தூங்கும் அர(ட்டை)(சியல்)வாதிகள்!


பொருள் விலையேற்றங்களின்போது தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை அதிகரியுங்கள் என அரசியல்வாதிகள் கோஷமிடுவதும் பின்னர் பெரிய தலைகளிடம் சமரசம் செய்துகொண்டு தூங்குவதும் வழமையாகிவிட்டது। தற்போது ஒருநாள் உணவுக்கு ஒருவருக்கே போதாத 190ரூபா அடிப்படை சம்பளத்தை தொழிலாளர்கள் பெறுகிறார்கள்। இது எந்தவகையிலும் நியாயம் இல்லை என்பதும் குடும்பத்தின் வயிற்றுப்பிழைப்புக்கே போதாது என்பது நமது தலைவர்களுக்கு தெரியாமலா இருக்கிறது।


அப்பாவி தொழிலாளர்களின் விதிதான் இவ்வாறான அரசியல்வாதிகளைப் பெற்றுக்கொடுத்திருக்கிறது என்ற காரசாரமான வாதப் பிரதிவிதங்களும் முன்வைக்கப்பட்டுவருகின்றன। ஆனால் இவர்களிடம் கூறி சம்பளத்தை அதிகரிப்பதும் கல்லில் நார் உறிப்பதும் முட்டையில் முடிபிடுங்குவதும் ஒன்றுதான் என்றும் மலையக சமூகம் கூறுகிறது.

10 comments:

Suthan said...

சில நாட்களாக வெளிப்படையான தகவல்களை வெளியிட்டு வருகிறீர்கள். நீங்கள் ஓர் ஊடகவியலாளர். இலங்கையில் ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினை குறித்து நான் சொல்லி நீங்கள் அறியவேண்டியதில்லை. எவ்வாறெனினும் தயங்காமல் பணியைத் தொடரும் தங்களுக்கு வாழ்த்துக்கள்.

said...

நன்றி சுதன்.

said...

//
ஒருநாள் உணவுக்கு ஒருவருக்கே போதாத 190ரூபா
//
ஸ்ரீலங்கால Cost of living ரொம்ப ஜாஸ்தியோ

said...

என்ன சிவா அப்படி கேட்டுட்டீங்க? ஒவ்வொரு நாளும் விலை ஏறிக்கிட்டு தான் இருக்கு.

said...

நிர்ஷன்!
இவர்கள் தூங்கினால் எழுப்பிவிடலாம்; ஆனால் தூங்குவது போல் நடிக்கிறார்களே??
எழுப்பமுடியுமா??? தேர்தல் வரவேண்டும்.
உங்கள் வோல்ட் வெரிபிக்கேசனை எடுத்துவிட முடியுமா??

Anonymous said...

சிறிலங்காவின் விலையேற்றங்கள் அதிர்ச்சி தருவதாகத்தான் இருக்கிறது. யுத்தநிறுத்த ஒப்பந்தம் வந்தபோது இருந்ததைவிட பெற்றோல் இரண்டுமடங்காக தற்போது உள்ளது.
அண்மையில் மா கிலோ ஒன்றுக்குப் பதின்மூன்று ரூபாவால் அதிகரிக்கப்பட்டதாக அறிந்தேன்.

அதே விகிதத்தில் ஊதியமும் அதிகரிக்கப்படாவிட்டால் ஏழைகளினதும் நடுத்தர வர்க்கத்தினதும் பாடு அதோ கதிதான்.

ஒரு குடும்பம் சுருட்டுகிறது. நாடு வாழ்வைத் தொலைக்கிறது.

said...

ஆமாம் யோகன்,
இவர்களுக்கு தேர்தலில் பாடம் புகட்டலாம். இப்போதுதான் மலையக மக்கள் இதனை உணரத் தொடங்கியிருக்கிறார்கள்.

said...

முகில் நிலாவை மறைத்தாலும், நிலாவிற்கு தெரியும் முகிலைவிட சக்தி வாய்ந்தது தான் தான் என்று. அதனால் தான் முகிலின் இடுக்கிலும் கூட தன்னுடைய ஒளியைத் தருகிறது நிலா.
இங்கே "நிலா" மலையக மக்கள். ஏன் அவர்கள் அனைவருமே ஒன்று சேரக்கூடாது. நீங்கள் லயன்களுக்கு செல்லும் போது அவர்களுக்கும் கொஞ்சம் விழிப்புணர்வூட்டுங்களேன்.

said...

சகோதரி,
சில விடயங்களை அடிப்படையிலிருந்து மாற்றவேண்டும்.எங்களது இளைஞர் கழகத்தினூடாக முடியுமானவரை மது ஒழிப்புத்திட்டங்களையும் சகமூக விழிப்புணர்வுத்திட்டங்களையும் ஏற்படுத்தி வருகிறோம். அனைவடைய ஒத்துழைப்பின் மூலமாகவே இதனை சாதிக்க முடியும்.

Amalan Hatton said...

நிதர்ஷனி,
நீங்கள் சொல்வது தவறு.மலையக சமுதாயத்தவர்களை தலைவர்கள் தான் பிரித்து வைத்திருக்கிறார்கள். அவர்கள் ஒன்றுதிரண்டால் தமக்கு சுயலாபம் காணமுடியாது என்பதுதான் அவர்களுடைய எண்ணம். தலைவர்கள் நினைத்தால் தாம் ஒரேகுடையின் கீழ்நின்று சமுதாயத்தையும் ஒன்றுதிரட்டலாம். அவர்கள் ஒருகாலமும் அவ்வாறு செய்ய மாட்டார்கள். மக்களை பகடைக்காய்களாக்கித்தானே அவர்களுக்கு பழக்கம்.