Friday, October 3, 2008

ஓர் அனுபவப்பகிர்வு - கசப்பான அப் "பொழுது"

எழுதக்கூடாது என நான் நினைத்திருந்த விடயத்தை எனது அன்பு நண்பர் ஒருவரின் வேண்டுகோளுக்கிணங்க எழுதுகிறேன்। இலங்கையின் மிகச்சிறந்த அறிவிப்பாளர்களில் பெரிதும் பேசப்படும் நான் அதிகம் நேசிக்கும் லோஷன் அண்ணாவின் ஒரு பதிவு கூட இதனை எழுதுவதற்கு ஒரு காரணம்।
ஊடகத்துறை என்னுடைய இலட்சியத் துறை।வீரகேசரி ஆசிரிய பீடத்தில் இணைவதற்கு முன்னர் நேர்முகத்தேர்வுக்காக நான் ஏறி இறங்கிய ஊடக நிறுவனங்கள் ஏராளம்। தமிழ்மொழிக்கு தாம்தான் என ஆங்கிலத்தால் அலங்கரித்து தம்மை முதல்தரம் என இப்போது சொல்லிக்கொள்ளும் நிறுவனம் ஒன்றுக்கு அப்போது மவுசு அதிகம்।
2002ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22ஆம் திகதி அந்த நிறுவனத்துக்கு நேர்முகத்தேர்வுக்கு சென்றேன்। உயர்தரம் எழுதிவிட்டு முதன்முறையாக செல்லும் நேர்முகத்தேர்வு அது। ஊடக நிறுவனம் என்பதால் நான் எழுதிய அனைத்து பத்திரிகை ஆக்கங்களையும் சான்றிதழ்களையும் எடுத்துச்சென்றேன்।
என்னை தேர்வுக்குட்படுத்தியவர் "அழகு" அண்ணா என அழைக்கப்பட்ட அப்போது உயர்பதவியில் இருந்த அறிவிப்பாளர்।
ஒரு மணிநேரம் எனக்கு மொழிபெயர்ப்பு வேலைகள் தரப்பட்டன। என்னால் முடிந்தளவு சிறப்பாக செய்துமுடித்தேன்। அவருக்கு சந்தோஷமாய் இருந்தது। அதனை முகத்தில் கண்டுகொண்டேன்। தமிழில் தட்டச்சு செய்ய முடியுமா எனக்கேட்டார்। ஒரு மாதத்தில் பழகிக்கொள்வேன் என நம்பிக்கையுடன் கூறினேன்।
மீண்டும் எனது சான்றிதழ்கள் எல்லாவற்றையும் பார்த்துவிட்டு சொன்னார்। எங்களுக்கு பத்து நாட்களுக்குள் ஒருவரை எடுத்தாக வேண்டும்। உங்களுக்கு ஒரு வாரத்தில் தொழில் உறுதிப்பத்திரமும் வேலைக்கு வரவேண்டிய நாள் குறிப்பிட்டு ஒரு கடிதமும் வீட்டு விலாசத்துக்கு வரும்। அதை எடுத்துக்கொண்டு குறிப்பிட்ட திகதியில் வேலையில் இணையுங்கள் என்றார்।
எல்லா தெய்வத்தையும் ஒருமுறை மனதில் பிரார்த்தித்தேன்। எனது இலட்சியத்தில் முதலடி எடுத்துவைக்கப்போகிறேன் என்ற சந்தோஷத்தில் என்ன பேசுவது என்றே தெரியவில்லை। அந்த தரமான நல்ல நிகழ்ச்சிபடைக்கக்கூடிய சிறந்த அறிவிப்பாளரிடம் வேலை செய்யப்போகிறேன் என்பதே பெருமை தந்தது।
இன்னும் சற்று நேரத்தில் கேட்டார்,

அவர்: தம்பி கேட்க மறந்திட்டன்। உமது சொந்த இடம் எங்கே?
நான்: இறக்குவானை
அவர்:றக்குவானையா? அது எங்கே இருக்கிறது? எந்த மாவட்டம்?
நான்: இரத்தினபுரி மாவட்டம்। இரத்தினபுரியிலிருந்து 53கிலோ மீற்றர் தூரத்தில
அவர்: (தலையை பேனையால் சுரண்டிக்கொண்டார்।மற்றைய கை வழமைபோல் தாடையை உரசிக்கொண்டிருந்தது)
இரத்தினபுரி மலையகமே?
நான்: ஆமாம் சார்
அவர்: ஓ... முதலிலேயே சொல்லியிருக்கலாமல்லோ? ..............................................ம்ம் சரி பிரச்சினையொன்டும் இல்ல. உங்களுக்கு கடிதம் வரும்

கடைசியாகச் சொன்ன வசனங்களில் ஏதோ வெறுப்பும் ஏன் இவ்வளவு நேரத்தை செலவுசெய்தோம் என்ற மனநிலையும் தெரிந்தது. முகமும் மாற்றமுற்றது.ஒன்றும் புரியாதவனாக இருந்தேன். சரி தம்பி கடிதம் வரும் என்றார் சற்று எரிச்சல் தொனியில்.

நம்பிக்கையுடன் திரும்பினேன். நண்பர்கள் உறவினர்களிடம் சொல்லி மகிழ்ந்தேன். தொழில் என்பதை விட எனது இலட்சியம் என்பதில் தான் அளவில்லா களிப்பு எனக்கு.

