அரசியல் விபச்சாரம்!

பொதுமக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக பொதுமக்களால் தெரிவுசெய்யப்பட்ட மக்கள் பிரதிநிதி எனப்படுபவர் அரசியல் பணியில் தனது நலனுக்காக மக்களுடைய சுயகெளரவத்தையும் தன்மானத்தையும் விற்று பொருளும் புகழும் சம்பாதித்தல் அரசியல் விபச்சாரம் எனப்படும்(நான் சொல்வது சரியா என்பது மற்றவர்கள் தான் கூறவேண்டும்)।

இவ்வாறு யார் யார் செய்துகொண்டிருக்கிறார்களோ அவர்கள் கண்ணாடியின் முன் நின்று தாங்கள் விபசாரம் தான் செய்கிறோம் என்பதை ஒருகணமேனும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்।

எனக்குத் தெரிந்தவரையில் மூன்று தடவைக்கு மேல் கட்சி விட்டு கட்சி மாறிய அரசியல்வாதியொருவர் தான் அரசியல்விபச்சாரம் செய்யவில்லை என்பதை எங்கு வேண்டுமானாலும் அடித்துக்கூற தயாராகவுள்ளதாக தனது நண்பர்களிடம் கூறியுள்ளார்। ஆட்சி மாறியதும் நீங்கள் கட்சி மாறி மக்களை தர்மசங்கடத்துக்குள்ளாக்கி அவர்களுடைய சுயகெளரவத்தை விலைக்கு விற்கவில்லையா? அதற்குப் பெயர் என்ன ஐயா? வீடுகளில் மலையக அப்பாவி சிறுவர்களை அழைத்துவந்து வீடுகளில் வேலைக்கு வைப்பது தவறு எனக் கூறிக்கொண்டு உங்கள் வீட்டில் மட்டும் அரியில் நெல் பொறுக்குவதற்கு சிறுவர்களை அமர்த்துவது எந்தவகையில் ஐயா நியாயம்?

9 comments:

Amalan Hatton said...

அதுசரி.
நிர்ஷன் நீங்க சொல்றது மனுசனுங்களுக்குத்தானே விளங்கும். படிக்கிறது தேவாரம் இடிக்கிறது சிவன்கோயில் என்றது மாதிரித்தான் இருக்குது போங்க. ஐயோ ஐயோ....
என்ன கொடுமை சார் இது!

said...

இறக்குவானை நிதர்ஷன்,
ஆத்திரமும் ஆதங்கமும் சரியானதே, இதை நீங்கள் மட்டுமல்ல உங்கள் சமூகமும் உடனடியாக புரிந்துகொண்டு, சுதாகரித்துக் கொள்ள வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவு.

said...

என்ன அமலன் அப்படி சொல்லிட்டீங்க?

ஆமாம்.மருதமூரான்.சமூகத்தை விழிப்புணர்வுக்குள் கொண்டுவருவது இலகுவான காரியமல்ல. அதற்குத்தான் முயற்சிக்கிறோம். சரி, ஏன் உங்கள் சமூகம் எனக் குறிப்பிட்டுள்ளீர்கள்?

said...

மன்னித்து விடுங்கள் நிதர்ஷன்.
சில சொற்பிரயோகங்கள் வினா தொடுக்கப்படும் போதே தெளிவுற வைக்கின்றன. அதற்கு இதுவுமொரு சாட்சி. உங்கள் என்ற சொல்லுக்கு பதிலாக எங்கள் என்று வைத்து கொள்ளுங்கள். மீண்டுமொரு முறை மன்னித்து விடுங்கள்.

said...

நன்றி மருதமூரான். எனது கேள்வி தங்களைப் புண்படுத்திவிட்டது என நினைக்கிறேன்.மின்னஞ்சலில் தொடர்புகொள்ளுங்கள். நிறைய பேசுவோம்.

Amalan said...

மருதமூரான், நிர்ஷன் தனது பேனை எனும் ஆயுதத்தால் தமிழர்களுக்காக போராடி வருபர். ஊடகத்துறையில் அவர் நிறைய சாதித்திருக்கிறார். அதனால் தமிழர்கள் பாகப்பிரிவினையுடன் பேசுவது பிடிக்கவில்லை போலும். அப்படித்தானே நிர்ஷன்?

Rajakumaran said...

அன்புக்குரிய நிர்ஷன்,
நான் தற்பொழுது கொழும்பில் இருந்தாலும். வத்தேகம தான் என்னுடைய சொந்த இடம். நான் தங்கியிருக்கும் அறையிலுள்ள நண்பர்கள் சிலர் இந்த வலைப்பக்கத்தைப் பற்றி பேசினார்கள். பொறுத்திருக்க முடியாத ஆவல் காரணமாக இன்று நண்பர் ஒருவருடன் உங்கள் பக்கத்தை பார்க்கிறேன். அவர்தான் தமிழிலிலும் தட்டச்சு செய்கிறார்.
உண்மையில் மலையக மக்களின் குறைகளை எடுத்துச்சொல்வதற்கு இணையத்தளம் இல்லாத வரலாற்றுக்குறையை உங்கள் இணையப்பக்கம் நிரப்பியிருக்கிறது. அதிலும் தற்துணிவுடனும் தன்னம்பிக்கையுடனும் நீங்கள் வெளியிடும் தகவல்கள் சம்பந்தப்பட்டோருக்கு சுட்டிக்காட்டுவதாகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள் நிர்ஷன். மற்றைய நண்பகர்கள் குறிப்பிட்டுள்ளது போல நாம் எப்போதும் உறுதுணையாக இருப்போம். ஒரு மலையக மைந்தன் இவ்வாறு தனித்து செயற்படுவதில் நாம் பெருமைப்படுகிறோம். எங்களுடைய தலைவர்களைப்பற்றி சொல்ல வேண்டியதில்லை. நாம் ஏதோ முற்பிறவியில் பாவம் செய்தவர்கள். அதனால் தான் இப்படி பசிக்கொடுமைக்கு உள்ளாகிக்கொண்டிருக்கிறோம். உங்களுடைய மின்னஞ்சல் முகவரிக்கு எனது தொலைபேசி இலக்கத்தை அனுப்புகிறேன். தொடர்புகொள்ளுங்கள். உங்களை சந்திக்க வேண்டும். என நண்பரில் ஒருவர் உங்களை சந்தித்ததாக கூறினார். நல்ல உடற்கட்டுடன் இருப்பீர்கள் என்றும் கூறினார். சரி... சந்திப்போம் நிர்ஷன்.

said...

நன்றி இராஜகுமாரன்.நிச்சயமாக உங்களுடன் தொடர்புகொள்கிறேன். இவ்வளவு துடிப்பான இளைஞர்கள் இருக்கும் போது நமக்கு என்ன குறை?

நித்தி... said...

நிர்ஷன், தனி ஒருத்தரால கேவலமான அரசியல மாத்த முடியும்னு நெனைக்கிறீங்களா? நல்ல துடிப்பான இளைஞர்கள் ஒன்னு சேரனும். முக்கியமா இளைஞர்கள் தான் அரசியலுக்கு வரனும். அப்ப நிச்சயமா நல்ல எதிர்காலம் உருவாகும். என்ன சொல்றீங்க?