இலங்கையில் ஒரு வாரம் நிறைவடைவதற்குள் மற்றுமொரு குண்டுத்தாக்குதல்.... இன்றைய (தெஹிவளை) குண்டுவெடிப்பில் அப்பாவிகள் 26பேர் பலியானதுடன் 60இற்கும் மேற்பட்டோர் காயப்பட்டனர்। யுத்தத்துக்கு இனவெறியை சந்தர்ப்பமாக வைத்து தெஹிவளை பகுதியில் தமிழர்கள் கண்டபடி தாக்கப்பட்டும் உள்ளனர்।
இன்றைய சம்பவப் படங்கள்தான் இவை। யுத்தத்தின் மற்றுமொரு கோரத்தாண்டவம்!!!
20 comments:
மிகத்துன்பமான செய்தி. பாதிக்கப்பட்டவர்களின் துயரும் காயமடைந்தவர்களின் வேதனையும் மனஉளைச்சலும் வார்த்தைகளில் முடியாதவை. அனைவரது நலத்திற்கும் பிரார்த்திப்பதை விடுத்து வேறென்ன செய்யமுடியும்.. :((((
கொடுமையிலும் கொடுமை... இதைவிடக் கொடுமை ஏது?
//ஆ.கோகுலன் said...
மிகத்துன்பமான செய்தி. பாதிக்கப்பட்டவர்களின் துயரும் காயமடைந்தவர்களின் வேதனையும் மனஉளைச்சலும் வார்த்தைகளில் முடியாதவை. அனைவரது நலத்திற்கும் பிரார்த்திப்பதை விடுத்து வேறென்ன செய்யமுடியும்.. :((((
//
உண்மைதான் கோகுலன். கருத்துக்கும் வருகைக்கும் நன்றி
//snnithiyaanu said...
கொடுமையிலும் கொடுமை... இதைவிடக் கொடுமை ஏது?
//
வருகைக்கு நன்றி அனு.
enna seyyalam......
இது யாருக்கான போராட்டம் என யாராலயும் சொல்ல முடியுமா? மக்களுக்கான போராட்டம் என்றால் ஏன் மக்கள் கொலை செய்யப்படுகிறார்கள். அரச பக்கத்தில் பிழை இருப்பதை நாம் வெளிப்படையாக விமர்சிப்பதை போல புலிகள் தரப்பிலும் பிழை இருப்பதை ஏன் சொல்ல பயப்படுகிறோம்.
நான் யார் என்பதை தேட முற்படலாம். அதைவிடுத்து எனது கருத்தின் ஆழம் பற்றி சிந்தியுங்கள். என்ன நிர்ஷன் உங்களது நடுநிலைமையை இந்த விடயத்தில் கேட்க விரும்புகிறேன். என்ன சொல்கிறீர்கள்???
-நியாயநண்பன்.
:-((((((((
போராட்டம் யாருடையதாக இருந்தாலும் பாதிக்கப்படுபவர்கள் அப்பாவிகளே :-(
அநியாயமாய் உயிரிழந்தவர்களுக்கு என் அனுதாபங்கள்..அவர்கள் ஆத்மா இனிமீலாவது அமைதியாக இருக்க இறைவனை வேண்டுகிறேன்.
