சின்னத்திரைகளில் ஒளிபரப்பாகிவரும் தொடர்நாடகங்கள் பல பிரதிகூலமான விளைவுகள் ஏற்படுத்தி வருவதை பலரும் பல்வேறு வகையில் தெளிவுபடுத்தி வந்தனர்। இந்நிலையில் அவர்களின் கூற்றை உண்மையாக்கும் முகமாக சிறுமியொருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்।
தொலைக்காட்சி நாடகத்தில் இடம்பெற்ற தற்கொலைக்காட்சியை பார்த்துவிட்டு அதேபோல் தானும் முயற்சி செய்து சிறுமி தற்கொலை செய்துள்ளார். இச்சம்பவம் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை இலங்கை,கொழும்பு பாலத்துறை பகுதியிலுள்ள 12 ஆம் இலக்கத் தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது।ரிகாசா (வயது 12) என்ற முஸ்லிம் சிறுமியே இச்சம்பவத்தில் இறந்தவராவார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,சம்பவ தினமான சனிக்கிழமை மேற்படி சிறுமியின் பெற்றோர் தொழில் நிமித்தம் வெளியில் சென்றுள்ளனர். தனது பாட்டியுடன் வீட்டிலிருந்த சிறுமி வீட்டின் மேல்மாடியிலுள்ள தனது அறையில் விளையாடிக்கொண்டிருந்துள்ளார். அப்போது மாலை 4.30 மணியளவில் அங்குவந்த, சிறுமியின் மச்சாள் முறையான மற்றொறு சிறுமி மேல்மாடியின் அறைக்குச்சென்று பார்த்தபோது, குறித்த சிறுமி கழுத்தில் சுருக்கிடப்பட்ட நிலையில் கூரைக்கம்பியில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார். இதனைப் பார்த்த மற்ற சிறுமி, அச்சத்தில் அலறியவாறு பாட்டியிடம் ஓடிச்சென்று கூறியுள்ளார். உடனடியாக சிறுமி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோதும் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். சம்பவம் குறித்து கிராண்ட்பாஸ் பொலிஸார் விசாரணைகளைமேற்கொண்டு வருகின்றனர்.கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஒளிபரப்பான தொலைக்காட்சி நாடகமொன்றில் பெண்ணொருவர் சேலையினால் கழுத்தில் சுருக்கிட்டுக்கொண்டு தற்கொலைக்கு முயற்சிப்பதைப்போன்ற காட்சி படமாக்கப்பட்டிருந்ததாகவும் அதைப்பார்த்த குறித்த சிறுமி விளையாட்டுத்தனமாக அதேபோன்று செய்து பார்க்க முயற்சித்தவேளையே இவ்வாறு உயிரிழந்திருக்கலாம் என்றும் சந்தேகம் தெரிவிக்கப்படுகிறது. சிறுமி தான் அணிந்திருந்த துப்பட்டாவின் ஒரு பகுதியை சிறிய மேசையொன்றின் மேல் ஏறி தாழ்வாகக் காணப்படும் கூரைக்கம்பில் கட்டி மற்றைய பகுதியை தனது கழுத்தில் கட்டிக்கொண்டு மேசையிலிருந்து குதித்ததினாலேயே கழுத்துப்பகுதி இறுகி சிறுமி உயிரிழந்திருப்பதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குறித்து சிறுமியின் பாட்டியிடமும் சிறுமி தூக்கில் தொங்கியதை முதலில் கண்ட சிறுமியிடமும் பொலிஸார் வாக்குமூலங்களைப் பெற்றுள்ளனர். சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை கிராண்ட்பாஸ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.சம்பவத்தை நேரில் கண்ட பயந்த நிலையில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது।
