இலங்கையின் ஒட்டுமொத்த தமிழ் பேசும் மக்களினதும் வாழ்வு நிலையையும் சுதந்திரத்தையும் தீர்மானிக்கும் நாள் நாளையாகும் விடுதலை,சுதந்திரம்,உரிமைகள் என்பன தமிழர்களுக்கு இருப்பதாகவும் அது எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பறிக்கப்படவில்லை என்றும் கூறிக்கொள்ளும் அரசியலாளர்களுக்கு தமிழர்கள் நாளை கொடுக்கப்போகும் பதில்தான் என்ன?
ஆம்! இரண்டு தசாப்த காலத்துக்குப் பிறகு கிழக்கு மாகாணசபைத் தேர்தல் நாளை १० ஆம் திகதி நடைபெறுகிறது। முழு இலங்கை வாழ் தமிழ்பேசும் மக்களின் எதிர்காலத்தையும் இத்தேர்தல் தீர்மானிக்கப்போவது உண்மை.
வன்முறைக்களம் என்றும் தேர்தல் அட்டூழியங்களுக்கும் களவாடல்களுக்கும் இடம்தந்து நடைபெறப்போகும் தேர்தல் என்று இலங்கை எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்ட ஜனநாயகத்துக்காக தமிழ்பேசும் மக்களின் சுயநிர்ணய உரிமையை பெற்றுக்கொடுப்பதற்காக ஜனநாயக ரீதியில் நடைபெறப்போகும் நியாயமான தேர்தலாக இருக்கும் என்று அரச தரப்பும் , வன்முறைகளைக் கட்டுப்படுத்த அரசாங்கம் தவறிவிட்டது ஆயுதக்குழுக்களின் அச்சுறுத்தல்கள் மக்களுக்கு உள்ளன என்று தேர்தல் கண்காணிப்பாளர்களும் ,அரச ஊழியர்கள் ५०० பேரை தேர்தல் உதவிக்காக அரசாங்கம் அமர்த்தியுள்ளது என அரச அதிருப்தியாளர்களும் கூறிவரும் நிலையில் நாளைய தேர்தல் இடம்பெறவிருக்கிறது।
இலங்கையின் கிழக்குப் பகுதி இயற்கை அழகு நிறைந்தது। மக்களும் அளவில்லா அன்புள்ளம் படைத்தவர்கள்। இனத்தை இனத்தால் அழித்து மக்கள் வாழ்வியலையும் வாழ்வாதாரத்தையும் சீர்குலைத்த போர்ச்சூழலின் இரத்தம் தோய்ந்த வரலாறு அந்த மக்களின் ஒட்டுமொத்த உணர்வலைகளையும் உயிருடன் பிடுங்கி எறிந்தது।
போர் காரணமாக இடம்பெயர்ந்து கால்வயிறு சோறுக்குக் கூட காலைப்பிடிக்கும் நிலைக்கு மட்டக்களப்பு திருகோணமலை மக்கள் தள்ளப்பட்டிருந்த போது இலங்கை இதழியல் கல்லூரியினால் நான் மட்டக்களப்புக்கு அனுப்பப்பட்டேன்।
கைகழுவ தண்ணீர் இல்லை,உடுதுணியில்லை,உணவில்லை என்றிருந்த போதும் மாமாங்கர் ஆலய முகாமிலுள்ள வயதான அம்மா எனக்குச் சோறூட்டிய நினைவு இன்னும் கண்ணை நனைக்கிறது। அந்தளவுக்கு அன்பானவர்கள் அவர்கள்।
எந்தப் பிழைக்கும் துணைபோகாமல் எந்தப் பிணியையும் தாங்கிக் கொண்டிருக்கும் இவர்களை பகடைக்காய்களாகப் பயன்படுத்தி சர்வதேசத்துக்கு படம்காட்ட முயலும் சக்திகளுக்கு பாடம் புகட்டக் கூடிய நிலையில் மக்கள் இல்லை என்பது தெளிவு।
ஒரே நோக்கம் எனக் கூறும் தமிழர்களே பிளவுபட்டு தேர்தல் களத்தில் குதித்திருக்கிறார்கள்। நியாயத்துக்காக எனக் கூறி முஸ்லிம்கள் பிளவுபட்டு போட்டியிடுகிறார்கள்।
ஓர் இனத்தவர்களே தம் இனத்தவர்களை காட்டிக்கொடுக்கிறார்கள்। தன் இரத்தத்தையே அது சார்ந்த இன்னொரு இரத்தம் குடிக்கிறது। தன் மொழியையே அதுசார்ந்த மற்றொரு மொழி கொல்கிறது। யாரிடமும் சொல்லி அழ முடியாமல் தலையணை நனைத்து அமைதியாக அடங்கிப்போனவர்கள் எத்தனை பேர்? தமிழ் வளர்த்து கலை வளர்த்து கல்விமான்களையும் கலாசார காவலர்களையும் முன்னுதாரணதாரர்களையும் உருவாக்கிய கிழக்கு களையிழந்து காணப்படுவதற்கு யார் காரணம்?
