இலங்கைத் தலைநகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் இன்று காலை வெகு கோலாகலமாக இடம்பெற்றது। காலை ५ மணிமுதல் கிரியைகள் இடம்பெற்றதுடன் ६.३२ மணிமுதல் சகல விமானங்களுக்கும் அபிஷேகம் இனிதே நடைபெற்றது।
கடந்த २ ஆம் திகதி கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேகக் கிரியைகள் ஆரம்பமாயின।
எங்கும் எதற்கும் எதிலும் ஆட்படாத சக்தி சிவம்। இந்நிலையான்,இவ்வண்ணத்தான்,இப்படியிருப்பான், இக்குணமுடையான்,இவ்வருளுடையான்,இப்பேருடையான் எனச் சொல்ல முடியாதவனுக்கு அநேகனாகி முடிவிலா வியாபகன்। அருட்சக்தி நிறைந்த சிவன் ஆன்மாக்களுக்காக படியிறங்கி அருள்பாலிக்கும் இடம் ஆலயமாகும்। தலைநகர் கொழும்பிலுள்ள சிவாலயங்களில் புகழ்பெற்ற இவ்வாலம் பழமை வாய்ந்த தலவரலாற்றைக் கொண்டது।
(ஆலய வரலாற்றின் பின்னர் இன்று நடந்த கும்பாபிஷேகத்தின் படங்கள்। படங்களைத் தந்து உதவிய அன்பு நண்பருக்கு நன்றிகள்)
ஸ்ரீ பொன்னம்பலவாணேசர் ஆலய தல வரலாறு :
தென்னிந்தியாவில் உள்ள பிரம்மாண்டமான கருங்கல் ஆலயங்கள் யாவும் மூவேந்தராலும் நாயக்க பல்லவ மன்னர்களாலுமே கட்டப்பெற்றது. அதேமாதிரியான அமைப்பில் இலங்கையில் முற்றிலும் கருங்கற்களில் பொளிந்த சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த அழகிய கலைக்கோவிலை 1856ஆம் ஆண்டு் யாழ்ப்பாணம் மானிப்பாயில் பிறந்து கொழும்பு செட்டியார் தெருவில் வசித்து வந்த கொடைவள்ளலும் தேசபிமானியுமான பொன்னம்பலம் முதலியாரால் ஸ்தாபிக்கப்பட்டது. பின்னர் அவரது புதல்வர் சேர் பொன் இராமநாதன்இ ஸ்ரீ பொன்னம்பலவாணேசர் கோயில் எழுந்தருளிய இடத்திலே புதியதொரு கோயிலை 1907 ஆம் ஆண்டு கருங்கற் பணியாக ஆரம்பித்து 1912 ஆம் ஆண்டு நவம்பர் 21 ஆம் திகதி கும்பாபிஷேகம் செய்வித்தார்.
மூலஸ்தானத்தில் ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் வீற்றிருக்க சிவகாமி அம்பாள் - அம்பாள் சந்நிதானத்தில் வீற்றிருந்து அருள் பாலிக்கின்றாள். நடராஜர்இ மூலப் பிள்ளையார், சோமஸ்கந்தர், பஞ்சலிங்கம், விஷ்ணு, சுப்பிரமணியர், ஷண்முகர், பைரவர், சுவர்ண பைரவர், நவக்கிரகம் ஆகியோருக்குத் தனித்தனி ஆலயங்கள் உள. கோஷ்டத்தில் நர்த்தன கணபதிஇ தட்சணாமூர்த்தி, லிங்கோற்பவர், பிரம்மா, துர்க்கை முதலானோர் வீற்றிருக்கின்றனர். சனீஸ்வரன் தனியாக வீற்றுள்ளார்.
வெளிவீதியில் கோவிலின் முன்னே நர்த்தன கணபதியும்இ தென்புறத்தே ஸ்ரீ மாரி அம்மன், ஸ்ரீ ஆஞ்சநேயர், ஸ்ரீமுனியப்பர் ஆகியோர் தனி ஆலயங் கொண்டுள்ளனர். வடக்கே கோமாதாவின் கோகுலம் உள்ளது.
