Monday, April 21, 2008

எங்கள் ஊர்த் திருவிழா!!! (படங்கள்)

இறக்குவானை சிறீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த மகோற்சவப் பெருவிழா சிறப்பாக இடம்பெற்றுவருகிறது। மகோற்சவத்தின் பிரதான அங்கமான இரதபவனியின் போது எடுக்கப்பட்ட படங்களை இங்கு தந்துள்ளேன்। கடந்த சனிக்கிழமை இரதபவனி இடம்பெற்றது।
இறக்குவானை இளைஞர்கள் நாம் ஒன்றிணைந்து ஒவ்வொரு வருடமும் சப்தம் விசேட ஒலியலைச்சேவையை திருவிழா காலத்தில் செய்வதுண்டு। இறக்குவானையிலும் அதனை அண்டிய பகுதிகளிலும் மகோற்சவ காலங்களில் சப்தம் எப்।எம் தான் வானொலிகளில் தவழும்। ஆனால் இவ்வருடம் பேரினவாதிகளின் சதியால் எமக்கு அந்த வானொலிச் சேவையை செய்ய முடியவில்லை। அந்தக் கவலையைத் தவிர திருவிழா சிறப்பாக நடைபெற்றது। இது தொடர்பான எனது கட்டுரையை வெளியிட்ட வீரகேசரி ஆசிரிய பீடத்துக்கு எனது நன்றிகள்।
( எமது ஆலய திருவிழா பற்றிய வீரகேசரியில் கடந்த १९ ஆம் திகதி பிரசுரமாகிய கட்டுரையை இங்கு தருகிறேன்)

