இலங்கையின் குளிர்ச்சியான பகுதியிலிருந்து சூடான வானலைக்கு செய்தி வழங்கும் பிரதேச ஊடகவியலாளர் ஒருவரை அண்மையில் துரதிர்ஷ்டவசமாக சந்திக்க நேரிட்டது। நான் என்ற அகங்காரம் இதுதானோ என வியக்கும் அளவுக்கு தற்புகழ்ச்சியுடன் தன்னையறியாமல் எல்லாவற்றையும் அள்ளிக்கொட்டினார்। தனது செய்திப் பிரதேசத்தில் அரசியல்வாதிகள் சிலருக்கு வக்காளத்து வாங்குவதற்காகவும் சுயலாபத்துக்காகவும் தான் செய்தி அனுப்புவதாக அவரே சொன்னார்.
அவர் சொன்னதை அவ்வாறே (சிவவற்றைத் தவிர்த்து) தருகிறேன்।
நாங்க செய்றது ஊடகத்தொழில் அல்ல। நாங்க ஊடகவியலாளர் அல்ல। நாங்க நியூஸ் புரோக்கர்ஸ்। அதாவது செய்தி தரகர்கள்। ஊடகவியலாளராயிருந்தா நடுநிலைமை இருக்கும்। நாங்க எங்கள முதல்ல பார்க்கனும்। நான் செய்தி அனுப்புற ஸ்டேஷன்ல எல்லாரோடயும் தண்ணி அடிச்சிருக்கேன்। என்ன செய்தியென்டாலும் போடுவாங்க। இப்போ கிட்டத்தில எங்கட பகுதியில பட்டாசு வெடிக்கவச்சு கோலகலமா ஒரு விஷயத்தை காட்டனும் னு சொன்னாங்க।
நான் என்னோட சொந்தக் காசில பட்டாசு வாங்கி ரெண்டு நண்பர்கள போடச்சொல்லிட்டு நேரடியா தொகுத்து வழங்கினேன் எப்படித் தெரியுமா? இங்க மக்கள் எல்லாரும் சந்தோஷமா வரவேற்கிறதுக்காக திரண்டு வந்து சுமார் १०० இற்கும் அதிகமானோர் பட்டாசு கொளுத்தி பாட்டுப்பாடி குதூகலிக்கிறதா சொன்னேன்। முழு இலங்கையும் நம்பிடுச்சி।( இன்னும் நிறைய விஷயம் சொன்னார்।)
சுமார் அதிகாலை १.३० மணியிருக்கும்। ஒரு பிரபலமான (எனக்குப் பிடித்த,தரமாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும்) அறிவிப்பாளரை கையடக்கத் தொலைபேசியில் அழைத்து, பாருங்கள் இங்கு யாருக்காவது இந்த நேரத்தில் இவருக்கு அழைப்பினை ஏற்படுத்த முடியுமா என இராஜதோரணையில் சத்தமிட்டார்। அந்த வானலை சேவையிலுள்ள பலருக்கு பல விடயங்களை கற்றுக்கொடுத்ததும் தான்தான் எனச் கர்ஜனைத் தொனியில் கூறினார்। இத்தனைக்கும் அந்த இடத்தில் பிரச்சினை ஒன்றும் நடக்கவில்லை।
ஊடகவியலாளர்கள் மக்களுக்கானவர்கள்। மக்கள் நேசகர்கள்। இவ்வாறான அரசியல் ஒட்டுண்ணிகளால் ஊடகத்துறையே கலங்கமடைகிறது। அதுவும் தனது புனிதமான தொழில் நிலையையும் தனது தொழில்தாபனத்தையும் பகிரங்கமான தாழ்விறக்கும் இவ்வாறானவர்கள் ஊடகத்துக்குத் தேவைதானா?
இவர் சொல்லும் வானலைச் சேவை சிறப்பான சேவையை இலங்கைத் தமிழர்களுக்கு வழங்கி வருகிறது। நேயர்கள் விரும்பும் நிகழ்ச்சிகளை கவரும் விதத்தில் தொகுத்து வழங்குகிறார்கள் அறிவிப்பாளர்கள்। இந்நிலையில் சுயதம்பட்டம் அடித்து இழிநிலை ஊடகத்துக்கு வழிகோலும் இவ்வாறானவர்களை ஒதுக்கி தூரப்படுத்தி சமுதாயத்தை தூய்மைப்படுத்த வேண்டும்.
8 comments:
Hai Nirsan
Vanakkam.
nalla vidayam palarathu pilayana ennaggalukku mutru pulli vaikkum aramba adiyaga erukka vendam ena kettu kondu thodarkiren.
