Wednesday, September 17, 2008

இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மலையகத் தமிழ் மக்கள் பற்றி...

மல்லியப்பூ சந்தி திலகர் மலையக மக்களின் பிரச்சினைகளை வெளியுலகுக்கு கொண்டுவருவதில் பெரும் பங்காற்றிக்கொண்டிருப்பவர்। தன்னலம், அரசியல்அடிபணிவுகள் இல்லாமல் சுயமாக இயங்கும் திலகர் புதிய மலையகத்துக்கு எழுதிய பின்னூட்டம் ஒன்றை பதிவாக இங்கு தருகிறேன்।

"..................... மலையக மக்களின் போராட்டங்கள், அவர்களின் அன்றாட வாழ்வியல் பிரச்சினைகள் குறித்துப் பதிவாவதென்பது குதிரைக் கொம்பாகத்தானிருக்கின்றது। இன்று இலங்கையில் வெளிவரும் ஒரு சில பத்திரிகைகளின் வாயிலாக கிடைக்கின்ற செய்திகளைத் தவிர வேறு வழியில் மலையக தேசத்தின் பிரச்சினைகள் வெளிவருவதில்லை. இலங்கைக்கு வெளியே சொல்லவே வேண்டாம். எத்தனைபேருக்கு ஈழப் பிரச்சினை குறித்து தெரிந்திருக்குமளவுக்கு மலையகப் பிரச்சினை பற்றித் தெரிந்திருக்கிறது ? ......................"

"..................... அவர்களை கடுமையாக சுரண்டிக் கொழுக்கும் வர்த்தக சமூகத்தினர், அவர்களின் பிரச்சினைகளை வெறும் தமது பிழைப்பு அரசியலுக்கு பயன்படுத்திவரும் அரசியல் சக்திகள், சாதியக் கட்டமைப்பை நிலைநிறுத்துவதில் போட்டியிடும் ஆதிக்க சாதிக் குழுக்கள், பேரினவாத மயப்படுத்தப்பட்டுள்ள சிங்கள சிவில் சமூகத்தவரால் எதிர்கொண்டு வரும் வன்முறைகள் என எத்தனை எத்தனையோ கொடுமைகள் தினந்தோறும் நடக்கையில் அவர்களுக்காக பேசுவதையோ போராடுவதையோ அல்லது தார்மீக ஆதரவையோ தாம் தர வேண்டாம் அவர்களின் பிரச்சினைகளை வெளி உலகுக்கு கொணர்வதில் எமது பங்களிப்பு என்ன? ............"

"..................... இந்த சைபர் ஸ்பேஸ் என்று நாம் கூறுகின்ற வெட்டவெளிக்குள் சகல கொடுக்கல் வாங்கல்களையும் செய்து இன்று பெரும் மாநாட்டையே நடத்துகின்றோம். ................."

"..................... ஆனால் இன்று மின்சார வசதிகளைக் கூட அடையாமல், கல்வி hPதியில் வளாச்சியடைய விடாமல், வெறும் 1 ரூபா சம்பள உயர்வுக்காக போராடிக் கொண்டிருக்கும் மலையக மக்கள் குறித்து எந்தவித விபரங்களையும் உலகமறியாத வண்ணம் உள்ளன. ........."

"..................... ஈழத் தமிழர்கள் கொண்டுள்ள வளங்கள், ஆற்றல்கள், வாய்ப்புக்கள் மலையக மக்களுக்கு இல்லை. சக தேசத்தை சேர்ந்தவர்களின் பிரச்சினைகளை வெளிக்கொணர்கின்ற போக்கை ஈழப் போராட்ட சார்புத் தகவல் தொட்பூடகங்களில் கூட காணமுடிவதில்லை. அப்படியும் வெளிவந்து விட்டால் அவை எதிரியை அம்பலப்படுத்துவதற்கான வழிமுறையாகத் தான் இருக்கின்றதே ஒழிய, மலையக தேசத்தின் பிரச்சினையில் கொண்டுள்ள பிரக்ஞையால் அல்லவென்றே கூறலாம். ........."

