ஒரு சோகம் சிரிக்கிறது!


பட்டினிக்கு குறைவில்லை
பள்ளிப்பாடம் பிடிக்கவில்லை
சாப்பிட சோறில்லை
விலையும் குறையவில்லை

தலைவர்கள் என்று சொல்பவர்கள்
தாகம் தீர்க்க மறுக்கிறார்கள்

பணத்தை நோக்கும் பாவிகள் சிலர்
பொதுநலம் என்று கதைக்கிறார்கள்

போகும் வழியில் ஒளியில்லை
எதிலும் எமக்குத் தெளிவில்லை

கவலை மறந்து சிரிக்கிறேன்
கமராவுக்காக நடிக்கிறேன்

இனிக்கிறது மாங் கனி
வேறு வழியியுமில்லை இனி

-ஆர்।நிர்ஷன்

2 comments:

Thamilnesan said...

சூப்பரா இருக்கு!அப்படிப்போடுங்க...

said...

நன்றி தமிழ்நேசன். உங்கள் பணியும் தொடரட்டும்.