Wednesday, January 23, 2008

எந்த ரூபத்திலும் வரலாம்!

இலங்கையிலிருந்து மத்திய கிழக்குக்கு தொழில்தேடிச்செல்லும் இளம் பெண்கள் ஏராளம்। இவர்களில் பலருக்கு எமது நாட்டிலேயே ஏற்படும் அக்கிரமங்கள் குறித்து தகவல் அறியக்கிடைத்தது।

விழிப்பாயிருங்கள்.... இதோ விடயத்தை சொல்கிறேன்।
பெரும்பாலும் வெளிநாட்டு வேலைகள் குறித்து அதிகம் தெரிந்திராத பெண்கள் தரகர்களை நாடுகின்றனர்। எல்லா வேலையும் செய்து முடித்த பின்னர் அந்தப் பெண்களை அவர்களுடைய ஊரிலிருந்து தரகர்களே அழைத்து வருகின்றனர்। அப்படி அழைத்து வரும்போது அவர்கள் கைக்கொள்ளும் தந்திரம் இதுதான்।
இரவில் பெண்களை அழைத்து வரும் தரகாகள் ,விமான நிலையத்துக்கு வந்தவுடன் இன்று உங்களுக்கான பயணம் இல்லையாம் நாளை காலை தானாம் என்று சொல்கின்றனராம்। அதாவது முன்திட்டமிட்டு செய்யும் செயல் இது।
சரி இப்போது வீட்டுக்கும் போய் வர முடியாது। இங்கேயே நின்றுகொண்டிருந்தால் பொலிஸார் விசாரணை செய்வார்கள் எனக் கூறி ஏதாவது சொல்லி அங்குள்ள ஹோட்டல்களுக்கு அழைத்துச்செல்கின்றனர்। எப்படியாவது போய்ச்சேர வேண்டும் என்பதால் எல்லாவற்றையும் சமாளித்துச்செல்கின்றனர் இந்த அப்பாவிப் பெண்கள்।
வெளிநாடு செல்லும் பெண்கள் இனியாவது கவனமாக இருப்பார்களா? காம விஷமிகள் எந்த ரூபத்திலும் வரலாம்.

14 comments:

Anonymous said...

என்ன கொடுமை சார் இது? சும்மா விஷயம் தெரியாம நுழைஞ்சா இப்படித்தானுங்க.

Anonymous said...

வெளிநாட்டுக்குப் போகுமுன் மட்டுமல்ல போனபின் அங்கும் இதை விடவும் கேவலமான சூழலுக்குள் இப்பெண்கள் தள்ளப்படுகிறார்கள். இவர்களை எச்சரிக்கையாக இங்கிருந்து அனுப்பி அங்கே பலிகொடுப்பதை விடவும் இவர்கள் வெளிநாடு செல்லப் புறப்படுவதற்கான நியாயமான பிரச்சினையை இனங்கண்டு அதைத்தீர்ப்பதில் அக்கறை எடுப்பது ஆக்கபூர்வமாக இருக்கும். இல்லாவிட்டால் மிக எச்சரிக்கையுடன் கிளியை வளர்த்து சோடனை செய்து வேடனின் அம்புக்கு தெளிவாகத் தெரியும் வண்ணம் சட்டையும் போட்டு மரத்தில் நிற்பாட்டுவது போல் ஆகிவிடுமல்லவா? ஏதேனும் ஆக்க பூர்வமாகச் சிந்திப்போம் சோதரரே

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

தம்பி!
திட்டம் போட்டு திருடும் கூட்டம் திருடிக் கொண்டே இருக்கும்,
அவர்களாகப் பார்த்து திருந்தினால் தான் உண்டு.
நமது நாட்டில் இந்த யுகத்தில் அவலம் தீருமா? அதற்கு எதாவது நடவடிக்கை யாராவது எடுக்கிறார்களா??
பலருக்கு..மண் தின்பதை மனிதன் தின்னட்டும் என்னும் மனப்போக்கு.
பெண் எந்த உலகத்தில் இருந்தாலும் ஏமாற்றப்படுகிறாள்.
இந்தியாவில் விதம் விதமான சாமியார்கள். நம் நாட்டில் வெளிநாட்டு வேலை வாய்ப்புத் தரகர்கள்.
இந்த நாடுகளில் கிழக்கைரோப்பிய நாடுகளில் இருந்து, மாடலிங்குக்காக
புற்றீசல் போல் வரும் இளம் பெண்களின் நிலையை சொல்ல நாக்கூசும், என்ன? செய்வது
அவர்கள் வறுமை, டாம்பீக வாழ்விலுள்ள அதீத ஆசை என்பவற்றுடன், போனால் போகுது
என்ற மனப்போக்குள்ள ஒரு சிலரால், ஏனையோரும் குறிவைத்துக் குதறப்படுகிறார்கள்.
தேவையும்,வறுமையும் இருக்கும் வரை, இந்த ஓநாய்களுக்கு இரை கிடைத்துக் கொண்டே இருக்கும்.

