மனித உரிமைகள் அமைப்புகளுக்கு...

தீபாவளிப் பண்டிகை நெருங்கிவிட்டது। மலையகத் தொழிலாளர்களிடத்தில் தற்போது பணம் இல்லை। வருடந்தோறும் சிறப்பாக கொண்டாடும் இப்பண்டிகையை இவ்வருடம் எவ்வாறு கொண்டாடுவது என திண்டாடிக்கொண்டிருக்கின்றனர்।

இந்நிலையில் சில தரகர்கள் தமது கைவரிசையை காட்ட முயன்றுவருகிறார்கள்। ஹட்டன், இராகலை,நானுஓய தோட்டப்பகுதிகளிலுள்ள சில தரகர்கள் தொழிலாளர்களின் வீடுகளுக்கு சென்று பிள்ளைகளை கொழும்புக்கு வேலைக்கு அனுப்புமாறு கேட்கின்றனராம்। அவ்வாறு அனுப்பினால் தீபாவளிக்கு பெருந்தொகையான பணத்தை பெற்றுத்தருவதாகவும் உறுதியளிக்கின்றனராம்। நானுஓய பகுதியில் தங்கமான இரத்தினம் ஒருவர் இப்படி மும்முரமாக இயங்கிவருகிறாரார் என மக்கள் தெரிவித்தனர்।

மனித உரிமை அமைப்புக்கள் நடவடிக்கை எடுப்பார்களா?

1 comments:

said...

நண்பர்,

இப்படி வாக்குறுதிகளும், ஆசையும் காட்டி பெண் குழந்தைகளையும், சிறார்களையும் கடத்தி பாலியல் தொழில் உள்ளிட்ட கொடும் அவலமான இடங்களுக்கு விற்க கும்பல்கள் இயங்குகின்றன. நீங்கள் தெரிவிக்கும் தகவல் உண்மையாக இருப்பின் UN Drugs and Crime அமைப்பிற்கு தெரிவியுங்கள். கொழும்புவில் அவர்களது அலுவலர் இருக்கலாம்.