யார் வேலைக்காரர்கள்?

மலையகத்தின் சில பகுதிகளில் தொழிலாளர்களை வேலைக்கு செல்லவேண்டாம் எனக்கூறி தமது சொந்த தேவைகளைச்செய்துதருமாறு சில தலைவர்கள் தொழிலாளர்களை வற்புறுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவித்தன। அங்கிருந்து சம்பந்தப்பட்ட தொழிலாளர்கள் தொலைபேசி மூலம் தகவல் தந்தனர்।

என்ன விடயம் என்பதை தெளிவாகக்கூறுகிறேன்। தலைவரின் வீட்டில் அவருடைய நண்பர்களுக்கு மதுபான உபசாரம் நடக்க ஏற்பாடாகியதாம்। அங்கு மதுபானம் பரிமாறுவதற்குத் தான் தொழிலாளர்கள் சிலரை அழைத்திருக்கிறார்। அதுவும் சம்பளம் இல்லை। ஒருகிளாஸ் குடிச்சிட்டு வேலை செய்யுங்கள் எனச்சொல்லியிருக்கிறார் என்றால் பாருங்கள்। தான் சீரழிவது போதாமல் சமுதாயத்தையும் சேர்த்து சீரழிப்பவர்கள் தான் தங்களைத் தலைவர்கள் எனக் கூறிக்கொள்கிறார்கள்।

மக்கள் வாக்கினால் மக்களுக்கு சேவை செய்யவந்தவர்கள் தான் வேலைக்காரர்கள்। தொழிலாளர்கள் அடிமைகளல்ல। அரசியல்வாதிகள் தான் சேவகர்கள் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணரவேண்டும்.

3 comments:

said...

இது காலம் காலமாக நடப்பது, இலகுவில் தீர்க்கக் கூடியதல்ல, ஆனாலும் ஒத்து எதிர்ப்புக் காட்டத் தொடங்கியது நல்ல ஆரம்பம்

said...

ஏன் நிர்ஷன், மலையகத்தில் மட்டும் உள்ள வேலைக்காரர்களைப்பற்றி பேசுகிறீர்கள்?
கொழும்பில் மெயின் வீதியில் உள்ள கடைகளிலும், கொழும்பு மீன் சந்தையின் மேல் உள்ள கடைகளிலும் வேலை பார்க்கும் மலையக வேலைக்காரர்களைப்பற்றியும் கொஞ்சம் பேசுங்களேன்........
அவர்களைப்பார்க்கும் போது
ஆடுகளை ஓநாய்களுக்குள்ளே அனுப்பியது போல தெரியவில்லையா?

said...

நிச்சயமாக எழுதுகிறேன். நன்றி