நித்தியஇ நைமித்திய பூசைகளும் ஆறு காலப் பூசைகளும் விரதங்களும்இ அபிஷேகங்களும்இ பொங்கல்களும் குளிர்ச்சி போன்றவையும் சிவாகாம முறைப்படி நடைபெற்று வருகின்றன. ஆலய மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பித்து பத்தாம் நாள் பங்குனி உத்தரத்தன்று நிறைவு பெறும். தேர்த்திருவிழா அன்று சோமாஸ்கந்தர்இ அம்பாள்இ சண்டேஸ்வரர் தம் தம் அழகிய சிற்பத் தேர்களிலும் விநாயகர்இ முருகன் தம் வாகனங்களிலும் ஆரோகணித்து வீதி வலம் வருவர். அம்பாளின் தேரைப் பெண்களே இழுப்பது வழக்கம். சுவாமி வெளிவீதி வரும்பொழுதில் நவசந்தித் திருமுறைகள் ஓதப்படுகின்றன. அதிகாலையில் திருப்பள்ளியெழுச்சிப் பராயணத்துடன் பூசைகள் ஆரம்பமாகின்றன. காலை 7:00 மணிக்கும் மாலை 7:00 மணிக்கும் நடைபெறும் பூசையில் நித்தியாக்கினி வளர்க்கப்படும்.
ஆடிப்பூரத்தை அந்தமாகக் கொண்டு ஸ்ரீ சிவகாம சௌந்தரி அம்பாளுக்கு லட்சார்ச்சனை, விசேஷ ஹோமம் என்பன நிகழ்ந்து வருகின்றன. நவராத்திரி காலத்தில் விசேடஷ கொலுபூஜை, ஸ்ரீ சக்ரபூஜை என்பன நடைபெறுகின்றன. நவராத்திரிகால மாலைப் பூஜையைத் தொடர்ந்து ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வர தேவஸ்தானத்தில் அறநெறிப்பாடசாலை இடம்பெற்றுவருவதும் குறிப்பிடத்தக்கது. தமது குஞ்சிதபாதத்தால் அருள் நல்கும் ஸ்ரீ நடராஜப் பெருமானின் அபிஷேக தினங்கள் அபிஷேக பூஜைகளுடன் சிறப்புற இடம்பெறுகின்றன.

22 comments:
தல வரலாறு நன்று. படங்கள் நன்றாக இல்லை.
வருகைக்கு நன்றி அனானி. சிரமத்தின் மத்தியில் எனது நண்பர் எடுத்த படங்கள் குறை நினைக்க வேண்டாம்..
நல்லா எழுதுறியள்...
என்ன கிழக்கு தேர்தலை பற்றி ஒன்றையும் காணவில்லை...
///என்ன கிழக்கு தேர்தலை பற்றி ஒன்றையும் காணவில்லை...///
நானும் கேட்கிறேன்...
நாடு எப்படி இருக்கென்கிற கேள்வியை கேட்க அவசியமில்லாமல் போயிற்று இந்த பதிவு :)
//தமிழன்... said...
நல்லா எழுதுறியள்...
என்ன கிழக்கு தேர்தலை பற்றி ஒன்றையும் காணவில்லை...//
நன்றி தமிழன். கிழக்குத் தேர்தல் நிலை பற்றி 10 ஆம் திகதி தேர்தல் முடிவடைந்தவுடன் ஆழமான கட்டுரை எழுதலாம் என எண்ணியிருக்கிறேன். மாற்றுக் கருத்துடைய விடயங்களில் கைவைக்க வேண்டாம் என்பது நண்பர்களின் வேண்டுகோள். எப்படியாவது எழுதுவேன்.
நன்றி தமிழன். இந்தப் பெயருக்காக இன்னொரு நன்றி.
//King... said...
நாடு எப்படி இருக்கென்கிற கேள்வியை கேட்க அவசியமில்லாமல் போயிற்று இந்த பதிவு :)
//
ஏன் இப்படிச்சொல்லியிருக்கிறீர்கள் கிங்?
(உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தாருங்கள்)
எத்தனையோ முறை அந்தக் கோயிலுக்கு சென்றிருக்கிறேன். இனி காண முடியாது (தாயகம் திரும்பிவிட்டேண் :) ) என்று இருந்த நேரத்தில் படத்தினால் தரிசிக்க வைத்தமைக்கு நன்றி நிர்ஷான்.
//புதுகைத் தென்றல் said...
எத்தனையோ முறை அந்தக் கோயிலுக்கு சென்றிருக்கிறேன். இனி காண முடியாது (தாயகம் திரும்பிவிட்டேண் ) என்று இருந்த நேரத்தில் படத்தினால் தரிசிக்க வைத்தமைக்கு நன்றி நிர்ஷான்
//
வருகைக்கு நன்றி புதுகை. இனி காண முடியாது எனச் சொல்ல வேண்டாம். மீண்டும் இலங்கைக்கு வாருங்கள். எமது ஊருக்கும் சென்று வரலாம்.