ஆனாலும் எதிர்பார்த்திருந்த எனக்குக் கிடைத்தது ஏமாற்றம் மட்டுமே. ஒருமாதத்திற்குப் பிறகு அந்த நிறுவனத்துக்கு அழைப்பினை எடுத்து தட்டச்சுப் பிரிவில் தொழில்செய்த அண்ணாவின் நண்பர் ஒருவரிடம் கேட்டேன்.
அவர் சொன்ன பதில் இதுதான்.
"தம்பி கவலப்படாதீங்க.நீங்க தோட்டத்திலருந்து(மலையகம்) வந்தனாலதான் வேலை கிடைக்கல. இங்க இன்னொருத்தர எடுத்திட்டாங்க. இன்னொரு நாள் சந்தர்ப்பம் வரும். ட்ரை பண்ணுங்க. இன்னும் நிறைய பேப்பருக்கு எழுதுங்க. சரி எனக்கு இப்ப கதைக்க முடியாது. பிறகு எல்லா விஷயத்தையும் அண்ணாகிட்ட சொல்றேன்" என்றார்.
இறுதியில் நான் நிறைய விடயங்களை படித்தேன். மலையக மக்களின் வாழ்க்கையை விரிவாக படிக்கவேண்டும் என நினைத்தேன்.
துறைசார்ந்த பலவற்றை பலருக்கு சொல்லிக்கொடுத்து ஊக்கப்படுத்திய இவரா இப்படி நடந்துகொண்டார் என நினைக்கையில் கவலையாகத்தான் இருந்தது. உண்மையில் இன்னும் அதை நினைத்து வேதனைபட்ட பொழுதுகள் நிறைய இருக்கின்றன.
சரி பிரச்சினையில்லை. ஆனாலும் தோட்டப்பகுதி(மலையகம்) என்னை வெறுத்ததால் அதனை உடைத்தெரிந்து ஊடகத்தில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று நிறையவே அடிபட்டு வீரகேசரியில் இணைந்தேன். எத்தனையோ விடயங்களை வெளிப்படுத்தியதால் வீரகேசரியும் மெட்ரோ நியூஸ் பத்திரிகையும் நல்ல களமாக அமைந்தன.ஆசிரிய பீடத்தின் நல்ல ஒத்துழைப்பு எனக்கு ஊக்கம் தந்தது.
எனக்கு நடந்த இந்தக் கசப்பான சம்பவம் பற்றி மூத்த அறிவிப்பாளரும் அரச ஒலிபரப்பு நிறுவனத்தின் பணிப்பாளருமான மதிப்பின் பாத்திரமான விஸ்வநாதன் அவர்களிடம் கூறியபோது அவர் சொன்னார்
என்ன தம்பி?இப்படி கவலைப்பட்டிருந்தால் நானும் எப்போதோ விழுந்திருப்பேன்.எல்லாரும் நாம் எதிர்பார்ப்பதுபோல் இல்லை. எமக்கான வழியை நாம்தான் அமைத்துக்கொள்ள வேண்டும்.

48 comments:

சயந்தன் said...

என்ன சொல்றது ?
பிரதேச மைய வாதங்கள் போன தலைமுறையோடு போகட்டும்.

Anonymous said...

Nn, unmaiyil enge ponalum munerubavarhaluku thadaihal irukkum. awatrayellam kadanthu vanthal than munnera mudiyumenbathai ungaluku naan solli therivikka vendiya avasiyamillai. ulahathil ellarumey nallavarhalaga pirakka mudiyathey.

Oru pakkam naam pirantha idathai sutti kaati othukinalum, inoru pakkam thangalaivida ivarhal nalla nilaiku vanthuviduvarhalo endra payam.

Nn, Naan velai seitha palaiya niruvanathil iruntha oru malaiyaha sahothari en munnetrangaluku thadaiyaga irunthar. thanakku munneratheriyavillai enbathatkaga en valarchchiyai veruthar. Anal indru naan oru nalla nilaiyil irukirenendral antha sahothariyin poramaiyum uthavi seithathu thaney.

Ungalukum appadithaney Nn. Naam ippo irukkum nilaikku nammai veruthavarhal thaney karanam. enavey vaalivil naam santhitha nabarhal / kasapana sambavangal ellavatritkum nandri solvom.

CU & TC
Fm
Nithu

இறக்குவானை நிர்ஷன் said...

//சயந்தன் said...
என்ன சொல்றது ?
பிரதேச மைய வாதங்கள் போன தலைமுறையோடு போகட்டும்.
//

நிச்சயமாக !
நன்றி சயந்தன்.

உங்கள் மின்னஞ்சல் முகவரியைத் தாருங்கள்.பலரிடம் கேட்டும் இன்னும் கிடைக்கவில்லை.

இறக்குவானை நிர்ஷன் said...

//Anonymous said...
Nn, unmaiyil enge ponalum munerubavarhaluku thadaihal irukkum. awatrayellam kadanthu vanthal than munnera mudiyumenbathai ungaluku naan solli therivikka vendiya avasiyamillai. ulahathil ellarumey nallavarhalaga pirakka mudiyathey.
................
//

வருகைக்கும் அன்பான பின்னூட்டலுக்கும் நன்றி நிது. உங்கள் கருத்தினை அன்போடு ஏற்றுக்கொள்கிறேன்.

தமிழன்-கறுப்பி... said...

அட கொடுமையே...

இறக்குவானை நிர்ஷன் said...

//தமிழன்... said...
அட கொடுமையே...
//

வாருங்கள் தமிழன். நீண்ட நாட்களுக்குப் பிறகு....

நன்றிகள்.

Anonymous said...

எதை எழுதுவதென்றே தெரியவில்லை...

இறக்குவானை நிர்ஷன் said...

// Thooya said...
எதை எழுதுவதென்றே தெரியவில்லை...
//

நன்றி தூயா.

தவறாக ஏதும் எழுதிவிட்டேனோ என பதிவு எழுதியதற்குப் பிறகு கவலையாக இருக்கிறது.

சிவலிங்கம் சிவகுமாரன் said...

õ-÷P-\› B]-›-¯¨-¥-hz-vÀ {º-åøÚ ÷£õÀ J¸ xi¨-£õÚ CÍ µz-uzøu Cx Áøµ |õß Põ-n-ÂÀø». Gß-÷Úõk Cøn¢x Ph-ø©-¯õØ-Ô-Úõº Gß-£øu ö£¸-ø©-÷¯õk TÔU-öPõÒÍ-÷Ás-k®. CÁ-µ-x C¢u P\¨-£õÚ AÝ-£-Ázøu G-ÚU-S® TÔ-°-¸U-Q-Óõº. |õ-Ý® ©ø»-¯-Pzøu÷\º¢-u-Áß. ¤µ-÷u-\ Áõu §a-]-P-i-P-ÐUS AÆ-Á¨-÷£õx •-P[-öPõ-kz-u-Áß-uõß. GÛ-Ý® Cz-x-øÓ-°À \õ-vU-P-÷Ás-k® GßÓ öÁÔ uõß A¢u á¢-x-PøÍ |_UQ Âmk A¨-£õÀ ö\À» Eu-Â-¯x .B-Úõ-¾® J÷µ \‰-Pzøua÷\º¢u J¸-]-»-›ß ÂåU-P-iP-øÍ-²® {º-å-ÚõÀ ©Ó¢-v-¸U-P-•-i-¯õx GßÖ {øÚU-Q-÷Óß.
J¸ Âh-¯zøu AÁº-PÒ ¦›¢x öPõÒÍm-k® G¨-÷£õ-x® GÀ-÷»õ-µõ-¾® GÀ-÷»õ-øµ-²® GU-Põ-»z-v-¾® •hUQ øÁzx Âh •i-¯õx.C¨-£-i-¯õ-Ú-Áº-PÐUS Áµ-»õÖ uõß ]Ó¢u us-høÚ öPõ-kU-S®. Cøu B[-Q-»z-vÀ Game theory GßÖ TÖ-Áº. ¤hÀ Pìm-÷µõ }v-©ß-ÔÀ ‘GßøÚ Áµ-»õÖ Âk-uø» ö\´-²®’ GßÖ Pº-âz-u-øu¨-÷£õÀ CÁº-P-ÐUS Áµ-»õÖ us-høÚ öPõ-kU-Pm-k® GßÖ ÁõÌz-x-÷Áõ-©õ-P.