பெண்களை மையப்படுத்தியே சில தொடர்நாடகங்கள் இயக்கப்படுகின்றன। குடும்பச்சச்சரவுகளில் பெண்களே வில்லிகளாக சித்தரிக்கப்படுகின்றனர்। இதனால் வீடுகளில் தாய்மார்களைக் கூட பிள்ளைகள் எதிரியாகவே பார்க்கின்றனர் என்றால் தயாரிப்பாளர்கள் நம்பமாட்டார்கள்। நண்பரின் உறவினர் ஒருவரது வீட்டில் நடந்த சம்பவம் இது,
தாயார் சற்று தாமதமாக வர மகன் தாயைப்பார்த்துக் கூறுகிறான் இப்படி, எங்கடி அவனபார்க்கவா போயிட்டு வார?அவன் சோறுபோட்டு வளர்ந்த உடம்பா இது? எனக் கேட்டுள்ளான்। இதற்குக்காரணம் என்னவென்றால் இந்த வசனம் அப்போதுதான் தொலைக்காட்சி நாடகமொன்றில் ஒளிபரப்பாயுள்ளது। அதில் தாமதமாகிவரும் மனைவியைப் பார்த்துக் கணவன் கேட்கும் இக்கேள்வியை இங்கு மகன் கேட்கிறான்। இவ்வாறு நிறையவே சம்பவங்கள் உள்ளன। எதிர்மறை விடயங்களை காட்டுவதால் சிறுபிள்ளைகள் நியாயத்திலிருந்து விடுபட்டுச் செல்கிறார்கள்। அவ்வாறே இந்தச்சிறுமியின் உயிரும் பிரிந்துள்ளது। இதற்கு யார் பதில்சொல்லப்போகிறார்கள்???
32 comments:
சமுகத்தின் எதோ ஒரு முலையில் நடப்பதைத்தான் நாடகமாக எடுப்பதாக கூறிக்கொள்பவர்கள்,சிலர் மட்டும் செய்யும் தவறை உலகமே செய்ய துண்டுகின்றனர்.
//காண்டீபன் said...
சமுகத்தின் எதோ ஒரு முலையில் நடப்பதைத்தான் நாடகமாக எடுப்பதாக கூறிக்கொள்பவர்கள்,சிலர் மட்டும் செய்யும் தவறை உலகமே செய்ய துண்டுகின்றனர்.
//
உண்மைதான் காண்டீபன். அவர்கள் புரிந்துகொண்டால் சரி...
வருகைக்கு நன்றி.
சோகமானதொரு நிகழ்வு :(
தொலைக்காட்சிகளுக்கு தணிக்கை தேவை, பெற்றோருக்கு இன்னும் அதிக கடைமை உணர்வு தேவை என்பதற்கு இன்னும் வலிமை சேர்க்கும் நிகழ்ச்சி.
//தஞ்சாவூரான் said...
சோகமானதொரு நிகழ்வு :(
தொலைக்காட்சிகளுக்கு தணிக்கை தேவை, பெற்றோருக்கு இன்னும் அதிக கடைமை உணர்வு தேவை என்பதற்கு இன்னும் வலிமை சேர்க்கும் நிகழ்ச்சி.
//
வாருங்கள் தஞ்சாவூரான். சில பெற்றோருக்கு சாப்பாடு இல்லாவிட்டாலும் சீரியல் வேண்டும்.பிள்ளைகளின் கல்வியில்கூட கவனம் செலுத்துவதில்லை. டீவியைப் பார்த்து அழுதுகொண்டிருப்பதுதான் அவர்களுடைய பொழுதுபோக்கு. நீங்கள் சொல்வது போல இது நல்ல பாடம்தான்.
எந்தவொரு பயனுமற்ற,அபத்தமான தொலைக்காட்சித் தொடர்களால் உயிரிழக்கும் சம்பவம் இது முதன்முறையல்ல.
பிஞ்சுகளின் மனதில் நஞ்சை மட்டுமே விதைக்கும் இது போன்ற தொடர்கள் நிறுத்தப்படும் காலத்தில் தான் வீடுகளிலும்,மனங்களிலும் அமைதி நிலவும்.
