Thursday, September 13, 2007

களத்துக்கு வாருங்கள்...

மலையகம் தொடர்பான தரமான கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன. சுதந்திரமாக தமது கருத்துக்களை இங்கு எழுதலாம். மலையக முன்னேற்றத்துக்கு சுயமான ஆலோசனைகளையும் காத்திரமான கருத்துக்களையும் முன்வைத்து சமுதாய வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்வோம். தவறு செய்பவர்களையும் அதற்கு வழிவகுப்பவர்களையும் வெளிச்சத்துக்குக் கொண்டுவருவோம்.

5 comments:

Anonymous said...

ஐயா நிர்ஷன்
வணக்கம்.

தங்கள் பணி வளரட்டும். காலம் முழுவதும் பிறருக்கு உழைத்தே களைத்துப் போனவர்கள் மலையக மக்கள்.அப்படியிருந்தும் அடிப்படை உரிமைகள் பலவற்றை பெற்றுக்கொடுப்பதற்கு யாரும் முன்வரவில்லை. இதற்கு அரசியல் தலைவர்களும் சோம்பேறிகளாக இருந்து கல்விமான்கள் எனக்கூறிக்கொள்ளும் சில கல்வியியலாளர்களும் பொறுப்புக் கூறவேண்டும். தங்களைப்போல இளைஞர்கள் துடிப்புடன் முன்னோக்கிச் செல்வார்களானால் மலையக அபிவிருத்தி என்பது மிக நீண்ட தூரத்தில் இல்லை.
வாழ்த்துக்கள்.

அன்புடன்
தவா

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

இது நல்ல முயற்சி, எழுத ஆர்வம் உள்ளோருக்கும் இணைய வசதி இருக்காது. இதன் மூலம் கருத்துக்கள்
பல வர பரவ வாய்ப்புண்டு.

Unknown said...

நிர்ஷன்,

என்னைக்கூட எழுத வைத்தது உங்கள் வலைப்பக்கம்.நன்றி.

"களத்துக்கு வாருங்கள்" நல்லதொரு பணியை இந்த தலைப்பினூடாக ஆரம்பித்திருக்கிறீர்கள். உங்கள் இந்த முயற்சிக்கு வாழ்த்துக்கள். இணைய வசதி இல்லாத எழுத்தாற்றல் மிக்கவர்களிடம் இருந்து ஆக்கங்களை எடுத்து உங்கள் வலைப்பகுதிக்கு அனுப்பி வைக்கிறேன்.
"நாங்கள் எப்போதுமே உங்களுடன் களத்துக்கு வாருவோம்".

இறக்குவானை நிர்ஷன் said...

வருகைக்கு நன்றி நிதர்ஷினி. மற்றவர்களுடைய கருத்துக்களையும் தொகுத்துத்தாருங்கள். எங்களால் இயன்றதை செய்வோம்.