உங்கள் அனைவரினதும் இரங்கல்களுக்கு எனக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். தமிழர்களின் ஒரு சிறந்த குணம் என்னவன்றால் விழுந்தடித்துக்கொண்டு மற்றவர்களுக்காக இரக்கம் காட்டி தங்களை நல்லவர்களாக காட்டிக்கொள்வதில் உள்ள அக்கறை வேற எதிலும் கிடையாது. கொடுமை, கொடுமை என்றும் நியாயம் பேசுவதற்கும் கத்தும் நீங்கள் உங்களிற்காக யார் இருக்கிறார்கள். வன்னியில் மக்கள் கிளைமோர் தாக்குதலில் கொல்லப்படும் போது அதன் படங்கள் தமிழ் பத்திரிகையில் மட்டும் வரும். காரணம் அதை சிங்களமக்களால் பார்த்து விளங்கிக் கொள்வார்களா என்ற ஒரு முயற்சி தான். அதன் காரணமாகத்தான் பத்திரிகையில் உடலங்களை காட்டுவதை தடைசெய்துள்ளார்கள். இந்த படங்கள் அனைததும் சிங்ள மக்களின் மின்னஞச்ல்கலை நிரம்பியிருக்கும். ஆனால் தமிழர்கள் அப்படியல்லாம் பண்ணமாட்டார்க்ள. காரணம் தமிழன் ஒரு கேவலமான பிறவி. புலிகளில் பிழை பிடிக்கும் நீங்க்ள புலி இல்லாவிடட்டால் சிங்ககளுக்கு என்ன செய்துகொண்டிருப்பீர்க்ள என தெரியுமா,?
வேண்டாம் நான் இதை பார்த்து இரங்கிய காலம் உண்டு. உங்கள் உணர்வுதான் இருந்தது. ஆனால் முற்றிலும் உண்மை. கஞ்சி குடித்ததாலும் புலிகளை ஒழித்தால் சரி என்ற இன வெறியுடன் முழத்திற்கு முழம் புத்தர் சிலைகளை கட்டிவரும் சிங்கள மக்கள் (அப்பாவிகள் என்று ஒருவர் கூறுகிறார். என்ன இரக்க மனசு) இப்படி இறக்கும் போது என் மனது புளாங்கிதம் அடைகிறது. காரணம் இதற்கு பிறகு தான் மேன்மைதங்கிய சர்வதேசம் வன்னியிலும் கிழக்கிலும் பொதுமக்கள் பலியாவதை வன்மையாக கண்டிக்கிறோம் என்பார்கள். அதற்கு முன் ஒரு மயிரும் அவர்களுக்கு தெரியாது. இங்கு பதிலளித்த சிலருக்கும் கூட. முதலில் உங்களுக்கு என்ன நடக்கிறது என்பதைஅறிந்து உங்களுக்காக குரல் கொடுங்கள். இல்லையெனில் நாளை நீங்களும் இருக்க மாட்டிர்கள் மற்றவர்களுக்கு குரல் கொடுக்க. மற்றவர்கள் மனதை புண்படுத்த வேண்டாம் என்றால் முற்றிலும் நியாயமான இந்த தாக்குதலை கோரத் தாண்டவம் என்பது என் மனதை புண்படுத்துகிறது. (உங்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தலாம். இன்று அனைவராலும் படிப்படியாக இன மொழி கலை இலக்கிய பொருளாதார ரீதியாக அழிக்கப்படும் தமிழராக பாருங்கள்) ஒரு தமிழர் கடத்தப்பட்டு விடுதலை செய்யப்படும் போது .5 - 1 கோடி வரிகளற்று சிங்களவருக்கு போகிறது.

//Anonymous said...
இது யாருக்கான போராட்டம் என யாராலயும் சொல்ல முடியுமா? மக்களுக்கான போராட்டம் என்றால் ஏன் மக்கள் கொலை செய்யப்படுகிறார்கள். அரச பக்கத்தில் பிழை இருப்பதை நாம் வெளிப்படையாக விமர்சிப்பதை போல புலிகள் தரப்பிலும் பிழை இருப்பதை ஏன் சொல்ல பயப்படுகிறோம்.
நான் யார் என்பதை தேட முற்படலாம். அதைவிடுத்து எனது கருத்தின் ஆழம் பற்றி சிந்தியுங்கள். என்ன நிர்ஷன் உங்களது நடுநிலைமையை இந்த விடயத்தில் கேட்க விரும்புகிறேன். என்ன சொல்கிறீர்கள்???
-நியாயநண்பன்.