நடைமுறைக்குச் சாத்தியமில்லாத வில்லங்கங்களோடு கூடிய தொடர்களை சிறுவயதிலிருந்து தொடர்ச்சியாகப் பார்த்து வரும் ஒருவரது செயல்களும் பின்னாட்களில் அதே வக்கிரங்கங்களைச் செய்துபார்க்கத் தூண்டிக்கொண்டே இருக்கும்.
சந்தர்ப்பம் வாய்க்கையில் அது வெளிப்படும்.அவரது பரம்பரைக்கே இது பெரும் கேடாக அமையும் சாத்தியங்களும் நிறைய உண்டு.
இன்றைய 98% வீதமான தொடர்கள் மனித மனங்களின் கருணையைக் குழி தோண்டிப் புதைத்து வருகின்றன.
ஒவ்வொருவரும் இதயத்தில் சுடுகாட்டைச் சுமந்தலைய வைக்கின்றன இத்தொடர்கள்.
சம்பந்தப்பட்ட நிகழ்வில் சிறுமியை மட்டும் குற்றம் சொல்லமுடியாது.
வீட்டில் தொடர்ச்சியாகப் பார்த்து வரும் மற்ற உறுப்பினர்களும் இதற்குப் பதில் சொல்லியாக வேண்டும்.
இதுபோன்ற நிகழ்வு இதுவே இறுதியாக இருக்கவேண்டும்.
உங்கள் பதிவு சிறந்த பதிவு நிர்ஷன்.
தொடரட்டும் உங்கள் பணி நண்பா :)
நான் ஒரு இயக்கம் தொடங்கி, இந்த மெகா சீரியல்களை இயக்குபவர்களை எல்லாம் ஒழித்துக்கட்டி, உலகத்திலிருந்து அம்மை நோயை இல்லாதொழித்தது போல இந்த கலாசாரத்தையும் நீக்குகிறேன் என பல முறை கனவு கண்டிருக்கிறேன். அவ்வளவு வெறுப்பு இதன்மேல்.
இது ஒன்றும் சினிமாவால் வந்து கனவு என எண்ணாதீர்கள். நான் சினிமா பார்ப்பது குறைவு. ஓரிரு கமலஹாசன் படங்களோடு சரி.
எனது அம்மாவிடம் கூறியிருக்கிறேன். எனக்குப் பெண்பார்க்கும்போது முதலில் இந்த சீரியல்கள் பார்க்காத பெண்ணாகப் பாருங்கோ எனறு. திருமணமே இல்லாம இருக்கப் போறனோ என்ற பயம்வேறு உள்ளது
// எம்.ரிஷான் ஷெரீப் said...
எந்தவொரு பயனுமற்ற,அபத்தமான தொலைக்காட்சித் தொடர்களால் உயிரிழக்கும் சம்பவம் இது முதன்முறையல்ல.
பிஞ்சுகளின் மனதில் நஞ்சை மட்டுமே விதைக்கும் இது போன்ற தொடர்கள் நிறுத்தப்படும் காலத்தில் தான் வீடுகளிலும்,மனங்களிலும் அமைதி நிலவும்..........................//
ரிஷான், இந்த மெகாசீரியலினால் எத்தனை குடும்பத்தில் பிரச்சினைகள் ஏற்பட்டிருக்கிறது தெரியுமா? சில குடும்பப் பெண்கள் வீட்டுப்பிரச்சினைக்கு மெகா சீரியலில் போல தீர்வுகாண முயற்சிப்பதாலும் விளைவுகள் அதிகரிக்கின்றன. வயதுவந்தவர்கள் முதலில் திருந்த வேண்டுமே ரிஷான்.
//கௌபாய்மது said...
நான் ஒரு இயக்கம் தொடங்கி, இந்த மெகா சீரியல்களை இயக்குபவர்களை எல்லாம் ஒழித்துக்கட்டி, உலகத்திலிருந்து அம்மை நோயை இல்லாதொழித்தது போல இந்த கலாசாரத்தையும் நீக்குகிறேன் என பல முறை கனவு கண்டிருக்கிறேன். அவ்வளவு வெறுப்பு இதன்மேல்.
