அமரர் செளமியமூர்த்தி தொண்டமான் அவர்களை நன்றியுடன் நினைவுகூருகிறோம்..!


இந்திய மண்ணில் பிறந்து இந்திய வமிசாவளி மக்களான மலையகத் தமிழர்களுக்கு தம்மால் இயன்றவரை சேவைகள் செய்துள்ள அமரர் செளமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் எட்டாவது ஆண்டு நினைவுதினம் இன்றாகும்। தொழிலாளர் வர்க்கத்துக்குரிய உரிமைகளை போராட்டத்தின் மூலமாகவும் தன்னார்வமிக்க தொண்டின் மூலமாகவும் பெற்றுக்கொடுக்க முனைந்து பலசவால்களைச் சந்தித்து பல சமூகப்பணிகளை மக்களுக்காக செய்த மக்கள் தொண்டரை நன்றியுடன் நினைவுகூருகிறோம்।

வலைப்பயணர்கள் அறிந்துகொள்வதற்காகவும் பொதுமக்களின் தகவலுக்காகவும் அமரர் செளமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் வாழ்க்கை வரலாற்றினை நான் அறிந்தவரையில் திரட்டித்தருகிறேன்।
ஆரம்பவாழ்க்கை
சௌமியமூர்த்தி தொண்டமான் (ஆகஸ்ட் ३०- 1913 - அக்டோபர் ३०- 1999) இலங்கை வாழ் இந்தியத் தமிழர்களது முக்கிய அரசியல் தலைவர்களில் ஒருவராவார்। 86 வது வயதில் இவர் இறக்கும் போது இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் தலைவராகவும் இலங்கை அரசின் அமைச்சரவையில் வயது கூடிய அமைச்சராகவும் காணப்பட்டார். இவர் தொடர்ந்து 21 வருடங்கள் இலங்கை பாராளுமன்றில் அமைச்சராகப் பதவி வகித்தார்.

ஆரம்ப வாழ்க்கைதொண்டமானின் தந்தையார் இந்தியாவின் புதுக்கோட்டை பகுதியில் இருந்த அரச பரம்பரை வழி வந்தவராவார்। இவர் முன்ன புத்தூர் என்ற கிராமத்தில் வசித்து வந்தார்। எனினும் அவரது தந்தையின் காலத்தில் அவர்களது குடும்பம் ஏழ்மையில் வாடியது। இதனால் கருப்பையா இலங்கையில் கோப்பி தோட்டத்துக்கு வேலை செய்ய சென்றவர்களுடன் கூடஇ இலங்கை சென்று அங்கு வேலை செய்து செல்வம் சேர்த்தார். பின்னர் இந்தியா திரும்பிய அவர் தமது கிராமத்தில் சீதாம்மை என்பரை 1903 இல் திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு பிறந்த முதல் பெண் குழந்தை சிறிது காலத்தில் இறந்து போனது. மறுபடி இலங்கை திரும்பிய கருப்பையா இலங்கையில் நுவரெலியா மாவட்டத்தில் அமைந்துள்ள வெவண்டன் என்னும் தேயிலை தோட்டத்தை விலைக்கு வாங்கினார். ஒருவருடத்துக்கு பிறகு இந்தியா திரும்பிய கருப்பையாவுக்கு மூன்று பெண் குழந்தைகளுக்கு பிறகு ஐந்தாவது குழந்தையாக சௌமியமூர்த்தி 1913 அக்டோபர் 30 இல் பிறந்தார்.

சௌமியமூர்த்தியின் பிறப்புக்கு பின்னர் உடனடியாக இலங்கை திரும்பிய கருப்பையா சௌமியமூர்த்தியின் ஏழாவது வயதில் தமது கிராமத்துக்கு திரும்பினார் அவ்வேளையில் தமது தந்தையாருடன் நெருங்கிய தொடர்பை வளர்த்துக் கொண்டார்। இலங்கை திரும்பிய கருப்பையா நான்கு ஆண்டுகளுக்கு பிறகு சௌமியமூர்த்தியை இலங்கைக்கு தம்முடன் அழைத்துக் கொண்டார். 1924 ஆம் ஆண்டு தமது 11வது அகவையில் இலங்கை வந்த சௌமியமூர்த்தி தமது 14வது அகவை தொடக்கம் கம்பளை புனித அந்திரேயர் கல்லூரியில் சேர்ந்து தமது கல்வி கற்றார்.

1927இல் கம்பளை புனித அந்திரேய கல்லூரியில் சௌமியமூர்த்தி இணைந்த அதே வருடத்தில்இ மகாத்மா காந்தி இலங்கை வந்திருந்தார்। அவரில் உரைகளால் சௌமியமூர்த்தி மிகவும் கவரப்பட்டார். முக்கியமாக காந்தி தமது கண்டி உரையில் தோட்ட உரிமையாளர்கள் தங்களது தோட்டங்களில் வேலை செய்யும் பணியாளர் மீது தனிப்பட்ட கவனம் செலுத்தி அவர்களது தேவைகளை கவனிக்குமாறு கேட்டுக் கொண்டமையானது சௌமியமூர்த்தியின் வாழ்வில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்திய விடுதலை இயக்கத்தில் சௌமியமூர்த்தி நாட்டம் அதிகமாக தொடங்கியது.