இறக்குவானை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய தேர்பவனி இன்று

இரத்தினபுரியின் இரத்தின நகரம் என்றழைக்கப்படும் இறக்குவானையில் எழுந்தருளி அருள்பாலித்து சர்வ வளங்களையும் அள்ளி வழங்கிக்கொண்டிருக்கிறாள் அன்னை அகிலாண்டேஸ்வரி. அன்னை என்று அருள்வேண்டி வருவோருக்கு இன்னல் தீர்க்கும் இறக்குவானை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் வீற்றிருக்கும் அம்பிகைக்கு மகோற்சவப் பெருவிழா சிறப்புடன் நடைபெற்று வருகிறது. கடந்த 10 ஆம் திகதி வியாழக்கிழமை கணபதி ஹோமத்துடன் ஆரம்பமாகிய மகோற்சவப் பெருவிழா தொடர்ந்து இடம்பெற்று வருவதுடன் மகோற்சவத்தின் பிரதான அங்கமாகிய தேர்பவனி இன்று சனிக்கிழமை இடம்பெறுகிறது.
வேறுபட்;ட குணங்களுடைய ஆன்மாவை நன்முறையில் நெறிப்படுத்தி, தீய குணங்களினின்று நீக்கி, அன்பு அறம் அருள் நிறைந்ததாக்கும் தத்துவமே சமயமாகும். சமயத்துக்கு ஆற்றுப்படுத்தல் என்றொரு வியாக்கியானப் பொருளும் உண்டு. அன்பின் வழியாக ஆன்மாவை ஆற்றுப்படுத்தும் சமயங்களில் காலத்தால் முற்பட்டது இந்து சமயம். ஆன்மாவை அஞ்ஞான வழியிலிருந்து அகற்றி து}ய்மைத்தன்மையை அருளுடன் வழங்கும் இந்து சமயத்தில் ஆலயங்கள் இன்றியமையாதன. ஆன்மாவை லயப்படுத்தும் ஆலயங்களில் ஆன்மாக்களின் ஈடேற்றத்துக்காகவே பல்வேறு கிரியைகள் இடம்பெறுகின்றன.
ஆலயங்களில் தினந்தோறும் நடைபெறும் கிரியைகள் நித்தியக்கிரியைகள் என்றும் விசேட காலங்களில் நடைபெறும் கிரியைகள் நைமித்தியக் கிரியைகள் என்றும் கொள்ளப்படுகின்றன. நைமித்தியக் கிரியைகளில் சிறப்புடன் குறிப்பிடப்படுவது மகோற்சவப் பெருவிழாவாகும். உற்சவங்களில் மகோன்னதமானதும் விழாக்களில் பெரியதாகவும் பெயர்பெற்ற மகோற்சவங்கள் கொடிமரம் உள்ள அனைத்து ஆலயங்களிலும் முக்கியத்துவம் பெறுகின்றன.
இறக்குவானை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்திலும் இந்தப் பெருவிழா வருடந்தோறும் சிறப்பாக நடைபெறுவது வழமையாகும். வுpழாவின் ஆரம்பமாக துவஜாரோகணம் எனப்படும் கொடியேற்றத் திருவிழா கடந்த 11 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. உலகமாகிய பந்தத்திலிருந்து ஆன்மாவை விடுவித்தி இறைவன்பால் சேர்த்து இன்பம் அனுபவிக்கும் உயிர்நிலைத் தத்துவத்தை விளக்கும் இக்கிரியையில் பெரும்பாலானோர் கலந்து கொண்டிருந்தனர். அதனைத் தொடர்ந்து அம்பிகைக்கு தினமும் விசேட பூஜைகள் இடம்பெற்று வந்ததுடன் நேற்று வெள்ளிக்கிழமை மாலை வேட்டைத்திருவிழாவும் அதனைத் தொடர்ந்து இரவு சப்பரத்திருவிழாவும் இனிதே நிறைவுபெற்றன.
இறைவனின் ஐந்தொழில்களையும் அதன் தத்துவங்களையும் விளக்கும் கிரியையாகவே மகோற்சவங்கள் ஆலயங்களில் நடைபெறுகின்றன. இதில் சிறப்புப் பெறுவது தேர்பவனியாகும். இறைவனின் அழித்தல் தொழிலைக் குறிக்கும் தேர்பவனி இன்று நண்பகல் 12 மணிக்கு இடம்பெறுகிறது. சர்வலோக நாயகியான அன்னை அம்பிகை சர்வ அலங்கார நாயகியாக வீற்று தேரில் ஆரோகணித்து அடியார்களுக்கு அருள்பாலிப்பதற்காக வீதியுலா செல்கிறாள்.
சிவனில் பாதியாகி இயக்கத்துக்குக் காரணமாகி நாடிவருவோருக்கு நயம்,நலம் தரும் அம்பிகைக்கு மணிமகுடம் சூட்டி ஆலய வாசலில் கடவுளர்கள் தேவர்கள் ரிஷிகள் குங்குமம் சூட்டி ஆசிர்வதிக்க நாயகியவள் நகர்வலம் வருகிறாள். அதனைத் தொடர்ந்து இரவு அம்பிகைக்கு குங்குமார்ச்சனை இடம்பெறுவதுடன் அடுத்துவரும் நாட்களில் பூங்காவனத் திருவிழா, தீர்த்தத்திருவிழா, கொடியிறக்கத் திருவிழா ஆகியன நடைபெற்று எதிர்வரும் 22 ஆம் திகதி வைரவர் மடையுடன் மகோற்சவம் இனிதே நிறைவடையும். திருவிழாவின் அனைத்துக் கிரியைகளும் இறக்குவானை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய பிரதம குரு பிரம்மஸ்ரீ மகேந்திர குருக்களின் தலைமையில் இடம்பெறுகின்றன.
இந்துமதம் மட்டுமே இறைவனை தயாகவும், தந்தையாகவும், தலைவனாகவும், தோழனாகவும், தான் விரும்பிய எந்த வடிவத்திலும் வணங்கும் சுதந்திரத்தை தந்திருக்கிறது. இந்நிறத்தான் இவ்வண்ணத்தான், இப்படியிருப்பான், இன்ன குணங்கள் உடையான், இன்ன நிலையில் இருப்பான் என்று சற்றேனும் குறிப்பிட்டுக் கூற முடியாமல் இருக்கும் இறைவன் ஆன்மாக்களுக்கு இறைமோட்சம் கிடைக்க கீழிறங்கி வந்து உருவம் கொண்டு அனைத்துமாகி அருளாட்சி நடத்தும் இடமே ஆலயம். சகலரும் தன்முன் பொதுவெனக் காட்டும் ஆலயத்தில் நடைபெறும் கிரியைகள் அனைத்துமே பொருள் தருவன, தத்துவம் உடையன.
நான் என்ற அகங்காரமும் எனது என்ற மமகாரமும் நிறைந்த ஆணவ இருள் மலத்தை அருள் என்னும் ஒளியால் அகற்றும் தத்துவமே தேர்பவனியின் பொருளாகும். அதுமட்டுமன்றி ஊர்த்து}ய்மை, ஊரவர்களின் ஒற்றுமை, சேர்ந்து செயற்படும் தன்மை, அனைவரும் அன்னையின் நிழலில் ஒடுங்கும் நிலையை நெறியெனக் கூறும் இப்பெருவிழா சமய சடங்குகளில் தனித்துவம் நிறைந்தது. ஆகவே அம்பிகை அடியார்கள் து}ய ஆசார சீலர்களாக ஆலயத்துக்கு வருகை தந்து எல்லாம் வல்ல அன்னை அம்பிகையின் அருளைப் பெற்று சிறப்புப் பெறுவீர்களாக.
- இறக்குவானை நிர்ஷன்