Aß-¦-hß ]Á-¼[-P® ]Á-S-©õ-µß

சயந்தன் said...

சாரலின் வலது பக்க மேல்மூலையில் மெயில் முகவரி இருக்கிறது.
blog.sajeek.com

மின்னஞ்சல் முகவரி
ksajee@gmail.com
நிற்க,
அவரும் வலைப்பதிவு வாசகர்தான். சென்றடையட்டும்.

இறக்குவானை நிர்ஷன் said...

//சயந்தன் said...
சாரலின் வலது பக்க மேல்மூலையில் மெயில் முகவரி இருக்கிறது.
blog.sajeek.com

மின்னஞ்சல் முகவரி
ksajee@gmail.com
நிற்க,
அவரும் வலைப்பதிவு வாசகர்தான். சென்றடையட்டும்.
//

நன்றிகள் சயந்தன். உங்களைப்போன்ற துடிப்பான இளையோரது தொடர்பு அவசியப்படுகிறது. விரைவில் தொடர்புகொள்வேன்.

சிவலிங்கம் சிவகுமாரன் said...

வீரகேசரி ஆசிரியப்பீடத்தில் நிர்ஷனை போல் ஒரு துடிப்பான இள ரத்தத்தை இது வரை நான் காணவில்லை. என்னோடு இணைந்து கடமையாற்றினார் என்பதை பெருமையோடு கூறிக்கொள்ளவேண்டும். இவரது இந்த கசப்பான அனுபவத்தை எனக்கும் கூறியிருக்கிறார். நானும் மலையகத்தைசேர்ந்தவன். பிரதேச வாத பூச்சிகடிகளுக்கு அவ்வப்போது முகங்கொடுத்தவன்தான். எனினும் இத்துறையில் சாதிக்கவேண்டும் என்ற வெறி தான் அந்த ஜந்துகளை நசுக்கி விட்டு அப்பால் செல்ல உதவியது .ஆனாலும் ஒரே சமூகத்தைச்சேர்ந்த ஒருசிலரின் விஷக்கடிகளையும் நிர்ஷனால் மறந்திருக்கமுடியாது என்று நினைக்கிறேன்.
ஒரு விடயத்தை அவர்கள் புரிந்து கொள்ளட்டும் எப்போதும் எல்லோராலும் எல்லோரையும் எக்காலத்திலும் முடக்கி வைத்து விட முடியாது.இப்படியானவர்களுக்கு வரலாறு தான் சிறந்த தண்டனை கொடுக்கும். இதை ஆங்கிலத்தில் Game theory என்று கூறுவர். பிடல் கஸ்ட்ரோ நீதிமன்றில் 'என்னை வரலாறு விடுதலை செய்யும்' என்று கர்ஜித்ததைப்போல் இவர்களுக்கு வரலாறு தண்டனை கொடுக்கட்டும் என்று வாழ்த்துவோமாக.
அன்புடன் சிவலிங்கம் சிவகுமாரன்

இறக்குவானை நிர்ஷன் said...

sivalingam said...
.......... இதை ஆங்கிலத்தில் Game theory என்று கூறுவர். பிடல் கஸ்ட்ரோ நீதிமன்றில் 'என்னை வரலாறு விடுதலை செய்யும்' என்று கர்ஜித்ததைப்போல் ...........அன்புடன் சிவலிங்கம் சிவகுமாரன்
//

வாருங்கள் சிவா அண்ணா. தங்களைப் போன்ற ஊடக சாதனையாளர்களின் பின்னூட்டம் எனக்கு எத்தனை சந்தோஷத்தைத் தருகிறது தெரியுமா?
உண்மையில் அடுத்தடுத்த பகுதியில் உங்களைப் பற்றியும் எழுதக் காத்திருக்கிறேன்.
ஊடகம் என்றால் என்ன என்பதிலிருந்து செய்தி,செய்தி சேகரிப்பு,அதன் வலுத்தன்மை என அத்தனையும் சொல்லிக்கொடுத்த உங்களுக்கு எப்போதும் என்மனதில் தனியிடம் உண்டு.

விரைவில் பதிவோடு சந்திக்கிறேன். வாராவாரம் வெளிவரும் உலகவிடயங்கள் தொடர்பான உங்களது கட்டுரைகளை சேகரித்து படிக்குமாறு என் மாணவர்களுக்கும் கூறியிருக்கிறேன்.

அன்பு நன்றிகள் உங்களுக்கு.

ARV Loshan said...

இது பல இடங்களில் பலருக்கு நடந்த கதை.. நான் இறுதியாகப் பணிபுரிந்த இடத்திலே,இறுதிக்காலப் பகுதியில் வட பகுதி,வன்னிப் பகுதியில் இருந்து வருவோர் யாரையும் எடுக்கவேண்டாம் என்று உத்தரவு இடப்பட்டதும் உண்டு.
இதுவரைக்கும் நான் அவ்வாறு பிரதேச வாதம் பேசியதுமில்லை,பார்த்தும் இல்லை என்பதே எனது மன சாட்சிக்கு நிறைவான விடயம்.
நிர்ஷன் சொல்லவந்தது யாரை என்று சொல்லியும் எனக்குத் தெரியும்.அது அவருக்கு(நிர்ஷனுக்கு அல்ல ) இழப்பு,வீரகேசரிக்கு இலாபம் ..
இந்த சம்பவங்களை எல்லாம் தட்டி எறிந்துவிட்டுத் தொடர்ந்து வெற்றி நடை போட வாழ்த்துக்கள்

Nimal said...

நீங்கள் ஒரு ஊடகவியலாளர் என்று இன்றுதான் தெரியும்.

மாயா said...

வாசித்தேன் . . பிரதேசவாதம் மிகவும் இக்கால இளைஞர்களை மிகவும் பாதிக்கிறது . . .

வந்தியத்தேவன் said...

நிர்ஷன் உண்மைகளைப் புட்டுபுட்டுவைத்ததற்க்கு நன்றிகள். ஆனால் பின்னாளில் அந்த நிறுவனத்தில் மலையகத்தைச் சேர்ந்த பலர் வேலை செய்தார்கள். அதிலும் தமிழைக் கொலை செய்யவென சில அறிவிப்பாளர்கள் இருந்தார்கள்.