திருமணமும் குடும்பமும்
அச்சமயம் நோய்வாய்ப்பட்டிருந்த தந்தையார் அவருக்கு திருமணம் செய்துவைக்க ஏற்பாடு செய்தார்। இதன்படி 1932 ஆம் ஆண்டு இந்தியாவில் வசித்த சௌமியமூர்த்தியின் தாயாரும் சகோதரியும் பார்த்த பெண்ணான கோதை என்பவரோடு, மணமகன் இல்லாமலேயே சௌமியமூர்த்தியின் சகோதரி தாலிக்கட்ட திருமணம் முடிந்தது। அதே ஆண்டு இந்தியா திரும்பிய சௌமியமூர்த்தி ஒரு வருடமளவில் அங்கு தங்கியிருந்தார். அக்காலப்பகுதியில் அவரது மகன் இராமநாதன் பிறந்தார். பின்னர் குழந்தையையும் மனைவியையும் இந்தியாவில் விட்டுவிட்டு இலங்கை திரும்பிய சௌமியமூர்த்தி தந்தையாரின் உடல் நிலை பாதிப்பு காரணமாக வெவண்டன் தோட்ட நிர்வாகத்தை தானே பார்த்து வந்தார். 1939ஆம் ஆண்டு உடல் நிலை மிக மோசமாக காணப்பட்ட கருப்பையாவின் வேண்டுகோளுக்கு இணங்க சௌமியமூர்த்தியின் மனைவி கோதையும் மகன் இராமநாதனும் இலங்கை வந்தனர். 1940 இல் கருப்பையா காலமானார். பின்னாளில் இராமநாதன் இலங்கை மத்திய மாகண அமைச்சராக தேர்தெடுக்கப்பட்டார்.

அரசியல் பிரவேசம்
1930களின் ஆரம்ப காலப்பகுதியில் அட்டன் நகரில் காந்தி சேவா சங்கம் என்ற சங்கமொன்று இயங்கி வந்தது। இராசலிங்கம்இ வெள்ளையன் போன்ற இளைஞர்கள் அதில் முக்கிய பங்காற்றி வந்தனர்। காந்திய வழிச்சென்ற செல்வந்த வாலிபனான சௌமியமூர்த்தியை இவர்கள் அச்சங்கக் கூட்டம் ஒன்றுக்கு அழைத்தனர்। சௌமியமூர்த்தி தனது தந்தைக்கு அரசியல் மீது இருந்த வெறுப்பு காரணமாக முதலில் பங்கு பற்ற மறுத்தாலும் பின்னர் அதில் பங்கேற்றார். மேலும் அப்போது நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் வழிசென்ற இயக்கமான போஸ் சங்க கூட்டங்களிலும் பங்கேற்றார். இவற்றில் சௌமியமூர்த்தி உரையாற்றத் தொடங்கினார்.

ஜூலை २४- 1939 இல் ஜவஹர்லால் நேருவின் கருத்துக்கேற்ப ஆரம்பிக்கப்பட்ட இலங்கை இந்திய காங்கிரசின் கம்பளைக் கிளையின் தலைவராகஇ ஆகஸ்ட் 13 1939 இல் சௌமியமூர்த்தி தேர்ந்தெடுக்கப்பட்டார்। இது தனது தந்தையின் விருப்பத்துக்கு மாறாகக் காணப்பட்டாலும் இந்தியாவில் இருந்து இலங்கை வந்த வேலையாட்கள் படும் துயரங்களை அறிந்திருந்தபடியால் அவர்களுக்கு சேவை செய்யும் பொருட்டு அப்பதவியை ஏற்றுக் கொண்டார்.

இலங்கையில் 1930களின் கடைசி பகுதியில் ஏற்பட்ட இந்திய எதிர்ப்பு அலைகள் காரணமாக அதிகளவான தோட்டத் தொழிலாளர்கள் இலங்கை இந்திய காங்கிரசில் இணைந்தனர்। இதனால் அவர்களது பிரச்சினைகளை பேச வேண்டிய தேவை இலங்கை இந்திய காங்கிரசுக்கு ஏற்பட்டது. ஆனால் இலங்கை இந்திய காங்கிரஸ் இந்திய தொழிலாளரது பிரச்சினைகளை தோட்ட நிர்வாகத்திடம் கொண்டு சென்ற போது அவர்கள் அரசியல் கட்சியுடன் பேச மறுத்தனர். மாறாக தொழிற்சங்கத்துடன் மட்டுமே பேச முடியுமென வாதிட்டனர். இதனால் 1940 மே மாதம் இலங்கை இந்திய காங்கிரசின் தொழிற்சங்க கிளை ஆம்பிக்கப்பட்டது. இதன் ஆரம்ப தலைவராக சௌமியமூர்த்தியும்இ செயளாலராக பம்பாய் பல்கலைக்கழகத்தின் வர்த்தக பட்டதாரியும்இ இடதுசாரி கருத்து கொண்டவரான அப்துல் அசீசும் தெரியப்பட்டனர். 1940 செப்டம்பர் 7 - 8 இல் இலங்கை இந்திய காங்கிரசின் தொடக்க விழாவை தலைமை தாங்கி நடத்தினார். இந்நிகழ்வே இவரது வாழ்வின் முதலாவது பிரதான அரசியல் நிகழ்வாகும்.