"..................... தமிழகத்தை மையமாகக் கொண்டும் சிங்கப்பூர், மலேசியா மற்றும் வேறு புகலிட நாடுகளில் இருந்தும் பல இணையத்தளங்கள் கூட அதிகரித்தவண்ணம் உள்ளன. ஆனால் இதில் எத்தனை தூரம் மலையகத்தவர் பற்றிய குறைந்தபட்ட போராட்டங்கள், கோரிக்கைகள் கூட பதிவாகின்றன?..................."

"..................... நிச்சயமாக மலையகத்தவர் பற்றி எமது அக்கறையின்மையையும், அசட்டையையும் நாம் ஒப்புக் கொண்டாக வேண்டும். ................"

"..................... இத்தகைய பின்னணியில் இருந்து மலையக மக்களின் இன்றைய நிலைமைகள் பதிவாகாததையும் நோக்க வேண்டும். இன்று தமிழ் தேசப் பிரச்சினையை சர்வதேச அளவில் கரிசனைக்குரியதாக்கிய தகவல் தொழிநுட்பத்தின் பங்கை நோக்க வேண்டும். இன்று தமிழர்களுக்கெதிராக மேற்கொள்ளப்படும் இன அழிப்புக் குறித்த செய்திகள் வேகமாக உலகெங்கும் சென்றடைகின்றன. உலகின் பலமான நாடுகளின் உதவியுடனும் ஒரு அரசையும் கொண்டிருக்கின்ற சிங்கள பேரினவாதம், தமிழரின் தகவல் தொழிநுட்ப ஆற்றல், வளங்கள் என்பவற்றை எதிர்கொள்ளமுடியாத அளவிற்கு, தடுமாறி நிலைகுலைந்து போகும் அளவிற்கு, தமிழர்கள் தகவல் தொழிநுட்பத்தை அடைந்திருக்கின்றார்கள் ................."

"..................... தமிழ் தேச போராட்ட சக்திகளால் அல்லது அவர்களது ஆதரவாளர்களால் நடத்தப்படுகின்ற ஆயிரக்கணக்கான இணையத்தளங்களிலும் மலையக மக்கள் குறித்த எந்தவித பதிவுகளும் இடம்பெறாதது மிகவும் கவலை தரும் விடயமாகும். சக தேசம் ஒன்று தமது எதிரிகளாலேயே ஒடுக்கப்பட்டுக் கொண்டிருப்பதைக் கரிசனை கொள்ளாததை நாம் குறித்துக் கொள்ளுதல் அவசியம்............"

"..................... மலையக தேசத்தவரைப் பொறுத்தவரை அவர்கள் ஏலவே எதிர்கொள்ளும் அடிமை வாழ்க்கையை விட தமிழ் தேசப் போராட்டத்தின் விளைவாக ஒட்டுமொத்த தமிழர்கள் மீதும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள அரச பயங்கரவாதத்திற்கும் பலியாகிவரும் தேசமாக மலையக தேசம் உள்ளாவதைக் கவனித்தாதல் வேண்டும். இந்தியாவின் மீதும் இவர்கள் நம்பிக்கை இழந்து பல வருடங்கள் ஆகி விட்டது. ........"

"..................... இலங்கையில் செயல்படும் தமிழ் தொடர்பூடகங்கள் அனைத்திலும் மலையக மக்களுக்கு எதிரான பாரபட்சங்கள் நிலவுவதை காணமுடியும். மலையக மக்களின் பிரச்சினை குறித்த பிரக்ஞை என்பதை விட மலையக சந்தையை இலக்காகக் கொண்டு தான் இருக்கும். .........."

