Friday, January 11, 2008

கவலையுடன் பதிவிடுகிறேன்...!



இலங்கையில் இன்னும் ஜாதிப்பிரச்சினை தலைவிரித்தாடிக்கொண்டிருக்கிறது என்பதற்கு நல்லதொரு உதாரணத்தை இங்கு குறிப்பிடுகிறேன்। உண்மையில் இந்தச்சம்பவம் என்னை எந்தளவு கவலைக்குள்ளாக்கியது என்பதை வெளிப்படுத்த முடியாதவனாக இருக்கிறேன்।





வடக்குப் பகுதியை பிறப்பிடமாகக் கொண்ட எனது தோழியொருத்தியும் மலையக இளைஞன் ஒருவனும் காதலிக்கிறார்கள்। இந்த விடயம் அவளுடைய வீட்டுக்கு தெரியவந்துள்ளது। அவளுடைய அம்மா கண்டபடி திட்டி அடித்து கடைசியில் என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா?





நாடு வீடில்லாத நாதாரிப் பரம்பரை ஒருத்தனை லவ் பண்றியே। அங்க போய் கொழுந்தெடுக்கப் போறாயா? எங்கள கொல்ற ஆமி காரனுக்கு உன்ன கட்டி வச்சாலும் கட்டி வப்பபேன்। அந்த வடக்கத்தையானுக்கு ( என்ன அர்த்தம் என்று நீங்க தான் சொல்லனும்) கட்டி வைக்க மாட்டேன்டி। அங்க உள்ள எல்லாருமே படிக்காதவனுங்க। தோட்டகாட்டானுங்க,நாகரீகம் தெரியாதவனுங்க.கீழ்ஜாதிக்காரனுங்க.... உனக்கு புத்தி எங்கேயடி போனிச்சு.... என்றாராம்.





கண்ணீருடன் அவள் என்னிடம் கூறியபொழுது உண்மையில் என்ன பதில்சொல்வதென்றே தெரியவில்லை. வட,கிழக்கு மலையகம் என்ற பாகுபாட்டில் தற்போதைய இளைஞர்கள் இல்லை. ஆனால் சிலர் அதை வைத்துக்கொண்டே தம்பட்டம் அடிக்கிறார்கள். இதுவரை நானோ என் சார்ந்த நண்பர்களோ அப்படியில்லை. ஏன் இவர்கள் மட்டும் இப்படி?





மலையகம் என்றால் கீழானவர்களா? மலையகத்தில் உள்ள அனைவருமே லயன்களில் பிறந்து வளர்ந்தவர்கள் அல்லவே? ஏன் படித்தவர்கள் இல்லை? பெரும்பாலான அப்பாவி மக்களுக்கு அடிப்படைக் கல்வியறிவும் பொருளாதாரமும் இல்லையே தவிர அனைவரிடமும் உண்மையான அன்பிருக்கிறது. இங்கு காதலை எதிர்த்தல் சாதராண விடயம் அதற்காக இப்படியெல்லாம் அவர் பேசியிருக்க கூடாது.





அந்த இளைஞனை விட தமிழினத்தையே அழிக்கநினைக்கும் மூச்சில் கூட போர்வாசம் வீசும் ஆமி காரன் நல்லவனா? ஏனம்மா இந்த சிந்தனை?





தமிழர்களே இப்படி பாகுபடாக நினைக்கும் போது தமிழர்களால் தமிழர்கள் தலைகுனிய நேரிடும் போது ஆறுதலுக்காவது அடுத்தவன் வரமாட்டான்।





உயிருள்ளவரை தமிழ்மூச்சு,தமிழ்ஜாதி,தமிழ்நேசம் என வாழ்ந்து பிரிவினைகளைத்தவிர்த்திருக்கும் இணைய நண்பர்களிடம் இப்பதிவை பதிலுக்காக சமர்ப்பிக்கிறேன்।

(நண்பர் அருணின் வலைப்பக்க உண்மைச்சம்பவத்தை படிக்க,

http://hongkongeelavan.blogspot.com/2008/01/blog-post_1160.ह्त्म्ल )

40 comments:

Anonymous said...

