குரு இலிங்க சங்கம வழிபாடு என்பார்கள். இந்து மதத்தைப் பொறுத்தவரை இந்த மூன்றும் இறைவன் தான். அஞ்ஞானத்தை அகற்றும் ஆசாரியன், வழிபாட்டுக்குரிய இலிங்கம், சங்கமம் எனப்படும் சிவனடியார்கள் ஆகிய மூன்று பகுதியினருக்கும் சமமான மதிப்பு உண்டு.
இலிங்கத்துக்கு முதலாக ஏன் குரு சொல்லப்படுகிறார் என்றால், இறைவன் தான் குருவாக வந்து தன்னைப் பற்றியும் மும்மலங்கள், பஞ்சபூதங்கள் பற்றியும் விளக்குகிறார் என்பதால் தான். ஆசாரியன் எனப்படும் ஆசிரியர்கள், தாம் அந்த நிலையில் தான் இருக்கிறோமா என்பதை எப்போதும் சுயமதிப்பீடு செய்துகொள்ளல் அவசியமாகும்.
இலங்கை தலைநகர் கொழும்பில் தமிழர்கள் அதிகமாக வாழும் கொட்டாஞ்சேனை என்றொரு பகுதி இருக்கிறது. அங்கு பிரபலமான தனியார் கல்வி நிறுவனம் இயங்கி வருகிறது. அந்தக் கல்வி நிறுவனத்தில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரின் லீலைகள் குறித்தான பதிவுதான் இது.
காலத்துக்குத் தேவையான மிக முக்கியமான பாடத்தை கற்பிக்கும் ஆசிரியர் அவர். வெள்ளவத்தையிலுள்ள தனியார் கல்வி நிறுவனம் ஒன்றில் கற்பிப்பதுடன் பிரத்தியேக வகுப்புகளையும் நடாத்துகிறார்.
வயதுடைய அவர் தனது வகுப்புகளில் கற்பிக்கும்போது இரட்டை அர்த்த வசனங்களைத் தான் அதிகம் உபயோகிக்கிறார்.
கையில் பேனையை வைத்துக்கொண்டு மாணவியரின் அந்தரங்கப் பகுதியை குத்தி பிழைதிருத்தும் பழக்கத்தைக் கொண்டிருக்கும் இவர்,
மாணவன் ஏதாவது பிழைவிட்டால், “வா… இங்க வா… உனக்கெல்லாம் என் மேசைக்குக் கீழ் இருக்கும் வேலை தான் சரி” என்பாராம்.
மாணவரியர் பலரின் கையடக்கத் தொலைபேசி இலக்கங்களை வாங்கிக்கொண்டு இரவுவேளைகளில் குறுஞ்செய்தி அனுப்புவதுதான் இவரது பொழுதுபோக்கு.
இதுபற்றி அந்த கல்விநிறுவனத்தின் நிர்வாகத்தினர் அக்கறை எடுப்பாக இல்லை. அது அவரோட ஸ்டைல் என்கிறார்கள் அனுபவத்தில் முதிர்ந்த ஆசிரியர்கள்.
ஆசிரியரின் பெயரோடு நான் எழுதவேண்டும் என்றிருந்தேன். ஆனால் நான் அவ்வாறு எழுதிய பிறகு, அந்த ஆசிரியரிடம் கல்விகற்க தமது பிள்ளைகளை அனுப்பிய பெற்றோர் வருத்தப்படுவார்கள்.
மாணவர்களின் கட்டிளமைப் பருவம் வித்தியாசமானது. எது நல்லவழி எது தீயவழி என்பதை சரியாக தேர்ந்தெடுக்க முடியாமல் ஒரு புள்ளியில் ஊஞ்சல்போல் ஆடிக்கொண்டிருப்பார்கள். ஆசியர்கள் தான் அவர்களை சரியான வழிக்கு இட்டுச்செல்ல வேண்டும்.
சில அநாவசியமான வார்த்தைகள் அவர்கள் மனதில் காம எண்ணத்தை தூண்டுவதாக இருந்தால் அதன் பிரதிபலன் அதிமோசமாக இருக்கும் என்பதை இவ்வாறான ஆசிரியர்கள் உணராதவர்களா?
பெண்களின் உள்ளாடைகளைப் பற்றியே வகுப்பில் பேசிக்கொண்டிருக்கும் இவர்கள் சமுதாயத்துக்கு செய்யும் சேவை இதுதானா?
அந்தப் பொறுப்புக்குரியவர்கள் அரசாங்க பாடசாலை ஆசிரியர்கள் மட்டுமல்ல என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணர வேண்டும். தன் உயிரிலும் மேலாக அன்புசெலுத்தி ஆசிரியர்களை நம்பி வகுப்புகளுக்கு பிள்ளைகளை அனுப்பும் பெற்றோருக்கு சம்பந்தப்பட்டவர்கள் செய்யும் பிரதியுபகாரமா இது?
திருடனாய்ப் பார்த்து திருந்த வேண்டும்.
6 comments:
அண்ணா...
தயவுசெய்து அது யார் என்று எனக்கு தனிப்பட்ட ரீதியில் தெரிவிக்க முடியமா?
காமக் கயவர்களை நாம் பாவம் பார்க்கக் கூடாது...
ஆனால் எமக்குள்ள பிரச்சினை, நாம் எந்த விடயத்திலும் ஒழுங்காக, ஒன்றாக செயற்படுவதில்லை.
இவர்களை விட்டுவைப்பது எதிர்கால சமூகத்தை அழிப்பதற்கு சமமாகும்.
இந்த விடயங்களில் பொறுமை கூடாது அண்ணா...
நிர்ஷன்,
உங்கள் சமூகப்பொறுப்பு சிறப்பானது. அவ்வாசிரியரின் போக்கு சம்மந்தமாக உறுதியாக உள்ளீர்களெனின் தயங்காது தெரிவியுங்கள் அவரது பெயரை. நாங்கள் எமது நண்பர்கள், தெரிந்தவர்களை தடுக்கலாமில்லையா?
மேலும் அந்தரங்கப் பகுதி என்பது பாலுறுப்புக்களையே குறிப்பதால் அச்சொல் கொஞ்சம் நெருடலாக இருக்கிறது.
தவிர உங்கள் பதிவிற்கு நன்றி.. தொடர்ந்து எழுதுங்கள்.
உங்களுக்கான அன்புப் பரிசு என் வலையில் காத்திருக்கின்றது
http://enularalkal.blogspot.com/2009/11/blog-post_11.html
உங்களை ஒரு தொடர்பதிவிற்கு அழைத்துள்ளேன், விரும்பினால் தொடருங்கள்
அ முதல் Z வரை
http://yovoice.blogspot.com/2009/11/z.html
நீங்கள் சொல்லும் விடயம் கவலையளிக்கிறது நிர்ஷன், சம்பந்தப்பட்டவர்கள் கவனமெடுப்பார்களா?
இவர்களை போன்றவர்களை சட்டரீதியாக ஏதும் செய்ய முடியாதா அண்ணா?
பாவம் இல்லையா மாணவர்கள்....!
Post a Comment