இரத்தினபுரி எந்தானை தோட்டப்பகுதி மற்றும் அதனை அண்டிய தோட்டப்பகுதிகளில் கர்ப்பிணித் தாய்மார்களை கொண்டுசெல்வதற்கான காவு வண்டி (அம்பியுலன்ஸ்) இல்லாததால் பெரிதும் அவஸ்தைப்படுவதாக அப்பகுதி மக்கள் சுட்டிக்காட்டினர்। பிரசவ வேதனையில் அவதிப்படும் பெண்களை வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு எத்தனையோ பிரயத்தனங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளதாகவும் தெரிவித்தனர்।
மலையகத்தில் இது புதிய பிரச்சினையல்ல। காலம்காலமாக இருந்துவரும் பிரச்சினைதான்। ஆனால் எந்தவொரு அரசியல் தலைவர்களும் இவ்வாறான அத்தியாவசிய சேவைகளை வழங்க முன்வரவில்லை என்பதுதான் வருந்ததக்க விடயம்। ஹற்றன் வெலிஓய தோட்டப்பகுதி மக்கள் இவ்வாறு அம்பியுலன்ஸ் வண்டியில்லை என அமைச்சர்களிடம் முறையிட்டனர்। ஆனால் யாரும் தருவதற்கு முன்வரவில்லை।
இந்நிலையில் பிரசவ வேதனையில் தவித்த பெண் ஒருவரை கொண்டு செல்ல வாகனம் இல்லாத காரணத்தினால் மிகவும் தாமதமாகி தோட்ட லொறியில் ஏற்றிக் கொண்டு சென்றமையினால் அந்தப் பெண் பரிதாபகரமாக உயிரிழந்தார்। இந்த அவலச் சம்பவத்துக்குப் பிறகு தான் அப்பகுதிக்கு அம்பியுலன்ஸ் கிடைத்தது।
இவ்வாறு வரலாற்றுப் பாடங்கள் நிறைய இருக்கின்றன। இருந்தும் கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளியிடாமல் தொடர்வது நியாயமா இல்லையா என்பதை தலைவர்கள் முடிவுசெய்யட்டும்.
6 comments:
நிர்ஷன்,
"என்ன கொடுமை இது".
இதை வாசித்துக்கொண்டிருக்கும் போது இன்னும் அம்பியுலன்ஸ் வண்டி கொடுக்கப்படவில்லையோ என பதறிப்போய்விட்டேன். உங்கள் கடைசி வரிகளைப்பார்த்த பின் தான் ஆறுதலடைந்தேன்.
தன்னையும் ஒரு தாய் இவ்வளவு வேதனைப்பட்டுத்தான் பெற்றால் என்பதை அன்று உணராவிடினும் தனது மனைவியின் பிரசவ வேதனையின் போதாவது உணர்ந்திருக்க வேண்டியவர்கள் இந்த அரசியல்வாதிகள். என்ன செய்வது மனிதர்களாய் இருந்தால் தானே இவர்களுக்கு மனிதர்களுடைய வேதனை புரியும். இவர்கள் மனிதர்களைப்போல் நடிப்பவர்கள்.
உங்களைப்போல் மலையக "இளைஞர்கள்" இருக்கும்போது மலையகம் இனி பயப்படத்தேவயில்லை....
உண்மைதான் நிதர்ஷினி. ஆனால் நீங்கள் சொல்வதைப்போன்று அவர்கள் இந்த வேதனையை உணரமாட்டார்கள். சொகுசு வாழ்க்கையும் வசதியையும் தேடி மோகம் பிடித்தவர்களுக்கு மற்றவர்களுடைய பிரச்சினைகள் வெறும் தூசு தான். அதனால் யார் என்ன சொன்னாலும் அதனை அவர்கள் பொருட்படுத்துவதில்லை.இவ்வாறான ஒருசில தலைவர்ககளால் மலையக மக்களே அவப்பெயருக்கு உள்ளாகிறார்கள் என்பது மட்டும் உள்ளங்கை நெல்லிக்கனியாகிய உண்மை.
இதற்க்கு காரணம் அந்தப்பகுதி மக்களே அவர்கள் தேர்தல் என்று வரும்போது பணம் வாங்கிக்கொண்டு வாக்களிப்பது பின்னர் அரசியல் வாதிகளை மட்டும் குறை சொல்வது ஓட்டு வேட்டைக்கு வரும்போதே ஊருக்குள்விடாமல் கழுத்தை பிடித்து தல்லாமல் அவன் கொடுக்கும் பிச்சை காசுக்கு அந்த ஊரிலே ஏஜண்ட்களும் இருப்பார்கள் மக்கலோ யோசிப்பது இல்லை என் சித்தப்பன் மகன் சொன்னான் மாமன் சொன்னான் மச்சான் சொன்னான் சாதிக்காரன் சொன்னான் என்று கூறி பணம் பெற்றுக்கொண்டு வாக்களிப்பது
என்ன கோரிக்கை கள் தேவையோ அதை தேர்தலுக்கு முன்னரே அவனிடம் சொல்லி எழுதி கையொப்பத்துடன் வாங்கிக்கொண்டு ஜெயித்து செய்யாத போது சட்டையை பிடித்து செறுப்பால் அடிக்கலாம்.
வருகைக்கு நன்றி ஜெயம். மலையக மக்கள் இப்போது தான் அதை உணரத்தொடங்கியிருக்கிறார்கள். எதிர்காலத்தில் நீங்கள் சொல்வது போன்றுதான் நடக்கப்போகிறது. மலையகத்தில் தலைவர்கள் எனச் சொல்பவர்கள் அராஜக வேலைகளிம் ஈடுபடுவது உண்டு. அப்படி அப்பாவி மக்கள் பாதிக்கப்பட்ட சந்தர்ப்பங்களும் உண்டு ஜெயம்.உங்களது ஆக்ரோஷமிக்க வசனங்களைப் பார்த்து அதிர்ந்துபோனேன்.
ஜெயம், உங்கள் பெயரிலேயே ஜெயத்தை வைத்திருக்கிறீர்கள் அதனால் தான் இவ்வளவு தைரியம் என நினைக்கிறேன். எங்கள் மக்களை குறை சொல்லாதீர்கள். சம்பள உயர்வும் இல்லை, எம்மைப்போல் 3 வேளையும் உண்பதற்கு அவர்களுக்கு வசதியும் இல்லை. எனவே அவர்களுடைய ஒரு அவசர தேவைக்கு இந்த பணம் தேவைப்பட்டிருக்கலாம். நீங்கள் சொல்வதுபோல் செறுப்பால் அடித்தோ அல்லது எழுதி வாங்கினாலோ என்ன நடக்கும் என்று நினைக்கிறீர்கள். கடைசியில் வெள்ளை வான் அவர்களையும் விட்டு வைக்காது.
ஜெயம் மன்னிக்கவும் உங்கள் கருத்துக்கு எதிர் கருத்து எழுதியதற்கு. எங்கள் மக்களை யோசனை இல்லாதவர்கள் என்றவுடன் பொறுக்க முடியவில்லை அவ்வளவு தான்.
நிதர்ஷனியின் கருத்துக்களை வரவேற்கிறேன்.நீங்கள் மலையகப் பெண்ணா? இப்படி ஆவேசமாக எழுதாதீர்கள். உங்களுக்கும் ஆபத்து வரும். நான் சொல்வது சரியா நிர்ஷன்?
Post a Comment