இப்படி ஏமாற்றுபவர்களை ''அன்னியன்'' பாணியில் யாராவது தண்டிக்க வேண்டும். அது தானே கற்பனை வடிவமாச்சே...

இறக்குவானை நிர்ஷன் said...

//முரட்டுக்காளை said...
என்ன கொடுமை சார் இது? சும்மா விஷயம் தெரியாம நுழைஞ்சா இப்படித்தானுங்க.
//

உண்மைதான். வருகைக்கு நன்றி முரட்டுக்காளை.(உண்மையா முரட்டுக்காளைதானா?)

இறக்குவானை நிர்ஷன் said...

//யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
தம்பி!
திட்டம் போட்டு திருடும் கூட்டம் திருடிக் கொண்டே இருக்கும்,
அவர்களாகப் பார்த்து திருந்தினால் தான் உண்டு.
நமது நாட்டில் இந்த யுகத்தில் அவலம் தீருமா? அதற்கு எதாவது நடவடிக்கை யாராவது எடுக்கிறார்களா??
//

நல்ல கேள்வி கேட்டிருக்கிறீர்கள் அண்ணா. யார் நடவடிக்கை எடுப்பார்கள். தமக்கு அந்தச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லையே என ஏங்கும் தலைமைகள் தானே அதிகம்.

இறக்குவானை நிர்ஷன் said...

//தென்றல் said...
வெளிநாட்டுக்குப் போகுமுன் மட்டுமல்ல போனபின் அங்கும் இதை விடவும் கேவலமான சூழலுக்குள் இப்பெண்கள் தள்ளப்படுகிறார்கள்.
//

ஆமாம்.ஆனால் எமது பெண்களின் துயரம் அறிந்து அவர்கள் வெளிநாடு செல்லும் காரணம் தெரிந்து இவ்வாறு செய்யும் சில விஷமிகளை விட்டுவைக்கக்கூடாதல்லவா? நீங்கள் சொல்வது உண்மைதான். அந்தப்பிரச்சினைக்கும் எம்மவர்கள் நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை.

//ஏதேனும் ஆக்க பூர்வமாகச் சிந்திப்போம் சோதரரே//

இது என்ன சிந்தனை? மறைமுகமாக எமது பெண்கள் காவுகொள்ளப்படுவதை சுட்டிக்காட்டவேண்டிய கடப்பாடு எமக்கு உண்டுதானே. அதனால் தான் தெளிவுபடுத்தியிருந்தேன். நீங்கள் குறிப்பிட்டுள்ள மற்ற பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அனைவருமே ஒத்துழைக்க வேண்டும்.

Anonymous said...

நிர்ஷன்,
எங்கள் ஊரில் நிறைய தரகர்கள் இருக்கிறார்கள்.அவர்களுக்கு இதுதான் வேலை. ஆனால் கல்வியறிவு இல்லாததால் இந்த விடயத்தில் அவர்கள் கவனம் கொள்வதில்லை.

இறக்குவானை நிர்ஷன் said...

ஆமாம். கல்விப் புரட்சி ஏற்படுத்துவதாகத்தானே அநேகர் ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அமலன்.

Unknown said...

நிர்ஷன்,
நாட்டில் இப்படி ஒரு பிரிவினர் ஏமாற்றிக்கொண்டும், இதில் பலர் ஏமார்ந்து கொண்டும் இருக்கிறார்கள் என்கிறபோது கவலையாய்த்தான் இருக்கு.