இலங்கை இந்திய காங்கிரசின் இரண்டாவது பொதுக்குழு கூட்டம் கண்டியில் 1942 இல் கூடியபோது தலைமைக்கு நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் சௌமியமூர்த்தி அஸீசிடம் தோல்வி கண்டார்। எனினும் 1945 ஆம் ஆண்டு நுவரெலியா பொதுக்குழுவில் இலங்கை இந்திய காங்கிரசினதும் அதன் தொழிற்சங்கத்தினதும் தலைவராக தெரிந்தெடுக்கப்பட்டார்.

முதலாவது தொழிற்சங்க போராட்டம்
1946 இல் கேகாலையில் உள்ள தேயிலை தோட்டமொன்றான நவிஸ்மியர் தோட்டத்தில் இருந்த 360 தமிழ் தோட்ட தொழிலாளார் குடும்பங்கள் அருகில் இருந்த சிங்கள கிராமத்தவருக்கு நிலம் பகிர்ந்து கொடுக்கப்பட வேண்டும் எனக் கூறி தோட்டத்தில் இருந்து உடனடியாக வெளியேறுமாறு அரசால் பணிக்கப்பட்டனர்இ அவர்களுக்கு வேலையும் மறுக்கப்பட்டது। தோட்டத் தொழிலாளர்கள் தாங்கள் பிறந்து வளர்ந்த இடத்தில் இருந்து வெளியேற மறுத்தனர்। தோட்ட நிர்வாகம் இக்குடும்பத்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொண்டது। உடனடியாக செயலில் இறங்கிய சௌமியமூர்த்தி தொண்டமான் சட்ட நடவடிக்கையில் இறங்கியதோடுஇ இலங்கை இந்திய காங்கிரசின் அட்டன்இ இரத்தினபுரிஇ எட்டியாந்தோட்டைஇ கேகாலை பிரதேச தலைவர்களை அழைத்து அப்பிரதேச தேயிலைஇ இறப்பர்இ கோப்பி தோட்டங்களில் வேலை நிறுத்தத்தை அறிவித்தார்। மேலும் முழுத்தோட்டத்துறையையும் முடக்க போவதாக அறிவித்தார்। வேலை நிறுத்தம் 21 நாட்கள் நீடித்தது। அப்போது விவசாயத்துறை அமைச்சராக இருந்த டி। எஸ்। சேனநாயக்கா இந்தியப் பிரதிநிதிகளுடன் பேச்சுக்களுக்கு இணங்கினார்। பேச்சுக்களில் ஏற்பட்ட இணக்கப்பாடுகளுக்கு ஏற்ப ஆளுனர் மூர் 360 குடும்பங்களையும் மன்னிக்குமாறு பணித்தார்.

பாராளுமன்ற அங்கத்தவர்
1947 இல் 95 பாராளுமன்ற அங்கத்தவர்களை தெரிவு செய்வதற்காக பொதுத்தேர்தல் நடத்தப்பட்டது। இலங்கை இந்திய காங்கிரஸ் எட்டு ஆசனங்களுக்கு போட்டியிட்டு ஏழு இடங்களை கைப்பற்றியது. சௌமியமூர்த்தி தொண்டமான் நுவரெலியா ஆசனத்தில் போடியிட்டுஇ 9386 வாக்குகள பெற்றார். இது இரண்டாவதாக வந்த ஜேம்ஸ் இரத்தினத்தை விட 6135 வாக்கு அதிகமாகும். அவர் பாராளுமன்றத்தில் இடசாரி கட்சிகளோடு எதிர்க்கட்சி ஆசனத்தில் அமர்ந்தார். தொண்டமான் இலங்கையில் முக்கிய அரசியல் சக்தியாக வளரத் தொடங்கிய போது 1948 பெப்ரவரி 4 இல் இலங்கை சுதந்திரம் பெற்றது.

இந்திய பாகிஸ்தானிய குடியுரிமைச் சட்டம்
இலங்கையின் முதலாவது பாராளுமன்றத்தின் பிரதமரான டி। எஸ்। சேனநாயக்கா இலங்கையில் பிரித்தானிய ஆட்சியின் போது இலங்கை வந்து குடியேறிய இந்திய பாகிஸ்தானிய மக்களது குடியுரிமையை பறிக்கும் சட்டம் ஒன்றை முன்வைத்து நிறைவேற்றினார். சௌமியமூர்த்தி தொண்டமான் இதற்கு எதிராக பாராளுமன்றில் வாதப்பிரதிவாதங்களை செய்தும் பலனற்றுப் போனது. குடியுரிமையைப் பறித்த பின்னர் டி. எஸ். சேனநாயக்கா இந்திய பாகிஸ்தானிய குடியுரிமைச் சட்டம்-1949 என்ற புதிய சட்டத்தை கொண்டு வந்தார். இதன் படி இலங்கை குடியுரிமையை பெற பல தகைமைகள் முன்மொழியப்பட்டிருந்தது. இது சரியான சட்டமாக தெரிந்தாலும் பல நடைமுறைச் சிக்கல்களை கொண்டிந்தது. இதனால் அச்சிக்கல்களைச் சுட்டிக்காட்டி தொண்டமான் இதனைப் பாராளுமன்றில் எதிர்த்தார். இலங்கை இந்திய காங்கிரசின் மத்தியக் குழு யாரும் குடியுரிமைக்கு விண்ணப்பிக்க கூடாது என தீர்மானித்தது. இதன்படி பெரும்பான்மையான இந்தியர்கள் விண்ணப்பிக்கவில்லை. ஆனால் இலங்கை இந்திய காங்கிரசின் ஏழு பாராளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரம் தமது பாராளுமன்ற ஆசனங்களை காத்துக் கொள்ளும் பொருட்டு விண்ணப்பிக்க அனுமதிக்கப்பட்டனர். டி. எஸ். சேனநாயக்காவின் மரணத்துக்கு பின்னர் பொதுத்தேர்தல் நடத்தப்பட்டது. இதன்போது இந்தியர்கள் குடியுரிமை அற்றவர்களாக இருந்தபடியால் தொண்டமானும் ஏனைய ஆறு பிரதிநிகளும் மீண்டும் பாராளுமன்றம் செல்ல முடியவில்லை.