நன்றி வீரகேசரி

33 comments:

வந்தியத்தேவன் said...

படங்களுக்கும் செய்திக்கும் நன்றிகள் நிர்ஷன்
எங்களை அழைக்காததற்க்கு கண்டனங்கள்

King... said...

எனக்கும் ஊர் நினைவுகள்...

கானா பிரபா said...

படங்களுக்கும் செய்திக்கும் மிக்க நன்றி நிர்ஷான்,

Unknown said...

படங்கள் நன்றாக இருக்கின்றன. இந்து சமயம் கிராமத்துப்பகுதிகளில் எந்தளவு நம்பிக்கையுடன் கலாசாரத்துடன் கடைபிடிக்கப்படுகின்றது என்பதற்கு நல்லதோர் சான்று நிர்ஷன்.

இறக்குவானை நிர்ஷன் said...

//வந்தியத்தேவன் said...
படங்களுக்கும் செய்திக்கும் நன்றிகள் நிர்ஷன்
எங்களை அழைக்காததற்க்கு கண்டனங்கள்
//
வருக வந்தி.உங்களை அழைக்காததற்கு மன்னிக்கவும். எனக்கும் வேலை அதிகம் என்பதால் திருவிழாவுக்கு முதல்நாள் இரவுதான் சென்றேன். ஞாயிறன்று எனக்கு வகுப்பு இருந்தால் அவசரமாக வந்துவிட்டேன். அடுத்ததடவை நிச்சயமாக செல்வோம்.

இறக்குவானை நிர்ஷன் said...

//King... said...
எனக்கும் ஊர் நினைவுகள்...
//
ஓ... என்னதான் இருந்தாலும் ஊர்த்திருவிழாவை புறக்கணிக்க முடியாதல்லவா கிங். உங்களுடைய ஊர் திருவிழா நேரத்தில் கவலையடைந்திருப்பீர்களே?

இறக்குவானை நிர்ஷன் said...

//கானா பிரபா said...
படங்களுக்கும் செய்திக்கும் மிக்க நன்றி நிர்ஷான்
//

வாருங்கள் கானா பிரபா. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் பல.

இறக்குவானை நிர்ஷன் said...

//Bava said...
படங்கள் நன்றாக இருக்கின்றன. இந்து சமயம் கிராமத்துப்பகுதிகளில் எந்தளவு நம்பிக்கையுடன் கலாசாரத்துடன் கடைபிடிக்கப்படுகின்றது என்பதற்கு நல்லதோர் சான்று நிர்ஷன்.
//

உண்மைதான் பவா. எங்கள் ஊரில் தேர்த்திருவிழா நிறைவடைந்து பச்சை சாத்தி அம்பிகையை ஆலயத்துக்குள் மண்டும் கொண்டுசெல்லும்போது பக்தர்கள் எல்லாரும் அழுவார்கள். அந்தளவுக்கு பக்தியும் சக்தியும் நிறைந்தது.

மங்களூர் சிவா said...