தற்போது யாழ்ப்பாண பிரதேசவாதமும் கொழும்பில் பலர் பார்க்கின்றார்கள். அண்மைய உதாரணம் ஒன்று. சில நாட்களுக்கு முன்னர் எனது நண்பன் ஒருவன் ஒருவரின் விசிட்டிங்கார்ட் தந்து இவரைச் சந்தி இவருக்கு கணணித் துறை சாந்தவர்கள் தேவையென்றார் நானும் தமிழரின் அலுவலகம் என கொஞ்சம் மகிழ்ச்சியாகத் தான் போனேன். என்னுடன் அவர் தமிழில் தான் கதைத்தார்(சில தமிழர் நேர்முகம் என்றால் ஆங்கிலத்தில் அல்லது சிங்களத்தில் கதைப்பார்கள்) எல்லாம் முடிய ஒரு கேள்வி கேட்டார் சொந்த இடம் எது என்று நானும் யாழ்ப்பாணம் என்றேன். அவரும் அப்படியா நானும் அங்கே தான் பிறந்தேன் ஆனால் கொழும்பிற்க்கு வந்து பலகாலம் என்றார் நான் சொன்னேன் நான் வந்தும் பல காலம் என அடுத்து அவர் சொன்ன பதில்தான் அதிர்ச்சியாக இருந்தது. என்னால் தற்போது யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்களை வேலைக்கு அமர்த்தமுடியாது நான் ஏன் எனக்கேட்டேன் அதற்க்கு அவர் சொன்ன காரணம் பாதுகாப்பு பிரச்சனை உங்களை நம்பமுடியாது என்றார். நான் சொன்னேன் நான் பலகாலம் இங்கே இருக்கின்றேன். எனது அடையாள அட்டையிலிருந்து தேர்தல் வாக்காளர் அட்டைவரை இங்கேதான் இருக்கின்றது. அவரும் இல்லை இல்லை என்னால் முடியாது என்றார். பர‌வாயில்லை விடுங்கள் எனச் சொல்லிவிட்டு வந்துவிட்டேன். இதேபோல் இன்னொரு நிறுவனத்தில் தமிழர்களை நாம் வேலைக்கு அமர்த்துவதில்லை என்றார்கள் காரணம் இதுவும் பாதுகாப்புத்தானாம் தமக்கு மேலிடத்திலிருந்து உத்தரவு வந்தது என்றார்கள். நான் கேட்டேன் என்னுடய சுய விபரக்கோவையில் தமிழன் என இருக்கு அப்போ ஏன் நேர்முகத்திற்க்கு கூப்பிட்டீர்கள் என்று அதற்க்கு அவர்கள் இதுவரை பதில் அளிக்கவில்லை. நிறுவனம் ஒரு தனியார் மருத்துவமனை. தமிழர்களின் பணத்திலும் வாழ்கின்றார்கள்.

அதே நேரம் இன்னொரு கசப்பான அனுவம் இருக்கின்றது தனிப்பதிவாகத் தான் போடவேண்டும் வேலைத் தளங்களில் காலை வாரும் அல்லது போட்டுக்கொடுக்கும் சில நம்மவர்களைப் பற்றிய விடயங்கள்.

வந்தியத்தேவன் said...

சிவா அண்ணையிடம் ஒரு வேண்டுகோள் : நீங்கள் ஏன் ஒரு வலைப்பதிவு தொடங்கவில்லை. விரைவில் தொடங்குங்கள்

Anonymous said...

நல்லதொரு பதிவு நிர்ஷன். நானும் உங்களைப்போல்தான நிர்ஷன். மிகுந்த ஆர்வம். நீங்கள் சொன்ன் சகதியில் நானும் கால் வைத்து நடந்து நேர்முகத் தேர்வுக்கு சென்றிருந்தேன். என்னை நேர்முகம் பரீட்சிக்க யாரும் இருக்கவில்லை. சற்று பொறுங்கள். நிகழ்ச்சி முகாமையாளர் அறிவிப்பாளர்களுக்கு பயிற்சிமுடித்துவிட்டு வருவார் என்றனர். பின்னர் நீண்ட நேரத்துக்குப்பின்னர் ஒருவர் வந்தார். வரும்போது பக்கத்தில் இன்னொரு அழகான அறிவிப்பாளினியும் கூடவே வந்தார். இவர் அவவுக்கு பயிற்சி கொடுத்துவிட்டு வந்தது போல் எனக்குப் பட்டது. அவர் வேறு யாருமல்ல. நீங்கள் சொன்ன அதே அழகு ராஜா தான் என்னையும் நேர்முக தேர்வு செய்தார். ஆனால் உடனே எங்கிருந்து வருகிறேன் என்பதை எல்லாம் தெரிந்து கொண்டுதான் வினாக்களை கேட்க ஆரம்பித்திருந்தார். எனக்கு இலகுவான கேள்விகள். ‘சின்னபிள்ளத்தனமானவை’. தேர்வு செய்யப்போவதில்லை என்ற முடிவுடன் கேட்டால் கேள்வி எதுவாக இருந்தால் என்ன? பதில்களினபடி நான் நு}ற்றுக்கு நு}று. எனக்கு தெரிந்து விட்டது. இது நடவாது என்று. வெளியே வந்ததோடு இந்த வேலைக்கெல்லாம் இனி போவதில்லை என முடிவெடுத்தவன் அதன் பிறகு சிலவேளை அவர்களின் அழைப்பின் பேரில் ஒரு படைப்பாளியாக (அதிதியாக) மட்டுமே அந்தப் பக்கம் போயிருக்கிறேன். அதுவும் இப்போது போவதில்லை.

சரி விஷயத்துக்கு வருவோம். எனக்கு அப்போது பல்கலைக்கழக காலம். பசங்களோடு கூடி படத்துப் போவது ஒரு வேலைதானே அப்போ. ‘மின்சார கனவு’ முதல் ‘ஷோ’ தெஹிவளை தியேட்டர் (பெயரும் மறந்து போச்சு) பெல்கணியில் நாங்கள் இருட்டில் புகுந்து இடம்பிடித்தோம். இடைவேளை வரை அரவிந்சாமி, பிரபுதேவா கஜோல் முக்கோண காதல். இடைவேளையில் வெளிச்சம் போட்டதும் இங்கே இன்னொரு காதல் வெளிச்சம். அந்த அழகுராஜாவும், கலைமகளும் (நான் கலையகத்தில் கண்ட அறிவிப்பாளினி) மின்சார கனவில் மின் விளக்கு எரிவதும் தெரியாமல் மிதக்க… எனக்கு அன்று இருவரும் பயிற்சி முடிந்து வந்தது நினைவுக்கு ந்தது… இதுதான் பயிற்சியோ… நம்ம பசங்க தெளிவான உச்சரிப்பில் அழகுராஜாவையும் கலைமகளையும் பெயர் சொல்லி அழைக்க… மிச்சமெல்லாம் வேணாம்.

