Wednesday, May 28, 2008

அரசியல்வாதியும் அம்மாவும் ! ( ஓர் உண்மை உரையாடல்)

தமிழ் அரசியல்வாதி: "ம்ம்ம்... என்ன செய்யலாம்...? பத்திரிகையில் நாளைக்கு அறிக்கை ஒன்று விடுறேன்। அதுக்குப்பிறகு பார்ப்போம் என்ன நடக்குதென்று। நீங்க பயப்படாமல் போய்வாங்க।

வயதான அம்மா: ஐயா॥உங்களை நம்பித்தான் வந்தோம்। தயவு செய்து என் மகனை மீட்டுத்தாங்க।

தமிழ் அரசியல்வாதி: இப்போ உள்ள அரசாங்கம் அப்படியம்மா। என்ன நடக்குதுன்னு எங்களுக்கு புரியுதில்ல॥ இன்னைக்கே என்னோட செக்ரடரிகிட்ட சொல்லி பொலிஸ்மா அதிபருக்கு கடிதம் ஒன்ன எழுதி அனுப்புறன்। அதுவும் நாளைக்கு பத்திரிகையில வரும்।

வயதான அம்மா: என் மகன் ஒருத்தன்ட பிழப்ப நம்பித்தானய்யா நாங்க வாழ்றோம்। நான் அப்பவே தலையில அடிச்சிகிட்டேன் இந்த நாடே வேணாம் மகன வெளியூருக்கு அனுப்பிடுவம் னு॥ எங்கயாவது கடல்கடந்த ஊர்ல கண்காணாம இருந்தாலும் உயிரோட இருக்கானு நம்பிக்கையாவது இருக்கும்। ஆனா இங்க காணாம போன பிறகு எப்படி ஐயா மனச தேத்துறது?

தமிழ் அரசியல்வாதி: இத பாருங்கம்மா॥ இப்படி ஒருநாளைக்கு நாலைஞ்சு பேர் வந்து அழுது ஒப்பாரி வக்கிறாங்க। அதுக்காக என்னதான் செய்ய முடியும்?

வயதான அம்மா: யார் கடத்தினாங்க? எதுக்காக? என்ன கேக்குறாங்க? என் மகன எங்க வச்சிருக்காங்க ன்னாவது கண்டுபிடிச்சு சொல்ல முடியுமாங்க?

தமிழ் அரசியல்வாதி: ம்ம்ம் அதெல்லாம் முடிஞ்சா நாங்க ஏனம்மா சிறிலங்கா பார்லிமன்ட்ல இருக்கோம்? சரி சரி பார்க்கலாம் நீங்க போய் வாங்க।

வயதான அம்மா: ஐயா பொலிஸ் உடுப்புல வந்தவங்கதான் கடத்தினாங்கனு சொல்றாங்க। அதையாவது கேட்டுப்பாக்க முடியாதா?

தமிழ் அரசியல்வாதி: சரி விசாரிச்சு சொல்றேன்। இப்போ போங்க।

இலங்கையில் ஆட்கடத்தல்கள் கொலைகள் தொடர்ச்சியாக இடம்பெற்றுக்கொண்டிருக்க அரசாங்கத்தில் அங்கம்வகிக்கும் தமிழ் அரசியல்வாதிகளின் சேவை நாடகம் இப்படித்தான் அமைந்திருக்கிறது। ஐயா உதவி செய்வார் என்ற நம்பிக்கையுடன் தினமும் அழுதுகொண்டிருக்கும் அம்மாமார் , மனைவிமார் எத்தனையோ பேர்।

தாம் விதவையானதை கூட தெரியாமல் வாழ்ந்துகொண்டிருக்கும் மனைவியர் எத்தனையோ பேர்?

இத்தனை நடந்தும் அரசாங்கத்தில் அங்கம் வகித்து மக்கள் சேவகர்கள் என்று சொல்லிக்கொள்ளத்தான் வேண்டுமா?

(படங்கள்: கடத்தப்பட்ட மகனை விடுவி்க்கக்கோரி கதறியழும் பெற்றோர்। படஉதவி: ஏபி)

26 comments:

M.Rishan Shareef said...

மிகவும் வருத்தத்துக்குரிய விடயம் இலங்கையில் எந்தத் தகவலுமின்றிக் காரணமின்றிக் காணாமல் போவது..
அரசியல்வாதிகள் அதனை வைத்து நாடகம் நடத்துகிறார்கள்.

உங்கள் பதிவு ஆபத்தைக் கொண்டுவரும் நிர்ஷா..கவனமாக இருங்கள்.

நேரம் கிடைக்கும் போது இதைப் பாருங்கள் நண்பா !
http://thesamnet.co.uk/?p=1216

இறக்குவானை நிர்ஷன் said...