யாரை நம்பி நாம் பிறந்தோம்... போங்கடா போங்க... நம்ம காலம் வெல்லும் வென்ற பின்னே வாங்கடா வாங்க.....

நிர்ஷன்...ம்ம் நல்லயிருக்கு..

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

தங்கள் வேதனையை நானும் பகிர்ந்து கொள்கிறேன் நிர்ஷன். என்ன செய்வது.
நாம் பிரிந்து கிடப்பது, ஒரு உறுத்தலாகவே உள்ளது.

இறக்குவானை நிர்ஷன் said...

//
வடக்கத்தையான் said...
யாரை நம்பி நாம் பிறந்தோம்...
//

வருகைக்கு நன்றி.. உங்கள பற்றி சொல்லலையே?

இறக்குவானை நிர்ஷன் said...

//ஜோதிபாரதி said...
தங்கள் வேதனையை நானும் பகிர்ந்து கொள்கிறேன் நிர்ஷன்.
//

நன்றி ஜோதிபாரதி.

Anonymous said...

பாவம் நிர்ஷன்

மங்களூர் சிவா said...

//
ஜோதிபாரதி said...
தங்கள் வேதனையை நானும் பகிர்ந்து கொள்கிறேன் நிர்ஷன்.
//

மிக்க வருத்தமாக இருக்கிறது

Anonymous said...

தம்மைப்பற்றி உயர்ந்த எண்ணம் இருப்பது நல்லதுதான். ஆனால் மற்றவர்கள் தாழ்வானவர்கள் என்ற எண்ணம் மிக மோசமானது. ஹிட்லரின் அந்த எண்ணம்தான் பல அழிவுகளுக்கு வித்திட்டது.

யாழ் மக்கள் சிலரின் இந்த விபரீத எண்ணம்தான் 2004 இல் வடக்குகிழக்கு தமிழர்கள் மத்தியில் பிரதேசவாதத்தை ஏற்படுத்தி பிரிக்கும் முயற்சிக்கும் பயன்படுத்தப்பட்டது.

இறக்குவானை நிர்ஷன் said...

mirun said...
பாவம் நிர்ஷன்
//

ஏனய்யா? நான் நல்லாதானே இருக்கேன்?

இறக்குவானை நிர்ஷன் said...

//மங்களூர் சிவா said...


மிக்க வருத்தமாக இருக்கிறது//

சிலரை திருத்த முடியாதுதானே சிவா.

இறக்குவானை நிர்ஷன் said...

raja said...
தம்மைப்பற்றி உயர்ந்த எண்ணம் இருப்பது நல்லதுதான். ஆனால் மற்றவர்கள் தாழ்வானவர்கள் என்ற எண்ணம் மிக மோசமானது.
//

கருத்துக்கு நன்றி ராஜா. உங்கள எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே?

Unknown said...

நிர்ஷன்,
நான் ஒரு மலையகப் பெண்தான்.தற்போது இந்தியாவில் இருக்கிறேன். எனது கணவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். அவரிடமோ அவருடைய குடும்பத்தினரிடமோ இவ்வாறான பழக்கங்கள் இல்லை. ஆனால் எனக்குத் தெரிந்தவரையில் யாழ்ப்பாணத்திலுள்ள நிறைய (பழைமைவாதிகள்) பேருக்கு இந்த சிந்தனை தான். ஏன் மட்டக்களப்பு மக்களைக் கூட இழிவாகத்தான் நினைப்பார்கள். இது கூடாதது. நீங்கள் அப்படி நினைத்தால் வடக்கு கிழக்கு பற்றி கட்டுரைகள் எழுதுவீர்களா? பணி வாழ்க.

Unknown said...

நிர்ஷன், உங்களுக்கு மாத்திரமல்ல உங்கள் தோழிக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்.
"எங்கள கொல்ற ஆமி காரனுக்கு...।" உண்மையில் உங்கள் தோழியின் அம்மா யாழ் போர்ச்சூழலில் வாழ்ந்திருக்கமாட்டார் - அது தான் இத்தனை கடுமையான வார்த்தைகள்....

