Tuesday, October 2, 2007

இது எப்படி இருக்கு?


மலையகத்தின் தலைவர்கள் எனக்கூறிக்கொள்ளும் அமைச்சர்கள் சிலர் கடந்த வாரத்தில் பிரத்தியேக கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தனராம்। முதலில் தொழிலாளர்களின் சம்பளப்பிரச்சினை பற்றித்தான் பேச்சு வந்திருக்கிறது। பின்னர் நுவரெலியாவில் தேயிலைத்தோட்டம் வாங்குவது பற்றித்தான் ஒவ்வொருவரும் பேசினார்களாம்। சுமார் இருபது இலட்சத்துக்கு முழுமையான தேயிலைச்செடிகளுடன் காணி இருந்தால் சொல்லுங்கள் வாங்கத்தயாராக இருக்கிறேன் என தலைவர் ஒருவர் கூறினாராம்।

தேயிலைக்கு நல்ல கிராக்கி இருப்பதால் சம்பாதிப்பதற்கு இதுதான் நல்ல வழி என அவர் கூறியதை மற்றவர்களும் ஆமோதித்தனராம்। மற்றொரு முக்கியஸ்தர் தமக்கு மதுபானசாலை அனுமதிப்பத்திரமொன்றை பெற்றுத்தருமாறு வேண்டினாராம்.

ஒருபுறம் தொழிலாளர்கள் கால்வயிறு உணவுடன் பட்டினியால் தவித்துக்கொண்டிருக்க அதற்குத் தீர்வினை பெற்றுக்கொடுப்பதை விடுத்து இப்படியும் அமைச்சர்கள் கதைக்கிறார்கள் என அங்கிருந்த ஒருவர் ஆதங்கப்பட்டக்கொண்டார்। அவரும் முதலைக்கண்ணீர்தான் வடித்தார்.

3 comments:

மாயா said...

நீங்கள் மலையகப்பதிவாளரா ? மிக்க மகிழ்ச்சி நீங்கள் இன்னும் தமிழ்மணத்தில் சேரவில்லை போல் தெரிகிறது சேரலாமே ?

அத்துடன் இவற்றையும் பார்க்கவும்
http://www.pageflakes.com/mayunathan

Unknown said...

எனக்கென்னவோ இந்த அமைச்சர்கள் வராத மழைக்கு குடை பிடிப்பது போன்று தோன்றுகிறது. இருப்பினும் நிர்ஷன் இவ்வளவு அழகாக உண்மைகளை தெரியப்படுத்துவீர்கள் என நான் நினைக்கவில்லை. உங்களுக்கு மீண்டும் எனது வாழ்த்துக்கள்.

இறக்குவானை நிர்ஷன் said...

ஆமாம்.உண்மைதான். விட்டால்
கையில் நூல் ஒன்றை வைத்துக்கொண்டு பட்டம் விடுகிறேன்.அதோ பட்டம் பறக்கிறது பாருங்கள் என சூரியனையே காட்டுவார்கள்.