பிறகு அக்கா வெளிநாட்டுக்குப் போக அண்ணாவை கம்பனி வெளியில போட…. ஆவர் பெ;படியே தண்ணியடிச்சு… ரோட்டு ரோட்டா திரிய… வீட்டுல மனுசி குழம்ப .. உந்த … புட்போல் கிரவுண்ட வெளிய எல்லாம் அண்ணர் திரிஞ்சவர்….. தெரியும்தானே செய்தி வாசிச்சவர் பின்னர்…சேதி என்னென்று…. உள்ள இருந்து ஒலித்துக்கொண்டிருந்தார்…..

எல்லாம் ‘ஒழுங்கானவர்கள்’ என்றுதான் பிரதேச வாதம் பார்க்கிறியள்… பிறகு என்ன.. இந்த வேலையில மட்டும்….. மகள் வயது பிள்ளையோட.. மின்சார கனவு…..வேண்டிகிடக்கு….
ம்ம்…. என்னதான் அப்பா பேர்போன எழுத்தாளரா இருந்தாலும்… மகன் அவர் மானத்தையும் சேரத்து வாங்கிட்டார்….

புரிந்து கொண்டால் சரி…… இன்று நிர்ஷன்..சர்வதேச ரீதியாக படைக்கிறார்….
வாழ்த்துக்கள்……

மதிராஜா

Anonymous said...

கவலைப் படாதீர்கள்
ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை.

இலங்கையில் நின்றபோது உங்களைத் தொடர்பு கொள்ளாமல் போய்விட்டது. மன்னிக்கவும்
மீண்டும் நான் ஸ்வீடனில்.
அடுத்த வருடம் வரும் போது நிச்சயம் சந்திக்கிறேன்.

ஆழிக்கரைமுத்து said...

இப்பொழுதுதான் உங்கள் பதிவினை நான் முதன்முதலாக படிக்கிறேன். சிறப்பாக உள்ளது நண்பரே

M.Rishan Shareef said...

நிர்ஷா,இந்தச் செய்தி எனக்குப் புதியதாகவோ ஆச்சரியமாகவோ இல்லை. ஊடகத்துறையில் மட்டுமல்ல.இலங்கையின் பலபாகங்களிலும் இதுதான் நடைமுறையிலுள்ளது. எப்பொழுது இதனை அப்புறப்படுத்தப்போகிறோம் ?
அன்றுதான் விடியல். இது போன்ற நிகழ்வுகளில் சோரும் அனைவருக்கும் அன்றுதான் விடியல்.

இதுபோன்ற வெளிப்படையான பதிவுகளைத் தொடர்ந்து எழுதுங்கள் நண்பா.

Anonymous said...

எப்போதெல்லாம் தோல்விகளைச் சந்திக்கிறோமோ அப்போதுதான் நமது முயற்சிகள் அதிகரிக்கின்றன.
விட்டு விட்டு முயற்சி செய்தவர்தானே நீங்கள்ஏன் கவலை கொள்கிறீர்கள்.
தொடர்ந்தும் எழுதுங்கள். நிறையப்பேர் படிக்க எழுதாமல் ஒருசிலருக்காக இப்படி எழுதிச் சரிவருமா நிர்ஷன். பரவாயில்லை எழுதுங்கள். நல்லது ஆனாலும் சிவகுமாரன் சொன்துபோல் வரலாறு தண்டனை கொடுக்காது பிடல் கஸ்ரோ சொன்னது போல நம்மைப் பொன்றவர்களை விடுதலைதான் செய்யும் அவருக்குச் சொல்லி விடுங்கள்.
ஒரு புரட்சியாளனுக்கு உம்மைப் போன்றவர்களின் வாழ்க்கைழய நாசமாக்கியவர்களை உதாரணத்துக்கு எடுக்கக் கூடாது என்பது சிலருக்கு விளங்குவதே இல்லை என்பது சில நேரங்களில் கவலையையஸம் கொடுக்கிறது.

இறக்குவானை நிர்ஷன் said...

//LOSHAN said...
இது பல இடங்களில் பலருக்கு நடந்த கதை.. நான் இறுதியாகப் பணிபுரிந்த இடத்திலே,இறுதிக்காலப் பகுதியில் வட பகுதி,வன்னிப் பகுதியில் இருந்து வருவோர் யாரையும் எடுக்கவேண்டாம் என்று உத்தரவு இடப்பட்டதும் உண்டு.
இதுவரைக்கும் நான் அவ்வாறு பிரதேச வாதம் பேசியதுமில்லை,பார்த்தும் இல்லை என்பதே எனது மன சாட்சிக்கு நிறைவான விடயம்.
நிர்ஷன் சொல்லவந்தது யாரை என்று சொல்லியும் எனக்குத் தெரியும்.அது அவருக்கு(நிர்ஷனுக்கு அல்ல ) இழப்பு,வீரகேசரிக்கு இலாபம் ..
இந்த சம்பவங்களை எல்லாம் தட்டி எறிந்துவிட்டுத் தொடர்ந்து வெற்றி நடை போட வாழ்த்துக்கள்
//
வாருங்கள் லோஷன் அண்ணா. உங்களைப் பற்றி எனக்கு நன்றாகவே தெரியும். உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி. பிரதேசவாதம் யார்பார்த்தாலும் அது தவறுதான் என சுட்டியமைக்கும் நன்றிகள்.

உங்கள் பின்னூட்டத்தைப் பார்த்தவுடன் ஹற்றன் பாடசாலை ஆசிரியர் ஒருவரின் பாலியல் செய்தியை மெட்ரோவில் நான் பிரசுரித்த சமயம் ஏற்பட்ட பிரச்சினைக்கு நீங்கள் தந்த அன்பான ஆதரவு நினைவுக்கு வருகிறது.

அன்பு நன்றிகள் அண்ணா.

இறக்குவானை நிர்ஷன் said...

//நிமல்-NiMaL said...
நீங்கள் ஒரு ஊடகவியலாளர் என்று இன்றுதான் தெரியும்.
//

நன்றி நிமல்.
இப்போது புனைபெயரில் தான் எழுதுகிறேன்.

இறக்குவானை நிர்ஷன் said...

//மாயா said...
வாசித்தேன் . . பிரதேசவாதம் மிகவும் இக்கால இளைஞர்களை மிகவும் பாதிக்கிறது . . .
//

எமது தலைமுறையில் பிரதேசவாதம் அதிகம் இல்லை மாயா. இப்போதையவர்கள் சிந்தித்திருக்கிறார்கள்.

