Tuesday, May 13, 2008

யாழ் மாணவன் என்றால் அகதியா?

வடக்குப் போர் முனை சூடுகண்டுள்ளதை நாம் நன்கறிவோம்। துப்பாக்கிச் சத்தத்துக்கு அடங்கிப்போய் பாடசாலைக்குச் செல்லாமல் பள்ளி வாழ்க்கைக்காக ஏங்கித்தவிக்கும் சிறுவர்கள் ஏராளம் என்பதும் எமக்கு நன்றாகத் தெரியும்।
இந்நிலையில் பிள்ளைகளை எப்படியாவது படிப்பிக்க வேண்டும் என்ற தாகத்துடன் அங்கிங்கு கடன்பட்டு கொழும்புக்கு அழைத்துவருகின்றனர் பெற்றோர்। கொழும்புக்கு வருவதென்றால் விமானப் பயணம் தான்। ஒருவழிப் பயணத்துக்கு ஒருவருக்கு १०,००० ரூபா செலவாகிறது। அத்துடன் அங்கு ஆள் அடையாளப்படுத்தி உறுதிப்படுத்துவதற்கு பல்வேறு ஆவணங்கள் பெறவேண்டும்।
இப்படி கஷ்டப்பட்டு பிள்ளைகளை கொழும்புக்கு அழைத்து வந்து படாத பாடுபட்டு பாதுகாப்புப் பிரச்சினைகளுக்கு மத்தியில் வாடகை வீடு தேடி வீட்டு உரிமையாளர்களின் தகாத கேள்விகளுக்கு (சொந்த இடம் யாழ்ப்பாணம் என்றால் வேற்று கிரக வாசியைப் போல சந்தேகத்துடன் பார்ப்பது வழமை) அழுகையைக் கட்டுப்படித்தி பதில் கூறி சாதாரண வாழ்க்கைக்கு திரும்புவதற்கு ३ மாதங்கள் கழிந்துவிடும்।
பின்னர் பிள்ளைகளைப் பாடசாலைக்கு சேர்ப்பதற்கோ பெருங்கஷ்டம்। யாழ் அரச அதிபரின் கையொப்பத்துடனான கடிதம் பெற்று அங்குள்ள பொலிஸ் உயரதிகாரி அதனை உறுதிப்படுத்தி இராணுவத்தினர் அதனை சரிபார்த்துதான் கடிதம் இங்கு வரும்।
இருந்தாலும் பாடசாலையில் சேர்ப்பதற்கு பிரத்தியேக பணமும் செலுத்தவேண்டி வருகிறது। இவை அத்தனையும் செய்துமுடித்து பிள்ளையைப் பாடசாலைக்கு சேர்க்கும் போது சுமார் எட்டு மாதங்கள் பிள்ளையின் கல்வி பின்னடைவைச் சந்தித்திருப்பதுடன் தந்தைக்கு தலைமயிர் பாதி கொட்டியிருக்கும்।
சரி விதிதான் அப்படி விளையாடுகிறது என்றால் சில பாடசாலைகளில் இவ்வாறு சேர்ந்த மாணவர்களை அகதி என்று கூறிப் புண்படுத்தும் ஆசிரியர்களை என்னவென்று கூறுவது? ஆசிரியத் தொழில் புனிதமானது। ஓர் ஆசான் இறைவனுக்கு சமன் என இந்துமதம் கூறுகிறது।

கொழும்பிலுள்ள ஒரு பாடசாலையின் ஆசிரியர் ஒருவர் தனது வகுப்பில் பாடம் நடத்திக்கொண்டிருக்கும் போது அகதியாக கொழும்புக்கு வந்தவர்கள் எத்தனை பேர் எனக் கேட்டிருக்கிறார்। நீங்கள் வகுப்புக்கு ஆறு மாதத்தின் பின்னர் சேர்ந்ததால் ஒழுங்காக பாடம் விளங்குவதில்லை என்று சொல்லியிருக்கிறார்। அது பிரச்சினையில்லை। இங்கு அகதி என்ற சொல் எதற்காக உபயோகிக்கப்பட வேண்டும்? நாங்கள் அகதிகளா என அந்தப் பிஞ்சுப் பிள்ளை தன் பெற்றோரிடம் கேட்டபோது அவர்கள் அடைந்த வலி யார் உணர்ந்திருக்கிறார்கள்? சக மாணவர்கள் அகதி அகதி என விளையாட்டாக அழைக்கும் போது பிள்ளையின் மனம் கொள்ளும் ரணத்தை ஆற்றப்போகும் மருந்துதான் என்ன?
கொழும்பு பாடசாலைகளில் சேர்க்க முடியாமல் ஒருவருடம் பின்னின்று கீழ் வகுப்பில் கல்வி கற்கும் நிறைய மாணவர்கள் இருக்கிறார்கள்। எவ்வாறிருப்பினும் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் மாணவர்கள் நடத்தப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது। போர்ச்சூழலில் பாதிக்கப்பட்டவர்கள் இப்படியும் துன்புறுத்தப்படவேண்டுமா?
சம்பந்தப்பட்டவர்கள் இதனை உணர வேண்டும்। மாணவர்களுக்கு சிறுவயதில் ஏற்படும் துளியளவு மனக்காயம் கூட எதிர்காலத்தை வீணடித்துவிடும் என்பதை அறியவேண்டியது அவசியம்.

