இந்தக் கொடுமையை கேளுங்கள் ஐயா!

தனது இரண்டு மாத குழந்தைக்கு பால் மா வாங்குவதற்கு பணம் இல்லாததால் விரக்தியடைந்த இளம் தாய் நஞ்சு குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் இலங்கையின் தென்பகுதியில் தெனியாய - தாரங்கல சதன் குறூப் தேயிலைத் தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது।
திங்கட்கிழமை மாலை இவர் நஞ்சு குடித்து ஆபத்தான நிலையில் மொறவக்க ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மரணமானார்.
பாலகிருஷ்ணன் சரோஜாதேவி (20 வயது) என்ற இளம் பெண்ணே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டார். மொறவக்க ஆஸ்பத்திரியில் இவரது மரண விசாரணை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சம்பவதினம் பிள்ளைக்கு பால் இல்லாமல் இறந்த மனைவி தனது தாயாரிடம் பணம் கேட்டதாகவும், தாயார் பணம் இல்லை என்று கூறியதால் அவர் மனம் உடைந்து காணப்பட்டார் எனவும் தான் கடையில் கடனுக்கு பால்வாங்கி வருவதாக கூறிவிட்டு சென்றவேளையில் அவர் நஞ்சு குடித்துவிட்டதாக சகோதரி ஓடிவந்து கூறியதாகவும் கணவன் மரண விசாரணையில் சாட்சியம் அளிக்கும்போது கூறினார்.
இது தற்கொலை என மரண விசாரணை அதிகாரி தீர்ப்பு வழங்கினார்।
நாளுக்கு நாள் பொருட்களின் விலைகள் அதிகரித்துச்செல்ல இலங்கை முழுவதிலும் தற்போது பால்மாவுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது। இதனால் குழந்தைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்। சில வர்த்தகர்கள் அதிகூடிய விலைக்கு பால்மாவை விற்பனை செய்துவருகின்றனர்।
இந்நிலை தொடருமானால் மேலும் பல தாய்மார்களின் குழந்தைகளின் இறப்புச்செய்தி பத்திரிகைகளில் தலைப்புச்செய்தியாகும் காலம் வெகுதூரத்தில் இல்லை என்பது உண்மை.

8 comments:

Bagthan said...

என்ன இது! சிலோனு இப்படிப்போகுது?

said...

எல்லாம் வறுமையின் கொடுமை பக்தன். வருகைக்கு நன்றி.

The Boss.... said...

only tamils are facing problems in Sri Lanka. All tamils MUST protest against this.

said...

yes yue are correct.thanks Boss.

said...

மிக வேதனையான செய்தி

said...

வருகைக்கு நன்றி யோகன்..(நீண்ட நாட்களுக்குப் பிறகு.. என்ன?)

said...

என்ன கொடுமைய்யா இது?

எப்போதான் தீருமோ இந்த நிலமை அங்கு. மிக்க வருத்தமாக இருக்கிறது.

said...

வருகைக்கு நன்றி.என்னதான் செய்வது சிவா?