தாக்குதலின் பிரதிபலிப்பு !!!

அனுராதபுரம் விமானப்படைத்தளம் மீது விடுதலைப்புலிகள் மேற்கொண்ட கடும் தாக்குதல் நாடெங்கிலுமுள்ள பேரினவாதிகளுக்கு பேரிடியைக் கொடுத்துள்ளது। எதைப்பேசி எப்படி சமாளிக்கலாம் என அரசியல்வாதிகள் ஒருபுறமும் தமிழர்களை ஒடுக்குவதற்கு எந்தவகையில் தாம் பங்களிப்பு செய்யலாம் என சிங்கள் இனவாத மக்களும் சிந்தித்துக்கொண்டிருக்கின்றனர்।

இந்நிலையில் கொழும்பிலுள்ள அப்பாவி தமிழர்களிடம் சில அவசியமற்ற கேள்விகளை பாதுகாப்புத்தரப்பினர் கடந்த இரண்டு நாட்களாக கேட்கின்றனர்। கொழும்பில் இது வழமைதான் என்றாலும் சில படையினரின் நடத்தையில் துவேசம் தலைவிரித்தாடுவதாக சம்பந்தப்பட்ட மக்கள் தெரிவித்தனர்।

"இதுவரை எத்தனை புலிக்கு நீ சோறு போட்டிருக்கிறாய்? என்ன சோறு போடவில்லையா? அப்படியென்றால் உன்னுடையதை எதைக் கொடுத்தாய்? " என்று வெள்ளவத்தையில் வசிக்கும் தமிழ்ப்பெண்ணிடம் இராணுவ வீரர் ஒருவர் கேட்டுள்ளார்।

முழுமையான இனத்துவேசக் கிணற்றுக்குள் வீழ்ந்து கிடக்கும் இவர்கள் அப்பாவிகளைக் கூட வார்த்தைகளால் துன்புறுத்துகிறார்கள்। சம்பந்தப்பட்ட அனைவருமே இவ்வாறான பிரச்சினைகளைத் தீர்க்க முன்வரவேண்டும்.

10 comments:

Indrani said...

சிறிலங்காவுல மடயனுங்க ஆட்சி தானே நடக்குது? அதுல தமிழர்கள் தேசிய அமைப்பு சம்பளம் வாங்குறதுதான் வேடிக்கை.(தமிழ் தேசிய அமைப்புதானே பெயர்?)

said...

//சம்பந்தப்பட்ட அனைவருமே இவ்வாறான பிரச்சினைகளைத் தீர்க்க முன்வரவேண்டும்//

நிர்ஷன்,
சில படையினர் இல்லை பல படையினர். எனது வீட்டிற்கு போகும் ஒழுங்கையில் சோதணைச் சாவடி இருக்கிறது. இதில் என்ன பகிடி என்றால் அங்கு இருக்கும் இராணுவத்தினர் காலையில் காணும் என்னையே மீண்டும் மாலையிலும் கேள்வி கேட்பார்கள். என்ன காரணம் தெரியுமா? நான் யாழ்ப்பாண அடையாள அட்டை வைத்திருக்கிறேனாம். எங்களை புலிக்குட்டிகள் என்றே முத்திரை குத்தி விட்டார்கள்.
"இந்த பிரச்சினையை தீர்க்க ஒரே வழி கதைத்துக்கொண்டிருப்பதில்லை, சோதணை செய்யும் இடங்களை நீக்குவது" நீங்கள் நினைக்கிறீர்களா... இது நடைபெறும் என்று. கனவிலாவது காண்போம்.

said...

இந்திராணி,நிதர்ஷனி வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

pattraalan said...

சோதனைச்சாவடிகளை நீக்க முடியாது. அவ்வாறு நீக்கினால் ஒருநேரத்தில் நானோ நீங்களோ எமது பிள்ளைகளோ உறவினர்களோ கூட இறக்க நேரிடலாம்.

Anonymous said...

தேன்கூடு தளத்திலும் சிறப்பாக உங்களுடைய பக்கம் வலம் வருகிறது. பாராட்டுக்கள். ஆனால் துணிவில்லாமல் கோழையைப்போல எழுதுவதுதான் வேதனையளிக்கிறது தோழரே. இருந்தாலும் வாழ்க வளமுடன்.

Amalan Hatton said...

அப்படிப்போடுங்க!

இளையவன் said...

//Anonymous said...

தேன்கூடு தளத்திலும் சிறப்பாக உங்களுடைய பக்கம் வலம் வருகிறது. பாராட்டுக்கள். ஆனால் துணிவில்லாமல் கோழையைப்போல எழுதுவதுதான் வேதனையளிக்கிறது தோழரே. இருந்தாலும் வாழ்க வளமுடன்.//

அதை நீங்கள் அனானியாகத் தான் வந்து சொல்லவேணுமா? துணிவோடு எதை எழுதவேணும் என்றும் சொல்லுங்களேன்?

இந்தப் பதிவர் இலங்கையில் இருக்கின்றார்,தமது எல்லைக்குட்பட்டே தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தமுடியும்.

said...

நன்றி இளையவன்.
தனது கருத்தை தனது பெயரில் சொல்லத் துணிவில்லாதவர்கள் இப்படிப்பேசுகிறார்கள்.

said...

வணக்கம் நிர்ஷ‌ன்
என‌து தமிழ் ந‌ண்ப‌ர் ஒருவ‌ரின் மக‌னுக்கு(2 வயது) கடந்த ஞாயிற்றுக்கிழமை பிறந்த நாள் அடுத்த நாள்(திங்கட் கிழமை ) அவ‌ர் ஓபிசில் ந‌ண்ப‌ர்க‌ளுக்கு பார்ட்டி கொடுத்தார். செவ்வாய்க்கிழ‌மை அவ‌ரை நிர்வாக‌ம் விசாரித்த‌து கார‌ண‌ம் நீ பார்ட்டி கொடுத்த‌து அனுராத‌புர‌ தாக்குத‌ல் வெற்றிக்கு என்று. இத்த‌னைக்கும் அந்த‌ அலுவ‌ல‌க‌ முஸ்லிம் ஒருவ‌ருடைய‌து. எப்ப‌டியெல்லாம் சிந்திக்கிறார்க‌ள்.

said...

வருகைக்கு நன்றி வித்யா.என்ன செய்வது நாட்டின் நிலைமை அப்படி.