இதைவிட ஒரு கஷ்டமான விடயம் அண்மையில் பத்திரிகையில் பார்த்தேன். ஒரு 15 வயது பெண், தாய் வெளிநாட்டுக்கு வேலைக்காக போய்விட்டாங்களாம். அந்த தந்தை அன்றைய நாளில் இருந்து தன் தேவைக்கு அப்பெண்ணை (மகளை) உபயோகித்துக்கொண்டிருக்கிறாராம்.

பாருங்கள் இலங்கையில் பெண்கள் எல்லாம் எப்படி துஷ்பிரயோகத்திற்கு உட்படுகிறார்கள் என.

//இவர்கள் எல்லாரும் திருந்துவார்கள் என்பது நிச்சயமில்லை...
இப்பெண்களாவது விழித்துக்கொண்டால் மனதுக்கு ஒரு ஆறுதல் தான்//

இறக்குவானை நிர்ஷன் said...

//Nitharshini said...
நிர்ஷன்,
நாட்டில் இப்படி ஒரு பிரிவினர் ஏமாற்றிக்கொண்டும், இதில் பலர் ஏமார்ந்து கொண்டும் இருக்கிறார்கள் என்கிறபோது கவலையாய்த்தான் இருக்கு.

இதைவிட ஒரு கஷ்டமான விடயம் அண்மையில் பத்திரிகையில் பார்த்தேன். ஒரு 15 வயது பெண், தாய் வெளிநாட்டுக்கு வேலைக்காக போய்விட்டாங்களாம். அந்த தந்தை அன்றைய நாளில் இருந்து தன் தேவைக்கு அப்பெண்ணை (மகளை) உபயோகித்துக்கொண்டிருக்கிறாராம்.

பாருங்கள் இலங்கையில் பெண்கள் எல்லாம் எப்படி துஷ்பிரயோகத்திற்கு உட்படுகிறார்கள் என.
//

உண்மை தான் நிதர்ஷினி.
இந்தச்சம்பவம் என்ன இதை விட தினம் பாலியல் கொடூரங்கள் இடம்பெறுகின்றன. ஹற்றனில் அகால மரணமான பெண்ணை தோண்டியெடுத்து பாலியல் இச்சைகளைத் தீர்த்துக்கொண்டவர்கள் இருக்கிறார்கள். குருணாகலயில் பசுமாட்டுடன் பாலியல் உறவுகொண்டு தண்டனை பெற்றவர்கள் இருக்கிறார்கள்.

சம்பந்தப்பட்டவர்களே திருந்த வேண்டும் நிதர்ஷினி.

Anonymous said...

பெண்களுக்கும் நல்ல கல்வியறிவு வழங்கவேண்டும். 10 மைல் தூரத்திலுள்ள பாடசாலைக்கு மகளை அனுப்ப பயந்தவர்கள் பின்னர் தனியாக பஹ்ரேனுக்கு அனுப்புகிறார்கள். நல்ல கல்வியுடன் கராத்தேயும் கற்பித்தால் இப்பிரச்சினைகள் குறையும் ராஜா.

இறக்குவானை நிர்ஷன் said...

//ராஜா said...
பெண்களுக்கும் நல்ல கல்வியறிவு வழங்கவேண்டும். 10 மைல் தூரத்திலுள்ள பாடசாலைக்கு மகளை அனுப்ப பயந்தவர்கள் பின்னர் தனியாக பஹ்ரேனுக்கு அனுப்புகிறார்கள். நல்ல கல்வியுடன் கராத்தேயும் கற்பித்தால் இப்பிரச்சினைகள் குறையும் ராஜா.
//

ஏற்றுக்கொள்கிறேன்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணா.

Anonymous said...

தன்வீட்டு மாமன்காரனிடமே மகளை பாதுகாக்க முடியாத சூழலில்தான் பெரும்பாலானோர் வளர்க்கப்படுகிறார்கள். அங்க இங்க கிழித்துவிட்டுக்கொண்டு தன்னையாரும் பார்க்க மாட்டார்களா என அலையும் பெண்களுக்கு இந்தக் கேவலம் நடந்திருந்தால் கவலைப்பட்டிருக்கத் தேவையில்லை.

இறக்குவானை நிர்ஷன் said...

வருகைக்கு நன்றி அனானி. என்ன இருந்தாலும் நம்ம தாய்க்குலம்தானே அப்படி சொல்லாதீங்க.