அருமையான படங்களுடன் மிக அருமையான பதிவு. மாரியம்மன் நம் அனைவருக்கும் அருள் புரியட்டும்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

நிர்ஷன்!
பதுளை;நுவரேலியா,பசறை;பண்டாரவளை; மாத்தளை என நான் பல கோவில் தேரோட்டம் பார்க்கக் கிடைத்தது.
எங்கள் யாழ்ப்பாண நாதஸ்வர தவில் கலைஞர்களுடன்; சில காலத்தில் தென்னிந்தியக் கலைஞர்களின்
கச்சேரிகளும் களை கட்டும்.
தங்கள் படங்கள் பழசை நினைக்க வைத்தது.

இறக்குவானை நிர்ஷன் said...

// மங்களூர் சிவா said...
அருமையான படங்களுடன் மிக அருமையான பதிவு. மாரியம்மன் நம் அனைவருக்கும் அருள் புரியட்டும்.
//

நன்றி சிவா.அம்மன் அருள் அனைவருக்கும் கிட்ட நானும் பிரார்த்திக்கிறேன்.

இறக்குவானை நிர்ஷன் said...

//யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
நிர்ஷன்!
பதுளை;நுவரேலியா,பசறை;பண்டாரவளை; மாத்தளை என நான் பல கோவில் தேரோட்டம் பார்க்கக் கிடைத்தது.
எங்கள் யாழ்ப்பாண நாதஸ்வர தவில் கலைஞர்களுடன்; சில காலத்தில் தென்னிந்தியக் கலைஞர்களின்
கச்சேரிகளும் களை கட்டும்.
தங்கள் படங்கள் பழசை நினைக்க வைத்தது.
//
வருகைக்கு நன்றி யோகன்.ஏன் இரத்தினபுரிக்கு மட்டும் நீங்கள் வரவில்லை?

Anonymous said...

Hello. This post is likeable, and your blog is very interesting, congratulations :-). I will add in my blogroll =). If possible gives a last there on my blog, it is about the Teclado e Mouse, I hope you enjoy. The address is http://mouse-e-teclado.blogspot.com. A hug.

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

pls dont publish.

நிர்ஷன்,

வணக்கம்! உங்களுடைய இந்த இடுகையைப் படங்களுடன் http://globalvoicesonline.org இணையத்தளத்தில் சுட்டியிருக்கிறேன். படங்களை உங்களுடைய சுட்டியுடன் அங்கே இட, உங்களின் அனுமதி தேவை.

எனக்கு mathygrps at gmail dot com
முகவரிக்கு மடலிட முடியுமா?

நன்றி!

-மதி

இறக்குவானை நிர்ஷன் said...

// Teclado e Mouse said...
Hello. This post is likeable, and your blog is very interesting, congratulations :-). I will add in my blogroll =). If possible gives a last there on my blog, it is about the Teclado e Mouse, I hope you enjoy. The address is http://mouse-e-teclado.blogspot.com. A hug.
//

Thank you for you comment.I will Have a look.

Anonymous said...

நிர்ஷன்,உங்களுடைய கட்டுரையை வீரகேசரியில் நான் வாசித்தேன். வெறுமனே கோயில் விடயங்களை எழுதாமல் கிரியைகளுக்கான தத்துவங்களையும் நன்றாக தந்திருந்தீர்கள். நீங்கள் வீரகேசரியில் இல்லையா?

இறைவனுடைய அழித்தல் தொழில் தான் தேர்த்திருவிழாவா? அது எப்படி சாத்தியமாகிறது?

-அமலன்- ஹற்றன்

இறக்குவானை நிர்ஷன் said...

//Anonymous said...

வாருங்கள் அமலன்.நீண்ட நாட்களாக காணவில்லை? அழித்தல் தொழில் என்பதில் உயிர்களை அழித்தல் எனப் பொருள் கொள்ளாதீர்கள். மலங்களை பசுக்களாகிய ஆன்மாக்களினின்று அகற்றும் பேருன்னதமான தொழில் அது. கிராமிய வழிபாடுகளைப் பொருத்தவரையில் தீய சக்திகளை அழித்து அருள் வழங்கும் சிறப்புக் கிரியையாகவும் தேர்த்திருவிழா கொள்ளப்படுகிறது.

கருத்துக்கு நன்றி அமலன்.

Anonymous said...

எந்த ஊர் திருவிழா என்றால் என்ன பக்தி பக்தி தான்
பூசைத் தட்டுடன் வரும் பெண்மணியே சாட்சி
தேர்த் திருவிழா என்றாலே விசேடம் தான்.