உதயசூரியனுக்காக காத்திருந்த போது குண்டுவிழுந்து கண்ணையிழந்தவர்கள் எத்தனை பேர்? பார்க்கும் தூரத்தில் பள்ளியிருக்க பட்டாம்பூச்சியாய் பள்ளிக்குச் சென்று கருகிப்போன பிஞ்சுகள் எத்தனை? யுத்தச் சத்தத்தில் மனநோயாளியாகியோர் எத்தனை பேர்? வெறிபிடித்த இன விஷமிகளின் காமக் கரங்களால் மானபங்கப்படுத்தப்பட்டோர் எத்தனை பேர்? வாழ்ந்தும் மரணித்துக்கொண்டிருப்போர் எத்தனை பேர்? சொந்தங்களை சுற்றங்களை இழந்து எதிர்காலத்தை ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டிருப்போர் எத்தனை பேர்?
இத்தனை கேள்விகளுக்குள்ளும் சுமை தாங்கிகளாய் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களுக்குள் மக்கள் சேவகர்கள் நாளை தேர்ந்தெடுக்கப்படப் போகிறார்கள்। தமிழர்களே அதிக பிரிவினைவாதத்துடன் கிழக்கில் நடந்துகொண்டிருக்கிறார்கள்। இந்நிலையில் அப்பாவி மக்கள் என்ன செய்யப் போகிறார்கள்?
இந்தக்கட்டுரை யாரையும் காயப்படுத்துவதற்காகவோ அரசியல் பின்னணியுடனோ எழுதப்படுவதல்ல। சொந்தங்களுக்காக எழுதுகிறேன்।
எனது வேண்டுகோள் இதுதான்। மக்களை துன்புறுத்தி பலவந்தப்படுத்தாமல் சுயமாக வாக்களிக்க விடுங்கள்। அவர்களுக்குத் தெரியும்। யார் உண்மையானவர்கள் என்று। சுதந்திரமான தேர்தல் நடத்த அனைவரும் ஒத்துழையுங்கள்। அதைவிடுத்து தமிழ்பேசும் மக்களை காட்டிக்கொடுக்கும் வரலாற்றுத் தவறுக்கு இடமளிக்க வேண்டாம்।
இதுவரை அந்த மக்கள் பட்ட துன்பங்கள் போதும்। தொடர்ந்தும் அவர்கள் பகடைக்காய்களாக பயன்படுத்தப்படக்கூடாது என்பதே எனது தாழ்வான வேண்டுகோள்.
7 comments:
//எனது வேண்டுகோள் இதுதான்। மக்களை துன்புறுத்தி பலவந்தப்படுத்தாமல் சுயமாக வாக்களிக்க விடுங்கள்। அவர்களுக்குத் தெரியும்। யார் உண்மையானவர்கள் என்று। சுதந்திரமான தேர்தல் நடத்த அனைவரும் ஒத்துழையுங்கள்। அதைவிடுத்து தமிழ்பேசும் மக்களை காட்டிக்கொடுக்கும் வரலாற்றுத் தவறுக்கு இடமளிக்க வேண்டாம்।//
மிகச் சரியாகச் சொல்லியுள்ளீர்கள் நிர்ஷன்.