1952 சத்தியாகிரகம்
ஏப்ரல் २८- 1952 இல் இலங்கை வாழ் இந்திய மக்களுக்கு குடியுரிமை வழங்குமாறு தொண்டமான் பேரணியொன்றையும் சத்தியாக்கிரகம் ஒன்றையும் நடத்த ஆரம்பித்தார்। ஏப்ரல் 29இ 1952 இல் அசீசுடன் கூடச் சென்று பிரதமரின் அலுவலக அறைக்கு முன்னதாக சத்தியாகிரகத்தில் ஈடுபட்டார். பல சிக்கல்களுக்கு மத்தியில் இதனை தொடர்ந்து செய்தார். பல சந்தர்ப்பங்களில் பொலிசார் அவரை பலவந்தமாக சத்தியாக்கிரக இடத்தில் இருந்து அகற்றினாலும் மீண்டும் அவ்விடத்துக்கு திரும்பினார். பாராளுமன்றம் முன்பாகவும் தமது அகிம்சை போராட்டத்தை தொடர்ந்தார். இப்போராட்டங்கள் காரணமாக அரசு இந்தியர்களை மீண்டும் குடியுரிமைக்கு விண்ணப்பிக்க கோரியது. இதன் போது 850இ000 பேர் குடியுரிமைக்காக விண்ணப்பித்தனர். 1950 களில் இலங்கை இந்திய காங்கிரஸ் சார்பாக எவருமே பாராளுமன்றம் செல்லவில்லை.

அசீசின் பிரிவு
ஆரம்பத்தில் இருந்தே அசீசுடனான சில கருத்து முரன்பாடுகள் காணப்பட்டாலும் அவை பொது நோக்கு ஒன்றுக்காக பின்தள்ளப்பட்டு வந்தது। அசீஸ் இலங்கை இந்திய காங்கிரசை இடதுசாரிகள் பக்கமாக நகர்த்துகிறார் என்ற குற்றச்சாட்டு தொண்டமானால் முன்வைக்கப்பட்டது। மேலும் அசீஸ் முஸ்லிமாகவும் தமிழ் பேச முடியாதவராகவும் காணப்பட்டார். ஆனால் சௌமியமூர்த்தி பெரும்பான்மையான இந்திய தொழிளாலர்களை போல இந்து தமிழராக காணப்பட்டார். இவர்களின் கருத்து முரண்பாடு 1945இல் இருந்து வெளித்தோன்றியது. 1945 முதல் இலங்கை இந்திய காங்கிரசின் ஒவ்வொரு தலைவர் தெரிவு வாக்கெடுப்பிலும் சௌமியமூர்த்தி அசீசை வெற்றிக் கொண்டார். 1954இல் அட்டனில் நடைபெற்ற இ. இ. கா. பொதுக்கூட்டத்தில் தொண்டமான் தலைவர் பதவிக்கு போட்டியிடவில்லை. அசிஸ் இதில் வெற்றிப்பெற்றார். கட்சிக்குள் பலர் சௌமியமூர்த்திக்கு ஆதரவு நிலை எடுத்தபடியால் டிசம்பர் 13 1955 அசிஸ் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். வெளியேற்றப்பட்ட அசீஸ் சனநாயக தொழிளாலர் காங்கிரஸ் என்ற புதிய கட்சியை ஆரம்பித்தார்।

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்
அசீஸ் இ।இ।கா।வின் தலைவராக தெரிவான 1954 அட்டன் பொதுக்குழுவில் இலங்கையில் அப்போது இ.இ.கா.வுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட இந்திய சார்பு குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் வகையில் இலங்கை இந்திய காங்கிரசினது பெயர் இலங்கை சனநாயக காங்கிரஸ் என்றும் இலங்கை இந்திய காங்கிரஸ் தொழிற் சங்கத்தினது பெயர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் என்றும் மாற்றப்பட்டது. அசீஸ் கட்சியில் இருந்து வெளியேறிய பிறகு சட்டச் சிக்கல்கள் காரணமாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா.) மட்டுமே சௌமியமூர்த்தியின் தலைமையில் கீழ் வந்தது. அது முதல் 1999 இல் அவர் இறக்கும் வரையில் இ.தொ.கா.வின் தலைவராக பதவி வகித்தார்.

1956 இல் சர்வதேச தொழிலாளர் நிறுவனத்தின் இலங்கை பிரதிநிதியாக தெரிவு செய்யப்பட்டார்। மேலும் அதன் செயற்குழுவுக்கும் தெரிவு செய்யப்பட்டார் இப்பதவியை அவர் 1978 இல் அமைச்சராக பதவியேறும் வரையில் தொடர்ந்து வகித்து வந்தார்.

