உங்களுக்கு நன்றி

கொழும்புவாழ் மலையகத்தமிழர்கள் சிலர் இந்த புளொக் பற்றி பேசியதாக அறிந்தேன்। மிகவும் காரசாரமான வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றதாகவும் தகவல் கிடைத்தது। இது சுயநலம் கருதி செய்யப்படும் சேவையல்ல। பிறந்த மண்ணுக்காகவும் அப்பாவி தமிழ் மக்களுக்காகவும் எதிர்கால மலையகத்துக்காகவும் எங்களால் இயன்ற பணியை செய்ய விளைந்திருக்கிறேன்। அவ்வளவுதான்। யாரையும் புண்படுத்துவது எனது நோக்கமல்ல। யாரையும் கீழ்த்தரமாக குறிப்பிடுவது எனது பழக்கமுமல்ல।

இன்னும் பல சேவைகளை இந்த புளொக்கின் மூலம் அறிமுகப்படுத்தக்காத்திருக்கிறேன்। பொறுத்திருந்து பாருங்கள்। இந்தவிடயத்தைப் பற்றி பேசிய உங்களுக்கு நன்றி.

6 comments:

said...

நிர்ஷன்,

உங்கள் வலைபப்திவு மிகுந்த முக்கியத்துவம் உடையது.

தமிழ் இணைய வெளியில் அதிகம் பேசப்படாத ஒரு மக்கள் கூட்டம் தொடர்பான நடை முறை உண்மைகளை உங்கள் வலைப்பதிவு தரும் என எதிர்பார்க்கிறேன்.

இறக்குவானையிலிருந்தா பதிவிடுகிறீர்கள்?

கொழும்புக்கு வரக்கிடைத்தால் என்னைத் தொடர்புகொள்ளுங்க. சந்திக்க விரும்புகிறேன்.

எனது மின்னஞ்சல்
mmauran.blogspot.com

எனது வலைப்பதிவு
www.mauran.blogspot.com

said...

நன்றி மயூரன்.
மலையக சமுதாயத்தவர்கள் அனைத்து துறைகளிலுமே பின்னிற்பதற்குப் பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. அவர்களை தாழ்வுமனப்பான்னைக்கு உட்படுத்திய பெரும்புள்ளிகளை முதலில் குறிப்பிடவேண்டும்.
நான் இறக்குவானையிலிருந்து தகவல்களை வெளியிடவில்லை. கொழும்பில்தான் இருக்கிறேன். நிச்சயமாக உங்களுடன் தொடர்புகொள்கிறேன். சமுதாய முன்னேற்றத்துக்காக பின்னிற்காது பாடுபடுவோம்.

Srikumar said...

அன்புடன் நிர்ஷன்,
தமிழ்மணம் இணையத்தளத்தில் தங்களுடைய இடுகைகளை வாசித்து மகிழ்ந்தேன். இந்தக் காலத்திலும் இவ்வாறான துடிப்புள்ள இளைஞர்கள் இருக்கிறார்கள் என வியந்தேன். குறிப்பாக நீங்கள் ஓர் ஊடகவியலாளர் என அறிந்து மகிழ்ந்தேன். எனது பூர்வீகம் இலங்கையாயிருந்தாலும் சிங்கப்பூரில் வசித்து வருகிறேன்.தங்களுடன் தொடர்பு கொள்கிறேன். மலையத்தில் மக்கள் இந்தளவுக்கு சிரமத்தை அனுபவிக்கிறர்கள் என்பதை உங்களது இணையப்பக்கத்தினூடாக அறிந்தேன்.

said...

நிர்ஷன்,
நீங்கள் எடுத்த இந்த முயற்சிக்கு
முதலாவது எனது வாழ்த்துக்கள்.
மலையக மக்களோடு தொடர்பு, உறவு இல்லாவிடினும்
உங்கள் பணிக்கு
என்னாலான உதவியைச்செய்ய காத்திருக்கிறேன்.
கலப்பையில் கால் வைத்த பின்
திரும்பிப்பார்க்காதே என்பார்கள்.
ஆதலால் எத்தனை தடைகள் வந்தாலும் எதிர்த்துப் போராடுங்கள்.

said...

முதல்மேடையில் ஒரு கலைஞனுக்குக் கிடைக்கும் கைதட்டல் அவனை எந்தளவுக்கு களிப்பூட்டி எதிர்காலத்தை வெளிச்சமூட்ட உரமூட்டுகிறதோ அந்தளவுக்கு சமுதாய சிந்தனையை தங்கள் கருத்து மீண்டும் ஆழப்பதித்தது. நன்றி நிதர்ஷனி. நீங்கள் கூறியதுபோல இன்னும் பல சேவைகள் செய்யவேண்டும். ஏதோ ஒரு வகையில் எங்களால் சமுதாயம் பயன்படட்டும். வெறுமனே மண்ணுக்கு உரமாவதை விட சமுதாயத்துக்கு உரமாவது மேல். நன்றி

Ramkumar Swiss said...

மயூரன் கூறியதுபோல இந்த வலைப்பதிவு முக்கியத்துவமுடையது.அதிலும் நிர்ஷன் மனதைத் தொடும் அளவுக்கு கருத்துக்களை சுதந்திரமாக வெளியிட்டு வருகிறார். மலையக மக்களோடு தொடர்பு உறவு இல்லையென கூறாதீர்கள் நிதர்ஷனி. நான் இலங்கையில் இருந்த காலப்பகுதியில் நிறைய மலையக இளைஞர்களுடன் தொடர்பு வைத்திருந்தேன். உயிரையும் கொடுத்துப் பழகுவார்கள். மனதில் கபட எண்ணங்களோ வஞ்சிக்கும் பழக்கங்களோ இல்லாதவர்கள்.