இரண்டாயிரமாம் (2000) ஆண்டு செப்டெம்பர் மாதம் சென்னையில் இடம்பெற்ற தமிழினி மாநாட்டில் இலங்கை பத்திரிகையாளர் 'சரிநிகர்' என். சரவணன் (தற்போது புலம்பெயர்ந்து ஐரோப்பிய நாடொன்றில் வாழ்வதாக அறிகிறேன்). அவர்களால் வாசிக்கப்பட்ட மலையகத்தவர் பற்றிய ஒரே ஒரு கட்டுரையின் மேற்கோள்களே மேலே காட்டப்பட்டன. (விரிவான கட்டுரையை தொடர்ச்சியாக வரும் பதிவுகளில் தர முயற்சிக்கிறேன்)

-திலகர்

(நன்றி திலகர்)

12 comments:

தமிழரங்கம் said...

http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=3335:2008-08-27-21-10-04&catid=145:rayakaran&Itemid=109



7.வர்க்க ரீதியான இனவாத பிரதேசவாத சாதிவாதக் கல்வியின் போக்கு


9.மலையக மக்களின் கல்வியும், பாடசாலைகளின் தரமும்

13.மலையக மக்களின் இரத்த அட்டையைப் போல் உறிஞ்சி வாழ்ந்த, வாழ்கின்ற தேசியங்கள்

14.மலையக மக்களின் இரத்தத்தில் உருவான உழைப்பும், மூலதனமும்


16.மலையக மக்களின் பிரஜாவுரிமை பறிக்கப்பட்ட நிகழ்வு

17.மலையக மக்களை நாடு கடத்திய இனவாதிகள்

18.மலையக மக்களின் வாழ்விடங்களையே சூறையாடிய இனவாதிகள்

19.இனவாத அரசியலும் மலையக மக்களின் இழிநிலையும்

இறக்குவானை நிர்ஷன் said...

வாருங்கள் தமிழரங்கம்.
நீங்கள் தந்துள்ள தொடுப்பில் ஏராளமான தகவல்கள் இருக்கின்றன. முழுமையாக வாசித்து எழுதுகிறேன்.

தகவலுக்கும் அடிக்கடி நீங்கள் தரும் ஊக்கத்துக்கும் நன்றிகள் பல.

தமிழரங்கம் said...

http://www.tamilcircle.net/index.php?searchword=மலையக&ordering=&searchphrase=all&option=com_search

சின்னக்குட்டி said...

இந்திய வம்சவாளி தமி்ழர்களை பற்றிய செய்தி விவரணம் எனது் பதிவில் உள்ள வீடியோவில் அதை பார்க்க இங்கே அழுத்தி பார்க்கவும்

அன்புடன்

சின்னக்குட்டி

இறக்குவானை நிர்ஷன் said...

//சின்னக்குட்டி said...
இந்திய வம்சவாளி தமி்ழர்களை பற்றிய செய்தி விவரணம் எனது் பதிவில் உள்ள வீடியோவில் அதை பார்க்க இங்கே அழுத்தி பார்க்கவும்

அன்புடன்

சின்னக்குட்டி
//

வாருங்கள் நண்பா,
நீண்ட நாட்களுக்குப் பின்னர்..
நலம்தானே?

உங்களுடைய இணைப்பில் உள்ள வீடியோவைப் பார்த்தேன். மலையக தொழிலாளர்கள் பற்றிய (இதுபோன்று) விவரண வீடியோக்கள் ஏதாவது இருந்தால் சொல்லுங்கள்.

நன்றி சின்னக்குட்டி.

தமிழரங்கத்துக்கும் நன்றிகள்.

Anonymous said...

ம் கேட்கவேண்டிய அவசியமான கேள்விகள் நிர்ஷான்..