இது ஒன்றும் சினிமாவால் வந்து கனவு என எண்ணாதீர்கள். நான் சினிமா பார்ப்பது குறைவு. ஓரிரு கமலஹாசன் படங்களோடு சரி.
எனது அம்மாவிடம் கூறியிருக்கிறேன். எனக்குப் பெண்பார்க்கும்போது முதலில் இந்த சீரியல்கள் பார்க்காத பெண்ணாகப் பாருங்கோ எனறு. திருமணமே இல்லாம இருக்கப் போறனோ என்ற பயம்வேறு உள்ளது
//
வருக மது. மெகாசீரியல் பார்க்காத பெண்களை தேடிப்பிடிப்பது சிரமம்தான். நானும் உங்களைப் போலவே மெகாசீரியல்களில் வெறுப்பு கொண்டவன். ஒரே அழுகையும் அந்த அழுகையை தீர்ப்பதற்காக மற்றவர்களை பழிவாங்குவதும் திருட்டு,கபடத்தனம்,புன்படுத்தல் போன்றவையே இறுதியில் ஜெயிப்பதாகவும் சித்தரிக்கும் சின்னத்திரைகள் அவசியம்தானா என பல சந்தர்ப்பங்களில் விவாதித்திருக்கிறோம். இதனைத் தடுப்பதற்கு வழியில்லை என்றுதான் நினைக்கிறேன். ஏனென்றால் நம்ம தாய்க்குலம்தான் தண்ணீர் இல்லாவிட்டாலும் சீரியல் போதும் என்றிருப்பார்களே??
(எனக்கும் அப்படியொரு பெண் இருந்தால் சொல்லுங்க)
Hai Nirsan,
Inru tholaikatchi enbathu thollaikatchi agi vittathu,
Tholaikatchigalileye muluneramum poluthai kalikkum petrorgal muthalil unara vindum thanathu pillaigal hethanai parkka vendum hethanai parkka kudathu henpathai ethai unarathavarai hemathu samugaththin heluchi henpathu ?????????????
Arasaggam hethethatko thanikkai kondu vanthullathu hen evvarana samugaththai viparithaggalai konduvarum nigalchigalukku thanikkai konduvaravendum.
evvarana sampavaggalukku karanama nigalchigal thodarpaga thodarnthu aluththaggalai kodukka vendum.
uggalathu muyatchikku henathu valthukkal.
thodarnthu heluthuggal ok
Ka.Ponmalar,
வாருங்கள் மலர்,
நீண்ட நாட்களுக்குப் பிறகு. உங்களுடைய கட்டுரைகளை பத்திரிகை வாயிலாக படித்து மகிழ்கிறேன்.
சில எதிர்மாறான விடயங்கள் நடந்த பின்னர்தான் பலருக்கு அதன் விபரீதம் புரிகிறது. இப்போதும் பலருக்கு புரிந்திருக்கும் என நினைக்கிறேன்.
நன்றி மலர்.
நிர்ஷன்,
சமுதாயத்தை சீரழிக்கவென்று ஒரு கூட்டம் அலைகிறது பார்த்தீர்களா? சீரியல்களில் எத்தனை நல்ல விடயங்களை தரலாம். நாடி ஜோசியம் பற்றி ஒளிபரப்பாகும் தொடர்நாடகம் எந்தளவுக்கு வரவேற்பைப் பெற்றது? அதில் எத்தனை புதிய விடயங்கள் கூறப்பட்டன? இப்போது வெறும் பெண்களின் பெயர்களில் கதை தயாரித்து பெண்களையே மாற்று நடத்தையுள்ளவர்களாக சித்தரித்து கேவலமான வார்த்தைகளைப் புகுத்தி சீரியல் வியாபாரம் தானே நடக்கிறது. நீங்கள் எவ்வளவு எழுதினாலும் எமது பெண்கள் மாறுவார்கள் என நான் நினைக்கவில்லை நிர்ஷன். சீரியலில் வரும் பிரதான கதாப்பாத்திரமாக தன்னையும் நினைத்து அவள் சிரிக்கும்போது சிரிப்பதும் அழும்போது அழுவதுமாக உலகை மறந்து இருப்போர் எத்தனை பேர்?