//எம்.ரிஷான் ஷெரீப் said...

//

சரியாகச் சொன்னீர்கள் ரிஷான். வருகைக்கு நன்றி. நீங்கள் தந்த இணையப்பக்கத்தை பார்த்தேன். வருத்தத்துக்குரிய தகவல்!

Unknown said...

அருமையான எழுத்துநடை நிர்ஷன்.
//எங்கயாவது கடல்கடந்த ஊர்ல கண்காணாம இருந்தாலும் உயிரோட இருக்கானு நம்பிக்கையாவது இருக்கும்। ஆனா இங்க காணாம போன பிறகு எப்படி ஐயா மனச தேத்துறது?
//

என்ற அம்மாவின் வரிகள் என்னை கவலையடையச் செய்தன.

//தாம் விதவையானதை கூட தெரியாமல் வாழ்ந்துகொண்டிருக்கும் மனைவியர் எத்தனையோ பேர்?
//
இது யதார்த்தமான உண்மை நிர்ஷன். கடத்தப்பட்டவர்கள் பலர் கொல்லப்பட்டடிருக்கலாம் என்ற நம்பிக்கை தான் பலரிடையே நிலவுகிறது. ஆனால் தமது கணவன்மார் எப்போதாவது வருவார்கள் என்ற நம்பிக்கையில் மனைவிமார் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர்.

சம்பந்தப்பட்ட எல்லாருக்கும் நல்ல அடி!

Anonymous said...

அருமையான பதிவு நிர்ஷன். எமது அரசியல் "தலைவர்கள்" இன் மின்முகவரிகளுக்கு அனுப்பிவிடுங்கள்.

-அட்டன் அமலன்.

இறக்குவானை நிர்ஷன் said...

//.....Bava said...
.....
இது யதார்த்தமான உண்மை நிர்ஷன். கடத்தப்பட்டவர்கள் பலர் கொல்லப்பட்டடிருக்கலாம் என்ற நம்பிக்கை தான் பலரிடையே நிலவுகிறது. ஆனால் தமது கணவன்மார் எப்போதாவது வருவார்கள் என்ற நம்பிக்கையில் மனைவிமார் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர்.

சம்பந்தப்பட்ட எல்லாருக்கும் நல்ல அடி!//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பவா. தொடர்ந்தும் தொடர்பில் இருங்கள்.

இறக்குவானை நிர்ஷன் said...

//Anonymous said...
அருமையான பதிவு நிர்ஷன். எமது அரசியல் "தலைவர்கள்" இன் மின்முகவரிகளுக்கு அனுப்பிவிடுங்கள்.

-அட்டன் அமலன்.
//

வருக அமலன். நான் எந்த அரசியல்வாதிக்கும் அனுப்பவில்லை. பார்ப்போம்.
என்ன நான் அனுப்பும் மின்னஞ்சல்களுக்கு தங்களிடமிருந்து எந்தவித பதிலையும் காணவில்லையே?

Anonymous said...

கொஞ்சம் வேலையாக இருந்தேன் நிர்ஷன் அதுதான் பதில் அனுப்ப முடியவில்லை. இப்போதுதான் ஒழுங்காக தமிழில் டைப் செய்யவே பழகியிருக்கிறேன்.

இறக்குவானை நிர்ஷன் said...

நன்றி அமலன்.

pudugaithendral said...

நான் அங்கு இருந்த போதே பலர் வெளிநாட்டுக்கு ஓடிக்கொண்டிருந்தனர்.

கந்தா காப்பாத்து.

Anonymous said...

ஆனாலும் நாம் அமைச்சர் பதவிகளை ஒருபோதும் விட்டுக்கொடுக்கமாட்டோம் என இந்த பாழாய்ப்போன அமைச்சர்கள் நினைப்பார்கள். பெரும்பாலான தமிழ் அமைச்சர்கள் மகிந்த போடும் எழும்புத்துண்டுக்காக அலைபவர்கள். இதில் ஆறுமுகனும் சந்திரசேகரனும் நாய்களைவிடக்கேவலமானவர்கள். இந்த வெட்ககேட்டில் இராதாகிருஷ்ணனிடம் போய் மக்கள் தங்கள குறைகளைச் சொல்கிறார்களாம். மனோகணேசன் மட்டும் ஏதோ தன்னால் ஆன உதவிகளைச் செய்கின்றார்.

King... said...