இதன் பிரதியொன்றை பத்திரிகைகளுக்கும் அனுப்புங்கள்.சம்பந்தப்பட்டவர்களுக்கு மண்டையில் உறைக்கவேண்டும் நண்பா !
நிர்ஷான்
காலத்துக்கேற்ற அலசல், மிக்க நன்றி
மக்கள் விழித்துக்கொள்வது ஒன்றே சரியானதொரு தலைமைக்கு வழிவிடும் நிர்ஷன் நியை யோசித்து சுயமாக வாக்களிப்பதே மக்களுக்க இருக்கிற முதல் கடமை ...எனக்கென்னவோ இதில் பெரிய நாட்டம் ஒன்றும் இல்லை...
///ஒரே நோக்கம் எனக் கூறும் தமிழர்களே பிளவுபட்டு தேர்தல் களத்தில் குதித்திருக்கிறார்கள்। நியாயத்துக்காக எனக் கூறி முஸ்லிம்கள் பிளவுபட்டு போட்டியிடுகிறார்கள்।///
ஒரே நோக்கமோ நியாயமோ ஒரு.... கிடையாது இவர்களிடம் பழைய கதையில படம் காட்டுற ஆக்கள் எங்கடை அரசியல் வாதிகள்...எந்தக்கட்சியிலும் சேரமாட்டோம் நாங்களும் நல்லாயிருக்கமாட்டம் என்கிற அறிவில்லாத கட்சிக்காரர்கள் இவர்கள்...
தேர்தலில் யார் ஜெயிக்கிறார்கள் என்பதில் எனக்கு எந்த கவலையும் கிடையாத தேர்தலுக்கு பின் என்ன நிகழ்கிறது என்பதில்தான் என் கவனம் இருக்கிறது...எவரென்றாலும் ஜெயிக்கட்டும் அவர் நாட்டுக்கு என்ன செய்கிறார் என்பதே என் கேள்வி...
இன்னுமொன்று நிர்ஷன் தமிழர்கள் என்றாலே அதற்குள் முஸ்லீம்களும் அடங்குவார்கள் என்பதை பெரும்பாலான முஸ்லீம் மக்கள் ஏற்றுக்கொள்வதில்லை சாதாரணமாக கதைக்கும் பொழுதே "நீங்கள் தமிழா" என்று ஒருத்தரை கேட்டால் ""இல்லை நான் முஸ்லீம் என்று பதில் சொல்பவர்கள்தான் இருக்கிறார்கள் இலங்கையில், இப்படியான ஒரு நிலமைக்கு- மனப்பாங்கிற்கு என்ன காரணம்? நாட்டில் எவ்வளவோ கடையடைப்புகள் நடந்திருக்கு ஹர்த்தால் நடந்திருக்கு ஊரடங்கு நடந்திருக்கு அந்தப்பேரணி, இந்தப்பேரணி என்று எவ்வளவோ நடந்திருக்கு ஆனால் இதுவரையும் நடக்காத ஒன்று இந்த தேர்தலுக்கு பிறகு நடக்க வேண்டும் பார்க்கலாம் தமிழ்,சிங்களம் என்கிற இரண்டு மொழிகள் இருக்கிறது இலங்கையர்கள் என்ற மக்கள் அங்கே இருக்கிறார்கள் என்கிற மனப்பாங்கு எப்பொழுது வருகிறதோ அப்பொழுது பார்கலாம்...
ரிஷான்,கானாபிரபா,கிங் உங்களுக்கு நன்றிகள். மன்னிக்கவும் பின்னூட்டங்களை பிரசுரிக்கத் தாமதமாகியது. தொடர்ந்து இரு மரணச் சடங்குகளில் கலந்துகொள்ளவேண்டியிருந்தமை தான் அதற்குக் காரணம்.
கிங், தமிழர்கள் பிரிந்து தமது ஒற்றுமை பற்றிப் பேசுவதுதான் வேடிக்கையாக இருக்கிறது. வெளிப்படையாக பேசுகிறீர்கள். இப்படி கருத்து சொல்பவர்கள் தான் காலத்துக்கு அவசியம் கிங்.
Post a Comment