அண்மையில் நான் தெரிந்துகொண்டேன் ஒரு விசயம். இப்போது இலங்கை அகதிகள் தங்கவைக்கப்பட்டிருக்கும் தமிழகம் இராமேஸ்வரத்தில் உள்ள மண்டபம் முகாம் பகுதிகள் தான்... இந்தியாவில் இருந்து தொழிலாளர்களை இலங்கைக்கு அனுப்பிவைக்கும் போதான ஆட்திரட்டும் மற்றும் அவர்களிற்கான இடைத்தங்கல் இடமாக இருந்திருக்கிறது.. (ஏற்கனவே நீங்கள் அறிந்ததாகவும் இருக்கலாம் சும்மா ஒரு தகவலுக்காக) மற்றபபடி மலையக மக்களுக்கு ஆதரவான குரலே சிங்கள ஆட்சியாளர்களிற்கு எதிரான தமிழர்களின் முதல் குரல்.. ஈழப்போராட்டத்தின் ஆரம்பகாரணியாக இதைக்கொள்ளலாம்..

இறக்குவானை நிர்ஷன் said...

//த.அகிலன் said...
ம் கேட்கவேண்டிய அவசியமான கேள்விகள் நிர்ஷான்..

அண்மையில் நான் தெரிந்துகொண்டேன் ஒரு விசயம். இப்போது இலங்கை அகதிகள் தங்கவைக்கப்பட்டிருக்கும் தமிழகம் இராமேஸ்வரத்தில் உள்ள மண்டபம் முகாம் பகுதிகள் தான்... இந்தியாவில் இருந்து தொழிலாளர்களை இலங்கைக்கு அனுப்பிவைக்கும் போதான ஆட்திரட்டும் மற்றும் அவர்களிற்கான இடைத்தங்கல் இடமாக இருந்திருக்கிறது.. (ஏற்கனவே நீங்கள் அறிந்ததாகவும் இருக்கலாம் சும்மா ஒரு தகவலுக்காக) மற்றபபடி மலையக மக்களுக்கு ஆதரவான குரலே சிங்கள ஆட்சியாளர்களிற்கு எதிரான தமிழர்களின் முதல் குரல்.. ஈழப்போராட்டத்தின் ஆரம்பகாரணியாக இதைக்கொள்ளலாம்..
//

வாருங்கள் அகிலன். உங்கள் வருகையால் குதூகலம்கொள்கிறேன். தகவலுக்கு நன்றி.
இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு ஆட்களை கூட்டிச்செல்ல தொழிலாளர் பிரதிநிதிகளை அரசாங்கம் நியமித்திருந்தது. அவர்களுடனான நேர்காணலுக்கு சந்தர்ப்பம் கேட்டிருக்கிறேன். அச்சமயத்தில் இந்த மண்டபம் முகாம் பற்றியும் தெரியவரலாம்.
நீங்கள் மண்டபம் முகாமிற்கு செல்வீர்களா?அப்படியானால் அங்கு எம்மவர்களின் நிலையை பதிவாக அல்லது படம் எடுத்து வலைத்தளத்தில் இடமுடியுமா?

அன்பு நன்றிகள்.

Sanjai Gandhi said...

//எத்தனைபேருக்கு ஈழப் பிரச்சினை குறித்து தெரிந்திருக்குமளவுக்கு மலையகப் பிரச்சினை பற்றித் தெரிந்திருக்கிறது ? ......................"//

தமிழகத்தில் ஈழத்திற்காக குரல் குடுக்கிறென் என்று சொல்பவர்களில் 2 சதவீதத்தினருக்கு கூட மலையகம் பற்றி தெரியாது. தமிழக ஊடகங்கள் “மலையகம்” என்ற சொல்லை உபயோகித்ததை கூட பார்த்ததில்லை.

ஈழம் என்றால் வன்னி, கிளிநொச்சி, விடுதலை புலிகள் ஆகியவை தான் என்று தான் எல்லோரும் இங்கு நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

எது எதற்கோ தொடர் பதிவு எழுதுகிறார்கள். மலையகம் பற்றி தெரிந்ததை சொல்லுங்கள் என்று ஒரு தொடர் பதிவை ஆரம்பித்துப் பாருங்கள். 10 பேர் கூட எழுத மாட்டான். பாவம்... தெரிந்தால் தானே எழுத.

தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம். ஊடகத்தை( எந்த வகையான ஊடகமாக இருந்தாலும்) பொருத்தவரையில் மலையக மக்கள் சிறுபான்மை அளவு முக்கியத் துவம் கூட பெறவில்லை. முதலில் மலையகத்தை பற்றி எல்லோரும் தெரிந்துக் கொள்ளும் வகையில் எதாவது செய்யுங்கள்.

தனிவலைதளம், திரட்டி போன்றவை. அதை பரவலாக்குங்கள்.

இறக்குவானை நிர்ஷன் said...

//பொடியன்-|-SanJai said...
//எத்தனைபேருக்கு ஈழப் பிரச்சினை குறித்து தெரிந்திருக்குமளவுக்கு மலையகப் பிரச்சினை பற்றித் தெரிந்திருக்கிறது ? ......................"//

தமிழகத்தில் ஈழத்திற்காக குரல் குடுக்கிறென் என்று சொல்பவர்களில் 2 சதவீதத்தினருக்கு கூட மலையகம் பற்றி தெரியாது. தமிழக ஊடகங்கள் “மலையகம்” என்ற சொல்லை உபயோகித்ததை கூட பார்த்ததில்லை.
//
உங்களுடைய பின்னூட்டம் எனக்குள் ஆறுதலான சந்தோஷத்தை தருகிறது. உண்மையில் நன்றிகள்.

நீங்கள் சொல்லும் நிதர்ஷன உண்மைகள் ஏற்றுக்கொள்ளக் கூடியதே. எப்போதும் பின்னிலைப்படுத்தப்படும் சமூகமாக மலையகத் தொழிலாளர்களைப் பார்க்கும் போக்கு அன்றுதொட்டு இருக்கிறது. உங்கள் காரமான பதில் வலையில் சில வேளைகளில் மாற்றத்தை ஏற்படுத்தலாம்.

அன்பு நன்றிகள்.

Sanjai Gandhi said...

நண்பா நிர்ஷன்.. நீங்கள் என் வலைப்பூவில் இட்ட பின்னூட்டம் பார்த்தேன். உங்கள் மனதை வலுக்கட்டாயமாக சமாதானப் படுத்திக் கொண்டு பட்டும் படாமல் ஒரு பின்னூட்டம் போட்டிருக்கிறீர்கள். இது தான் உங்கள் தோல்வி. தைரியமாய் பேச வாருங்கள்.

எது எதர்கு பல புல்லுறுவிகள் புனைப் பெயரில் பல போலி வலதளங்களை நடத்தி தவறான கருத்துக்களை வலையில் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். வெளிப்படையாக பேசுவதில்( இலங்கையில் இருப்பதால்) தயக்கம் இருந்தால் புனைப்பெயரில் மலையக மக்களின் துன்பத்தை வெளிக் கொண்டுவாருங்க. இந்திய தமிழர்களை அவர்களுக்கும் சேர்த்துக் குரல் கொடுக்க வையுங்கள்.

நான் இங்கே வெளிப்படையாக சொல்கிறேன். ஈழத் தமிழர்களின் போராட்டத்தை ( புலிகள் ஆதரவு தவிர) முழுமனதுடன் ஆதரிக்கிறேன். என்னிடம் இலங்கைத் தமிழர்களில் யாருக்கு முக்கியத் துவம் தருவீர்கள் என்று கேட்டால், முதலில் மலையக மக்களைத் தான் சொல்வேன். நீங்கள் தான் எங்கள் உண்மையான ரத்த சொந்தம். மற்ற இலங்கைத் தமிழர்கள் என் தமிழினம் மட்டுமே. ரத்த பந்தம் எதுவும் கிடையாது.

உங்கள் கோரிக்கைகள் உலகறிய செய்யுங்கள். உங்கள் கீச்சுக் குரல் பேரிரைச்சலில் காணாமல் போய்க் கொண்டிருக்கிறது.

உங்கள் நேர்க்காணல் பற்றிய பதிவு படித்தேன். மனசு வலித்தது. தமிழனே தமிழனைப் புறக்கணிக்கிறான். நாங்கள் இங்கே எதுவும் புரியாமல் கும்பலோடு கோவிந்தா போட்டுக் கொண்டிருக்கிறோம்.