"All are not saints that go to church"

"அங்க உள்ள எல்லாருமே படிக்காதவனுங்க।" படித்த ஒரு தாய் ஒருநாளும் இப்படியான வார்த்தைகளை உபயோகிக்க மாட்டார்கள். இப்போதும் இப்படிப்பட்டவர்கள் இருப்பது தான் ஆச்சரியம்.

நிர்ஷன்... சூரியனைப்பார்த்து ஏதோ குரைத்ததாம். நீங்கள் எல்லாரும் சூரியன்கள் பிறகு ஏன் யாரோ சொன்ன வார்த்தைக்காக கவலைப்படுகிறீர்கள். இவர்களுக்கு காலம் பதில் சொல்லும்.

இப்போ இருக்கிறது எங்கள் தலைமுறை தானே நாங்கள் இதை மாற்றுவோம்.

இறக்குவானை நிர்ஷன் said...

// Bava said...
நிர்ஷன்,
அவரிடமோ அவருடைய குடும்பத்தினரிடமோ இவ்வாறான பழக்கங்கள் இல்லை.//

பவா, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. எல்லாரிடமும் இந்தப் பழக்கம் இல்லை. எனது யாழ் நண்பர்கள் இவ்வாறு நினைத்தது கூட இல்லை பவா.

இறக்குவானை நிர்ஷன் said...

//Nitharshini said...
இப்போ இருக்கிறது எங்கள் தலைமுறை தானே நாங்கள் இதை மாற்றுவோம்.
//

நிதர்ஷினி, இதைப்பார்த்ததும் எனக்கு சந்தோஷமாக இருந்தது. நன்றி.
இணைய நண்பர் ஒருவர் தனிப்பட்ட மின்னஞ்சல் அனுப்பி நீங்கள் லயன்களில் பிறந்து வளரவில்லை தானே? அப்போது என்ன கவலை? எனக் கேட்டிருந்தார்.
நான் எனக்காக கதைக்கவில்லை என்பதை புரிந்து எழுதியிருக்கிறீர்கள். உங்களைப் போன்ற தமிழார்வமிக்கவர்கள் தோள்கொடுக்கும் போது எம் தலை இறக்கும் வரை நிலத்தை தொடாது.

M.Rishan Shareef said...

நான் அண்மையில் பார்த்த பதிவுகளிலேயே மிகவும் அதிர்ச்சிக்கும்,வருத்தத்துக்கும் ஆளாக்கிய பதிவு இது.
மலையகத்தார் நம் நாட்டின் வளர்ச்சிக்கு அவர்களறியாமலேயே எவ்வளவு உதவுகிறார்கள் என்பது உங்களுக்கும் எனக்கும் தெரியும்.அப்படிப்பட்ட சமூகத்தை ஒரு தாய் இவ்வளவு மோசமாகப் பேசியதுதான் மிக ஆச்சரியமாக இருக்கிறது.
அடிப்படை வசதிகள் கூட அதிகளவு இல்லாமல் நம் நாட்டின் பொருளாதாரத்தை பெருமளவு உயர்த்தும் இவர்களது கல்வியறிவு இப்பொழுது உயர்ந்திருக்கிறது.
சமீபத்தில் இலங்கைத் தயாரிப்பான 'மண்' திரைப்படத்திலும் இச்சாதி வேற்றுமை அப்பட்டமாக விளங்கியது.
நிலவைப் பார்த்து நாய்கள் குரைத்து விட்டுப் போகட்டும்.எந்தக் குறைப்பும் நிலவின் தூய்மையை ஒன்றும் செய்ய முடியாது.
நண்பா தொடர்ந்து எழுதுங்கள்.
இது போன்ற சம்பவங்கள் இனிமேலும் நிகழாது இருக்கவேண்டும்...!

barathy said...

hai Sir

muthlil uggalukku henathu valththukkal.

ooru unmai sampavaththai palarukku puriyum padi solliyamaikku nanri.

jathi solli thamilarkalai pirippavarkal eniyavathu thirunthattum

nanri

ka.malar.

இறக்குவானை நிர்ஷன் said...