அப்படிடப்போட்டு தாக்குங்க நிர்ஷன் உந்த அரசியலும் வேண்டாம் யுத்தமும் வேண்டாம் விட்டால் இவங்கள் கோவணத்தைக்கூட கொடியாப்பிடிப்பாங்கள்

இலங்கையின் விடிவு உதிலையில்லை மக்களே; அடுத்த மனிதளை வாசிக்கப்பழகுங்குங்கோ அவனை நேசிக்காட்டாலும் பரவாயில்லை புரிந்து கொள்ள எண்டாலும் முயற்சிக்லாமே நிர்ஷன் உங்களுக்கு சிங்களம் தெரியும்தானே ஊடகத்துறையிலிருக்கிற இளைய சமுதாயம் என்ன சொல்கிறது ஒட்டுமொத்த இளைய சமூகமத்தை ஒன்று திரட்டலாமே...

வார்தைப்பிரயோகம் கடுமையாக இருந்தால் தவிர்த்துக்கொள்ளுங்கள் மறுமுறை எழுதுகிறேன்...

King... said...

நிர்ஷன் பாராட்டுக்கள் நண்பா இருந்தாலும் எச்சரிக்கையாய் இருக்கவும் ஏதாவத வித்தியாசமாக உணர்ந்தாலோ நடந்தாலோ உடனே பதிவுலகத்தக்கும் அறியத்தாருங்கள்...

இறக்குவானை நிர்ஷன் said...

//புதுகைத் தென்றல் said...
நான் அங்கு இருந்த போதே பலர் வெளிநாட்டுக்கு ஓடிக்கொண்டிருந்தனர்.

கந்தா காப்பாத்து.
//

நானும் வேண்டுகிறேன்.
வருகைக்கு நன்றி புதுகை.

இறக்குவானை நிர்ஷன் said...

//Anonymous said...
ஆனாலும் நாம் அமைச்சர் பதவிகளை ஒருபோதும் விட்டுக்கொடுக்கமாட்டோம் என இந்த பாழாய்ப்போன அமைச்சர்கள் நினைப்பார்கள். பெரும்பாலான தமிழ் அமைச்சர்கள் மகிந்த போடும் எழும்புத்துண்டுக்காக அலைபவர்கள். இதில் ஆறுமுகனும் சந்திரசேகரனும் நாய்களைவிடக்கேவலமானவர்கள். இந்த வெட்ககேட்டில் இராதாகிருஷ்ணனிடம் போய் மக்கள் தங்கள குறைகளைச் சொல்கிறார்களாம். மனோகணேசன் மட்டும் ஏதோ தன்னால் ஆன உதவிகளைச் செய்கின்றார்.
//

வருக அனானியாரே. கருத்துக்கு நன்றி. அப்படியே உங்களுடைய பெயரையும் சொல்லியிருந்தால் சந்தோஷப்படுவேன்.

இறக்குவானை நிர்ஷன் said...

//King... said...
அப்படிடப்போட்டு தாக்குங்க நிர்ஷன் உந்த அரசியலும் வேண்டாம் யுத்தமும் வேண்டாம் விட்டால் இவங்கள் கோவணத்தைக்கூட கொடியாப்பிடிப்பாங்கள்

இலங்கையின் விடிவு உதிலையில்லை மக்களே; அடுத்த மனிதளை வாசிக்கப்பழகுங்குங்கோ அவனை நேசிக்காட்டாலும் பரவாயில்லை புரிந்து கொள்ள எண்டாலும் முயற்சிக்லாமே நிர்ஷன் உங்களுக்கு சிங்களம் தெரியும்தானே ஊடகத்துறையிலிருக்கிற இளைய சமுதாயம் என்ன சொல்கிறது ஒட்டுமொத்த இளைய சமூகமத்தை ஒன்று திரட்டலாமே...

வார்தைப்பிரயோகம் கடுமையாக இருந்தால் தவிர்த்துக்கொள்ளுங்கள் மறுமுறை எழுதுகிறேன்...
//
King... said...
நிர்ஷன் பாராட்டுக்கள் நண்பா இருந்தாலும் எச்சரிக்கையாய் இருக்கவும் ஏதாவத வித்தியாசமாக உணர்ந்தாலோ நடந்தாலோ உடனே பதிவுலகத்தக்கும் அறியத்தாருங்கள்...
//

வாருங்கள் கிங். சரியாகச் சொன்னீர்கள். உங்கள் வார்த்தைப் பிரயோகம் ஒன்றும் தவறில்லை. தேவையானவர்களுக்கு தேவையான வார்த்தைகளால் சொல்ல வேண்டும்.

எனக்கு சிங்களம் தெரியும். சிங்கள நண்பர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களுக்கு என்ன நடக்கிறது எனத் தெரியும். ஆனால் வெளியில் சொல்லத் துணிவில்லை.

ஏதாவது பிரச்சினை என்றால் நிச்சயமாக அறித்தருகிறேன் கிங். தமிழ் அரசியல்வாதியொருவர் எனக்கு எதிராக வழக்குத் தொடர நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அந்தத் தகவலையும் ஆராய்ந்த பின்னர் தருகிறேன்.