நீ்ண்ட நாட்களுக்குப் பிறகான உங்கள் வருகைக்கு நன்றி.

இறக்குவானை நிர்ஷன் said...

//வந்தியத்தேவன் said...
நிர்ஷன் உண்மைகளைப் புட்டுபுட்டுவைத்ததற்க்கு நன்றிகள். ஆனால் பின்னாளில் அந்த நிறுவனத்தில் மலையகத்தைச் சேர்ந்த பலர் வேலை செய்தார்கள். அதிலும் தமிழைக் கொலை செய்யவென சில அறிவிப்பாளர்கள் இருந்தார்கள்....//

நன்றி வந்தி.
ஏன் இன்னும்கூட இருக்கிறார்களே? சிலரது தமிழ்க்கொலை கவலையடையவைக்கிறது. அண்மையில் மதிப்புக்குரிய அப்துல் ஹமீட் அவர்களுடன் வானொலி விளம்பரம் செய்கையில் அவரும் இதுபற்றி கவலையுடன் கூறினார்.

இறக்குவானை நிர்ஷன் said...

வந்தி,
உங்களது பின்னூட்டலின் பின்னர் சிவா அண்ணாவுடன் இதுபற்றிக் கதைத்தேன். விரைவில் வலைப்பதிவில் சந்திப்பதாக கூறினார்.

-------------------------

மதியுகராஜா அண்ணாவின் பின்னூட்டத்துக்கு நன்றி. யாருக்கு பயப்படவேண்டும் என்ற தொனியில் வெளிப்படையாக எழுதியிருக்கிறீர்கள். காரணமின்றி தண்டிக்கப்பட்டதையும் போலிகளையும் வெளிப்படையாக வெளிப்படுத்தவேண்டும் என்பதில் எனக்கும் அவாவுண்டு.

நன்றிகள் உங்களுக்கு.

இறக்குவானை நிர்ஷன் said...

//Anonymous said...
எப்போதெல்லாம் தோல்விகளைச் சந்திக்கிறோமோ அப்போதுதான் நமது முயற்சிகள் அதிகரிக்கின்றன.
விட்டு விட்டு முயற்சி செய்தவர்தானே நீங்கள்ஏன் கவலை கொள்கிறீர்கள்.
//

நன்றி அனானி. உண்மையில் உங்கள் பின்னூட்டம் இனம்புரியாத சந்தோஷத்தை தந்தது. உங்கள் பெயரையும் குறிப்பிட்டிருந்தால் மேலும் சந்தோஷப்பட்டிருப்பேன்.

இறக்குவானை நிர்ஷன் said...

//தபோதரன் said...
கவலைப் படாதீர்கள்
ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை.

இலங்கையில் நின்றபோது உங்களைத் தொடர்பு கொள்ளாமல் போய்விட்டது. மன்னிக்கவும்
மீண்டும் நான் ஸ்வீடனில்.
அடுத்த வருடம் வரும் போது நிச்சயம் சந்திக்கிறேன்.
//

உங்களைப்போன்ற கல்வியாளர்களுடனான சந்திப்பும் தொடர்பும் எனக்குத் தேவை. இலங்கையில் உங்களை சந்திக்க முடியாமல்போனது என்னுடைய இழப்பு!
மீண்டும் வருகையில் நிச்சயமாக சந்திப்போம்.
அன்பு நன்றிகள்.

இறக்குவானை நிர்ஷன் said...

//ஆழிக்கரைமுத்து said...
இப்பொழுதுதான் உங்கள் பதிவினை நான் முதன்முதலாக படிக்கிறேன். சிறப்பாக உள்ளது நண்பரே
//

நன்றி ஆழிக்கரை முத்து.
உங்கள் தளத்தையும் பார்த்தேன். இலங்கைத் தகவல்கள் நிறைய இட்டிருக்கிறீர்கள்.

இறக்குவானை நிர்ஷன் said...

//எம்.ரிஷான் ஷெரீப் said...
நிர்ஷா,இந்தச் செய்தி எனக்குப் புதியதாகவோ ஆச்சரியமாகவோ இல்லை. ஊடகத்துறையில் மட்டுமல்ல.இலங்கையின் பலபாகங்களிலும் இதுதான் நடைமுறையிலுள்ளது. எப்பொழுது இதனை அப்புறப்படுத்தப்போகிறோம் ?
அன்றுதான் விடியல். இது போன்ற நிகழ்வுகளில் சோரும் அனைவருக்கும் அன்றுதான் விடியல்.

இதுபோன்ற வெளிப்படையான பதிவுகளைத் தொடர்ந்து எழுதுங்கள் நண்பா.
//
நன்றி ரிஷான். இவை அப்புறப்படுத்தப்படும் காலம் வெகு தொலைவில் இல்லை. எதிர்காலச் சந்ததியினருக்கு இவ்வாறானவை தெரியாதிருக்கும். சில விஷமிகளை நாமே அறிந்து தெரிந்து ஒதுக்கிவிட்டால்.

இறக்குவானை நிர்ஷன் said...

//TechPen said...
Let's come together on http://www.tamiljunction.com to bring all the Tamil souls unite on one platform and find Tamil friends worldwide to share our thoughts and create a common bond.

Let's also show the Mightiness of Tamils by coming together on http://www.tamiljunction.com

//
நன்றி விரைவில் இணைந்துகொள்கிறேன்.

Anonymous said...

Hi Nirshan, Sorry Dont know what to say for this incident
, ,k;khjphpahd rk;gtq;fs; elg;gjw;F jkpo; NgRk; ek;ktHfSk; cWJizahf ,Ug;gJ tUe;jf;$baJk; ntl;fg;glf;$baJkhf cs;sJ. vd;d nra;tJ ek; r%fKk; ,t;thNw gofptpl;lJ Let's brake all these & walk as winners

Anonymous said...

Immathiriyana sambavangal nadappathatku tamil pesum nammavargalum uruthunaiyaga iruppathu varunthakudiyathum, vetkapadakudiyathumaga ullathu. Enna seivathu nam society ivvare palagi vittathu

இறக்குவானை நிர்ஷன் said...

//Glory, Wattala said...
Hi Nirshan, Sorry Dont know what to say for this incident
..இம்மாதிரியான சம்பவங்கள் நடப்பதற்கு தமிழ்பேசும் நம்மவர்களும் உறுதுணையாக இருப்பது வருந்தக்கூடியதும் வெட்கப்படக்கூடியதுமாக உள்ளது. என்ன செய்வது? நம் சமூகமும் இவ்வாறு பழகிவிட்டது. ..Let's brake all these & walk as winners//

நிச்சயமாக. சமுதாத்தின் ஆழத்தை உற்றுநோக்கினால் ஆரம்பகாலத்தில் எவ்வாறான பாகுபாட்டுப்பிரிவினைகள் இருந்திருக்கும் என்பதை நோக்க முடிகிறது. சமுதாயத்தின் தவறு சமுதாயத்தாலேயே கிழித்தெறியப்படும்.