சிறி கலவரம் 1957
1957 இல் இலங்கை சுதந்திர கட்சி தலைமையிலான அரசின் போக்குவரத்து அமைச்சர் மைத்திரிபால சேனாநாயக்கா வகன எண்தகடுகளில் ஆங்கில எழுத்துக்கு பதிலாக சிங்கள் சிறி (ஸ்ரீ) எழுத்து பாவிக்கப்பட வேண்டும் எனப் பணித்தார்। இதனால் இலங்கையின் வட்க்கு கிழக்கில் இலங்கைத் தமிழரசுக் கட்சி தலைமையில் சிறி-எதிர்ப்பு போராட்டம் வெடித்தது। தெற்கில் சிங்களவரால் தமிழ் பெயர் பலகைகளுக்கு தார் பூசப்பட்டது। இப்போராட்டத்துக்கு மத்திய மலை நாட்டில் இந்திய வம்சாவளியினர் வாழும் பகுதிகளிலும் ஆதரவு கிடைத்தது। இதனால் அப்பகுதிகளில் சிங்கள-தமிழ் கலவரம் மூண்டது. இதன் போது அப்போதைய பிரதமரான எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்காவின் வேண்டுகோளுக்கு இணங்க தொண்டமான் மத்திய மலைநாட்டின் நகரங்களுக்குச் சென்று நிலைமையை சீர் செய்தார். பின்னர் வெளியிட்ட ஊடக குறிப்பில் மலையக தமிழ் இளைஞ்ஞர்கள் அமைதிகாக்க வேண்ண்டு மெனவும்இ வடக்கு கிழக்கு தமிழர் பிரச்சினயிலிருந்து மலையக தமிழரது பிரச்சினை வேறுப்பட்டது எனவும் சுட்டிக்காட்டினார். மேலும் யூன் १९५७- இல் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்காவுக்கு எழுதிய கடிதம் மூலம் இலங்கை சுதந்திர கட்சியையும் இலங்கைத் தமிழரசுக் கட்சியையும் பேச்சுகளுக்கு இணங்கச் செய்துஇ பின்னர் பௌத்த பிக்குகளின் எதிர்ப்பு காரணமாக கிழித்தெறியப்பட்ட பண்டா-செல்வா ஒப்பந்த்துக்கு வித்திட்டார்.

போட்டியிட்ட தேர்தல்கள்
டிசம்பர் २३- 1959 இல் அசீசின் சனநாயக தொழிளாலர் காங்கிரசும்இ இலங்கை தொழிலாளர் காங்கிரசும் ஒன்றிணைந்து தேர்தலில் போட்டியிட்டது। இதன்போது நுவரெலியா ஆசனத்துக்கு போட்டியிட்ட தொண்டமான் தோல்வியுற்று பாராளுமன்ற்றம் செல்ல முடியவில்லை। அம்முறை சிறிமாவோ பண்டாரநாயக்கா ஆட்சி அமைத்தார்। ஆகஸ்ட் ४- 1960 இல் சிறிமாவோ பண்டாரநாயக்கா, தொழிலாளர் பிரதிநிதியாக சௌமியமூர்த்தியை பாராளுமன்றத்துக்கு நியமித்தார்। மார்ச் २२-1965 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஐ।தே.கவுடன் இணைந்து போட்டியிட்டார்.
( வலைப்பயணர்களுக்கு மற்றும் இணையப்பாவனையாளர்களுக்கு மேலதிக தகவல் கிடைக்குமாயின் தயவுசெய்து பின்னூட்டம் தாருங்கள்)

21 comments:

Indrani said...

இந்திய மண்ணில் பிறந்தவருக்கு நானும் கெளரவம் செலுத்துகிறேன் நிர்ஷன்..(மன்னிக்கவும் பின்னூட்டலுக்கு எனக்கு தகவல் தெரியாதே!)

said...

அமரர் தொண்டமாண் நினைவில் வைத்து எழுதியமைக்கு நன்றிகள்.
அரசியல் வாரிசுகள்
அவரது மகன் இராமநாதன் மற்றும் பேரன் ஆறுமுகன் ஆகியோர் இவரது அரசியல் வாரிசாக பார்க்கப்பட்டாலும். பேரன் ஆறுமுகன் உக்கிய அரசியல் வாரிசாக பார்க்கப்படுகிறார்.

மேல் கொத்மலைத் திட்டாம்
தொண்டமான் அவர்கள் உயிருடன் இருந்தப் போது இலங்கை அரசு மேல் கொத்மலைத் திட்டத்தை மேற்கொள்ள முயன்று இவரது எதிர்ப்புக் காரணமாக 15- 16 ஆண்டுகள் கைவிடப்பட்டது. இப்போது அத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

விமர்சனங்கள்
இவர் இலங்கைத் தொழிளாலர் காங்கிரசின் தலைமைப் பொருபபை பேரனிடம் ஒப்படைக்க முயன்று கட்சியின் பல முக்கிய உறுப்பினர்கள் கட்சியை விட்டு வெளியேறினர். இதனால் காங்கிரஸ் பலவீனமுற்ரது என்றக் கருத்தும் உண்டு. மலைய மக்களின் உணர்வுக்ளுக்கு மதிப்பளிக்காமல் வடகிழக்கு பிரச்சினையில் நடுவு/அரசு சார்பு நிலைமையை கையாண்டு வந்தார் என்றக் கருத்து பரவலானது.

said...