உங்களுடைய பின்னூட்டம் மகிழ்ச்சி தருகிறது. நன்றி கிங்.

Unknown said...

நிர்ஷன், இதுவரை சொல்லித் திருந்தாதவர்கள் இனியுமா திருந்தப்போகிறார்கள்?

இறக்குவானை நிர்ஷன் said...

//snnithiyaanu said...
நிர்ஷன், இதுவரை சொல்லித் திருந்தாதவர்கள் இனியுமா திருந்தப்போகிறார்கள்?
//

அதுவும் உண்மைதான். இது மக்களுக்கான தகவல்!

Anonymous said...

வருத்தத்துக்குரிய விஷயம், நிர்ஷன். என்னவாயிற்று என்று அறியாமல் இருப்பது கொடுமையான விஷயம்.

--கவிநயா

Unknown said...

Hi Kalu Banda,
H r u? enna thirumba thodangiyacha vambai vilaiku vanga....

Nn, intha Tamil Arasiyalvathihalukellam ithil thodarbirukirathu. Athodu yaar kadathiyirukirarhal enbathum theriyum. Athu than ivarhal intha Ammavai pondra anega appavi makkalai ematrikondirukirarhal. summa show katuhirarhal. appo than thangal veliyulahuku therivom endra napasaiyudan. Ennathan Kaagam uyara uyara paranthalum, Chitukuruvi allathu Puraa pola agamudiyuma?????

Kalu Banda TC.

Unknown said...

இப்படியான விடயங்களை தரும் உங்களுக்கு
மிச்சம் நன்றி.....

அரசியல்வாதி என்றால் ஏன் இப்படித்தான் இருக்குரார்கள்
என நியதியோ என்னவே தெரியவில்லை...ஆயுத எழுத்து
படம் எல்லோரையும் பார்க்க வைக்க வேண்டும்
நண்பரே

Unknown said...

ரிசான் சொன்ன கருத்தையும் மனதில் வைக்கவும்

இறக்குவானை நிர்ஷன் said...

//Anonymous said...
வருத்தத்துக்குரிய விஷயம், நிர்ஷன். என்னவாயிற்று என்று அறியாமல் இருப்பது கொடுமையான விஷயம்.

--கவிநயா
/

வாருங்கள் கவிநயா. உண்மையில் அந்தக்கொடுமையை யாரும் அனுபவிக்கக் கூடாது.

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

இறக்குவானை நிர்ஷன் said...

//Nitharshini said...
Hi Kalu Banda,
H r u? enna thirumba thodangiyacha vambai vilaiku vanga....
//
உரிமையோடு சொன்ன கருத்துக்கு நன்றி நிது. பொது இடத்திலயா என்னை கிண்டலடிக்கனும்? (ஜி.ம்)
இது எப்படி???

இறக்குவானை நிர்ஷன் said...

//Asfer said...
இப்படியான விடயங்களை தரும் உங்களுக்கு
மிச்சம் நன்றி.....

அரசியல்வாதி என்றால் ஏன் இப்படித்தான் இருக்குரார்கள்
என நியதியோ என்னவே தெரியவில்லை...ஆயுத எழுத்து
படம் எல்லோரையும் பார்க்க வைக்க வேண்டும்
நண்பரே

Asfer said...
ரிசான் சொன்ன கருத்தையும் மனதில் வைக்கவும்
//

எந்தப் படத்தை பார்த்தாலும் சிலரை மாற்றமுடியாதுதானே அஸ்பர்.
உங்களுடைய கருத்துக்கும் அறிவுரைக்கும் நன்றி. நீங்களும் கவனமாக எழுதுங்கள்.

Unknown said...

NIRSHAN,

INDRU NATTIL THAVARU SEITHAL THANDANAI UNDU ENDRA PAYAM ILLAI.

THALAIVANE THAVARU SEIVATHAL THANDIPPATHATKUM AAL ILLAI.

NAALAI IRAIVAN NERIL VARUVAR. APPOLUTHU KANAVANAI ILANTHA MANAIVIKKUM, PILLAYAI ILANTHA THAAIKKUM THEERVU KIDAIKKUM.
ATHTHUDAN KOLAI VIYABARIGALUKKUM THANDANAI KIDAUKKUM.

ANAIVARUKKAGAVUM IRAIVANAI ALAIKKIREN.

BALU.

இறக்குவானை நிர்ஷன் said...

நன்றி பாலு.
உங்கள் ஏக்கத்துடனான இறை அழைப்பின் ஆழம் புரிகிறது.

இவ்வாறானவர்கள் என்றாவது ஒருநாள் நிச்சயமாக இறைவனின் தண்டனைக்கு உள்ளாவார்கள்.