மக்கள் சேவகர்களை வாழ்த்துகிறோம்!


இலங்கை அமைச்சரவையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இன்று மீண்டும் இணைந்து கொண்டது.
அலரி மாளிகையில் மகிந்த ராஜபக்ச முன்னிலையில் நேற்றுறு வியாழக்கிழமை காலை 9:30 மணியளவில் இ.தொ.கா.வினர் மீண்டும் அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர்.
ஏற்கனவே அவர்கள் வகித்த அமைச்சுப் பொறுப்புக்களே மீண்டும் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இ.தொ.கா. தலைவர் ஆறுமுகம் தொண்டமான்- அமைச்சரவை அந்தஸ்துள்ள இளைஞர் வலுவூட்டல் அமைச்சரராகவும் உட்கட்டமைப்பு பிரதி அமைச்சராக முத்துசிவலிங்கமும்
தபால் தொலைத்தொடர்புத்துறை பிரதி அமைச்சராக எம்.எஸ்.செல்லச்சாமியும் கல்வி பிரதி அமைச்சராக சச்சிதானந்தனும் அரசியல் யாப்பு பிரதி அமைச்சராக என். கேதீஸ்வரனும் பதவியேற்றுள்ளனர்.
மகிந்தவின் ஆலோசகரும் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்சவுடன் ஏற்பட்ட கருத்து முரண்பாட்டை அடுத்து கடந்த ஓகஸ்ட் மாதம் 2 ஆம் நாள் ஐந்து பேரும் அமைச்சரவை பொறுப்புக்களிலிருந்து விலகியிருந்தனர்.
உட்கட்டமைப்பு அமைச்சரான முத்துசிவலிங்கத்தை தகாத வார்த்தைகளால் பசில் ராஜபக்ச திட்டி அவரை கடுமையாக எச்சரித்தாலேயே தாம் அமைச்சரவை பொறுப்புகளிலிருந்து விலகியதாகவும் இனி ஒருபோதும் மீண்டும் அமைச்சுப்பதவிகளை ஏற்கப்போவதில்லை என்றும் இ.தொ.கா.வினர் சூளுரைத்திருந்தனர்.
ஆனால் அமைச்சரவை பொறுப்புக்கள் இல்லாது இ.தொ.கா.வினர் இருக்க மாட்டார்கள் என்றும் விமர்சிக்கப்பட்டது. இந்த விமர்சனங்களையும் இ.தொ.காவினர் அடியோடு மறுத்தனர். தாம் ஒருபோதும் அமைச்சரவை பொறுப்புக்களை ஏற்க மாட்டோம் என்று இ.தொ.கா.வின் பிரதி தலைவர் ஆர். யோகராஜன் தெரிவித்திருந்தார் .
இந்நிலையில் இ।தொ.கா.வினர் மீண்டும் நேற்றுக்காலை அமைச்சரவை பொறுப்புக்களை பொறுப்பேற்றுள்ளனர்.

காலங்காலமாக பல்வேறு அமைச்சுப்பொறுப்புகளை வகித்து மக்கள் பணியாற்றிவரும் நமது தலைவர்கள் பிரச்சினையின் பின்னர் மீண்டும் பதவியேற்றுள்ளனர்। மலையகத்துக்காக தம்மை அர்ப்பணித்து பாடுபட்டு வியர்வை சிந்திவரும் நமது தலைவர்கள் மேலும் பல சேவைகள் செய்யக் காத்திருக்கிறார்கள்। மக்களின் நம்பிக்கைக்கும் பாத்திரமாக இருக்கிறார்கள்। புதிதாக அமைச்சுப்பொறுப்புகளை ஏற்றுக்கொண்ட எமது தலைவர்களை நாம் வாழ்த்துகிறோம்।

(செய்தி-நன்றி புதினம்)

6 comments:

Amalan said...

நல்ல கிண்டல் தான் நிர்ஷன். இதெல்லம் எங்க தலவிதி. என்ன சொல்றீங்க?

said...

//தாம் அமைச்சரவை பொறுப்புகளிலிருந்து விலகியதாகவும் இனி ஒருபோதும் மீண்டும் அமைச்சுப்பதவிகளை ஏற்கப்போவதில்லை என்றும் இ.தொ.கா.வினர் சூளுரைத்திருந்தனர்.
//

மானம் கெட்ட ஜென்மங்கள்

Malai thamilzhan said...

அவங்க முகத்த நல்லா பாருங்க. நரி சாயல் தெரியுதுதானே? நிர்ஷன், நீங்களும் நல்லா தான் கிண்டலடிக்கிறீங்க. என்னதான் சொன்னாலும் செவிடன் காது மாதிரி தான்......

said...

தலவிதின்னும் மானம் கெட்ட ஜன்மங்கள்னும் நரிகள்னும் சொல்றீங்க. புரிய வேண்டியவங்களுக்கு புரிய மாட்டேன்கிதே. என்ன தான் இருந்தாலும் நம்ம தலைவர்கள ரொம்பவும் கிண்டலடிக்காதீங்க.

said...

//முட்டாள் சேவகர்கள். இவர்களுக்கு வாழ்த்து வேறா?????//

said...

என்ன நிதர்ஷனி அப்படி சொல்லிட்டீங்க? கட்டாயம் வாழ்த்தனும் தானே? வருகைக்கு நன்றி