// எம்.ரிஷான் ஷெரீப் said...
நான் அண்மையில் பார்த்த பதிவுகளிலேயே மிகவும் அதிர்ச்சிக்கும்,வருத்தத்துக்கும் ஆளாக்கிய பதிவு இது.
//

ஆமாம் ரிஷான். சம்பந்தப்பட்டவர்கள் திருந்தத வேண்டுமே? இனிவரும் இளைஞர்கள் இதை மாற்றுவார்கள் என நினைக்கிறேன்.

இறக்குவானை நிர்ஷன் said...

// barathy said...

jathi solli thamilarkalai pirippavarkal eniyavathu thirunthattum//

மலர் நலமா? கருத்துக்கும் வருகைக்கும் நன்றி. தொடர்பில் இருங்கள்.

Anonymous said...

இவ்றானவர்கல் இன்னும் பரினாமம் அடையாத காட்டு வாசிகலே.
இவ்வாறானவர்கல் இருக்கும் வரை எமது இனம் பின் தங்கி தான் இருக்கும்.

சொல்லப் போனால் எங்கள் ஊரில் இவை அதிகம்.ஏன் எனக்கு தெரிந்து மலயகத்தில் வாழம் இந்தியர்கள் மிக துவேசமானவன்கள்

ஜாதி கொடுமை பற்றி எத்தனை பாரதி வந்தலும் நம்மவர்களை திருத்த முடியாது.

இறக்குவானை நிர்ஷன் said...

கவி said...
ஜாதி கொடுமை பற்றி எத்தனை பாரதி வந்தலும் நம்மவர்களை திருத்த முடியாது.//

என்ன கபில் இப்படி சொல்லிட்டீங்க? முயற்சித்தா முடியாதது ஒன்றுமில்லன்னு நீங்கதானே அடிக்கடி சொல்லுவீங்க? இல்லையா?

Anonymous said...

உங்களுக்கு என்ன தம்பி தெரியும்? யாழ்ப்பாணத்திலேயே 100 மேல ஜாதி இருக்கு. அத பாத்துதான் சாப்பாடு போடுவானுங்க. இங்கத்தய சனம் அப்படியில்லபாருங்கோ.. அதான் இவையள் படுறினம். இன்னும் படுவினம்.

இறக்குவானை நிர்ஷன் said...

//Anonymous said...
உங்களுக்கு என்ன தம்பி தெரியும்?
//

ஒத்துக்கொள்றேன் ஐயா.. தெரிந்ததை சொல்லலாமே? பெயரையாவது?

Anonymous said...

என்ன நக்கலா நிர்சன்.
எத்தனையோ தலைவர்கள் வந்தார்கள் மக்களை திருத்த முடிந்ததா? நீங்கள் எதை வேண்டும் என்றாலும் திருத்த முயற்சிகலாம் ஆனால் மக்களை அதிலு நம்ம மக்களை திருத்தவே முடியாது. முடிந்தால் நீங்கள் முயற்நியுங்கள் நானும' ஒத்துழைக்கிறனெ்.

இறக்குவானை நிர்ஷன் said...

கவி said...
என்ன நக்கலா நிர்சன்.
எத்தனையோ தலைவர்கள் வந்தார்கள் மக்களை திருத்த முடிந்ததா?
//

முதலில் தலைவர்கள் திருந்தனுமே கபில்? உண்மையாக உங்களைப் போன்ற இளைஞர்களால் முடியும். சாதிப்போம். முடிந்தளவு.

Anonymous said...

அமமா நிதர்சினி
எல்லோரும் படிக்காதவா்கள் இல்லை
உங்களைப்போன்று படித்தவர்கள்ளும் அப்படித்தான். சிலர் படிக்காத முட்டால் சிலர் படித்த முட்டால்

அற்புதன் said...

உங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள்.

யாழ்ப்பணதவரில் புரையோடிப் போயிருக்கும் இத்தகைய சாதிய மனோபாவம் என்பது இன்றும் இருக்கிறது என்பது எல்லோரும் அறிந்த விடயமே,இதில் வெட்க்கப்பட வேண்டியவர்கள் இந்த மனோபாவத்தை உடையவர்களே அன்றி, மற்றவர்கள் அல்ல.

