தமிழ்ச் சமூகத்துக்கு ஆதரவாக துணிச்சலோடு உண்மைக் கருத்துக்களை எழுதி வெளியிட்டு வந்த 'சுடர் ஒளி' ,'உதயன்' பத்திரிகைகளின் பிரதம ஆசிரியர் வித்தியாதரன் இன்று காலை இனந்தெரியாதோரால் கடத்தப்பட்டுள்ளார்.
புலிகளின் ஆதரவுப் பத்திரிகைகள் என பலராலும் பல்வேறு சந்தர்ப்பங்களில் கூறப்பட்டு விமர்சனங்களுக்கும் தாக்குதலுக்கும் முகங்கொடுத்து வந்த பத்திரிகைகள் என்றாலும் எத்தனை தடைகள் வந்தபோதிலும் உண்மைகளை தயக்கமின்றி வெளியிட்டு வந்தது. வித்தியாதரனின் யதார்த்தமான தமிழ்ப்பிழைகள் எதுவுமற்ற ஆசிரியர் தலையங்கங்களுக்கு எப்போதுமே தனி மதிப்பு உண்டு.
இந்தச்செய்தி கேட்டு தமிழ் ஊடகவியலாளர்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். மேலதிக தகவல்கள் இதுவரை கிடைக்கவில்லை.
6 comments:
அடக் கொடுமையே!
வேதனை அளிக்கிறது.
ஏற்கனவே வித்தியாதரன் இலங்கை அரச படைக் கட்டமைப்பாளர்களால் வன்னியில் பொதுமக்கள் கொல்லப்படுவது தொடர்பான செய்திகளை இணையத்தளங்களை மேற்கோள் காட்டி உதயன் பத்திரிகை வெளியிட்டிருந்தமைக்காக எச்சரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வித்தியாதரன் கடத்தப்படவில்லை என்றும் அவர் கைது செய்யப்பட்டார் என்றும் பொலிஸார் கூறியுள்ளனர். கல்கிஸைபொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்படும்போது கூட இது தெரிவிக்கப்படாதது கேளிக்கையாகத் தெரிகிறது.
வருகைக்கு நன்றி ஜோதிபாரதி, கமல்.
வழிமறித்து கைது செய்ய என்ன அவசியாமாம்? கடவுளே!!
http://player.sbs.com.au/naca#/naca/dateline/Latest/playlist/Hunting-the-Tigers/
click and watch the video...
நிர்ஷன் மனம் திறந்து சொல்லுங்க இலங்கையின் சிங்கள ஊடகத்திலிருக்கிறவர்களது மனோ நிலை எப்படி இருக்கிறது இளைய சமுதாயம் உதாரணமாய பல்கலைக்கழக மாணவர்களது கருத்துக்கள் எந்த மட்டில் இருக்கிறது...
Post a Comment