இந்திராணி,டெரன்ஸ் வருகைக்கும் கருத்தப்பகிர்வுக்கும் நன்றி. டெரன்ஸ், நிறைய விடயங்கள் தெரிந்துவைத்திருக்கிறீர்கள் போல? மின்னஞ்சல் முகவரியைத் தாருங்கள்.

said...

நானும் இரத்தினபுரியை பிறப்பிடமாகக் கொண்டவன் தான். எனது மின்னஞ்சல்
tmohanaraj@ஜீமெயில்'DOT'com
மேற்படி மின்னஞ்சலில் செய்யவேண்டிய மாற்றம் உங்களுக்கு தெரிந்திருக்கும் என் நம்புகிறேன்.

said...

நீங்கள் இரத்தினபுரிதானா டெரன்ஸ்? அதுதான் நானும் யோசித்தேன். உங்களது பின் இடுகையில் பல அடிப்படை விடயங்களை கூறியிருக்கிறீர்களே என்று.உண்மையில் ரொம்பவும் மகிழ்ச்சி.மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன். தொடர்பில் இருங்கள்.

said...

நீங்கள் இரத்தினபுரிதானா டெரன்ஸ்? அதுதான் நானும் யோசித்தேன். உங்களது பின் இடுகையில் பல அடிப்படை விடயங்களை கூறியிருக்கிறீர்களே என்று.உண்மையில் ரொம்பவும் மகிழ்ச்சி.மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன். தொடர்பில் இருங்கள்.

said...

hai Nirshan sir,
puthiya malayagam super
sawmiya murthi thondaman da story best. wish all the best.

bye
k.ponmalar

said...

பொன்மலர்,நீங்களா? தங்கள் வருகையை மதிக்கிறேன். கருத்துக்கு நன்றி. உங்களுடைய இனிய நட்பு வலைப்பக்கம் பார்த்தேன். தமிழில் எழுதலாமே?

said...

வணக்கம் நிர்ஷன்.

24 வயதில் எவ்வளவு தெரிந்து வைத்திருக்கின்றீர்கள் என்று எண்ணும் போது சந்தோஷமாக இருக்கின்றது.

எங்கே பள்ளி சென்றீர்கள்? சென் ஜென்ஸா, அல்லது அஸ்லாமிலா?

இறக்குவானை காற்றைச் சுவாசித்து பல வருடங்களாகின்றது.

சின்னத்தோடம், பாராவத்தை, 10 திருப்பு முனை, எல்ல, ஆரனிய, இவற்றைப் பார்த்திட ஆசையாக இருக்கின்றது.

தொடர்பு கொள்ளுங்கள்.

rennynimal@gmail.com

said...

வருகைக்கு நன்றி றெனிமல். நிச்சயமாக தொடர்பில் இருப்பேன்.

Anonymous said...

இறக்குவானை நிர்ஷன்,

எனது மலையக அனுபவம் 83 ஜூலை இனஅழிப்புக்கு முன்னாக குண்டசாலை விவசாயக்கல்லூரியில் இருகிழமைகள் தான்.

தொண்டமான் பற்றி 1977 தேர்தல் காலத்தில் கேள்விப்பட்டது. பின்னர் அவர் அரசில் சேர்ந்தவுடன் எதிர் மாறான தோற்றமே இன்றுவரை! அவரின் சுயசரிதம் 'Out Of Bondage – The Thondaman Story' வாங்கி வைத்து 2 வருடங்களாகிறது இன்னும் வாசிக்கவில்லை!
அவர் பற்றிய எனது கருத்தெல்லாம் தனக்கு அரசியல் சிக்கல் வரும்போது ஈழ அரசியலை பகடையாக ஆக்குபவர் என்பதாகும். அவருக்கு அரசுடன் சிக்கல் வந்தபோது 'பிரபாகரன் கடவுளால் அனுப்பப்பட்டவர்' என சொன்னார். அரசு இறங்கி வந்தது. அத்துடன் முடிந்தது அவர் பேச்சு! இதை 2 வருடங்களுக்கு முன்னர் வெளிநாடு வந்த தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஒருவரிடம் கேட்டபோது அவர் மெளனமாக இருந்தது நினைவுக்கு வருகிறது!!!
அவரையும் குற்றம் சொல்ல முடியாது.

said...

what did north and east tamils do to Upcountry tamils that Thondaman should favor or align with North and East tamils????????
in my opinion Upcountry tamils were expolited by "Ceylon Tamils" than Singalese

Nirshan: could you please eloborate what is the feeling of Upcountry tamils towards North or East or Jaffna tamils?
Thanks

said...

அனானி,வெத்துவேட்டு ,வருகைக்கு நன்றி.. இலங்கை மலையக அரசியல் வரலாற்றில் மக்களுக்கு உண்மையாக நடந்தவர்கள் யாருமில்லையே?

Anonymous said...