தமிழர்கள் ஒன்று பட்டு தமது உரிமைகளுக்காகப் போராடும் அதே நேரத்தில் இவ்வாறு எமக்குள்ளேயே இருக்கும் சாதீய சமய பிரதேச வேறுபாடுகளுக்கு எதிராகவும் போரிட வேண்டும் குரல் எழுப்ப வேண்டும்.தமிழ்த் தேசிய விடுதலை என்பது எல்லாத் தமிழ் மக்களையும் உள்ளடக்கியதாகவும் சமத்துவதிற்கும் சம உரிமைகளுக்குமான் போராட்டம்.

சமூக அளவில் இந்தக் கருத்தியலை ஏற்படுத்த நாம் எல்லோரும் ஒன்று பட்டு இயங்க வேண்டும் எழுத வேண்டும்.சமூகச்சீர்கேடுகளை தொடர் போராட்டங்களால் அன்றி வேறு எந்த வழிகளாலும் அழித்து விட முடியாது.

Unknown said...

நிர்ஷன் தம்பி !

உங்கள் வேதனை எனக்கு புரிகிறது. கவலைப்படாதீர்கள் ..
கவலைப்படாதீர்கள் ..

மிக விரைவில் ஜோடியாக சமந்தா போகலாம். அப்போது நேரில் இதைப்பற்றி விபரமாகப் பேசலாம்....

இனி என்ன சொல்ல ... சொல்லவும் விருப்பம் இல்லை . இதற்கு முன்னரும் ஒரு தடவை இது பற்றி கூறியிருநதேன்.

அதாவது இனிமேலாவது இத்தகைய பிரயோசனமற்ற வாதப்பிரதிவாதங்களை புறந்தள்ளிவிட்டு ஆக்கபுர்வமாக எதையாவது வாதப்பொருளாக்கும் தமபி.

அதற்காக உங்களது நிலமை புரியாதவன் நான் என்றில்லை. புரிகிறது ... புரிகிறது. சவாலை கண்டு நொடிந்து விடுவது நிர்ஷனுக்கு அழகல்ல .

ஷாஜகான் - மும்தாஜ் , லைலா - மஜ்னு இப்படி சவால்களை வெற்றிகண்ட ஜோடிகளே சரித்திரத்திலும் இடம்பிடித்துள்ளன.

நீங்கள் கூறுவது போல் யாழ்ப்பாணத்தவர்கள் இப்படி நடக்கிறார்கள் என்பதை ஒரு வாதப்பொருளாக்கினால் உங்களது தோழியும் ஒரு யாழ்ப்பாணத்தவள்தான் . அவளுக்கு எதற்காக இதுவரை அத்தகையதொரு சிந்தனை வரவில்லை. அத்தகையதொரு சிந்தனை வந்திருந்தால் இப்படியான காதலை அவள் விரும்பி தேடியிருப்பாளா?


ஒரு கணம் சிந்தியும். உமது தோழியின் பெற்றொர் கிணற்று தவளைகளாக இருந்துகொண்டு தமது பிள்ளையை ( உமது தோழியை ) இம்சிக்கின்றனர் எனில் நீரும் அவவை நோகடிக்கப் போகிறீரா ?

இந்த நேரங்களில் உமது தோழிக்கு உறுதுணையாக நிற்க வேண்டிய நீரே துவண்டு போகலாமா ?

நீர் முன்னர் கூறிய வார்த்தைப் பிரயோகங்களைபப் பாவிக்கும் அதே யாழ்ப்பாண பழசுகள்தான் இன்னொரு வார்த்தையையும் பாவிப்பர். --- என்னதான் இருந்தாலும் ஒண்டை பெத்துப் போட்டால் எல்லாம் சரியாகியிடும் .... இதுதான் அந்த வார்த்தை.

துவண்டு போகாதே ! உறுதியுடன் நில் ! வெற்றி நிச்சயம் !


உரிமையுடன் அண்ணன்

மாயா said...

வேதனையை நானும் பகிர்ந்து கொள்கிறேன் .
தமிழர்கள் இன்று இவ்வாறு அல்லல்படுவதற்கு காரணம் சாதிப்பிரச்சினை தான் என நினைக்கிறேன்
அந்தக்காலத்திலேயே இல்லாது அழித்திருக்கலாம்

வந்தியத்தேவன் said...