இறக்குவானை நிர்ஷன் said...

வாருங்கள் பொடியன். உங்கள் மீள்வருகையை எதிர்பார்த்தேன். புரிந்துணர்வுடனான உரிமையுடன் பதில் தந்தமைக்கு நன்றி.

என்னால் வெளிப்படையாக எழுத முடியும்.அப்படி எழுதினால் பிரதேசவாதம் பார்த்து பேசுவதாக கூறுவார்கள்.
இந்தியத் தமிழ்ச்சகோதரர்களுக்கு புலிகள் பற்றி தெரிந்தளவு மலையக சொந்தங்கள் பற்றித் தெரியாதது வேதனையான உண்மை. இந்திய அரசாங்கம் நினைத்திருந்தால் கூலித்தொழிலுக்காக தாம் விரட்டிவிட்டவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ஆகக்குறைந்தது வீடுகளையாவது கட்டிக்கொடுத்திருக்கலாம். இலங்கைக்கு வந்ததிலிருந்து அதே உடைந்த லயன் குடியிருப்புகளில் தான் இன்னும் வாழ்கிறார்கள். தம் அரசியல்வாதிகளால் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டு காட்டிக்கொடுக்கும் அரசியல் பழிவாங்கல்களுக்குள் சிக்குண்டு நிறைவு என்பதையே வாழ்க்கையில் காணாமல் உயிரிழக்கும் இவர்கள் பற்றி யாரும் பேசமாட்டார்கள். அப்படிப் பேசினால் கூட அது கீழ்த்தரம் என்று நினைக்கும் போக்குடையவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
நண்பர் திலகர் சொல்வது போல,முரளிதரன் பந்துவீசினால் கூட சச்சினுக்காக கைதட்டுபவர்கள். இந்த உறவின் ஆழம் இரத்தம் சம்பந்தப்பட்டது. அதனால் தான் இந்த மக்கள் இந்தியாவை அதிகம் நேசிக்கிறார்கள்.
தமிழ்நாட்டைப் பொருத்தவரையில் இலங்கை என்றால் மகிந்த,புலிகள் பற்றித் தெரியும்.இப்போது வன்னி மக்களின் அவலத்தை அறியத்தொடங்கியிருக்கிறார்கள். ஆனால் ஏதோ ஒருவகையில் தமது சொந்தங்களாக அறியாமல் தெரியாமல் வாழ்ந்துகொண்டிருக்கும் மலையக மக்களைப் பற்றி யாருக்கும் தெரியாது.

உங்கள் பின்னூட்டம் எனக்கு அதிக திருப்தியைத் தந்தது. நண்பர்களிடமும் சொல்லி மகிழ்ந்தேன்.

Anonymous said...

நீங்கள் சொல்வது 100 % சரியானது. தனி திறமை இல்லாமல் , பலரது சிந்தனைகளையும் , கருத்துக்களையும் களவாடி பேர் போட்டு உயிர் வாழும் சிலருக்காகவே இதனை நான் எழுதுகிறேன். ஆனால் தயவு செய்து எழுத்துக்களால் மட்டும் மக்களுக்கு நல்லது செய்யும் படைப்பாளிகளை இனம் கண்டு கொள்ளுங்கள். நடைமுறை வாழ்வில் மலையக மக்களை இனி இல்லை என்றளவில் பந்தாடும் "திலகர்" போன்ற படைபாளிகளை தயவு செய்து மக்கள் முன் நிறுத்தாதீர்கள். படைபாளிகளுக்கு முதல் மனம் தூய்மையாக இருக்க வேண்டும். இப்படியானவர்களை ஊக்குவித்து இன்னும் எங்களை முட்டாள் என எண்ணி . எம் மலையகத்தை சாக்கடையாக்காதீர்கள். உங்களுக்கு புண்ணியம் கிட்டும்.