மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில்...!


கடும் நிறக்கட்சிக்கார அரசியல்வாதி (சொல்லிக்கொள்கிறார்!) மலையகத்தின் சில பகுதிகளுக்கு சென்று பிரசாரம் செய்வதற்கு சில தொழிலாளர்களை நியமித்துள்ளாராம்। அந்தத் தொழிலாளர்கள் தோட்டங்கள் தோறும் சென்று கட்சிக்கு அங்கத்தவர்களை இணைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனராம்। இதில் என்ன வேடிக்கை என்றால் அந்தத் தொழிலாளர்களுக்கே கட்சி குறித்து விளக்கமில்லாததுதான்। அத்துடன் பணத்துக்காகத் தான் இதைச்செய்கிறோம்। இல்லாவிட்டால் கட்சி கருமம் ஒன்றும் தேவையில்லை என அவர்களே சில சந்தர்ப்பங்களில் சொல்லியிக்கிறார்கள்।


அது அப்படியென்றால் அரசியல் தலைவர் என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா? எங்களது கட்சியை தொழிலாளர்கள் மனதில் அடிக்கடி ஞாபகம்வரும்படி செய்ய வேண்டும்। அதற்கு ஒரே வழி மாதத்துக்கு ஒரு தடவையேனும் அவர்களின் சம்பளப்பிரச்சினை பற்றி ஊடகங்களுக்கு அறிக்கை விடுவதுதான்। சும்மா தான் ஆட்களை அனுப்பி அங்கத்தவர்களை சேர்க்கச்சொன்னேன்। இப்போதெல்லாம் அரசியல் நடத்துவது சிரமமாகிவிட்டது என்றாராம் ஒரு விருந்துபசாரத்தில்।


ஐயா, உங்களுடைய கட்சியை வளர்ப்பதற்காக எதை வேண்டுமானாலும் செய்யுங்கள்। தயவுசெய்து தொழிலாளர்களின் வாழ்க்கையை கெடுக்காதீர்கள்। அவர்கள் அப்பாவிகள்। சுயநலத்துக்காக சமுதாயத்தை சீரழிப்பது எந்த வகையில் நியாயம்? அவர்கள் பகடைக்காய்களல்ல! அதை உணருங்கள்.

4 comments:

thamilkirukkan said...

நல்ல படமொன்னு போட்ருக்கீங்க. பயப்படாம சும்மா கலக்குறீங்க போங்க...

said...

வலைப்பதிவுக்கு வாழ்த்து.
மலையகத்தைப் பிரதிபலிக்கும் வலைப்பதிவுகள் தமிழில் மிகமிகக் குறைவு. முன்பு ஒருவர் (ஜோசப் என்ற பெயரில் என்று நினைக்கிறேன்) எழுதிக்கொண்டிருந்தார். பின்பு அவரையும் காணவில்லை.
நீங்களாவது தொடர்ச்சியாக எழுதுங்கள்; இன்னும் பலரை ஊக்குவியுங்கள்.

said...

மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறுதோ இல்லையோ, இந்த அரசியல்வாதியின் பின் செல்லும் தொழிலாளர்களை எப்படி திருத்துவது. இவர்களெல்லாம் இப்படி இருக்கும் போது எப்படி நிர்ஷன் எமது மக்களை பாதுகாப்பது.

said...

தமிழ்கிறுக்கன்,வசந்தன்,நிதர்ஷனி வருகைக்கு நன்றி. வசந்தன் உங்களுடைய வலைப்பக்கத்தை பார்த்தேன். இணையத்தினூடாக ஈழத்தின் அறிவுவேரை உலகுக்கு காட்டிக்கொண்டிருக்கும் தமிழர்களில் நீங்களும் ஒருவர். யார் அந்த ஜோசப்? தகவல் தருவீர்களா?
மக்களாகவே விழிப்புணர்வு பெற்று உணரும் வரை மாற்ற முடியாது நிதர்ஷனி. பொறுத்திருந்து பார்ப்போம்.