Unmaila eppadi oru sila udagaviyalalargal eruppathal than enru udagaggal thisai mari pooi kondirukkinrathu.
'nirai kudam thalumbathu kurai kudam than thalumbum' enru oru palamoli ullathu athatku evar utharanam.
nan ethanai sathiththen evarukku uthavi seithen enru pulambuvathai vida eni enna sathikkalam thanathu pathavien mulam yarukku uthavi seiyalam enru sinthippavane sirantha manithan.
enave eppadiyanavargalin ariyamayai makkalai hematrum ennaththai olikka vendum appoothu than punithamanathoru udagam malarum.
uggalathu muyatchikku valththukkal.
nanri
ka.Malar.
சரியாகச் சொன்னீர்கள் நிர்ஷன்.
இப்படியான கோமாளிகளை வளர்த்துவிடும் அந்த ஊடகங்களையும் சாட வேண்டும்.
இவர்கள் தரும் அநீதமான தகவல்கள் மூலம் முழு நாட்டை மட்டுமல்ல,முழு உலகையுமே ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள் சம்பந்தப்பட்ட ஊடகங்கள்.இதில் நடுநிலைமையான செய்தியறிக்கை என்று பிரச்சாரம் வேறு.
நல்ல பதிவு நண்பா..!
// barathy said...
Hai Nirsan
Vanakkam.
nalla vidayam palarathu pilayana ennaggalukku mutru pulli vaikkum aramba adiyaga erukka vendam ena kettu kondu thodarkiren
//
வாருங்கள் மலர். உண்மையில் ஆரோக்கியமான ஊடகத்துறைக்கு இவ்வாறானவர்கள் விஷம் கக்குகிறார்கள். சம்பந்தப்பட்டவர்கள் தான் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். நீங்கள் சொல்வது போல தற்புகழ்ச்சி ஊடகத்துறையில் கூடாது.
உங்களுடைய கட்டுரைகளை வாசித்து மகிழ்கிறேன். தரமான ஆக்கங்கள்.
//எம்.ரிஷான் ஷெரீப் said...
சரியாகச் சொன்னீர்கள் நிர்ஷன்.
இப்படியான கோமாளிகளை வளர்த்துவிடும் அந்த ஊடகங்களையும் சாட வேண்டும்.
இவர்கள் தரும் அநீதமான தகவல்கள் மூலம் முழு நாட்டை மட்டுமல்ல,முழு உலகையுமே ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள் சம்பந்தப்பட்ட ஊடகங்கள்.இதில் நடுநிலைமையான செய்தியறிக்கை என்று பிரச்சாரம் வேறு.
நல்ல பதிவு நண்பா..!
//
உண்மை தான் ரிஷான். எனக்குத் தெரிந்த சிலர் அவரவர்களுக்கு உதவி செய்யும் அரசியல்வாதிகளின் செய்திகளை மட்டுமே வெளிக்கொண்டுவருகிறார்கள். அதில் முக்கால்பங்கு பொய் செய்திகள். கடைசியில் உண்மையான ஊடகவியலாளர்களுக்கும் அவப்பெயர்தான் ஏற்படுகிறது.
இவ்வாறான ஊடகவியலாளர்களை அந்த வானொலி மேலதிகாரிகள் ஏன் வேலைக்கு அமர்த்துகிறார்கள்?
உங்கள் ஆக்ரோஷமான கருத்து வரவேற்கத்தக்கது நிர்ஷன்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பவா.
ஊடகவியலாளர் என்பது அடிமனதில் பிரசவித்து சேவைக்காக அர்ப்பணிக்க வேண்டிய புனிதமான தொழில். இதனை எல்லாரும் செய்ய வெளிக்கிட்டால் நடப்பது இதுதான் நிர்ஷன். இவ்வாறானவர்கள் அனைத்து ஊடகங்களிலும் இருக்கிறார்கள்.
-ஜெயபாரதி
//Anonymous said...
ஊடகவியலாளர் என்பது அடிமனதில் பிரசவித்து சேவைக்காக அர்ப்பணிக்க வேண்டிய புனிதமான தொழில். இதனை எல்லாரும் செய்ய வெளிக்கிட்டால் நடப்பது இதுதான் நிர்ஷன். இவ்வாறானவர்கள் அனைத்து ஊடகங்களிலும் இருக்கிறார்கள்.
-ஜெயபாரதி
//
இறக்குவானை ஜெயபாரதி என நினைக்கிறேன். வருக.
அனைத்து ஊடகங்களிலும் இருக்கிறார்கள் என்பது உண்மை. அவர்களில் பலர் சமுதாயத்தால் இனங்காணப்பட்டுள்ளார்கள். மிகுதியானவர்கள் ஊடக நிறுவனத்தையே ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
Post a Comment