அருகில் ஒரு மண்ணிற நிற சேட் போட்ட அண்ணரின் சைட் அடியும் பையன்கள் எங்கேயும் பையன்கள் தான் என்று நிரூபிக்கிறதே

தபோதரன்
உப்சாலா.

இறக்குவானை நிர்ஷன் said...

//தபோதரன் கதிரவேலு said...

நிச்சயமாக தபோதரன். ஒருவிஷயம் சொல்லட்டுமா? அந்த மண்ணிர மேற்சட்டை அணிந்திருப்பது நான்தான். ஊர்த்திருவிழாவில் எவரும் மேற்சட்டை அணிந்து இரதம் இழுக்கக் கூடாது. கடவுள் சிலையை தூக்குபவர்கள் மேற்சட்டையை அகற்றியிருக்க வேண்டும். இரதபவனியின் போது சில முன்னாயத்த வேலைகளுக்காக நான் மேற்சட்டை அணிந்திருந்தேன். என்ன தப்பாக நினைத்துவிட்டீர்கள் போல?

வருகைக்கு நன்றிகள்.

Anonymous said...

நிர்ஷன்,

எங்களூரிலும் பல கோயில்களில் அப்படித்தான்
ஆண்கள் மேற்சட்டையுடன் செல்லக்கூடது.

நான் படத்தைப் பார்ததவுடனேயே நினைத்தேன் இவரைப் பார்க்க நிர்ஷனைப் போல் இருக்கிறதே என்று.
உங்களுடைய பழைய படம் பார்த்த படியால் அப்படி நினைத்தேன்

இதில் ஒன்றும் தப்பாக நினைப்பதற்கில்லை
( என்றாலும் அந்தப் பார்வை ஒரு விசேஷம் தான். அந்தப் பெண் என்னை மன்னிப்பாராக )

நட்புடன்,
தபோதரன்

இறக்குவானை நிர்ஷன் said...

//தபோதரன் கதிரவேலு said...
நிர்ஷன்,

எங்களூரிலும் பல கோயில்களில் அப்படித்தான்
ஆண்கள் மேற்சட்டையுடன் செல்லக்கூடது.

நான் படத்தைப் பார்ததவுடனேயே நினைத்தேன் இவரைப் பார்க்க நிர்ஷனைப் போல் இருக்கிறதே என்று.
உங்களுடைய பழைய படம் பார்த்த படியால் அப்படி நினைத்தேன்

இதில் ஒன்றும் தப்பாக நினைப்பதற்கில்லை
( என்றாலும் அந்தப் பார்வை ஒரு விசேஷம் தான். அந்தப் பெண் என்னை மன்னிப்பாராக )
//

அது சரி.அதெப்படிதான் சரியாகக் கண்டுபிடித்தீர்களோ?
நன்றி அண்ணா.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

நிர்ஷன்!
நான் மலையகத்தில் பணியில் இருந்த போது மேற்குறிப்பிட்ட நகர் நண்பர்கள் பலருடன் பழகக்கிடைத்தது;
அப்போது அவர்கள் திருவிழாவுக்கு அழைப்பார்கள் அதனால் போகக்கிடைத்தது.முழுக் குடும்பமுமே அன்புடன் உபசரிப்பார்கள். அப்போது எனக்கு
இறக்குவானை நிர்ஷன் போல் ஒரு நண்பர் இரத்தினபுரியில் இருக்கவில்லை. அதனால் வரவில்லை.
ஆனால் எங்கள் பேருந்துப் பயணம் உங்கள் இரத்தினபுரியூடு சென்றுள்ளது. பகல் வேளையானால் பலர் சிறுகற்களை வைத்து சூரிய ஒளியில் பார்த்துப் சோதிப்பதே இரத்தினபுரம் என்பதற்குட் சாட்சி; வேறு எந்த நகர பேருந்து நிறுத்தத்திலும் இக்காட்சி காணமுடியாது.
அழகான இடமும் கூட...நம் நாட்டு மலையகத்துக்குரிய குளிமை தவளும் காற்று... மறக்க முடியாதவை.
இனி வந்தால் திருவிழாவுக்கு வராவிடிலும் ,நிர்ஷனைப் பார்க்க வருவேன்.