மிக மிக வருத்தமான விசயம். :((
பாரதி சொன்னது போல் தொலைகாட்சிகள் தொல்லைகாட்சியாக மாறிவிட்டன.. மனித முன்னேற்ற கருவி ஒன்று மனித அழிவிற்கு காரணமாகிவிட்டது...நாடகத்தை போல் வாழ்க்கையின் நடப்பு என்பது கேவலமான ஒன்று...
:-((((((((((((((
//Bava said...
நிர்ஷன்,
சமுதாயத்தை சீரழிக்கவென்று ஒரு கூட்டம் அலைகிறது பார்த்தீர்களா? சீரியல்களில் எத்தனை நல்ல விடயங்களை தரலாம். நாடி ஜோசியம் பற்றி ஒளிபரப்பாகும் தொடர்நாடகம் எந்தளவுக்கு வரவேற்பைப் பெற்றது? அதில் எத்தனை புதிய விடயங்கள் கூறப்பட்டன?
//
சிலர் சமுதாயத்தைப் பற்றிச் சிந்திக்கிறார்கள். சிலர் வியாபாரத்தைப் பற்றிச் சிந்திக்கிறார்கள்.
நன்றி பவா.
//ganesh said...
பாரதி சொன்னது போல் தொலைகாட்சிகள் தொல்லைகாட்சியாக மாறிவிட்டன.. மனித முன்னேற்ற கருவி ஒன்று மனித அழிவிற்கு காரணமாகிவிட்டது...நாடகத்தை போல் வாழ்க்கையின் நடப்பு என்பது கேவலமான ஒன்று...
//
வாருங்கள் கணேஷ். மனித முன்னேற்றக் கருவியொன்று மனித அழிவிற்குக் காரணமாகிவிட்டது என்பது அருமையாக இருக்கிறது. சில விடயங்களை கையாள்வதில் எம்மவர்கள் அதிகம் தவறிழைக்கிறார்கள்.
//ச்சின்னப் பையன் said...
:-((((((((((((((
//
நலமா ச்சின்னப் பையன்? உங்கள் மெளனமொழி புரிகிறது. வருகைக்கு நன்றி.
:-)
வருத்தமாக இருக்கிறது..
சீரியல்கள் படுத்தும் பாடு என்பதை விட அவற்றால் இவர்கள் படும் பாடுதான் பெரியது..மனப்பக்குவம் உள்ள பெரியவர்களே இவற்றால் ஆட்டுவிக்கப்படும்போது சிறுவர்கள் எம்மாத்திரம்.
//பாச மலர் said...
வருத்தமாக இருக்கிறது..
சீரியல்கள் படுத்தும் பாடு என்பதை விட அவற்றால் இவர்கள் படும் பாடுதான் பெரியது..மனப்பக்குவம் உள்ள பெரியவர்களே இவற்றால் ஆட்டுவிக்கப்படும்போது சிறுவர்கள் எம்மாத்திரம்.
//
பெரியவர்கள் தான் இப்போது மோசமாக இருக்கிறார்கள் மலர்.
வருகைக்கு நன்றிகள்.
Nirshan...
unmaiyil intha mathiri TV serials..avoid panna venum. ithu poondra Tv serials than manithaneen veelchukku karanam..ithai ariyatha emathu tamil samuthayam. TV seriallil muulgi kidakurathu..ulagam engo kandu pidipukalil sendru kondu irruka....emathu tamil samuthayam maatum yen inum TV serial endu inum irrukaango??????
//Gobi said...
Nirshan...
unmaiyil intha mathiri TV serials..avoid panna venum. ithu poondra Tv serials than manithaneen veelchukku karanam..ithai ariyatha emathu tamil samuthayam. TV seriallil muulgi kidakurathu..ulagam engo kandu pidipukalil sendru kondu irruka....emathu tamil samuthayam maatum yen inum TV serial endu inum irrukaango??????
