப்பார்கள் என நம்புகிறேன்.
//

நிச்சயமாக யோகன். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. ஏன் இவ்வளவு நாட்களாக தொடர்புகொள்ளவில்லை?

said...

//தனது மதத்தை நேசிக்கும் எந்த மதத்தினனும் இதனை ஏற்றுக்கொள்ள மாட்டான்।//

இதில் எனக்கு முரண்பாடு உண்டு நண்பரே!
மனிதன் மதத்தை நேசிப்பதை விட மனிதத்தை நேசித்தால் உலகில் எங்கும் சண்டை இராது,

பக்கத்து வீட்டில் இருக்கும் முஷல்மானை நாம் வெறுப்பதில்லை, ஆனால் பாகிஸ்தானில் இருக்கும் முஸ்லீம் நமக்கு எதிரீ!
ஏனென்றால் பக்கதிலிருப்பவன் மனிதன், தூரதிலிருபவனை எதிரியாக பார்க்கிறது நமது மதம், ஆகவே இவ்விசயத்தில் மக்கள் பொறுமை காத்து இந்த தவறுகளை செய்த விசமிகளை மட்டுமே தண்டிக்க வேண்டுமே தவிர, இதை ஒரு மத உணர்வு போராட்டமாக மாற்றி இரு மதத்தாரும் சண்டை போட்டு கொள்ள கூடாது என்பது என் வேண்டுகோள்

வால்பையன்

said...

//வால்பையன் said...

உங்களை மகிழ்வுடன் வரவேற்கிறேன். இந்தப் பதிவை நான் மத உணர்வோடு எழுதவில்லை. நீங்கள் சொன்ன கருத்தை நான் முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன். எந்த மதமும் மற்ற மதத்தை இழிவுபடுத்த வேண்டும் என வலியுறுத்தவில்லையே. அதுதான்...

உங்களுடைய மின்னஞ்சலைத் தரவில்லையே வால்பையன்?