உங்கள் பணி வளரட்டும்

மலையகத்தில் புதிதாக நியமனம் பெற்ற ஆசிரியர்கள் மிகவும் சிறப்பாக தமது கடமையை நிறைவேற்றிவருவதாக பெற்றோர்கள் தெரிவித்தனர்। ஆசிரிய நியமனம் வழங்கப்படும்போது பல்வேறு விமர்சனப்பார்வைகளால் நோக்கப்பட்ட இவ்விடயம் குறித்து மலையக கல்விச்சமூகம் திருப்தியடைந்துள்ளதாக பலர் அறியத்தந்தனர்।

உண்மையில் சந்தோஷமாக இருக்கிறது। ஆசிரியர்களே ஆசிரியப்பணிக்கு மேலதிகமாக மது ஒழிப்பு,சுகாதார மேம்பாடு ஆகிய விடயம் குறித்தும் பிரத்தியேகமாக கவனம் செலுத்துங்கள்। புதியதொரு மலையகத்தை நாம் இதுவரை கனவில் மட்டும் கண்டுவந்த மலையகத்தை உருவாக்குவோம்। எங்களுக்கு அரசியல்வாதிகளின் பலம் தேவையில்லை। இளைஞர்சக்தி இருக்கிறது என்பதை நிரூபிப்போம்.

2 comments:

said...

//எங்களுக்கு அரசியல்வாதிகளின் பலம் தேவையில்லை। இளைஞர்சக்தி இருக்கிறது என்பதை நிரூபிப்போம்.//

இந்த எண்ணம் உங்களை உயர்த்தும்

said...

நிச்சயமாக யோகன். நாங்கள் தொடர்ந்தும் சாதிப்போம்