கட்டாயம் வாருங்கள். உங்கள் வருகையால் நிச்சயம் நான் பெருமை கொள்வேன்.ஏமாற்ற வேண்டாம். இலங்கை வந்தால் வாருங்கள்.

Anonymous said...

படங்கள் அருமையாக இருக்கின்றன நிர்ஷன். உங்களுடைய விளக்கம் என்னை ஆச்சரியப்பட வைத்தது. நீங்கள் நன்றாக கவிதை எழுதுவீர்கள் எனக் கேள்விப்பட்டேன். பதிவிடலாமே?

Indu - Nanuoya

இறக்குவானை நிர்ஷன் said...

வருகைக்கு நன்றி. நானுஓய வரும்போது உங்களை கட்டாயம் சந்திக்கிறேன்.

கவிதைகளுக்கு வேறொரு வலைத்தளம் உருவாக்க வேண்டும். சீக்கிரத்தில் பதிவிடுகிறேன்.

Unknown said...

VANAKKAM.
INNUM KONCHAM PHOTOS POTIRUKKAlAM.NAN NIRAYA ETIRPARTHEN.ANAUM NANDRI NIRSHAN.ENATHU OFFICEIl ElORUKKUM EMATHU THIRUVIlA PHOTOS KANPITHU PERUMAI PATEN.THANKS NIRSHAN.

Muruganandan M.K. said...

படங்களும் உங்கள் கட்டுரையும் சிறப்பாக இருந்தன. பாராட்டுக்கள்.

இறக்குவானை நிர்ஷன் said...

//SUDHAGAR said...
VANAKKAM.
INNUM KONCHAM PHOTOS POTIRUKKAlAM.NAN NIRAYA ETIRPARTHEN.ANAUM NANDRI NIRSHAN.ENATHU OFFICEIl ElORUKKUM EMATHU THIRUVIlA PHOTOS KANPITHU PERUMAI PATEN.THANKS NIRSHAN.
//
நலமா சுதாகர்? நிறைய படங்கள் இருக்கின்றன. பிறகு பதிவிடலாம் என நினைத்தேன். விரைவில் பதிவிடுகிறேன். நானும் தான் இங்கு எல்லாருடனும் எனது சந்தோஷத்தை படங்களுடன் பகிர்ந்துகொண்டேன்.

நன்றி நண்பா.

இறக்குவானை நிர்ஷன் said...

//டொக்டர்.எம்.கே.முருகானந்தன் said...
படங்களும் உங்கள் கட்டுரையும் சிறப்பாக இருந்தன. பாராட்டுக்கள்.
//

நன்றி ஐயா. உங்கள் வருகையால் நான் பெருமையடைகிறேன்.

Mathi said...

படங்களுக்கும் பதிவிற்கும் நன்றி.

இறக்குவானை நிர்ஷன் said...

// Alien said...
படங்களுக்கும் பதிவிற்கும் நன்றி.
//
உங்கள் வருகைக்கு நன்றி.

Apps Developers said...

நான் தமிழ் நாடு ....இந்த பகுதியை தாயகமாக கொண்டு இன்று தமிழ் நாட்டில் உள்ள இதே வர்க்கத்தின் கிளைகள்..மேலதிக தகவல்களுக்கு vadakadu.blogspot.com சென்று பார்க்கவும்...இந்த படைப்பினை என் படைப்புடன் ஒப்பிட்டு எனக்கு பதில் செய்ய வேண்டும் என்றும் தமிழ் இன தலைவன் பாதையில்.... ...

root said...

//வந்தியத்தேவன் said...
படங்களுக்கும் செய்திக்கும் நன்றிகள் நிர்ஷன்
எங்களை அழைக்காததற்க்கு கண்டனங்கள்
//
வருக வந்தி.உங்களை அழைக்காததற்கு மன்னிக்கவும். எனக்கும் வேலை அதிகம் என்பதால் திருவிழாவுக்கு முதல்நாள் இரவுதான் சென்றேன். ஞாயிறன்று எனக்கு வகுப்பு இருந்தால் அவசரமாக வந்துவிட்டேன். அடுத்ததடவை நிச்சயமாக செல்வோம்

//

எங்க லண்டன் இல இருக்குறவர அடுத்தடவை கட்டாயமாக கூப்பிடுங்க