நீண்ட நாட்களுக்குப் பின்னர் சந்திக்கிறேன். உங்கள் வருகைக்கும் அன்பான கருத்துக்கும் நன்றி Glory.

சயந்தன் said...

சகதியில் நானும் கால் வைத்து நடந்து //

உள்... குத்து ஏதும் இல்லையே.. :) :)

Anonymous said...

//நன்றி தூயா.

தவறாக ஏதும் எழுதிவிட்டேனோ என பதிவு எழுதியதற்குப் பிறகு கவலையாக இருக்கிறது.//

அப்படி சும்மாவேணும் நினைக்காதிங்க...பாதிக்கப்பட்ட உங்களுக்கு தானே வலி தெரியும்..

இப்படியொரு நிலை மறுபடி உங்களுக்கு வரக்கூடாது என சாமிய வேண்டிக்கிறேன் :)

இறக்குவானை நிர்ஷன் said...

//சயந்தன் said...
சகதியில் நானும் கால் வைத்து நடந்து //

உள்... குத்து ஏதும் இல்லையே.. :) :)
//

என்ன சொல்ல வாறீங்கனு புரியுது.

வருகைக்கு நன்றி சயந்தா.

இறக்குவானை நிர்ஷன் said...

//Thooya said...
//நன்றி தூயா.

தவறாக ஏதும் எழுதிவிட்டேனோ என பதிவு எழுதியதற்குப் பிறகு கவலையாக இருக்கிறது.//

அப்படி சும்மாவேணும் நினைக்காதிங்க...பாதிக்கப்பட்ட உங்களுக்கு தானே வலி தெரியும்..

இப்படியொரு நிலை மறுபடி உங்களுக்கு வரக்கூடாது என சாமிய வேண்டிக்கிறேன் :)
//

நிச்சயமாக மறுபடி வராது தூயா. இப்போதைய தலைமுறை சிந்தனைத்திறன் உடையதுதானே?

மீள்வருகைக்கு நன்றி தூயா. அடிக்கடி வந்து போங்க.

சிவா சின்னப்பொடி said...

அன்பின் தம்பி நிர்சனுக்கு
தமிழ் சமூகம் இன்றைக்கும் அடிப்படையில் சாதிய சமூகமாகவே இருக்கிறது..தமிழ் சமூகத்தின் கருத்தியல் தளம் என்பது இன்னமும் ஒரு விரிந்த பார்வைக்கு வரவில்லை.மலைக மக்களை இழிவாக பார்த்த அந்த தலைமுறை முற்றாக ஒழிந்துவிட்டது என்று சொல்ல முடியாது.

1975-1977i; இலங்கை வானொலியில் செய்தியாளனாக பணியாற்றியது1983 ல் தமிழீழத்தின் குரல் வானொலியை உருவாக்கியது.1983ல்திருச்சி வானொலி நிலையத்தில் ஊடகவியல் பயிற்சி 1991_95 பிரான்ஸ் பல்கலைக் கழகத்தில் ஊடகவியல் பட்டப்படிப்பு 1994-95 பிரான்ஸ் அரச தொலைக்காட்சியில் ஊடகவியல் பயிற்சி 1995-98 பாரிஸ் ஈழமுரசு பத்திரிகையின் அசிரியராக இருந்தது.2000-2007 வரை ரிரிஎன் தொலைக்காட்சியின் பிரதம செய்தி ஆசிரியர் என்று எனக்கு குறைந்தது 30 வருடங்கள் ஊடகத்துறை அனுபவம் இருந்தும் பாரிஸ் நகரத்தில் வைத்து என்னைப் பாhத்து ஒருகூட்டம் ஒரு ஊடக நிறுவனத்தின் செய்தி ஆசிரியராக இருப்பதற்கு பிறப்பால் தகுதி வேண்டும் உனக்கு அந்த இல்லை என்று சொல்லி சாதி ரீதியாக என்னை அவமானப்படுத்தியது. இது தான் தமிழ் சமூகம்.
எங்களை அவமானப்படுத்தபவர்களை நாங்கள் கணக்கில் எடுக்கக் கூடாது.இது தான் நான் சொல்லக் கூடியது.1977-81 ---- 1987-89 களில் நான் மலையகத்தில் அரசில் வேலை செய்திருக்கிறேன்.சந்திரசேகரனை உருவாக்கியதில் எனது பங்கும் இருக்கிறது
http://sivasinnapodi1955.blogspot.com/

இறக்குவானை நிர்ஷன் said...

//siva sinnapodi said...
அன்பின் தம்பி நிர்சனுக்கு
தமிழ் சமூகம் இன்றைக்கும் அடிப்படையில் சாதிய சமூகமாகவே இருக்கிறது..தமிழ் சமூகத்தின் கருத்தியல் தளம் என்பது இன்னமும் ஒரு விரிந்த பார்வைக்கு வரவில்லை.மலைக மக்களை இழிவாக பார்த்த அந்த தலைமுறை முற்றாக ஒழிந்துவிட்டது என்று சொல்ல முடியாது.
...................
....................
//

வணக்கம் ஐயா.தங்கள் வரவு எனக்கு மகிழ்வையும் பெருமையையும் தருகிறது. இந்தளவு ஊடக அனுபவமா?தற்போது எங்கே இருக்கிறீர்கள்? இலங்கையிலிருந்தால் உங்களிடமுள்ள அத்தனை அறிவையும் கறந்திருப்பேன்.

உங்கள் கருத்து ஏற்புடையதுதான். ஒப்பீட்டு ரீதியில் பிரிவினைவாதம் குறைவு என்று சொல்லலாம். வடக்கு கிழக்கில்கூட சாதிப்பிரச்சினை இப்போது முன்னரைவிட குறைவாகத்தான் உள்ளது. ஆனாலும் இதனால் பாதிக்கப்பட்டோர் ஏராளம்.

இத்தனை வருட ஊடக அனுபவத்தில் நீங்கள் அனுபவத்த வேதனைகள் அதிகாயிருக்கும் என எனக்குத் தெரியும். ஆனாலும் உங்கள் அறிவையும் திறனையும் யாராலும்மூடி மறைக்க முடியவில்லைதானே?

மற்றும் உங்கள் வலைப்பக்கத்தினை பார்த்தேன். கற்றுக்கொள்ள நிறைய இருக்கின்றன. ஆறுதலாக பிரின்ட் எடுத்துப் படித்து பின்னூட்டம் தருகிறேன்.

