என்ன கொடும சார் இது?

கொழும்பில் கடந்த சனிக்கிழமை நடந்த மாணவர்கள் தொடர்பான பொது நிகழ்வொன்றுக்கு சென்றிருந்தேன்। கொழும்பில் இருந்துகொண்டு மலையகத் தமிழர்களின் துயரை கண்ணூடாகப் பார்ப்பதாக கூறிக்கொள்ளும் அமைச்சர் ஒருவர் தான் அன்றைய தினம் பிரதம அதிதி। அவர் உரை நிகழ்த்தினார்।
தற்கால மாணவர் சமுதாயத்தினர் தான் எதிர்காலத்தை கட்டியெழுப்பவேண்டியவர்கள்। அவர்களது திறமைகளுக்கு களம் அமைத்துக்கொடுத்து வளர்த்தெடுக்கவேண்டிய பொறுப்பு எமக்குண்டு। அதற்கான செயற்திட்டங்களையும் நாடளாவிய ரீதியில் நான் முன்னெடுத்து வருகிறேன் என நா கூசாமல் கூறினார்। இதே அமைச்சர் ஒரு தொழிலாளியிடம் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் எப்படிக்கூறியிருக்கிறார் தெரியுமா? பிள்ளைகளின் கல்விக்காக மட்டும் என்னிடம் வராதீர்கள்। தோட்டத்தில் ஏதாவது பிரச்சினை என்றால் சொல்லுங்கள்। உங்கள் பிள்ளைகளுக்கு கல்வியூட்ட வேண்டிய பொறுப்பு என்னுடையதல்ல। தேர்தலின்போது யாருக்கு வாக்களித்தீர்களோ அவர்களிடம் போய் கேளுங்கள் என்றாராம்।

என்ன கொடும சார் இது?

8 comments:

said...

நிர்ஷன்

அரசியல்வாதிகள் சொல்வதை எல்லாம் நம்பிக்கொண்டிருக்கிறீர்களா??

உருப்பட்டா மாதிரிதான்

said...

அரசியல்வாதிகள் சொல்றத நம்புறதில்ல சிவா. இருந்தாலும் சுட்டிக்காட்டனும்தானே? எப்படி பொய்சொல்றார் தெரியுமா? தாங்கமுடியல.

Amalan said...

நிர்ஷன்,
யாரை நம்பி நாம்பிறந்தோம் போங்கடா போங்க. இந்தக் காலம் வெல்லும் வென்ற பின்னே வாங்கடா வாங்க. பாட்ட கேட்ருக்கீங்களா? நம்ம சனங்கள திருந்தச்சொல்லுங்க. அப்புறம் மத்ததெல்லாம் சரியாயிடும்.

Munaivar.M said...

அன்பிற்குரிய இறக்குவானை நிர்ஷன், தற்செயலாக தேயிலைத்தோட்டங்கள் தொடர்பாக கூகுலில் தேடிக்கொண்டிருந்தபோது மிகவும் முக்கயத்துவமுள்ள தங்களுடைய இணையப்பக்கத்தை வாசித்தேன். நல்ல கேளியாகவும் கிண்டலாகவும் தகவல்களை வெளியிடுகிறீர்கள். நான் தற்போது கட்டாரில் இருக்கிறேன். இங்குவந்த 15 வருடங்களாகின்றன. கண்டி தான் எனது சொந்த இடம். எனது மண்ணிலுள்ள தொழிலாளர்களும் இப்படி கஷ்டப்படுகிறார்கள் என நினைத்தால் வேதனையாக இருக்கிறது.
தங்கள் பணிவாழ்க.

Anonymous said...

இவனுங்க சாகும்வரைக்கும் நம்ம சமுதாயம் இப்படித்தானுங்க இருக்கும். நீங்க எவ்வளவு தான் எழுதினாலும் சரிவராதுங்க. இந்தியாவலருந்து போன எங்க சொந்தங்களைப்பத்தி கவனிக்க எங்க நாட்டு அரசாங்கம் கூட முன்வரமாட்டேன்கிது. இதுதான்சார் கொடும.( தமிழ்மணத்திலும் தங்கள் பதிவு மணக்கிறதே. வாழ்த்துக்கள்)

said...

அரசியலில் எதையும் நம்பவேண்டாம்.

said...

நன்றி ரிஷான்,
எப்போதும் அரசியல்வாதிகளை நாம் நம்புவதில்லை தானே. அதுவும் எமது நாட்டைப் பொறுத்தவரையில் தெரியும் தானே? உண்மையில் நமது நாட்டிலிருந்து வித்தியாசமான சிந்தனையுடன் உருவாக்கப்பட்ட உங்களது வலைப்பக்கத்தைப் பார்த்து பூரிப்படைந்தேன். வாழ்த்துக்கள். தொடர்ந்தும் எழுதுங்கள். தொடர்ந்தும் தொடர்பில் இருங்கள். நான் மாவனெல்ல ஸாஹிராவுக்கு வந்திருக்கிறேன்.

said...

எனது மின்னஞ்சல் முகவரி msmrishan@gmail.com
உங்கள் மின்னஞ்சல் முகவரி தெரியவில்லை.கண்டிப்பாக தொடர்பில் இருப்பேன்.