//
இந்தக் கேள்வியுடன் உங்களது பெயரையும் சுட்டியிருந்தால் நான் மகிழ்வடைந்திருப்பேன். ஆம்! என்னைப்பொருத்தவரையில் எங்கு மக்கள் பாதிக்கப்படுகிறார்களோ அதற்கான காரணம் மற்றும் அதன் பின்விளைவுகள் தாக்கங்கள் பற்றியதாகவே எழுதுகிறேன். எந்தத் தரப்பு பக்கமும் தனிப்பட்ட ரீதியில் கருத்து தெரிவிக்கவில்லை. எனக்கென்று தனிப்பட்ட விருப்பங்கள் இருந்தாலும் வலைத்தளத்தில் உண்மையை அவ்வாறே எழுத வேண்டிய கடப்பாடு உள்ளதை நீங்கள் மறுக்க முடியாது. ஆதாரம் இல்லாத விடயங்களை இவர்கள்தான் செய்தார்கள் என சுட்டிக்காட்ட முடியாது. அது பெரும் பின்விளைவுகளை ஏற்படுத்தும்.
/ச்சின்னப் பையன் said...
:-((((((((
//
வருகைக்கு நன்றி ச்சின்னப்பையன்
//கிரி said...
போராட்டம் யாருடையதாக இருந்தாலும் பாதிக்கப்படுபவர்கள் அப்பாவிகளே :-(
அநியாயமாய் உயிரிழந்தவர்களுக்கு என் அனுதாபங்கள்..அவர்கள் ஆத்மா இனிமீலாவது அமைதியாக இருக்க இறைவனை வேண்டுகிறேன்.
//
கருத்துக்கு நன்றி கிரி.
// Mark K Maity said...
உங்கள் அனைவரினதும் இரங்கல்களுக்கு எனக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். தமிழர்களின் ஒரு சிறந்த குணம் என்னவன்றால் விழுந்தடித்துக்கொண்டு மற்றவர்களுக்காக இரக்கம் காட்டி தங்களை நல்லவர்களாக காட்டிக்கொள்வதில் உள்ள அக்கறை வேற எதிலும் கிடையாது. கொடுமை, கொடுமை என்றும் நியாயம் பேசுவதற்கும் கத்தும் நீங்கள் உங்களிற்காக யார் இருக்கிறார்கள். வன்னியில் மக்கள் கிளைமோர் தாக்குதலில் கொல்லப்படும் போது அதன் படங்கள் தமிழ் பத்திரிகையில் மட்டும் வரும். காரணம் அதை சிங்களமக்களால் பார்த்து விளங்கிக் கொள்வார்களா என்ற ஒரு முயற்சி தான்
.......................//
வாருங்கள்.
வடக்கில் தமிழர்கள் தாக்கப்படும்போது ஏன் அந்தத் தகவல்களை வெளிக்கொண்டுவருவதில்லை என்ற கேள்வியை கேட்டிருக்கிறீர்கள். நியாயமானது. உங்கள் பின்னூட்டத்தை வாசித்தபோது உண்மையில் நான் வெட்கமடைவதாக உணர்ந்தேன். நான் எப்போதும் தமிழர்களின் நியாயத்தை விட்டுக்கொடுக்கும் தகவல்களை எனது வலைத்தளத்தில் தந்ததில்லை. தரப்போவதுமில்லை. புதிய மலையகம் எனப் பெயரிட்டிருந்தாலும் அதிகமான செய்திகள் வடக்கு கிழக்கு தமிழர்களின் நலன்குறித்தானதாகவே இருப்பதையும் அவதானித்திருப்பீர்கள். எனக்கு வடக்கு கிழக்கு மலையகம் என்ற பேதம் இல்லை. அதேபோல் அப்பாவி மக்கள் என்று நோக்கும்போது தமிழனா சிங்களவனா என்றும் நான் பார்ப்பதில்லை. ஒருபக்கம் யுத்தம் நடக்க மறுபுறத்தில் கால்வயிறு