//
கோபி அண்ணா உங்களை மதிப்புடன் வரவேற்கிறேன். நலம்தானே?
உலகம் இலட்சியப்பாதையில் நடக்க நாமோ சீரியலில் மூழ்கிக்கிடக்கிறோம் என்பதை தமிழர்கள் புரிந்துகொள்ளும் காலம் வெகுதூரத்தில் இல்லை. இதனால் என்ன பயன் என தமக்குத்தானே கேட்பார்களாயின் ஒரு முடிவு கிடைக்கும்.
வீரகேசரியில் உள்ள உங்களுடைய நண்பர்தான் கீழ்த்தரமான கொமன்ட்ஸ்களை இடுகிறார்.
-நண்பன்.
Nn, ithu drama edupavarhalin pirachinaiyalla... TV Channels in pirachinai. avarhal Telecast panna thayarai irupathal than intha nilai. Media samuthayathuku theemaiyum seiyum enbathatku avai utharanamai irukindrana.
Cowboy & Nn, neengal ungal veetil ullavarhalaiyum.... ungaluku therintha pengalai mathiramey pesuhireerhal. indru 30 vayathitku metpatta pengalum 16 vayathitku keelpatta pengalum than drama paarthukondirukirarhal. En angal TV drama paarpathillaiya? enna avarhalellarum Grand Master thana Parthukondirukirarhal.
unagaluku Thahuthiyana Pengal kidaikavillai enbathatkaga... Ella pengalum Drama paarpavarhala edai podavendam. indraiya ilam pengaluku ethanai velaihal irukirathu seiya. avarhalellam ippadi neengal solvathu pol TV yil amarnthirupathillai. Athu ninaivirukatum Iruvarukum. Be careful.
என்ன நிர்சன்? நிதர்சனி நெத்தியடி அடிச்சிட்டாங்க?
Athu ninaivirukatum Iruvarukum. Be careful.
வேலையில குறியாயிருக்கிற பொண்ணுங்க சீரியல் பாக்க மாட்டாங்கனு சொல்ல முடியாது. நெறையபேர் பாக்குறாங்க. அதிலயும் விதிவிலக்கானவங்களும் இருக்காங்க. ஆனா பொதுவா என்ன பொருத்தவரயில சீரியல் சமுதாயத்த நாசமாக்கும் கிறது உண்ம.
எனக்கும் இந்த மெகா சீரியல்களையும் அதற்காக அடிபடுபவர்களையும் கண்டால் பிடிக்கவே பிடிக்காது . சமூகத்தை சீரழிக்கும் ஒரு யதார்த்தமே இல்லாத இந்த நாடகங்கள் ஒருவகை போதை வஸ்த்துக்களே.
மிகவும் வருந்த தக்க சம்பவம். செய்தி அறிக்கையில் ".......... தேடல்" போடும் அந்த தொலைக்காட்சியினர் இதையும் தேடி போடலாமே
நிர்ஷன்!
இந்த மெகா சீரியல் பார்ப்பது, பலருக்கு
போதைக்கடிமையான நிலை போல்.
இப்படியான சம்பவங்கள் அவர்களை
மாறவைக்குமா??எனத் தெரியவில்லை.
இதே வேளை இதைத் தயாரிப்பவர்கள் இதை நிறுத்துவார்களா?? அதுவும் நடக்காது.
நல்ல நேர்மையான தணிக்கைக் குழு வேண்டும். அது நமது நாடுகளில் நடக்கும் விடயமா?
எனவே பணத்துக்காக எவர் எப்படிப் போனாலும் என நினைக்கும் சமுதாயத்தில் உங்கள் எங்கள் ஏக்கங்கள் எடுபடாது.
வாழ்க்கையில் ...ஒரே தொடர் கையளவு மனசு பார்த்தேன்.