10 comments:

Unknown said...

//சம்பந்தப்பட்டவர்கள் இதனை உணர வேண்டும்। மாணவர்களுக்கு சிறுவயதில் ஏற்படும் துளியளவு மனக்காயம் கூட எதிர்காலத்தை வீணடித்துவிடும் என்பதை அறியவேண்டியது அவசியம்.
//

ஐயோ... என்ன கொடுமை இது? இப்படியும் நடக்கிறதா நிர்ஷன்?
மேலுள்ள வரிகளை அவர்கள் உணர வேண்டும்.
சமுதாயம் திருந்தாது போல?

pudugaithendral said...

இதயம் கணத்துப்போனது.

நிலமை மாற வேண்டும் என இறைவ்னைப் ப்ரார்த்திக்கிறேன்.

M.Rishan Shareef said...

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதைப் போல நடந்துகொள்ளும் இம்மாதிரியான ஆசிரியர்கள் அவர்களது தொழிலையே கேவலப்படுத்துகிறார்கள்.

யார் சொல்லியும் திருந்தமாட்டார்கள் நிர்ஷன்.முயலுக்கு மூன்று காலென்ற பிடிவாதக் குணம் கொண்டவர்கள் இவர்கள்.

உங்கள் பதிவு இனி வரும் ஆசிரியர்கள் படித்துப் பாடம் கற்றுக்கொள்ள வேண்டிய பதிவு.
இதைப் படிப்பவர்கள் இதுபோல் செய்யமாட்டார்கள்.

நல்ல பதிவு நண்பா :)

இறக்குவானை நிர்ஷன் said...

//Bava said...
//சம்பந்தப்பட்டவர்கள் இதனை உணர வேண்டும்। மாணவர்களுக்கு சிறுவயதில் ஏற்படும் துளியளவு மனக்காயம் கூட எதிர்காலத்தை வீணடித்துவிடும் என்பதை அறியவேண்டியது அவசியம்.
//

ஐயோ... என்ன கொடுமை இது? இப்படியும் நடக்கிறதா நிர்ஷன்?
மேலுள்ள வரிகளை அவர்கள் உணர வேண்டும்.
சமுதாயம் திருந்தாது போல?//

இப்படியும் நடக்கிறது.
நி்ச்சயமாக இந்நிலை மாறும் பவா.

இறக்குவானை நிர்ஷன் said...

//புதுகைத் தென்றல் said...
இதயம் கணத்துப்போனது.

நிலமை மாற வேண்டும் என இறைவ்னைப் ப்ரார்த்திக்கிறேன்.
//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி புதுகை.

இறக்குவானை நிர்ஷன் said...

//எம்.ரிஷான் ஷெரீப் said...
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதைப் போல நடந்துகொள்ளும் இம்மாதிரியான ஆசிரியர்கள் அவர்களது தொழிலையே கேவலப்படுத்துகிறார்கள்.

யார் சொல்லியும் திருந்தமாட்டார்கள் நிர்ஷன்.முயலுக்கு மூன்று காலென்ற பிடிவாதக் குணம் கொண்டவர்கள் இவர்கள்.

உங்கள் பதிவு இனி வரும் ஆசிரியர்கள் படித்துப் பாடம் கற்றுக்கொள்ள வேண்டிய பதிவு.
இதைப் படிப்பவர்கள் இதுபோல் செய்யமாட்டார்கள்.

நல்ல பதிவு நண்பா :)
//

நன்றி ரிஷான்.

வந்தியத்தேவன் said...

நானும் ஒரு பிரபல கொழும்புப் பாடசாலையில் 3 மாதங்கள் படித்துவிட்டு மீண்டும் யாழ் சென்றேன். மிகவும் கேவலமான பாடசாலை. இப்போ கொஞ்சம் பரவாயில்லை என்கிறார்கள். சில ஆசிரியர்கள் மிகவும் கேவலமாக நடந்துகொண்டார்கள் குறிப்பாக ஆசிரியைகள்.

அதே நேரம் இந்திய வம்சாவளி(கவனிக்கவும் மலையகத்தின் சகோதரர்கள் அல்ல) ஆசிரியர்கள் யாழ்ப்பாணத்து ஆசிரியர்களைக்கூட கிண்டல் செய்வதாக அறிந்தேன்.

