
ஏதோ என்னில் ஒரு பாகத்தை இழந்து தவிப்பதாய் ஓர் உணர்வு. இல்லை… இல்லை…ஸ்ரீதர் இறந்திருக்கமாட்டார் என்ற துர்நம்பிக்கை அவ்வப்போது துளிர்விட்டு மறைந்துகொண்டிருக்கிறது.
ஆம். ஒரு மகத்தான கலைஞனை நான் மட்டுமல்ல. நாடே இழந்திருக்கிறது.
ஸ்ரீதர் பிச்சையப்பா – 1990 களில் நான் பாடசாலை செல்லும்போது ஆச்சரியப்பட்ட கலைஞன். இப்போதும்தான். அந்தக்காலத்தில் இருந்த துடிப்பு, ஈடுபாடு என்பன இந்தச் சிகரத்தையும் நெருங்க முடியுமா என்ற ஆச்சரியத்தை தோற்றுவித்திருந்தது.
பாடல்,எழுத்து,நடிப்பு,இயக்கம்,இசை,ஓவியம்,கவிதை என கலைத்துறையின் அத்தனைப் பரிமாணங்களையும் தொட்ட கலைஞனை இழந்திருக்கிறோம்.
ஸ்ரீதருடனான சந்திப்பு தொடர்பு அத்தனையும் மனதில் நிழலாடிக்கொண்டிருக்கிறது.
இந்தக் கலைஞனை அவனது திறைமையை வெளிப்படையாகச் சொல்ல எவ்வெந்த வார்த்தைகளைப் பயன்படுத்துவது?
ஸ்ரீதருடனான பழக்கம் பற்றி எழுதுவதற்கு அடியெடுத்து வைக்கிறேன். நெஞ்சில் சோக அழுத்தங்களுடன்….
இராமானுஜம் நிர்ஷன்
2 comments:
ம்ம் மித்திரனில் அவர் வாரா வாரம் எழுதிய பத்தி எழுத்துக்கள் எனக்கு நிரம்பவும் பிடிக்கும்.
நிச்சயம் பெரிய இழப்புத்தான்
தர்ஷன்!
காலத்தால் வாழப் போகும் கலை ஆளுமைகளை பற்றிய இத்தகைய ஆவணங்கள் கவனத்திற்குரியவை. ஸ்ரீதர் அவ்வாறான பணிக்கு மிக பொருத்தமானவன். தொடர்வோம் அவன் நினைவுகளை!
Post a Comment