அரைவயிறுடன் பிழைப்பு நடத்தி பட்டினியுடன் காலம் கடத்தும் இந்த அப்பாவிகள் என்ன செய்தார்கள் என்பதே எனது கேள்வி. இது வன்னியினாலும் சரி கொழும்பினாலும் சரி. ஒருமுறை வன்னித்தாக்குதல் படங்களை ஓர் இணையத்தளத்திலிருந்து எடுத்து நான் வலைத்தளத்துக்கு போட்டபோது அந்த இணையத்தின் உரிமையாளர் ( தமிழர்)ஒரு படத்துக்கு 5 டொலர் தந்துவிட்டு பிரசுரிக்கவும் இல்லாவிட்டால் படங்களை அகற்றுங்கள் எனக்கூறிவிட்டார். இத்தனைக்கும் அவர் யாழ்ப்பாணத்தில் பிறந்து வளர்ந்து தமிழர்களுக்காக செய்தி தருபவர்தான். இந்தக் கொடுமையை நான் எங்கு போய் சொல்வது. மேலோட்டமாக நோக்கும்போது எனது வலைத்தளத்தில் சில விடயங்களை பிரசுரிப்பதால் நான் எந்தளவு பிரச்சினையை எதிர்நோக்குகிறேன் என்பதை யாரும் அறிய மாட்டார்கள்.
naanum vithiyasam parpathillai. virivana reply tamillil varum.
//Mark K Maity said...
naanum vithiyasam parpathillai. virivana reply tamillil varum.
//
வருகைக்கு நன்றி.
காத்திருக்கிறேன்.
என்ன சொல்ல யுத்தம் கொடுத்தது அவ்வளவுதான் ஆனால் இந்தப்பதிவில் பெரிய பின்னூட்டத்தை இரண்டு முறை போட்டிருக்கிற நண்பர் சொன்னது போல சிங்கள மக்களின் பார்வைக்கு தமிழ் மக்கள் எதிரிகளாகவே சித்தரிக்கப்பபடுகிறார்கள் தவறான நபர்களாலும் தவறான பிரச்சாரங்களாலும் அந்த நாள் தொடக்கம் மூளைச்சலவை செய்யப்பட்ட சந்ததிகளாகவே இருக்கிறார்கள் சிங்கள சமூகத்தினர் என்பது என் உறுதியான கருத்து இந்த வகையான ஒரு தலைப்பட்சமான பிரச்சாரங்கள்...அவர்களுடைய பகை உணர்வை தூண்டுவதாகவே இருக்கிறது அது காலந்தோறும் நடந்து கொண்டே இருக்கிறது ...
இருந்தாலும் தமிழ் மக்கள் யாரும் அப்படி பிரச்சாரங்களை நம்புகிறவர்கள் அல்ல எந்த ஒரு சிங்களவரையும் தவறாக தேவையின்றியோ தான் நேரடியாக சம்பந்தப்படாமலோ பேசியதில்லை என்பது என் எண்ணம்...
...நாங்கள் எழுதகிற விடயங்கள் இரண்டு மொழி பேசுகிறவர்களுக்கும் போய் சேரவேண்டும் என்பது என் எண்ணம் இதனை நான் ஏற்கனவே நிர்ஷனுக்கு சொல்லி இருக்கிறேன்.. அதனாலதான் சொல்லுறன் மாணவர்கள் கையில்தான் நாடு இருக்கிறது இந்கே செயல்பட வேண்டியது மாணவர்களும் ஊடகங்களும்தான் மிக முக்கியம் ஊடகங்களின் நோக்கில் பக்கச்சார்பே இருக்கக்கூடாது....
யுத்தம் தேவையில்லை என்பது உங்கள் கருத்தென்றால் அன்பையும் புரிந்துணர்வையும் நாட்டுக்குள் ஏற்படுத்த வேண்டியது மாணவர்களே அவர்களால் நிச்சயம் முடியம் அது தனித்தனி யாக ஒவ்வொரு இலங்கையனையும் போய் சேரவேண்டும்.
Post a Comment