Thursday, October 18, 2007

பேசும் நெஞ்சங்களுக்கு !

இராஜகுமாரனின் பின் இடுகையைப் பார்த்து உண்மையில் மனம் நெகிழ்ந்துபோனேன்। மலையகப் பிரச்சினையை எடுத்துக்கூற இணையத்தளம் இல்லாத வரலாற்றுக்குறையை இந்த வலைப்பக்கம் நிவர்த்திப்பதாக குறிப்பிட்டார்। இதுவரை மலையகத்துக்கென இணையத்தளம் இல்லை என்பது உண்மைதான்। ஆனாலும் இந்த வலைப்பக்கமானது முழுமையாக மலையக மக்களின் பிரச்சினைகளை வெளிக்கொண்டுவராது।

என்னால் முடிந்தளவு மட்டுமே செய்கிறேன்।மற்றும் இந்த வலைப்பக்கம் பற்றி பேசும் நண்பர்களுக்கு நன்றி। உங்கள் அனைவரினதும் ஒத்துழைப்புடன் புதிய மலையகத்துக்கான அத்திவாரத்தில் ஒரு கல்லையாவது நிரந்தரமாக அமைப்போம்। அது சமுதாயப்பணிக்கு வித்திடட்டும்.

5 comments:

Anonymous said...

இராஜகுமாரன் சொன்னது நூறுவீதம் உண்மை நிர்ஷன்.

Anonymous said...

இலங்கையில உள்ளவங்கள இதுனால தான் ரொம்ப பிடிக்கும். இந்தியாவுல இப்படி இளைஞர்கள் இல்லைங்க. எல்லாரும் கெட்ட கெட்ட புளொக் தான் செய்றாங்க. நீங்களே பாத்திருப்பீங்க. அதுனால யாருக்கு என்ன பயனுங்க?

மங்களூர் சிவா said...

//
இந்தியாவுல இப்படி இளைஞர்கள் இல்லைங்க. எல்லாரும் கெட்ட கெட்ட புளொக் தான் செய்றாங்க. நீங்களே பாத்திருப்பீங்க. அதுனால யாருக்கு என்ன பயனுங்க?
//
நீங்க எல்லாரையும் அப்படி சொல்லிடகூடாது
http://mangaloresiva.blogspot.com பாருங்க இந்திராணி

Anonymous said...

சிவா,
எல்லாரும் கெட்ட புளொக் செய்றாங்கன்னு நான் சொன்னது தப்புதான். பெரும்பாலானோர் காமக்கதைகளைத் தான் எழுதிக்கொண்டிருக்கிறார்கள். நிர்ஷனைப்போல சமுதாயத்துக்காக செய்பவர்கள் இல்லை. உண்மையில் சிலோனிலுள்ள மலையக மக்கள் என்று கூறப்படுபர்கள் எமது நாட்டு மக்களே. அவர்களின் வாழ்க்கைக்காக பாடுபடவேண்டிய சிறிய கடப்பாடாவது எமக்கு உண்டு. நீங்கள் எப்படி?

இறக்குவானை நிர்ஷன் said...

சிவா, இந்திராணி நல்ல வாதம்தான். இருவரின் வருகைக்கும் நன்றி.