(நீங்கள் குறிப்பிட்ட அமைச்சருடன் இப்போது உங்களுக்குத் தொடர்பிருக்கிறதா?)

அன்பு நன்றிகள்.

சிவா சின்னப்பொடி said...

நன்றி நிர்சன் 2006 ம் ஆண்டு நான் எழுதிய தமிழ் தளத்தில் ஊடகவியல் என்ற கட்டுரைகள் தங்களுக்கு பிரயோசனமாக இருக்கலாம்.அது எனது வலைப் பதிவில் உள்ளது.மற்றப்படி2004ம் ஆண்டு நான் வன்னியல் வந்து நின்ற போது தயா மாஸ்டர் இல்லத்தில் தங்களைப் பாhத்தததாக யாபகம் அது நீங்கள் தானேh தெரியவில்லை. நடேசன் எனது நண்பன் சிவராம் உட்படபட பலர் வந்திருந்தார்கள்

Anonymous said...

நல்லதொரு பதிவு. பகிர்வு. பெரும்பாலும் ஊடகத்துறையிலிருக்கும் முன்னையவர்கள் ஏதாவது ஒரு விதத்தில் தாங்கள்தான் எல்லாம் தெரிந்தவர்கள் என்பது போல் காட்டிக்கொள்வர். ஒரு முறை செய்தி அறைக்கு நேர்முகப்பரீட்சைக்கு சென்றிருந்த என்னிடம் செய்தி அறை முகாமைத்துவம் என்ற விடயமே இல்லை என வாதிட்ட ஊடகவியலாளர் ( அப்போது செய்தி முகாமையாளராக இருந்தார்) பற்றி எனக்கு என்ன செய்வது என்று தெரியாமல் திரும்பி வந்தது நினைவுக்கு வருகிறது. நான் இலங்கையிலிருந்து தெரிவு செய்யப்பட்டு சுவீடன் நாட்டில் மூன்றுவார காலம் செய்தி அறை முகாமைத்துவம் பற்றி பயிற்சி பெற்றுவந்திருந்தேன் என்பது அவருக்கு தெரிந்திருக்க நியாயமில்லை. என்னுடைய ஊர் நுவரெலியா என்றவுடன் அந்த சான்றிதழையெல்லாம் யார் பார்ப்பது?
எதிரொலி என செய்திக்கெல்லாம் பெயர் வைத்து உலகம் சுற்றிய செல்லமானவர் மீண்டும் சகதியில் இறங்கியிருப்பதாகத்தான் கேள்வி…..

பிரபா

இறக்குவானை நிர்ஷன் said...

//siva sinnapodi said...
நன்றி நிர்சன் 2006 ம் ஆண்டு நான் எழுதிய தமிழ் தளத்தில் ஊடகவியல் என்ற கட்டுரைகள் தங்களுக்கு பிரயோசனமாக இருக்கலாம்.அது எனது வலைப் பதிவில் உள்ளது.மற்றப்படி2004ம் ஆண்டு நான் வன்னியல் வந்து நின்ற போது தயா மாஸ்டர் இல்லத்தில் தங்களைப் பாhத்தததாக யாபகம் அது நீங்கள் தானேh தெரியவில்லை. நடேசன் எனது நண்பன் சிவராம் உட்படபட பலர் வந்திருந்தார்கள்
//

தங்கள் மீள் வருகைக்கு நன்றி ஐயா. உங்கள் கட்டுரைகளில் நிறையவே தகவல்கள் அடங்கியிருக்கின்றன.

மற்றும் நீங்கள் இறுதியாக கேட்ட கேள்விக்கு இலங்கையில் இருந்துகொண்டு பதில் சொல்ல முடியாது.

நன்றிகள் ஐயா.

இறக்குவானை நிர்ஷன் said...

//Anonymous said...
நல்லதொரு பதிவு. பகிர்வு. பெரும்பாலும் ஊடகத்துறையிலிருக்கும் முன்னையவர்கள் ஏதாவது ஒரு விதத்தில் தாங்கள்தான் எல்லாம் தெரிந்தவர்கள் என்பது போல் காட்டிக்கொள்வர். ஒரு முறை செய்தி அறைக்கு நேர்முகப்பரீட்சைக்கு சென்றிருந்த என்னிடம் செய்தி அறை முகாமைத்துவம் என்ற விடயமே இல்லை என வாதிட்ட ஊடகவியலாளர் ( அப்போது செய்தி முகாமையாளராக இருந்தார்) பற்றி எனக்கு என்ன செய்வது என்று தெரியாமல் திரும்பி வந்தது நினைவுக்கு வருகிறது. நான் இலங்கையிலிருந்து தெரிவு செய்யப்பட்டு சுவீடன் நாட்டில் மூன்றுவார காலம் செய்தி அறை முகாமைத்துவம் பற்றி பயிற்சி பெற்றுவந்திருந்தேன் என்பது அவருக்கு தெரிந்திருக்க நியாயமில்லை. என்னுடைய ஊர் நுவரெலியா என்றவுடன் அந்த சான்றிதழையெல்லாம் யார் பார்ப்பது?
எதிரொலி என செய்திக்கெல்லாம் பெயர் வைத்து உலகம் சுற்றிய செல்லமானவர் மீண்டும் சகதியில் இறங்கியிருப்பதாகத்தான் கேள்வி…..

பிரபா
//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பிரபா.இப்போதும் அப்படியானவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

நீங்கள் நுவரெலியாவைச் சேர்ந்தவரா? இப்போது என்ன செய்கிறீர்கள்? எங்கிருக்கிறீர்கள்? நேரமிருந்தால் தொடர்புகொள்ளுங்கள்.

geevanathy said...

\\\"தம்பி கவலப்படாதீங்க.நீங்க தோட்டத்திலருந்து(மலையகம்) வந்தனாலதான் வேலை கிடைக்கல. இங்க இன்னொருத்தர எடுத்திட்டாங்க.\\\

வலி தந்த வரிகள்....

///எமக்கான வழியை நாம்தான் அமைத்துக்கொள்ள வேண்டும்.//

உண்மையான வரிகள்.....

///இது பல இடங்களில் பலருக்கு நடந்த கதை..///

அதில் நானுமொருவன்...

மாற்றங்களை உருவாக்க நாம்தான் முயற்சிக்க வேண்டும்...

அன்புடன் ஜீவன்....

இறக்குவானை நிர்ஷன் said...

நன்றி ஜீவன்.
//மாற்றங்களை உருவாக்க நாம்தான் முயற்சிக்க வேண்டும்... //

அதன்படிதான் நடக்கிறேன் ஜீவன்.
அன்பான பின்னூட்டத்துக்கு நன்றிகள்.