ஆம்....மலையக மக்களுக்கு உண்மையாக நடந்தவர் எவருமில்லை!!!
ஆனால் மலைக மக்கள் பிரச்சினையில் வடகிழக்கு மக்களை (தலைவர்களை?) தலையிட வேண்டாம் என மலையகத்தலைமைகள் (தொண்டமான் போன்றவர்கள்) தெளிவாக கூறிவிட்டனர். அது சரியாகக்கூட இருக்கலாம்! அதுமட்டுமல்லாது மலையகத்தலைமைகள் தமது கட்சி/குடும்ப தலைமைச் சிக்கல்களில் ஆயுத இயக்க உறுப்பினர்களை பலிகொடுத்த சம்பவங்களும் உண்டு. ஏன் தமது சொந்த மலையக சகோதரர்களையே காட்டிக்கொடுத்ததும் நடந்திருக்கிறது. தொண்டமான் தனது பேரனுக்கெதிராக காய்நகர்த்திய சந்திரசேகரனை இயக்கத்தொடர்பில் கைவிட்டது (ஜெயிலில்) பரவலாகப் பேசப்பட்டது. நான் சந்திரசேகரனை சந்தித்தபோது இதை கேட்டேன், பதிலாக வேதனையான மெளனமே வந்தது.
அதுமட்டுமல்லாது ஒரு தலைவர் (ஜெயராஜன் ?பெயர் சரியாக ஞாபகமில்லை)வடகிழக்கு தலைமைக்கு சாதுர்யம் போதாது என்றும் அவர்கள் மடைத்தனத்தினால் தம்மைத்தாமே அழித்துக்கொள்கின்றனர் ஆனால் தாமோ புத்திசாலித்தனத்தினால் தமதுரிமைகளை வென்றெடுக்கின்றனர் எனும் பொருள்படும்படி தினக்குரலிலோ வீரகேசரியிலோ பேட்டி அளித்திருந்தார்.
இது எம்மை வேதனை கொள்ள வைத்தது. இன்று மலையக மக்களும் முஸ்லிம்களும் ஓரளவு கெளரவமாக நடத்தப்படுகிறார்கள் என்றால் அது சிங்கள அரசு தமக்கு தமிழர் விரோதிகளல்ல மாறாக ஒரு குழுவின் வன்முறையே பிரச்சினை எனக்காட்ட ஆடும் நாடகம் எனவும் நிஜக்காரணம் புலிகளின் தியாகமே என்பது சொல்லித்தெரிய வேண்டியதில்லை. எனினும் வடகிழக்கு மக்களோ அன்றி புலிகளோ அதற்கு நன்றி வேண்டிநின்றதில்லை. ஆனால் இவ்வாறான பேட்டிகள் வேதனை தருபவையே. இதைக்கூட ஒரு மலையகத்தலைவரிடம் சுட்டிக்காட்டிய போது அவர் பேட்டி கொடுத்தவர் தமது அணி இல்லை என அடித்துக்கூறினார்.
எவ்வாறாயினும் மலையக மக்களின் வாழ்வுரிமையில் வடகிழக்கு மக்கள் பிரதியுபகாரம் பாராமல் கைகொடுப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்குண்டு!

said...

தரமான கருத்துக்களை பகிர்ந்துள்ளீர்கள். ஏன் உங்களுடைய பெயரை குறிப்பிடவில்லை? வடகிழக்கின் விடுதலைப் போராட்டத்துடன் எந்த வகையிலும் இவர்களை ஒப்பிடமுடியாது. மற்றும் மலையக மக்களுக்கு உள்ளது வாழ்வாதார, குறிப்பாக பொருளாதார பிரச்சினை. இந்த அடிப்படையைக் கூட காலங்காலமாக தீர்த்துவைக்க முடியாத இவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று உங்களுக்கே தெரியும்.

Anonymous said...

வெத்துவேட்டு,
//what did north and east tamils do to Upcountry tamils that Thondaman should favor or align with North and East tamils????????//

இது வழமையான மேலெழுந்தமான சந்தியில் நின்று பேசும் பேச்சுபோல் உள்ளது. தொண்டமானோ அன்றி மலையக தலைமை/மக்களோ வடகிழக்கு மக்களுடன் கைகோர்க்கதேவையில்லை. புலிகள் சொன்னதுபோல் தமது போராட்டத்தை தாமே முன்னெடுக்கவேண்டும். ஆனால் மற்ற இயக்கங்கள்/குழுக்கள் போல் வெற்றுக்கோஷங்கள் , போஸ்டர்கள், நோட்டீசுகள் (மலையகம் மலையகமக்களுக்கே, அனைத்து தொழிலாளர்களும் ஒன்றுபடுவோம், முதலாளிகளே ஒழிந்துபோங்கள்....) என புலிகள் நிற்காமல் உண்மையான ஆதரவு வழங்குவார்கள். இது நான் சொல்வதல்ல. பல மலையக தலைவர்களே என்னிடன் சொன்ன உண்மை. ஆனால் மலையக மக்கள் பிரச்சினைகளை வடகிழக்கினரும் , அவர்களின் சிக்கல்களை மலையகமக்களும் உண்மையாக உணர்ந்து கைகோர்த்து நின்றால் வெற்றி நிச்சயம். இன்றைய நல்ல உதாரணம் திரு.மனோ கணேசன்! அவரின் காலத்தால் செய்த உதவி ஞாலத்திலும் பெரிது!!!
நான் அறிந்தவரை மலையகத்தவரை யாழ்ப்பாணத்தில் மிகக்குறைந்த சம்பளத்தில் வீட்டுவேலைக்கு வைத்திருந்தனர்.அது குற்றம் எனில் எனது விடை புன்சிரிப்பே! எனது கிராமத்தில் 3 குடும்பங்களில் வேலைக்கு வந்த 2 ஆண்களும் 1 பெண்ணும் அங்கேயே திருமணம் செய்து வாழ்ந்தவர்கள் மட்டுமல்ல தமது முயற்சியால் சொந்தமாக வியாபாரம் செய்து நன்றாக வாழ்ந்தனர். எமக்கு அவர்கள் மலையகத்தினர் என பெரியவர்கள் சொல்லியே தெரியும். ஆனால் வேலைக்கு வந்தவர்கள் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக வேதனனயான கதைகள் பல நண்பர்கள் சொல்ல கேள்விப்பட்டிருக்கிறேன்.
ஆனால் வடகிழக்கு தலைமைகள் செய்த மிகப்பெரிய துரோகம், ஜீ.ஜீ.பொன்னம்பலத்தின் பிரஜாஉரிமை ஆதரவு வாக்கு!
அதைப்பற்றி அவரது பேரன் கஜன் பொன்னம்பலத்திடம் கேட்டபோது தனது குடும்பத்தின் நற்பெயருக்கு விழுந்த மிகப்பெரிய கறை என்றும் தானும் தனது தந்தை குமார் பொன்னம்பலமும் அக்கறையைப் போக்க தொடர்ந்தும் உழைப்பதாகவும் வேதனையுடன் கூறினார். அவரின் கூற்று போலியானதாக தோன்றவில்லை!
அதேபோல அண்மையில் இங்கு (மேற்குநாடு) ஒரு தம்பதியினரை விழாஒன்றில் சந்தித்தேன் பெண் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் கணவர் மலையகம். எம்மிலும் விட அவர் ஈழப்போரில் ஆர்வமுடன் இருந்தது கண்டு ஆச்சர்யப்பட்டேன். பேசிக்கொண்டிருந்தபோது பல உண்மைகள் தெரியவந்தது!