அண்மையில் நண்பர் ஒருவர்(ஊடகவியளாளர்) ஒரு சோதனைச் சாவடியில் அவரது அடையாள அட்டையில் பிறந்த இடம் கோப்பாய் என்பதனைப் பார்த்த பொலிஸ்காரர் கோப்பாயில் பிறந்த நீ இங்கே என்ன செய்கிறாய் எனக்கேட்டார். நண்பர் தனது ஊடக அடையாளத்தைக்காட்டியும் அவரால் புரிந்துகொள்ளமுடியவில்லை பின்னர் ஒரு பெண் எஸ் ஐ(ஆங்கிலம் வாசிக்ககூடியவர்) தலையிட்டு சர்ச்சையைத் தீர்த்தார். ஆகவே யாழ்ப்பாணம் என்பது இலங்கையில் ஒரு இடம் இல்லை என இவர்கள் நினைக்கின்றார்கள்.

இறக்குவானை நிர்ஷன் said...

வாருங்கள் வந்தி,
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. இன்னொரு விடயம் தெரியுமா? தற்போது அடையாள அட்டைகளில் முன்பக்க படத்தைக் கூட பார்க்காமல் விலாசத்தை மட்டுமே பார்க்கிறார்கள். அதில் யாழ்ப்பாணம் என குறிப்பிடப்பட்டிருந்தால் அவ்வளவுதான். ஏதோ கடுமையான தண்டனைக்காக சிறைவாசம் அனுபவித்து தப்பி வந்த குற்றவாளியைப் போல தனியாக அழைத்து கேள்விகளைத் தொடுப்பது வழமையாகிவிட்டது.

King... said...

பாராட்டுக்கள் நிர்ஷன் உங்கள் பதிவுக்கு...

விளக்கு கொழுத்த மண்ணெண்ணை இல்லாட்டாலும் படிச்சு பல்கலைக்கழகம் போன ஆக்கள் யாழ்ப்பாணத்தார் படிப்பில அப்பிடியொரு அக்கறை இருந்திச்சு அவையளுக்கு என்ன செய்யுறது சொந்த ஊரில இருக்கவும் முடியேல்லை போற இடங்கள்ளையும் இருக்க முடியல்லை...இதில அதுகள் எப்படி படிக்கிறது...

இப்ப கிட்டடியில் கடுகு சஞ்சிகை வெளியீட்டில அரசியல் துறைப்பொறுப்பாளர் ஆற்றின உரையப்படிச்சியளோ... நிர்ஷன் அவரின்ரை உரையில எனக்கு பல விடயங்களில் உடன்பாடு இல்லையென்றாலும் ஒரு இனத்தின்ரை அழிவுக்கு அதன் சமுகக்கட்டமைப்பை தகர்க்கிறதும், கல்வியை மழுங்கடிப்பதும் கூட ஒரு வழிதான் எண்டுறது சரியாத்தான் படுகிறது எனக்கு..

அந்த உரையை முன்வைத்து ஒரு பதிவு போடலாம் என்று இருக்கிறேன் நேரம்தான் கிடைக்கவில்லை...

நாடு எப்படிப்போனாலும் பரவாயில்லை எண்டு நாட்டின்ரை தலைமைத்துவங்களில் இருக்கிறவையள் நினைக்கேக்கிள்ளை ஆசிரியத்தொழிலில் இருக்கிறதுகள் என்ன பெரிசா யோசிக்கப்போகுதுகள் சம்பளம் கிடைச்சால் காணும் என்று சில அரச ஊழியர்கள் இருக்கத்தானே செய்கிறார்கள் அதுபோலத்தான் இதுவும்...

தமிழில் அகதிஎன்று ஒரு சொல் இருப்பதே ஈழத்தமிழருக்காகத்தானே பயன்படுத்தி பலன் பெற்றுக்கொள்க மக்களே:)
ஒரு நாளில் இலங்கை மொத்தமும் இளைய தலைமுறையினரால் விழத்துக்கொள்ளும் அப்பொழுது தெரியும் மாணவர் சக்தியும் அவர்களின் மனோவலிமையும் !

இறக்குவானை நிர்ஷன் said...

King... said...
.....

ஒரு நாளில் இலங்கை மொத்தமும் இளைய தலைமுறையினரால் விழத்துக்கொள்ளும் அப்பொழுது தெரியும் மாணவர் சக்தியும் அவர்களின் மனோவலிமையும் !//

இளைய தலைமுறையினர் தற்போதைய பிரச்சினைகளை விளங்கிக்கொண்டுள்ளார்கள். சில தீய சக்திகள் அவர்களை வளரவிடாமல் தடுக்கின்றன. நீங்கள் சொல்வதைப் போன்ற காலம் விரைவில் உதயமாகுமட். எமது கனவும் அதுதானே கிங்?

நன்றி.