படங்கள் அருமை நிர்ஷன்
எங்களுக்காக சிரமப்பட்டு படங்களை எடுத்து பதிவிட்டமைக்கு நன்றி.
கோபுரப் படம் மிக மிக நன்று
உங்கள் நண்பருக்கும் வாழ்த்துக்கள்
அன்புடன்,
தபோதரன்,
உப்சாலா, ஸ்வீடன்
//தபோதரன் கதிரவேலு said...
படங்கள் அருமை நிர்ஷன்
எங்களுக்காக சிரமப்பட்டு படங்களை எடுத்து பதிவிட்டமைக்கு நன்றி.
கோபுரப் படம் மிக மிக நன்று
உங்கள் நண்பருக்கும் வாழ்த்துக்கள்
அன்புடன்,
தபோதரன்,
உப்சாலா, ஸ்வீடன்
//
நன்றி. கும்பாபிஷேகத்துக்கு அதிகாலை போகும்போதே எப்படியாவது இலங்கை நண்பர்களுக்காக பிரசுரிக்க வேண்டும் என நினைத்திருந்தேன். பொன்னம்பலவாணேஸ்வரரின் கடாட்சம்.
படங்களுக்கு நன்றி நிர்ஷன்.
கண்டிப்பாய் இலங்கை வருவேன் நிர்ஷான்,
இன்னும் பார்க்க வேண்டிய இடங்கள் சில இருக்கின்றன். கதிர்காமன் அழைப்பான் அப்போது மருமுறை வருவேன்.
அன்புக்கு நன்றி.
//Alien said...
படங்களுக்கு நன்றி நிர்ஷன்.
//
வருகைக்கு நன்றிகள்.
//புதுகைத் தென்றல் said...
கண்டிப்பாய் இலங்கை வருவேன் நிர்ஷான்,
இன்னும் பார்க்க வேண்டிய இடங்கள் சில இருக்கின்றன். கதிர்காமன் அழைப்பான் அப்போது மருமுறை வருவேன்.
அன்புக்கு நன்றி.
//
கட்டாயம் வாருங்கள். நான் எதிர்பார்த்த பதில் தந்தமைக்கு நன்றி.
என்ன நிர்ஷன்
வேற என்னத்தை சொல்ல பொன்ம்பலவாணேஸ்வரருக்கு கும்பாபிஷேகம், மடுமாதாவுக்கு குண்டு அபிஷேகம்...
நிறையப்பேசலாம் நிர்ஷன் நம்ம பக்கத்துக்கு வாங்க.... பயப்படாம கதைக்கலாம்
///கண்டிப்பாய் இலங்கை வருவேன் நிர்ஷான்,
இன்னும் பார்க்க வேண்டிய இடங்கள் சில இருக்கின்றன். கதிர்காமன் அழைப்பான் அப்போது மருமுறை வருவேன்.
அன்புக்கு நன்றி.///
என்ன புதுகைத்தென்றல் நீங்கள் வரும்போது பொன்பலவாணேஸ்வரர் குண்டடி படாமல் இருந்தால் அது போதாதோ...
அழைப்பதற்கு கதிர்காமன் இருக்க வேண்டுமே அவனுக்காக பிரார்த்தனை செய்யுங்கள்...
இப்ப இருக்கிற இலங்கை சமுதாயத்தில அன்பு நிறையவே இருக்கு அதை அனுபவிக்கவும் பகிர்ந்து கொள்ளவும் சூழ்நிலைகள் தடுக்கிறது... வெகுநாட்கள் இல்லை அன்பால் நிறைந்ததொரு இலங்கை உருவாகும் தொலைவு...அப்பொழுது அங்கே இலங்கை மட்டும்தான் இருக்கும்...
King... said...
என்ன நிர்ஷன்
வேற என்னத்தை சொல்ல பொன்ம்பலவாணேஸ்வரருக்கு கும்பாபிஷேகம், மடுமாதாவுக்கு குண்டு அபிஷேகம்...
//
உண்மைதான் கிங். தமிழர்களை மதிக்காதவர்கள் மதத்தை மட்டும் எப்படி மதிப்பார்கள்?
நிறைய பேசுவதற்கு என்ன யாழுக்கா வரச்சொல்கிறீர்கள்? விரைவில் ஏதாவது முடிவு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் காத்திருக்கும் உறவுகளில் நானும் ஒருவன் கிங்.
உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைக் கேட்டேன் தரவில்லையே?
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
என்னுடைய மின்னஞ்சல் உங்களுக்கு வந்து சேரும்...
அருமையான படங்கள் நிர்ஷன் நன்றிகள் :)
Post a Comment