//in my opinion Upcountry tamils were expolited by "Ceylon Tamils" than Singalese//

எவ்வாறு என சொல்ல முடியுமா??

நிர்ஷன்...
எனது பெயரை பயன்படுத்துவதை தவிர்க்க முயற்சிப்பதன் காரணம் எனது பின்னூட்டங்களில் சில தனிப்பட்ட சந்திப்புகள் / விடயங்களை மேற்கொள் காட்டுவதனால் சம்பந்தப்பட்டவர்களுக்கு (தலைவர்களுக்கல்ல அவ்விடத்தில் என்னுடன் நின்றவர்க்கு) சிக்கல்களை ஏற்படுத்தாமல் இருக்கவே.

said...

// Anonymous said...
ஆம்....மலையக மக்களுக்கு உண்மையாக நடந்தவர் எவருமில்லை!!!

//
வருகைக்கு நன்றி அனானி. நிறைய விடயங்களை தெரிந்துவைத்திருக்கிறீர்கள்.மிக்க சந்தோஷம். மலையக மக்கள் வடக்கு கிழக்கு மக்களை எதிரிகளாகவோ தவறான கண்ணோட்டத்திலோ பார்த்ததில்லை. சில மலையகத் தலைமைகள் அவ்வாறு நடந்துகொண்டிருக்கலாம்.. மலையகத் தலைவர்கள் கொண்டுள்ள கருத்துகளையே மக்களும் கொண்டிருக்கிறார்கள் என்பது தவறு.

said...

Anonymouns(un willing to reveal namer):
what you are talking is "இது வழமையான மேலெழுந்தமான சந்தியில் நின்று பேசும் பேச்சுபோல் உள்ளது."
because
Jaffna or other tamils did following (in your words)
- நான் அறிந்தவரை மலையகத்தவரை யாழ்ப்பாணத்தில் மிகக்குறைந்த சம்பளத்தில் வீட்டுவேலைக்கு வைத்திருந்தனர்.
-வேலைக்கு வந்தவர்கள் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக வேதனனயான கதைகள் பல நண்பர்கள் சொல்ல கேள்விப்பட்டிருக்கிறேன்.
what else you want? if you don't take those as expolaitation..what is expolaitation????
in a house did people who had an up country boy or girl as a house maid/servant got them good clothes even for festival days? i have seen lot of kids running away from houses and workshops they worked..because they were treated like SLAVES .....
and you know who we called "Up country people" in jaffna? how we treated them?
"we" mean general people....
i know jaffna people who went to work in Up countries had an "illegal" family or "comfort woman" in upcountry.

CAN YOU EXPLAIN HOW "LTTE"s SACRIFICES HELPED IMPROVE UP COUNTRY TAMILS LIVES? PLEASE PLEASE..I BEG YOU TO EXPLAIN THAT TO ME or US....

said...

I am sorry you are talking about future...LTTE WILL SUPPORT :)
my mistake :)

said...

வெத்துவேட்டு,
வருகைக்கு நன்றி. பதில் சொல்ல ஆளைக் காணோமே?

said...

வணக்கத்துடன் விமல்
பாசத்தோடு பகிர்கின்றேன். நிச்சயமாக தாங்கள் செளமிமூர்த்தி தொண்டமான் பற்றிய பதிவு செய்த விடயங்களில் யான் அறியாத சில வாழ்க்கை அம்சங்களும் நிறைந்தே தந்திருக்கின்றீர்கள் அதற்கு யான் உங்களை பாராட்டுவதோடு. எமது (தாயகமான)மலைநாட்டை பற்றிய இந்த பதிவு படு சூப்பரா இருக்கண்ணா. வாழ்த்துகள். காட்டுவோம் நாம் யாரென்று கட்டியெழுப்புவோம் நம் மலைத்திருநாட்டை ..
நன்றியோடு தம்பி ::ல்மவி::