நிர்ஷன்
என்றைக்கு வீரகேசரி, தினக்குரல் பேப்பர்களில் மணமகன் தேவை/ மணமகள் தேவை விளம்பரங்களில் யாழ்ப்பாண உயர் சைவ வேளாளர் என்ற வார்த்தை இல்லாமல் இருக்கின்றதோ அன்றுதான் ஜாதி ஒழியும். ஈழநாதத்தில் இப்படியான விளம்பரம் வருகின்றதா எனத் தெரியாது. யாழ்ப்பாணத்து மக்கள் தங்களுடைய சிலவற்றை எந்த தேசத்துக்குப் போனாலும் மாற்றமாட்டார்கள். (நானும் யாழ்தான்).

அந்தத் தாய்க்கு மலையகப் பையனை விட ஆமிக்காரன் பெரிசாகப் போய்விட்டான். அந்தத் தாயிடம் ஒரு கேள்வி உங்கள் பெண் முத்தையா முரளிதரன் போன்ற பிரபலமானவரையோ அல்லது வேறு பணம் படைத்தவரையோ விரும்பினால் திருமணம் செய்துகொடுக்க மறுக்கவா போகிறீர்கள். இன்னும் ஒரு 25 வருடத்தில் உந்தப் பழமைவாதிகள் எல்லாம் அழிந்துவிடுவார்கள். அப்புறம் ஜாதி/மதம்/குலம் எல்லாம் ஒன்றாகி நாம் குளோபலைசேசனகிவிடுவோம்.

இறக்குவானை நிர்ஷன் said...

//அமமா நிதர்சினி
எல்லோரும் படிக்காதவா்கள் இல்லை
உங்களைப்போன்று படித்தவர்கள்ளும் அப்படித்தான்.//

நிதர்ஷினி திறமையானவர் என்பது அவருடைய கருத்துக்களிலிருந்து விளங்குகிறது. அவரிடம் இவ்வாறான சிந்தனைகள் இல்லை.

இறக்குவானை நிர்ஷன் said...

//அற்புதன் said...
உங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள்
//

அற்புதன்,உங்களுடைய அற்புதமான கருத்துக்களைக் கண்டு களிப்படைகிறேன். நீங்கள் சொல்வது உண்மை. அதற்காக நாம் நிச்சயமாக போராடுவோம். தன்னம்பிக்கையும் பலமும் எம்மிடம் இருக்கும் போது உங்களைப் போன்றவர்கள் பகிர இருக்கும் போது பயம் ஏன் அற்புதன்?

இறக்குவானை நிர்ஷன் said...

//alex said...
நிர்ஷன் தம்பி !

உங்கள் வேதனை எனக்கு புரிகிறது. கவலைப்படாதீர்கள் ..
//
உரிமையுடன் அண்ணன் என்பதைப் பார்த்ததும் என்மீது நீங்கள் கொண்டுள்ள உரிமை புரிகிறது. எங்களுக்கிடையில் இந்த வேறுபாடு இல்லை பார்த்தீர்களா? இவர்களைப் போன்ற பெற்றோரின் கீழ்த்தரமான சிந்தனைகளால் பிள்ளைகள் எந்தளவுக்கு மனதளவில் பாதிக்கப்படுகிறார்கள். இவ்வாறு எத்தனை பேர் ? என்பதை நினைத்துதான் நான் கவலைப்பட்டேன். உங்கள் உரிமையுடனான இடுகைக்கு பலகோடி நன்றிகள் அண்ணா.

இறக்குவானை நிர்ஷன் said...

// மாயா said...
வேதனையை நானும் பகிர்ந்து கொள்கிறேன் .
//
என்ன செய்ய மாயா? சமுதாயத்தின் தவறு சமுதாயத்தையே இப்போது பாதிக்கிறது. வருகைக்கு நன்றி மாயா.

இறக்குவானை நிர்ஷன் said...