அத்துடன் நிறுத்தினேன். வீட்டில் தமிழ்த் தொல்லைக்காட்சியே இல்லை.
மக்கள் மனம் மாறவேண்டும்.
பதிவை விட பின்னூட்டங்களில் தெரிகிறது அதன் பாதிப்பு அந்த வகையில் இந்த நெடுந்தொடர்களை கடுமையாக எதிர்ப்பவர்களில் நானும் ஒருவன்...
நிர்ஷன்,
மிகவும் வேதனையான நிகழ்வு.
தொலைக்காட்சி தொடர்களில் வரும் வசனங்கள் சில ரொம்ப மட்டரகமாக இருக்கின்றன. குழந்தைகளை டி.வி பார்ப்பதில் இருந்து தடுப்பதற்கு பெற்றோர்
புத்தகம் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளலாம். இருவருக்கும் பயன் தரும்.
அன்புடன்,
ஜோதிபாரதி.
//Nitharshini said...
Nn, ithu drama edupavarhalin pirachinaiyalla... TV Channels in pirachinai. avarhal Telecast panna thayarai irupathal than intha nilai. .................. Athu ninaivirukatum Iruvarukum. Be careful.
//
வாருங்கள் நிது.நலம்தானே?
என்ன நாடகத்தயாரிப்பாளர்களை ஆரம்பத்தில் குறை கூறிவிட்டு கடைசியில் என்னைத் திட்டி விடைபெற்றிருக்கிறீர்கள். பெரும்பாலான பெண்கள் குறித்துதான் இங்கு பேசிக்கொண்டிருக்கிறோம். ஆதலால் விதிவிலக்கானவர்கள் தமக்கான பதிவென்று இதனை ஏற்றுக்கொள்ளலாகாது. சில இளம் பெண்கள் துடிப்புடன் இலட்சியத்துக்காக பாடுபடுவதைப் பார்த்து பல சந்தர்ப்பங்களில் வியந்திருக்கிறேன். இது சீரியல்'நாயகி'களுக்கானது.
//Pudumai said...
என்ன நிர்சன்? நிதர்சனி நெத்தியடி அடிச்சிட்டாங்க?
Athu ninaivirukatum Iruvarukum. Be careful.
//
நிதர்ஷனி ஆதங்கத்தில் தனது கருத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். மற்றும் நிச்சயமாக என்மேல் கோபம் இருக்காது புதுமை.
// Paheerathan said...
எனக்கும் இந்த மெகா சீரியல்களையும் அதற்காக அடிபடுபவர்களையும் கண்டால் பிடிக்கவே பிடிக்காது . சமூகத்தை சீரழிக்கும் ஒரு யதார்த்தமே இல்லாத இந்த நாடகங்கள் ஒருவகை போதை வஸ்த்துக்களே.
மிகவும் வருந்த தக்க சம்பவம். செய்தி அறிக்கையில் ".......... தேடல்" போடும் அந்த தொலைக்காட்சியினர் இதையும் தேடி போடலாமே
//
நல்ல கேள்வி பகீரதன் அண்ணா. அவர்கள் இவ்வாறான செய்திகளை தேடல்களில் ஒளிபரப்ப மாட்டார்கள். ஏனென்றால் சொந்தத்தயாரிப்பில்லாத சமுதாயச்சீர்கேடுக்கு வித்திடும் நாடகங்களை அவர்கள்தானே ஒளிபரப்புகிறார்கள். மற்றும் இந்தச்சம்பவம் இடம்பெற்றதற்கு ஒருவகையில் காரணகர்த்தாக்களும் அவர்களே.
யோகன்,தமிழன்,ஜோதிபாரதி
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்.
யோகன் சொல்வதைப் போல இது போதை போலத்தான்.
இதனை கட்டுப்படுத்த முடியவில்லையே தமிழன் என்ன செய்வது?
புத்தகம் படிக்கும் நல்ல பழக்கமிருந்தால் நாம் எப்போதோ முன்னேறியிருப்போம் ஜோதிபாரதி.
Post a Comment