//வந்தியத்தேவன் said...
நிர்ஷன்
என்றைக்கு வீரகேசரி, தினக்குரல் பேப்பர்களில் மணமகன் தேவை/ மணமகள் தேவை விளம்பரங்களில் யாழ்ப்பாண உயர் சைவ வேளாளர் என்ற வார்த்தை இல்லாமல் இருக்கின்றதோ அன்றுதான் ஜாதி ஒழியும்.
//

அதுவும் உண்மைதான் வந்தியத்தேவன். நான் ரசித்த பாத்திரங்களில் மிகப் பிடித்த பாத்திரம் நீங்கள் தானே. காத்திரமான கருத்துக்களை பகிர்ந்துள்ளீர்கள். அந்த நோக்கத்துக்காக அனைவருமே கைகோர்த்து பாடுபடுவோம்.

Anonymous said...

பதிவை வாசித்து மிக மனம் வருத்தம் அடைகிறேன்.
காலம் ஒரு நாள் மாறும் இவர்களைப் போன்றவர்கள் ஒரு நாள் மாறுவார்கள் என நம்புவோம்

அன்புடன்,
தபோதரன்,
உப்சாலா, ஸ்வீடன்.

இறக்குவானை நிர்ஷன் said...

தபோதரன் said...
பதிவை வாசித்து மிக மனம் வருத்தம் அடைகிறேன்.
காலம் ஒரு நாள் மாறும் இவர்களைப் போன்றவர்கள் ஒரு நாள் மாறுவார்கள் என நம்புவோம்
//

நிச்சயமாக தபோதரன். வருகைக்கு நன்றி. மின்னஞ்சலை தாருங்கள்.

Anonymous said...

அடிப்பவர்கள் என்னவோ வேறுபாடு காட்டாமல் தான் அடிக்கிறார்கள். அடி வாங்குபவர்கள் தான் இன்னமும் ஒன்று படாமல் தமக்குள் வேறுபாடுகளை வளர்க்கிறார்கள்.
வேதனை!!

மின்னஞல் thabo@it.uu.se
தபோதரன்.

இறக்குவானை நிர்ஷன் said...

//thabotharan said...
அடிப்பவர்கள் என்னவோ வேறுபாடு காட்டாமல் தான் அடிக்கிறார்கள். அடி வாங்குபவர்கள் தான் இன்னமும் ஒன்று படாமல் தமக்குள் வேறுபாடுகளை வளர்க்கிறார்கள்.
வேதனை!!
//

உண்மையான கருத்தை சில வரிகளிலேயே சொல்லி அசத்திட்டீங்க. அடிவாங்குபவர்கள் திருந்த வேண்டும். ஒன்றுபடவேண்டும். சாதிக்க வேண்டும்.
உங்களுடன் தொடர்புகொள்கிறேன்.

Unknown said...

//தமிழர்களே இப்படி பாகுபடாக நினைக்கும் போது தமிழர்களால் தமிழர்கள் தலைகுனிய நேரிடும் போது ஆறுதலுக்காவது அடுத்தவன் வரமாட்டான்।//

உலகெங்கும் தினமும் நடக்கும் ஒரு வருத்தமான விஷயம். முதலில், தமிழர்கள் தமிழர்களை மதிக்கக் கற்றுக்கொள்ளவேண்டும். பிறகுதான் மற்றவர்கள் நம்மை மதிப்பார்கள்.

இறக்குவானை நிர்ஷன் said...

//தஞ்சாவூரான் said...
//தமிழர்களே இப்படி பாகுபடாக நினைக்கும் போது தமிழர்களால் தமிழர்கள் தலைகுனிய நேரிடும் போது ஆறுதலுக்காவது அடுத்தவன் வரமாட்டான்।//

உலகெங்கும் தினமும் நடக்கும் ஒரு வருத்தமான விஷயம். முதலில், தமிழர்கள் தமிழர்களை மதிக்கக் கற்றுக்கொள்ளவேண்டும். பிறகுதான் மற்றவர்கள் நம்மை மதிப்பார்கள்.
//

உண்மைதான் தஞ்சாவூரான். பல்வேறு சந்தர்ப்பங்களிலும் தமிழர்கள்தான் தமிழர்களுக்கு எதிரிகளாக இருக்கிறார்கள்.